உதட்டுச்சாயம் பெண்களுக்கு பிடித்த ஒரு விஷயம் ஆகும். இது பெரும்பாலான பெண்கள் ஒன்றல்ல இரண்டல்ல பல லிப்ஸ்டிக்ஸ்களை தனது கைப்பையில் வைத்திருப்பார்கள். இன்னும் பலர் அதை உபயோகிக்காமல் கூட தனது கப்போர்டில் வைத்திருப்பார்கள். உதட்டுச்சாயத்தில் பல வகைகள் உள்ளது.இருப்பினும் இதை சரியாக பூசுவது மிக முக்கியமான ஒன்றாகும். அதிலும் லிக்விட் லிப்ஸ்டிக்ஸ்களை எவ்வாறு பூச வேண்டும் என்று சில உத்திகளை நாங்கள் உங்களுக்கு இங்கே அளிக்கிறோம்.
1. இதை சுமூகமாக பூச எக்ஸ்போலியெட் (exfoliate) செய்யவும்
ஒருவேளை உங்களுக்கு துளையிட்ட உதடுகள் (lip) இருந்தால் நீங்கள் பூச இருக்கும் லிக்விட் லிப்ஸ்டிக் சிறப்பாக அமையாது. ஆகையால் முதலில் உதடுகளை எக்ஸ்போலியெட் செய்ய வேண்டியது அவசியம்.உங்கள் உதட்டில் உள்ள நச்சுகளை, டெட் செல்லை அகற்ற முதலில் அதை எக்ஸ்போலியெட் செய்ய வேண்டும். இதற்கு உதட்டில் உங்கள் பெவெரெட் லிப் பாமை பூசவும். அதற்கு பிறகு ஓரிரு நிமிடம் பிரஷ்ஷால் மிதமாக தேய்க்கவும். இதைத் தொடைத்து கழுவிய பிறகு உங்களுக்கு ஒரு மென்மையான உதடு கிடைக்கும்.
2.அடர் உதடுகளுக்கு, இதை பூசுவதற்கு முன் பவுண்டேஷன் அல்லது கன்சீலர் தேவை
அடுத்து முகத்தில் குறைபாடுகளை அகற்றுவதற்கு அல்லது மறைப்பதற்கு நீங்கள் எவ்வாறு பவுண்டேஷன் / கன்சீலர் பயன்படுத்துகிறீர்களோ அதேபோல் உதட்டிலும் இருக்கும் நிறங்களை /நிறமாற்றங்களை மறைக்க ஒரு பவுண்டேஷன் அல்லது ஏதேனும் ஒரு அடித்தளத்தை நீங்கள் பயன்படுத்த வேண்டும். அதற்கு மேல் ஒரு நியூட் நிற லிப்ஸ்டிக்கை அணிந்தால் நீங்கள் பூசும் உதட்டுச்சாயம் இன்னும் பளிச்சென்று தெரியும்.
3. ஒப்பனையில் லிக்விட் லிப்ஸ்டிக்(liquid lipstick) மட்டுமே போறாது
ஒப்பனையில் வேறு எந்த அம்சத்தையும் தனிப்பட்ட முறையில் நீங்கள் உங்கள் முகத்தில் பூசிக் கொண்டு வெளியில் செல்லலாம் ஆனால் லிக்விட் லிப்ஸ்டிக் என்று வரும்போது அதைமட்டும் அணிந்து கொண்டு வெளியில் செல்ல முடியாது ஏனெனில் அது உங்களை சிறப்பாக காட்டாது அதிலும் லிப்ஸ்டிக்கை மற்றும் நீங்கள் அணிந்து கொண்டு முகத்தில் வேறு எந்த ஒரு மேக்கப்பும் இல்லாமல் சென்றாள் அது இன்னும் உங்களை ஒற்றையான தோற்றத்தில் காட்டும் . இதற்க்கு நீங்கள் இவ்வாறு அணியாமலே செல்லலாம்!
4.ஒரு ஸ்வைப் போதுமானது,இரண்டு கோட்டிங் தேவை இல்லை!
எப்போதும் லிக்விட் லிப்ஸ்டிக் என்று வரும்போது அதை ஒரே ஒரு ஸ்வைப் (swipe) செய்தால் போதும். அதை மீண்டும் மீண்டும் நீங்கள் பூசும்போது அது மேற்கொண்டு வறண்டதாகி விடும் மேலும் அது ஒரு சீரற்ற தோற்றத்தை அளிக்கும். அதேபோல், சிறிதளவில் எடுத்து பூசினால் போதும். அதுவே நீண்ட நேரம் உதட்டில் தங்கும்.
5.SPF கொண்ட லிக்விட் லிப்ஸ்டிக்ஸ் அவசியம்
லிப்ஸ்டிக்ஸ்களிலும் சூரிய ஒளியில் இருந்து பாதுகாக்கும் அளவிற்கு தேவையான அம்சங்களை தயாரித்து வைத்திருக்கிறார்கள் என்பதை ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள். ஆகையால் நீங்கள் லிக்விட் லிப்ஸ்டிக்களை வாங்கும்போது எஸ் பி எஃப் (SPF ) அதிகம் உள்ள லிப்ஸ்டிக்ஸ்களை வாங்கி உபயோகியுங்கள். இதனால் உங்கள் உதடுகள் நிறம் மாறாமல் எரிச்சலில் இருந்து தப்பிக்கலாம்
6.டிஸ்ஸுவை வைத்து லிப் ஸ்டைன் (இலகுவான தோற்றத்திற்கு)
முன்னதாக கூறியது போல் இதை ஒரு சிறிதளவில் பூசினாலே அதிக நேரம் நீடிக்கும் என்பதால் நீங்கள் இதை ஒரு டிஷ்யூ பேப்பரில் ஒத்தி எடுத்தால் இயல்பான உதட்டுச் சாயத்தை போல் தோற்றமளிக்கும். இதன் மூலம் உங்களுக்கு ஒரு இயல்பான தோற்றத்தை இது அழகாக அளிக்க உள்ளது!
7.இது வறண்டு போவதால் – லிப் ஆயில் தேவை
லிக்விட் லிப்ஸ்டிக் நீண்ட நேரம் உங்கள் உதட்டில் நீடிக்கும் என்பதால் நிச்சயமாக உதடுகளை வறண்டது போல் ஆக்கிவிடும். ஆகையால் ஈரத்தன்மை அவசியம். உதடுகளை மொய்ச்சுரைஸ் செய்வதற்கு ஏதேனும் ஒரு லிப் பாம் அல்லது லிப் ஆயில் பயன்படுத்துவது அவசியம்.
8.இதை அகற்றுவது எளிதல்ல
அதேபோல் நீண்ட நேரம் நீருக்கும் லிக்விட் லிப்ஸ்டிக் என்பதால் அதை அகற்றுவது மிகக் கடினமான ஒன்றாகும். இதை நீங்கள் முன்னதாக கூறியது போல் ஒரு பிரஷை பயன்படுத்தி தேய்த்து எடுக்கலாம் அல்லது லிப்ஸ்டிக் ரிமூவர் பயன்படுத்தலாம் அல்லது சிறிது வாசிலினை பூசி லிப்ஸ்டிக்கை எளிதில் அகற்றலாம்.
9.நிலையான ஃபார்முலா
சில ஒப்பனையின் அம்சங்கள் வெப்பநிலை அதிகமாக இருக்கும் இடங்களில் அது உங்கள் முகத்தில் நீண்ட நேரம் நீடிக்காது. வியர்வையின் காரணமாக அது சீக்கிரமாக காணாமல் போய்விடும். ஆனால் லிக்விட் லிப்ஸ்டிக்கில் இதுபோல் எந்த ஒரு தொந்தரவும் உங்களுக்கு வராது. இதன் ஃபார்முலா மிகவும் நிலையான ஒன்றாக இருப்பதால் இது உங்கள் உதட்டில் நீண்ட நேரம் நீடிக்கும்
10.பல பயன்கள்
இதை நீங்கள் ஒரு ப்ளஷ் ஆக அல்லது ஒரு ஐ லைனராகவோ பயன்படுத்தலாம். இதன் கிரீமி ஃபார்முலா இதை அற்புதமாக உங்கள் ஒப்பனையில் ப்ளேன்ட் செய்ய உதவும்.
மேலும் படிக்க- லைட் லிப்ஸ்டிக்ஸ் : அடர் நிறத்தில் லிப்ஸ்டிக் பூச பிடிக்காதவர்களுக்கு பிரபலங்கள் பரிந்துரைக்கும் இலகுவான நிறங்கள்
படங்களின் ஆதாரங்கள் – shutterstock,pexels
POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற் றும் பெங்காலி !
மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும் .பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo.