இந்த நான்கு ராசிக்காரர்களுக்கு இன்று அற்புதமான நாளாம் ! சரிபாருங்கள் உங்கள் ராசிபலனை

இந்த நான்கு ராசிக்காரர்களுக்கு இன்று அற்புதமான நாளாம் ! சரிபாருங்கள் உங்கள் ராசிபலனை

இன்று புதன் கிழமை பூரட்டாதி நட்சத்திரம் துவாதசி திதி சித்திரை மாதம் 18ம் நாள். இன்று உங்கள் ராசி பலனை சரி பாருங்கள்மேஷம்


வேலை கடுமையாக இருக்கும் என்பதால்மற்றவர்களுடைய எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் மனநிலையில் இருக்க மாட்டீர்கள். புதிய ஒப்பந்தம் மற்றும் வேலைவாய்ப்பை தேடுபவர்களுக்கு நல்ல செய்தி கிடைக்கும். வேலைகளை அறிவுடன் அணுகுங்கள். ஒரு புதிய காதல் உறவை பற்றி மனம் யோசிக்கும். ஒரு தெளிவு கிடைக்கும் வரை அந்த உறவை பற்றி மற்றவர்களிடம் பேச வேண்டாம்.


ரிஷபம்


நீங்கள் உலகோடு ஒழுங்கற்ற தொடர்பற்ற நிலையில் இருப்பீர்கள். மனிதர்கள் உங்களை கேட்டு கொண்டே இருப்பார்கள் நீங்கள் உங்களால் முடியாத போதும் அதனை கொடுத்து கொண்டே இருப்பீர்கள்.அமைதி இருக்காது. பழைய வாடிக்கையாளர்கள் திரும்ப வருவதால் அதிக வேலைப்பளு இருக்கும்.உங்கள் வாழ்க்கை துணையுடன் உரசலை தவிருங்கள்


மிதுனம்


வேலைப்பளு அதிகமாகும். இரண்டு நபர்களின் அரசியலுக்கு நடுவே நீங்கள் மாட்டி கொள்வீர்கள். நீங்கள் செய்த வேலையின் பலனை காலம் சொல்லும்.குடும்பத்தில் யாரவது உங்களை குறை கூறலாம்.உங்களை நீங்கள் தற்காத்து கொள்ளும் முன்னர் அவர்கள் பக்கத்தை கேளுங்கள்.உங்கள் முதுகு தண்டு மற்றும் கண்களை கவனித்து கொள்ளுங்கள்.


கடகம்


இன்று சோம்பலாக இருக்கும். எதுவுமே நடக்காது. நீங்கள் சிந்தனையை தூண்டி ஆராய்ச்சியை தொடங்குங்கள். எல்லாவற்றையும் சுலபமாக எடுத்து கொள்ளுங்கள்.நேரத்திற்கு சாப்பிடுங்கள். உங்கள் வாழ்க்கை துணை உங்களால் புறக்கணிக்கப்பட்டவராக உணரலாம்.இதயத்தோடான ஒரு உரையாடல் இந்த ஊடலை சரி செய்யும்.உங்கள் சொந்த அடுத்தவர்களை குறை சொல்லாதீர்கள்.


சிம்மம்


இன்று உங்கள் சொந்த வளர்ச்சிக்கு புதிய நாளாக இருக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும்.உங்களுக்கு ப்ரியமானவர்களுடன் தொடர்பில் இருப்பீர்கள்.ஆனாலும் எல்லை வகுப்பீர்கள்.உடல்நலனில் அக்கறை கொள்ளவும்.கொஞ்சம் தூக்கத்திற்கு இடம் கொடுங்கள். உங்கள் தேவைகள் குறித்த குழப்பத்தை நண்பர் ஒருவர் தீர்ப்பார்


கன்னி


இன்றைக்கு அதிக அளவில் ஆசீர்வாதங்கள் உங்களை வந்து சேரும். மேலும் மற்றவர்களை சிறப்பாக உணர வைப்பீர்கள்.வேலை நிலையானதாக இருக்கும். குழுவினரின் உதவியால் வேலை சரியான திசையில் செல்லும். காகித வேலைகளை ஒழுங்காக வைப்பது அவசியம். குடும்ப உறுப்பினர் உறுதுணையுடன் இருப்பார்கள். உங்களுக்கான இடத்தை கொடுப்பார்கள்


துலாம்


அடுத்தவருடைய செயல்கள் மற்றும் யோசனைகளை பற்றிய யோசனையால் உங்களால் வேலையில் கவனம் செலுத்த முடியாமல் போகலாம்.தளர்வடையுங்கள். சரணடையுங்கள். எல்லாமே சரியான திசையில் சென்று கொண்டிருக்கிறது.இப்போது உங்களால் காண முடியாத கோணத்தை காலம் காட்டி கொடுக்கும். பழைய பயங்களை வைத்து இப்போதைய சூழலை எடை போடாதீர்கள். உங்கள் தொண்டை மற்றும் இதயத்தை கவனிக்கவும்.


விருச்சிகம்


புதிய ஆரம்பங்கள் ஏற்படும் ஆனால் ஆர்வ மிகுதியால் அதிகமான செயல்களை தவற விடுவீர்கள். வேலை நல்ல செய்தியை கொண்டு வரும். அதிக படைப்புத்திறனை உருவாக்கும். புதியதாக யாருடனும் பங்குதாரர் ஆக விரும்பாதீர்கள். உங்கள் கண்களையும் முதுகு தண்டையும் கவனியுங்கள்.குடும்ப வாழ்க்கை சுமுகமாக இருந்தாலும் கடந்த கால கசப்புகளால் உங்களை தனித்திருக்க வைக்கும்.


தனுசு


வாழ்க்கை குறித்த தெளிவோடு சுதந்திரமான மனநிலையில் இருப்பீர்கள். சமீபத்தில் நீங்கள் தேர்ந்தேடுத்த தேர்வுகள் உங்களை தன்னம்பிக்கை கொள்ள வைக்கும்.குடும்ப உறுப்பினர்கள் அவரவர் வேலையை பார்ப்பார்கள் அதனால் உங்கள் உடனடி எதிர்காலத்தை பற்றிய வேலைகளில் நீங்கள் இறங்கலாம். நேரத்துக்கு சாப்பிடுங்கள்


மகரம்


காலையில் எழுந்திருக்கும்ப்போதே சோர்வடைந்த நிலையில் இருப்பீர்கள். மாற்றங்கள் பற்றிய நிறைய சிந்தனைகள் உங்களுக்கு இருந்தாலும் சின்ன மழலை அடிகள் எடுத்து வைத்து கொண்டிருப்பீர்கள்.உங்கள் வேலையில் அழுத்தங்களை ஏற்படுத்தி கொள்ளாதீர்கள். உறவு உங்களை அதிகாரம் செய்யலாம். பேச்சு பிரச்னைகளை தீர்க்கும்.


கும்பம்


திட்டங்களாலும் செயல்களாலும் நிரம்பிய நாள்.நீங்கள்தான் மற்றவர்கள் நடுவே ஈர்க்கப்படும் மையப்புள்ளி மனிதராக இருப்பீர்கள்.மேலும் மற்றவர்களை தொழில் முறையிலும் தனிப்பட்ட முறையிலும் அவர்களை சௌகர்யப்படுத்தும் முறைகளை நீங்கள் அறிந்திருப்பீர்கள். உடல் நலத்தில் கவனம் வேண்டும். அற்புதமான நாள்


மீனம்


உங்களை தொந்தரவு செய்யும் மனிதர்களை நீங்கள் தடுத்தாக வேண்டும். அல்லது பல உரசல்களை சந்திக்க நேரிடலாம்.வேலையில் தாமதம் பங்குதாரருடன் மனத்தாங்கல் உங்களை கவலையுற செய்யலாம்.இதைப்பற்றி நண்பருடன் மனம் விட்டு பேசினால் முடிவு கிடைக்கலாம்.உங்கள் குடும்பத்தில் ஒருவர் உடல்நல குறைவால் வாடலாம்


ஜோதிட பலன்களை கணித்தவர் astro ஆஷா ஷா.


---


POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!


மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும் பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo.