காதலுக்குரியவருடன் நேரம் செலவழிக்க போகும் அந்த அற்புதமான ராசி உங்களுடையதா ! பார்வையிடுங்கள் உங்கள் ராசிபலனை

காதலுக்குரியவருடன் நேரம் செலவழிக்க போகும் அந்த அற்புதமான ராசி உங்களுடையதா ! பார்வையிடுங்கள் உங்கள் ராசிபலனை

இன்று ஞாயிற்று கிழமை பிரதமை திதி பரணி நட்சத்திரம். சித்திரை மாதம் 22ம் தேதி. இன்றைய நாளில் உங்கள் ராசிபலனை பார்க்கலாம்.மேஷம்


உங்கள் ஆழ்மனத்திற்குள் மன அழுத்தங்கள் இருக்கலாம். நீங்கள் அதில் இருந்து வெளி வர வேண்டும் என்றால் உங்கள் உடலுக்கு ஓய்வு கொடுக்க வேண்டும். உங்கள் பொறுப்புகளை நகர்த்தி வைத்து விட்டு உங்கள் சோகத்திற்கான காரணங்களை யோசிக்கவும். உங்கள் துணை உங்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள். அவர்கள் அறிவுரைகளை ஏற்று கொள்ளுங்கள்


ரிஷபம்


குடும்ப சூழ்நிலையால் அதிக உணர்ச்சிவசப்படுவீர்கள்.உங்கள் உடல்நலனை கவனிக்கவும். உணர்ச்சிவசப்படுவதால் நீங்கள் ஆக்ரோஷமாக சண்டையிட நேரிடலாம்.இது உங்கள் உணர்ச்சிகளை புயலாக்கலாம். அமைதியாக தனியாக இருங்கள். அடுத்தவர்களிடம் அதிகம் எதிர்பார்க்காதீர்கள். உங்களுக்கு நீங்கள்தான் சிறந்த நண்பர்


மிதுனம்


இன்று காலை எழும்போதே கடினமாக இருக்கலாம். ஆனால் இரண்டாம் பாகம் உங்களுக்கு அற்புதமாக இருக்கும். உங்களிடம் நிறைய ஐடியாக்கள் இருக்கும். குடும்ப உறுப்பினரின் சம்மத்திற்காக காத்திருப்பீர்கள். ஏதோ ஒன்றில் மட்டும் கவனம் வையுங்கள். குடும்பம் சமூகம் இரண்டுமே நன்றாக இருக்கும்


கடகம்


எழுந்திருக்கும்போதே வித்யாசமான உணர்வுகளோடு எழுந்திருப்பீர்கள், உங்களுக்கு பொறுப்புகள் இருக்கலாம் சிலருடன் உரையாட வேண்டி இருக்கலாம். சிலரை சந்திக்க வேண்டி இருக்கலாம். அதையெல்லாம் செய்ய உங்களுக்கு பிடிக்காமல் இருக்கலாம்.அப்படியே வெளியே சென்றாலும் கவனமின்றி இருப்பீர்கள். உணவில் சமநிலை இருக்கட்டும்.


சிம்மம்


இன்றைய நாள் புத்தகங்கள் இசை என உங்களுக்கு பிடித்த ஒருவருடன் அற்புதமாக போகும்.உங்களுடன் இருப்பவர்கள் குறைவான ஆற்றலில் இருந்தாலும் நாளின் பிற்பகுதியில் உற்சாகம் ஆவார்கள். உங்கள் முடிவுகளை மற்றவர்களிடம் திணிக்காதீர்கள். உங்கள் நண்பர்களுடன் இருக்கும் மாலை அற்புதமாக இருக்கும்.


கன்னி


கடந்த கால சண்டைகளால் குடும்பத்தினருடன் சண்டை வரலாம். அதை அப்படியே போக விடுங்கள். அதைப்பற்றி விவாதித்தால் விஷயம் பூதாகரமாகி விடும். உங்கள் வயிற்றையும் தொண்டையையும் பார்த்து கொள்ளுங்கள்.உங்களை உற்சாகப்படுத்த நண்பர்கள் வந்து போகலாம். நினைத்தது எல்லாம் நடக்க வேண்டும் என்று எதிர்பார்க்காதீர்கள்


துலாம்


நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்பதை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வீர்கள் குடும்பத்தில் யாருக்கேனும் உடல்நலம் இல்லாமல் போகலாம்.இன்றைய மாலை உங்கள் காதலுக்குரியவருடன் கழியும்.முதலில் கேளுங்கள். எல்லாவற்றிற்கும் பதில்வினை ஆற்றாமல் வெறுமனே கேளுங்கள்


விருச்சிகம்


இன்று உங்களுக்கு பிஸியான நாள். யாருக்கோ தூது செல்ல வேண்டும், குடும்பத்தினர் விருப்பங்களை நிறைவேற்ற வேண்டும் ஒரு நண்பனின் உணர்வுகளை புரிந்து கொண்டு நடக்க வேண்டும் என்று பல வேலைகள் இருக்கும்.இதற்கு நடுவே உங்கள் ஈமெயில் வேலைகள் மற்றும் காகித வேலைகளை பார்க்க வேண்டி வரும். இத்தனை வேலையும் முடிந்த பின்னர் ஆழ்ந்த உறக்கம் உங்களுக்கு தேவை


தனுசு


இன்று நீங்கள் அதிக பேருடன் தொடர்பில் இருக்க வேண்டி வரலாம். மற்றவர்கள் என்ன சொல்வார்களோ என்று பகிர வேண்டிய உணர்வுகளை அடக்கி வைத்திருப்பீர்கள். இதனால் உள்ளுக்குள் நீங்கள் அழுத்தம் அடையலாம். சொல்ல வந்ததை அழுத்தம் திருத்தமாக சொல்லி பழகுங்கள் இன்று உங்களுக்கு வேலை அதிகம் இருக்கும்


மகரம்


நிறைய திட்டங்களை மாற்ற வேண்டி இருப்பதால் உங்கள் உடல்நலம் பாதிக்கப்படும். உங்களுக்கு பிடித்தவரோடு வீட்டில் அமர்ந்து நேரம் செலவழிக்க நீங்கள் விரும்புவீர்கள். பகலில் தூங்குவீர்கள். வேறொரு ஊரில் இருந்து உறவினர் நண்பர் வரலாம். நேரத்துக்கு சாப்பிடுங்கள். திட்டங்கள் பற்றிய கவலைகளை விடுங்கள்


கும்பம்


இன்று அற்புதமான நாள். இன்றைய நாளில் உங்களுக்கான நேரம் குடும்ப நேரம் நண்பர்கள் நேரம் எல்லாவற்றையும் சமநிலையில் பராமரிக்க முடியும். உங்களுடன் இனைந்து இருப்பவர்களோடு நேரம் செலவழிப்பீர்கள் உங்கள் வாழ்க்கை குறித்த ஆழமான ,மாற்று கோணத்தை சந்திப்பீர்கள். நண்பர்களுடன் இணையும் மாலை கேளிக்கையாக இருக்கும்


மீனம்


இன்று ஓய்வெடுக்கும் நாள். அதிகமாக படுத்தபடியே இருப்பீர்கள். உங்கள் வாழ்க்கை துணையின் உடல்நலனை கவனிக்கவும்.இந்த மாலை உங்கள் குடும்ப உறுப்பினருடன் டின்னரோடு முடியலாம், நீங்கள் நேசிப்பவர்களை கொஞ்சம் அதிகமாக கவனியுங்கள்


ஜோதிட பலன்களை கணித்தவர் astro ஆஷா ஷா.


---


POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!


மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும் பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo.