பணவரவையும் பதவி உயர்வையும் பெற போகிற அந்த மூன்று ராசியில் உங்கள் ராசி இருக்கா! சரிபாருங்கள் உங்கள் ராசிபலனை !

பணவரவையும் பதவி உயர்வையும் பெற போகிற அந்த மூன்று ராசியில் உங்கள் ராசி இருக்கா! சரிபாருங்கள் உங்கள் ராசிபலனை !

இன்று புதன் கிழமை சதுர்த்தி திதி மிருகசீரிஷ நட்சத்திரம். சித்திரை மாதம் 25ம் நாள். இன்று உங்களின் ராசிபலனை பற்றி அறிந்து கொள்ளுங்கள்மேஷம்


உங்கள் தனிப்பட்ட விஷயம் அல்லது குடும்பத்தில் மிகவும் உணர்வு பூர்வமான நாடகம் இன்று நடைபெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன. உங்களை சார்ந்ததாக இருக்காது. ஆனால் உங்களை சுற்றி தான் இது நடைபெறும்.


ரிஷபம்


வேலையில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டிய நாள் இது. சோதனைகள் வந்தாலும் அதை பாசிட்டிவ்வாக எடுத்து செயல்படுங்கள். உடல் நலனில் அதிக அக்கறை செலுத்துங்கள். குறிப்பாக வயிறு சம்மந்தப்பட்ட பிரச்சணைகள் வர வாய்ப்பு உள்ளது.


மிதுனம்


இன்று உங்கள் பணிகள் அனைத்து முடிந்து விட்டது போன்ற உணர்வு ஏற்படும். ஆனால் அதன் முடிவை இன்று காணமுடியாது. பணிக்காக குடும்பத்தை பிரிந்திருப்பது சிரமம் தான். நல்ல நண்பர் உங்களின் வழி காட்டியாக இருப்பார்.


கடகம்


கடின உழைப்பிற்கு ஏற்ற பலன் உங்களுக்கு இன்று கட்டாயம் கிடைக்கும். புதிய பொறுப்புகள் மற்றும் பணி உயர்வுகள் கிடைக்கப்பெரும். குடும்பத்தில் அக்கறையாக இருங்கள். பொது வாழ்க்கைக்கான நேரம் இது கிடையாது.


சிம்மம்


பணிக்கு முக்கியத்துவம் கொடுப்பீர்கள். கூட்டாளிகள் ஆதரவாக இருப்பார்கள், ஒற்றுமை இருக்கும். சிறு தாமதங்கள் அல்லது குழப்பங்களுடன் புதிய வேலை எதிர்பார்க்கப்படுகிறது. நிலுவையிலிருக்கும் பணம் தற்போது வந்து சேரும். குடும்பம் நிலையானதாக இருக்கும், ஆனால் வேலை மற்றும் சமூக பொறுப்புணர்வு காரணமாக நீங்கள் அவர்களுடன் செலவழிக்க போதுமான நேரம் கிடைக்காது.


கன்னி


நீங்கள் வேலையை மெதுவாக்கி தனிப்பட்ட வாழ்க்கையில் கவனம் செலுத்த வேண்டும். இந்த நாள் உங்களுக்குரிய நாளாக மட்டுமே இருக்கப்போகிறது, மற்றவர்களுடன் கருத்துக்களைப் பரிமாறிக் கொள்ளுங்கள். குடும்பம் மற்றும் சமூக வாழ்க்கை நிலையானதாக இருக்கும்.


துலாம்


இன்று நீங்கள் மிகவும் அமைதியாக இருக்க வேண்டிய நாள். குடும்பத்திலும் பொது வாழ்க்கையிலும் எந்த ஒரு விவாதத்திலும் கலந்துக்கொள்ள வேண்டாம். அமைதியாக இருப்பது நல்லது. விவாதம் வரும் முன் தவிர்ப்பது நல்லது.


விருச்சிகம்


வேலை மெதுவாக சென்றாலும் பணி குறித்ததான நல்ல தெளிவு மற்றும் திட்டம் கிடைக்க பெறும். பணி சுமையில் இருந்த மன அழுத்தம் இன்று குறைய வாய்ப்பு உள்ளது. குடும்ப வாழ்க்கையில் சற்று நேரம் செலவழியுங்கள்.


தனுசு


வேலை நேர்மறையானதாக இருந்தாலும், நீங்கள் கடந்தகால வேலைகளை மீண்டும் செய்ய வேண்டும் அல்லது தொடர்ந்து கருத்துக்களை மறுகட்டமைக்க வேண்டும். அதற்கு பெரும்பாலான நேரம் எடுக்கும். நிலுவையிலிருக்கும் பணம் கிடைக்கும். சுகாதாரத்தில் கவனம் தேவை. கடைசி நிமிட நிகழ்வுகள் அல்லது குடும்பம் மற்றும் சமூக வாழ்க்கை நன்றாக இருக்கும்.


மகரம்


வேலை மெதுவாக இருக்கும், ஆனால் நீங்கள் நிலுவையிலுள்ள வேலைக்கு பொறுப்பேற்க வேண்டும். உங்கள் கடமைகளை நிறைவேற்ற வேண்டும். தாமதங்கள் காரணமாக ஒரு குழப்பமான நாள், ஆனால் நீங்கள் தொடர்ந்து செல்ல வேண்டும். நீண்ட காலம் கழித்து நீங்கள் குடும்ப உறுப்பினர்களுடன் மீண்டும் நேரத்தை செலவிடுவதற்கான ஏற்ற காலம்.


கும்பம்


உங்களை உற்சாகப்படுத்துவது போன்ற நிகழ்வுகள் இன்று அலுவலகத்தில் நடைபெறும். வீட்டிலும் மற்றவர்களிடம் கோபமாக நடந்துக்கொள்ளாதீர்கள். பிறகு வருத்தப்பட்டு பயன் இல்லை. தெளிவாக யோசித்து எந்த ஒரு முடிவையும் எடுக்கவும்.


மீனம்


பொறுமையாக காத்திருங்கள். உங்கள் அனைத்து வேலைகளும் இன்று ஒரு நாளில் முடிந்து விடாது. காலதாமதம் எடுக்கும். கோபத்தை குறைத்து பணியில் அதிக கவனம் செலுத்துங்கள். நண்பர்கள் குடும்ப உறுப்பினர்கள் உங்களுக்கு மிகவும் உறுதுணையாக இருக்கிறார்கள்


ஜோதிட பலன்களை கணித்தவர் astro ஆஷா ஷா.


---


POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!


மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும் பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo.