கோடை விடுமுறை நாட்களை நீங்கள் குளு குளு வென  கொண்டாடி மகிழ, சென்னையில் 6 சிறந்த தீம் பார்க்குகள்!

கோடை விடுமுறை நாட்களை நீங்கள் குளு குளு வென  கொண்டாடி மகிழ, சென்னையில்  6 சிறந்த தீம் பார்க்குகள்!

 சென்னை மாநகரத்தில் ஷாப்பிங் மால்கள், பீச்கள் ஒரு பக்கம் என்றால் இது போல் தீம் பார்க்குகள் மற்றொரு பக்கம் இருக்கிறது. நீங்கள் இந்த கோடை காலத்தில் உச்சி குளிர மகிழ்ந்து கொண்டாட வெகுதூரம் செல்ல வேண்டிய அவசியம் கிடையாது. சென்னையில் உள்ள சிறந்த தீம் பார்க்குகள் போதுமானது!


விடுமுறை நாட்களில் நம் உறவுகள் மற்றும் நண்பர்களுடன் வெளியில் செல்வது வழக்கம். தீம் பார்க்குகள் என்றாலே பொதுவாகவே அனைவருக்கும் கொண்டாட்டமே. இதில் குழந்தைகள் பெரியோர்கள் என்று வயது வித்தியாசம் இல்லாமல் அனைவருக்கும் மகிழ்ச்சியை தரும் ஒரு இடமாகும். இதில் கொண்டாடி நேரத்தை கழித்து அதில் வரும் ஆனந்தமே தனி.ஆகையால் இந்த கோடை காலத்தில் நீங்கள் கொண்டாடி மகிழ , நாங்கள் உங்களுக்கு சென்னையில் உள்ள சிறந்த தீம் பார்க் பற்றிய விவரங்களை இங்கு அளிக்க உள்ளோம். தெரிந்து கொண்டு சென்று வாருங்கள்!


1. கிஷ்கிந்தா தீம் பார்க் (Kishkintha Theme Park) 


1


படம்


சென்னை தாம்பரத்தில் உள்ள கிஷ்கிந்தா தீம் பார்க் பெரியோர்கள் மற்றும் குழந்தைகளுக்கு சிறந்த ஒரு இடமாகும். இங்கு வாட்டர் ரைடுகள் மற்றும் பல வகையான அனைவருக்கும் பொருத்தமுள்ள ரைடுகள் உள்ளன. இது போதாதென்றால், மாலையில் அழகிய மியூசிக்கல் பாவுண்டன் எனும் நிகழ்ச்சியை நீங்கள் கண்டு மகிழலாம். மேலும் இங்குள்ள மந்திர அறைக்குள் சென்று உங்களுக்குள் இருக்கும் தைரியத்தையும் சோதித்து பார்க்கலாம் ! மொத்தத்தில் உங்கள் பிரியமானவர்களுடன் கொண்டாட இது ஒரு சிறந்த தீம் பார்க்.


முகவரி: 82, வரதராஜபுரம், டார்கஸ் வார்டு - II, தாம்பரம், சென்னை, தமிழ்நாடு.


நேரம்: திங்கள் - சனிக்கிழமை (10:30 AM 6:30 PM) மற்றும் ஞாயிற்றுக்கிழமை (10 AM - 7 PM)


டிக்கெட் விலை: INR 650 (பெரியோர்கள்) மற்றும் INR 490 (4'6 க்கு கீழே உள்ள குழந்தைகள் )


இணையதளம் : http://www.kishkinta.in/


2.விஜிபி அக்வா கிங்டம் (VGP Aqua / Universal Kingdom)


2


படம்


இது சென்னையில் உள்ள தண்ணீர் பூங்காக்களில் சிறந்த ஒன்றாகும். இது விஜிபி யூனிவர்சல் கிங்டம்மின் ஒரு பகுதியாகும். இங்கு நீங்கள் பல்வேறு வகையான தண்ணீர் சார்ந்த ரைடுகளை கண்டு பங்கேற்று மகிழலாம். மேலும் இங்கு செயற்கையாக கட்டப்பட்ட கடற்கரையும் உள்ளது. அங்கு நீங்கள் உங்கள் உறவினர்களுடன் கொண்டாடி மகிழலாம். இது மிகவும் சுத்தமாகவும் நன்றாக பராமரிக்கப்பட்டு வரும் ஒரு தீம் பார்க் ஆகும். நீங்கள் சென்னையில் வசித்து வந்தால் இங்கு நிச்சயம் செல்ல வேண்டும் .அல்லது சென்னைக்கு விடுமுறைக்கு வர திட்டமிட்டால் இங்கு வர மறக்காதீர்கள்!


முகவரி: கிழக்கு கடற்கரை சாலை, இஞ்சம்பக்கம், சென்னை, தமிழ்நாடு.


நேரம்: திங்கள் - வெள்ளி (9:30 AM- 7 PM), சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை (9:30 AM - 8 PM)


டிக்கெட் விலை: INR 550 (பெரியோர்கள் ) மற்றும் INR 450 (குழந்தைகள் )


இணையதளம் : https://www.vgpuniversalkingdom.in


மேலும் படிக்க - உங்கள் ஷாப்பிங் ஆசையை நிறைவேற்றும் வகையில் சென்னையில் 6 சிறந்த டிசைனர் பொட்டிக்குகள்


3.எம்ஜிஎம் டிஸ்ஸி வேர்ல்டு (MGM Dizzee Word) 


3


படம்


 சென்னையிலுள்ள முட்டுக்காடில் எம்ஜிஎம் தீம் பார்க் ஒரு புகழ் வாய்ந்த தீம் பார்க் ஆகும். இங்கு குழந்தைகளுக்கு மட்டும் இல்லாமல் பெரியோர்கள் மற்றும் அனைவருக்குமே பொருத்தமுள்ள ரைடுகள் பலவகை உள்ளன. அதில் சுமார் இருபது ரைடுகள் கொண்ட இந்த தீம் பார்க் உங்களுக்கு ஒரு சிறந்த அனுபவத்தை நிச்சயம் அளிக்க உள்ளது. மேலும் இங்கு உள்ள உணவகங்கள் மற்றும் கார் பார்க்கிங் வசதிகள் உங்கள் நாளை மிக சிறந்ததாக அமைத்து தர உள்ளது. ஒரு மறக்கமுடியாத அனுபவத்திற்கு நீங்கள் எம்ஜிஎம் டிஸ்ஸி வேர்ல்டு சென்று வாருங்கள்.


முகவரி: 1/74, கிழக்கு கடற்கரை Rd, முத்துக்காடு, சென்னை, தமிழ்நாடு.


நேரம்: திங்கள் - வெள்ளி (10:30 AM - 6:30 PM), சனிக்கிழமை மற்றும் ஞாயிறு (10:30 AM - 7:30 PM)


டிக்கெட் விலை: INR 699 (பெரியோர்கள்) & INR 549 (குழந்தை)


இணையதளம் : http://www.mgmdizzeeworld.com/


4. குயின்ஸ் லேன்ட் ( Queensland ) 


4


படம்


சென்னை-பெங்களூரு இடையே உள்ள குயின்ஸ் லேண்ட் சென்னையின் தீம் பார்க்குகளில் ஒரு முக்கிய பார்க் ஆகும். இங்கு சுமார் 70 ஏக்கர் நிலத்தில் அமைந்துள்ள இந்த தீம் பார்க்கில் 50க்கும் மேற்பட்ட தண்ணீர் சார்ந்த ரைடுகள் மற்றும் மற்ற சாதாரண அட்வென்ச்சர் ரைடுகளும் உள்ளது. இருப்பினும் இங்கு மிக முக்கியமான ஒரு ரைடு என்றால் அது பிரீ ஃபால் டவர் (free fall tower) ரைடு தான் . இதை உள்ளூர் மக்கள் மட்டுமில்லாமல் சுற்றுலா பயணிகளும் மிகவும் ரசித்து கொண்டாடும் ஒரு ஒரு மிகப்பெரிய சாகசமான சவாரி ஆகும். என்ன? தயாரா? மேலும் இங்கு உங்கள் உறவினர்களுடன் அன்பார்ந்தவர்களுடன் நேரத்தை கழிக்க ஒரு அழகிய லேக் உள்ளது!


முகவரி: சென்னை-பெங்களூரு நெடுஞ்சாலை, பழஞ்சூர், பழஞ்சூர், செம்பரம்பக்கம், சென்னை, தமிழ்நாடு.


நேரம்: திங்கள் - வெள்ளி (10 AM - 6 PM), சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை (10 AM - 7 PM)


டிக்கெட் விலை: INR 550 (பெரியோர்களுக்கு ) & INR 450 (குழந்தை)


இணையதளம் : http://www.queenslandamusementpark.com/


5.ப்ரைம் டைம் (Prime Time Chennai )


5


சென்னை அண்ணா நகரில் உள்ள ஒரு குழந்தைகளுக்கான சிறந்த வாட்டர் பார்க் .இதை நிச்சயம் உங்கள் குழந்தைகள் கொண்டாடி மகிழ்வார்கள். மேலும் இங்கு பலவகை தொழில்நுட்ப கருவிகள் மற்றும் அதற்கான செயல்பாடுகள் உள்ளனர்.பம்பர் ரைட் மற்றும் பிளே பெண் எனும் இரண்டு முக்கிய வகை ரைடுகள் இங்கு உள்ளது. அது உங்கள் குழந்தைகளுக்கு நிச்சயம் மகிழ்ச்சி அளிக்கும் சவாரி ஆகும். அதைத் தவிர்த்து இங்கு பலவகை ரைடுகள் கொண்டாடி மகிழ அமைக்கப்பட்டுள்ளது. அது மட்டுமில்லாமல் இங்கு பலவகையான உணவகங்களும் உள்ளது.பொழுதுபோக்கிற்கு கோடை காலத்தில் உங்கள் குழந்தைகளுடனும் நண்பர்களுடனும் இங்கு வந்து செல்ல ஒரு சிறந்த இடமாகும் இந்த ப்ரைம் டைம் தீம் பார்க்!


முகவரி : Z பிளாக், அண்ணா நகர், சென்னை, தமிழ்நாடு 600040.


நேரம் : திங்கள் - வெள்ளி (10 AM - 6 PM), சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை (10 AM - 7 PM)


டிக்கெட் விலை : டிக்கெட் விலை: INR 350 (பெரியோர்களுக்கு ) & INR 250 (குழந்தை)


மேலும் படிக்க - சிறந்த ஷாப்பிங் அனுபவத்திற்கு, சென்னையில் 8 அற்புதமான ஷாப்பிங் மால்கள்!


6. விஜிபி ஸ்னோ கிங்கிடம் (VGP Snow Kingdom)


6


படம்


ஒருவேளை உங்களுக்கு தண்ணீரில் சவாரிகளை செய்ய விருப்பமில்லை என்றால் இதுபோல் பனிக்கட்டி கொண்ட தீம் பார்க்குக்கு செல்லலாம். அதற்கான சந்தர்ப்பத்தை விஜிபி ஸ்னோ கிங்கிடம் உருவாக்கியுள்ளது. இதுவும் விஜிபி யூனிவர்சல் கிங்டத்தின் ஒரு பகுதி ஆகும். இந்த கோடை காலத்தில் , நீங்கள் பனிக்கட்டிகளில் விளையாட,வெளிநாடு அல்லது மலைப்பகுதிகளுக்கு செல்ல வேண்டிய கட்டாயம் கிடையாது. இங்குள்ள தீம் பார்க்குக்கு வாருங்கள். இங்கு இக்லூ போன்ற இடத்தில் , பனிக்கட்டிகளில் நீங்கள் விளையாடலாம் அல்லது மூளையில் உள்ள செல்பி ஸ்டாண்டில் புகைப்படங்களை தட்டி மகிழலாம். குழந்தைகளுக்கு இது மிக சிறந்த இடமாகும்!


முகவரி: கிழக்கு கடற்கரை சாலை, இஞ்சம்பக்கம், சென்னை, தமிழ்நாடு.


நேரம்: திங்கள் - வெள்ளி (9:30 AM -7 PM), சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை (9:30 AM - 8 PM)


டிக்கெட் விலை: INR 550 (பெரியோர்கள் ) மற்றும் INR 450 (குழந்தைகள் )


இணையதளம் : https://www.vgpuniversalkingdom.in


இனி மலை பகுதி, ஃபாரின் டூர் என்று செல்ல வேண்டிய அவசியம் கிடையாது. இங்குள்ள தீம் பார்க்குகளே உங்கள் கொண்டாட்டத்திற்கு போதுமானது இல்லையா?!


பட ஆதாரம்  - பேக்செல்ஸ் 


POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி,  தமிழ், தெலுங்கு , மராத்தி மற் றும் பெங்காலி !


மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும் .பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo.