இன்று சனிகிழமை அமாவாசை திதி அஸ்வினி நட்சத்திரம். சித்திரை மாதம் 21ம் நாள். மேல்மலையனூர் அங்காளம்மன் வழிபாடு நன்மை தரும். இன்றைய நாளில் உங்கள் ராசி பலனை பார்க்கலாம்.
மேஷம்
குறைந்த நேரத்தில் அதிக வேலை செய்ய வேண்டி இருக்கலாம். இன்று பணியிடம் மிக நெருக்கடி தரலாம். உயர் அதிகாரிகளின் டெட்லைன்கள் வாடிக்கையாளரின் குறைகள் என்று அழுத்தங்கள் இருக்கலாம்.இன்று சீக்கிரமே வேலையை தொடங்கி மாலை தாமதமாக வேலை முடியலாம். தனிப்பட்ட முறையில் மற்றவர்களை பிடிக்காவிட்டாலும் நல்லிணக்கத்தை விட்டு விடாதீர்கள்.மனிதர்களின் நடத்தைகளை புறம் தள்ளி அவர்களிடம் வேலை வாங்குங்கள்
ரிஷபம்
வேலை நிலைத்தன்மையோடு இருக்கும். நடந்து கொண்டிருக்கும் ப்ராஜெக்ட் உங்களுக்கு தெளிவினை தரும். உங்களது புதிய சிந்தனைகள் ஏற்று கொள்ளப்படும். வேலையில் இருப்பவர்களோடு உங்கள் சொந்த வாழ்க்கையை பகிர்ந்து கொள்ளாதீர்கள்.தட்பவெப்ப சூழல் காரணமாக உடல்நிலை மோசமாகலாம். நேரத்துக்கு சாப்பிடுங்கள். சொந்த உறவுகள் குறித்து உங்களிடம் கருத்துக்கள் கேட்பார்கள்.
மிதுனம்
நீங்கள் சோம்பலாக இருப்பதால் வேலை ஒரு ஒழுங்கில்லாமல் இருக்கும். வேலையில் ஒருவர் உங்களை தொந்தரவு செய்யலாம். நேருக்கு நேர் நீங்கள் நினைப்பதை கூறி விடுவது ஊகங்களால் ஏற்படும் வேலை தாமதத்தை தடுக்கும்.அலுவலகத்தை விட்டு வெளியேறும் முன் உங்கள் காகித வேலைகளை ஒழுங்குபடுத்தி விட்டு செல்லுங்கள். மூத்த குடும்ப உறுப்பினர் உடல்நலனில் அக்கறை தேவைப்படலாம்.
கடகம்
இன்று மனிதர்களின் நாடகங்களை தவிர்த்து மீதமுள்ள வேலைகளை முடிக்க உங்களால் முடியும். யதார்த்த நேரங்களில் உங்களுக்கு நீங்களே உயர்வான இலக்குகளை வைத்து கொள்வீர்கள்.கழுத்தும் கீழ் முதுகும் பாதிக்க படலாம். குடும்ப உறுப்பினர் உங்கள் முடிவுகளை எதிர்க்க நேரிடலாம். அதைக் கையாள தயார் ஆகுங்கள்
சிம்மம்
இன்று மற்றுமொரு வேலை நாள். நீங்கள் உடன்பணி புரிபவர்க்கு உதவியாக இருப்பீர்கள். மற்றவருடைய வேலைகள் உங்களிடம் ஒப்படைக்கப்படலாம். அதனை பாரமாக நினைக்க வேண்டாம். இதனால் உங்களால் எந்த வேலையையும் திறமையாக செய்ய முடியும் என்பதனை நிரூபிக்க முடியும். அதிக வேலை காரணமாக உணவு சாப்பிடாமல் இருக்க வேண்டாம்.மூன்றாவது மனிதர் மூலம் வீட்டில் குழப்பங்கள் ஏற்படலாம். அதற்கு நீங்கள் ஒன்றும் செய்ய முடியாது. வெறுமனே வேடிக்கை பாருங்கள். தனிப்பட்ட முறையில் எடுத்துக் கொள்ளாதீர்கள்
கன்னி
வேலை மாற்றாருடன் சரியான தொடர்பின்மை காரணமாக தாமதமாகலாம்.தெளிவிற்காக நீங்கள் மற்றவரை சார்ந்திருப்பதால் இந்த நிமிடம் உங்கள் வேலையை நீங்கள் வெறுக்க நேரிடலாம்.தாமதமான வேலைகளை முடிக்க சரியான நேரம் இருக்கும். எல்லாமே நீங்கள் எப்படி எடுத்து கொள்கிறீர்கள் என்பதை பொறுத்தது. இந்த நாளின் இறுதியில் நீங்கள் சந்தோஷமாக இருப்பீர்கள் உங்களுக்கு தேவையான நேரமும் இடமும் இருக்கும். உங்கள் துணையின் உடல்நலனில் அக்கறை தேவை.
துலாம்
ஒரு விழிப்புணர்வாக முயற்சியால் வேகமாக ஓடும் உங்கள் மனதை நீங்கள் கட்டுக்குள் கொண்டு வரலாம். வேலை நிலைத்தன்மையோடு இருப்பதால் அதைப்பற்றி அதிக திட்டங்கள் தேவைப்படாது.உடல்பயிற்சி போன்ற செயல்களில் மீண்டும் ஈடுபடுவீர்கள்.குடும்ப வாழ்க்கை சுமுகமாக இருக்கும். மாலை வேளையை உங்கள் குடும்பம் மற்றும் நண்பர்களுடன் கழிப்பீர்கள். இந்த நாளின் இறுதியில் ஒரு தொலைபேசியோ அல்லது ஈமெயில்லோ உங்களுக்கு நல்ல செய்தியை கொண்டு வரும்.
விருச்சிகம்
வேலை பரபரப்பாக இருக்கும். புதிய சிந்தனைகளை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள நினைப்பீர்கள். ஆனால் கொஞ்சம் நிதானியுங்கள். இன்னமும் அதன் செயல்படும் தன்மைகளை நீங்கள் பரிசோதிக்கவில்லை. முடிவுகளுக்கு தாவுவதோ அதீத நம்பிக்கையோ அறவே வேண்டாம். கீழ் முதுகில் வலி ஏற்படும்.சமூக வேலைகளால் குடும்பத்தில் நேரம் செலுத்த முடியாது. மனதின் வேகத்தை மட்டுப்படுத்துங்கள்.
தனுசு
வேலையில் நேர்மறை தன்மை அதிகம் இருக்கும். புதிய சிந்தனைகள் உங்கள் மூளையில் இருந்து வெளியாகலாம். இன்று புது வேலை, புது தகுதி அல்லது புது ப்ராஜெக்ட் உங்களுக்கு வரலாம். இன்று நீங்கள் பயோடேட்டா அனுப்ப, ப்ரெசன்ட்டேஷன் கொடுக்க அல்லது நேர்முக தேர்வுக்கு செல்ல ஏற்ற நாள்.குடும்ப உறுப்பினர்கள் அவர்களுடைய சொந்த முடிவுபற்றி பேச உங்கள் நேரத்தை வேண்டி நிற்கலாம்.
மகரம்
வேலை நிலைத்தன்மையோடு இருக்கும். உங்கள் புதிய சிந்தனைகள் மற்றவர்களால் ஏற்று கொள்ளப்படும்.உங்களுக்கு நீங்களே புதிய திட்டங்கள் மற்றும் இலக்குகளை வரைந்து கொள்வீர்கள். ஒரு மீட்டிங் தயார் செய்தீர்கள் என்றால் அதில் தாமதமோ கருத்து வேறுபாடுகளோ நிகழலாம் என்பதை கவனத்தில் கொள்ளுங்கள். உங்கள் மனநிலையை அமைதியாக வைத்து கொள்வது எல்லோருக்கும் நல்லது. வயிறு பகுதியை கவனிக்கவும்.
கும்பம்
இன்று சரியான நேரத்தில் பரிமாற வேண்டிய கட்டாயம் ஏற்படும். சிதைவுகளை சரி செய்யும் வேலை ஒன்றிற்கு நீங்கள் பொறுப்பேற்க வேண்டி வரலாம். இன்றைய பணி நெருக்கடியாக இருக்கும். உடன் பணிபுரிபவர்களின் நேர்மையை கேள்வி கேட்க கூடிய நிலைமை ஏற்படலாம். ஆனால் அது அவர்களின் தவறல்ல நீங்கள் உள்வாங்கும் ஆற்றல்களில் கலவையான அறிகுறிகள் இருப்பதே காரணம்.குடும்ப உறுப்பினர்கள் உங்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள்.
மீனம்
நீங்கள் செய்யும் வேலை ஸ்டைலை நீங்கள் மாற்ற வேண்டி இருப்பதால் குறைந்த நேரத்தில் அதிக வேலைகள் செய்ய வேண்டி வரும்.உடன் பணிபுரிபவர்கள் உறுதியாக இருப்பார்கள். அவர்கள் கடின உழைப்பை நம்புவீர்கள்.முதுகு மற்றும் முழங்கால்களில் நீங்கள் கவனம் செலுத்த வேண்டும். துணையுடன் ஏற்பட்ட உரசலால் குடும்ப வாழ்க்கை கசக்கலாம். ஒரே எண்ண ஓட்டம் கொண்ட ஒருவரை நீங்கள் சந்திப்பீர்கள்.
ஜோதிட பலன்களை கணித்தவர் astro ஆஷா ஷா.
—
POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!
மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும் பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo.