நாவூரும் பிரியாணி செய்வதற்கான ரகசிய டிப்ஸ்கள்

நாவூரும் பிரியாணி செய்வதற்கான ரகசிய டிப்ஸ்கள்

பிரியாணி(Biriyani) என்கிற வார்த்தைக்கு அடிமையாக இருக்கும் பலரை நான் பார்த்திருக்கின்றேன். பிரியாணி(Biriyani) வாசத்திற்காகவே விரும்பி உண்பவர்கள் அனேகர். பிரியாணி(Biriyani) எங்கு வேண்டுமானாலும் கிடைக்கும் எளிமையான உணவு தான். ஆனாலும் அதனை சுவையாக செய்யக் கூடிய ஆட்கள் மிகவும் குறைவு என்றே சொல்லாம்.


பிரியாணிக்கு(Biriyani) மயங்காதவர்கள் இது வரை கிடையாது என்றே சொல்லலாம். பிரியாணி(Biriyani) என்பது அரிசி, மசாலாப் பொருட்களுடன் முட்டை, மற்றும் ஆடு, மாடு, கோழி இறைச்சி, மீன் அல்லது காய்கறிகள் சேர்த்து சமைக்கும் உணவை குறிக்கும். பொதுவாக, பிரியாணி செய்ய பாசுமதி அரிசியைப் தான் பயன்படுத்துவார்கள். சீரக சம்மா பிரியாணியும்(Biriyani) சுவையாக தான் இருக்கும்.


தேவையான பொருட்கள்
கோழி இறைச்சி (பெரிய துண்டாக) – 1/2 கிலோ
பெரிய வெங்காயம் – 2
தக்காளி – 2
இஞ்சி பூண்டு விழுது – 3 தேக்கரண்டி
கறுவாபட்டை – 5
கராம்பு – 5
பிரியாணி இலை – 2
ஏலக்காய் – 2
பச்சை மிளகாய் – 3
மிளகாய்த்தூள் – 1/2 தேக்கரண்டி
சிக்கன் மசாலா – 2 தேக்கரண்டி
புதினா இலை – 1 கைப்பிடி
கொத்தமல்லி இலை – 1 கைப்பிடி
எண்ணெய் – 2 மேசைக் கரண்டி
நெய் – 1 மேசைக் கரண்டி
உப்பு – தேவையான அளவு
செய்முறை
1. கோழி இறைச்சி துண்டுகளை சுத்தமாக கழுவி வைத்துக் கொள்ளவும்.


2. பெரிய வெங்கயம், பச்சை மிளகாயை தனித்தனியே நீளப்பாட்டில் நறுக்கிக் கொள்ளவும்.


3. தக்காளியைப் சிறிதாக நறுக்கிக் கொள்ளவும்.


4. அடுப்பில் பாத்திரத்தை வைத்து எண்ணெய், நெய் ஆகிய இரண்டையும் ஊற்றி காய்ந்ததும் கறுவாப்பட்டை, கராம்பு, ஏலக்காய், பிரியாணி(Biriyani) இலை ஆகியவற்றை சேர்த்து வதக்கவும்.


5. அடுத்து நறுக்கிய பெரிய வெங்காயம் பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும்.


6. பின்னர் அதனுடன் நறுக்கிய தக்காளி சேர்த்து மீண்டும் வதக்கவும்.


7. அதனுடன் இஞ்சி பூண்டு விழுது, புதினா இலை, கொத்தமல்லி இலை சேர்த்து பச்சை வாசம் போகும் வரை (சுமார் 3 நிமிடம் மிதமான வெப்பத்தில்) நன்கு வதக்கவும்.


8. அதனுடன் கோழி இறைச்சியை சேர்த்து எண்ணெயில் நன்கு வதக்கவும்.


9. பின்னர் உப்பு, மிளகாய்த்தூள், சிக்கன் மசாலா சேர்த்து நன்கு வதக்கவும்.


10. அதில் அரிசிக்கு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து (பிரியாணி(Biriyani) அரிசி என்றால் 1 மடங்கு, சாதாரண அரிசிக்கு 2 மடங்கு தண்ணீர்) குக்கர் மூடி போட்டு விசில் போடாமல் வேக விடவும்.


11. விசில் துவாரம் வழியாக ஆவி வந்ததும் மூடியைத் திறந்து காரம், உப்பு சரியாக உள்ளதா எனப் பார்த்து, தேவையானதைச் சேர்த்துக் கொள்ளவும்.


12. பின்னர் ஊற வைத்த பிரியாணி(Biriyani) அரிசியைச் சேர்த்து குக்கரை மூடி விசில் போட்டு மிதமான நெருப்பில் 2 விசில் வரும் வரை (சுமார் 15 நிமிடம் வரை) வேகவிடவும்.


13. பின்னர் அடுப்பிலிருந்து இறக்கி, குக்கர் ஆவி அடங்கியதும், மூடியைத் திறந்து நன்கு கிளறி பரிமாறவும்.


குறிப்பு
1. தண்ணீர் அளவு : பாஸ்மதி அரிசி – 1 மடங்கு, சாதாரண அரிசிக்கு 2 மடங்கு


2. கடைசியாக அரிசி அவிந்து 2 விசில் வந்ததும் அடுப்பிலிருந்து இறக்கி குக்கர் மூடியைத் திறந்து பார்க்கும் போது தண்ணீர் இருந்தால் சிறிது நேரம் மிதமான சூட்டில் வேக விடவும்.


prepare-wonderful-biriyani003
மட்டன் பிரியாணி(Biriyani)


மட்டன் – ஒரு கிலோ
பாசுமதி அரிசி – நான்கு கப்
இஞ்சி பூண்டு விழுது – ஐந்து தேக்கரண்டி
வெங்காயம் – ஐந்து (பெரியது)
தக்காளி – நான்கு (பெரியது)
மல்லி புதினா இலை – தலா ஒரு கைப்பிடி
பச்சைமிளகாய் – நான்கு
தயிர் – ஒரு கப்
பிரியாணி மசாலா – ஐந்து தேக்கரண்டி
பட்டை, ஏலக்காய், கிராம்பு, பிரிஞ்சி இலை – தலா மூன்று
எண்ணெய், நெய், உப்பு – தேவையானளவு


செய்முறை
முதலில் தேவையான பொருட்களை எடுத்து வைத்துக் கொள்ளவும்.


அடுப்பில் சட்டியை வைத்து நெய் மற்றும் எண்ணெய் ஊற்றி பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரிஞ்சி இலை போட்டு பின் நறுக்கிய வெங்காயம், மல்லி, புதினா போட்டு வதக்கவும்


வெங்காயம் நன்கு பொன்னி றமாக வதங்க வேண்டும் வதங்கிய உடன் இஞ்சி பூண்டு விழுது போட்டு நன்கு பொன்னிறமாக வதக்கவும்.


அடுத்து ஒரு பக்கம் தக்காளி மற்றொரு பக்கம் மட்டன், பச்சைமிளகாய் போட்டு சிறிது நேரம் கழித்து கிண்டவும்


ஒரு கப்பில் தயிரை போட்டு அதில் பிரியானி மசாலாவை போட்டு சிறிது நீர் விட்டு பேஸ்ட் போல் கலக்கி வைத்துக் கொள்ளவும்.


இந்த கலவையை சட்டியில் வெந்து கொண்டிருக்கும் மட்டன் மேல் போட்டு உப்பும் போட்டு கிளறவும். பின் மூடி வேக விடவும். தண்ணீர் சிறிது சேர்த்தால் போதும் சிறிய தீயில் வேக விடவும். கிரேவி சுருண்டு படத்தில் உள்ளது போல் வரும்.


அடுத்து ஒரு சட்டியில் ஒரு கப் அரிசிக்கு ஒன்றரை கப் என்று அளவில் தண்ணீர் வைத்து கொதிக்கவிட்டு (நான்கு கப் அரிசிக்கு ஆறுகப் தண்ணீர்). அதில் அரிசியை போட்டு சிறிது மஞ்சள் கலர் பவுடர், உப்பு போட்டு கொதிக்க விடவும். அரிசியில் உள்ள நீர் வற்றி வரும் போது சோறு பாதி வெந்துவிடும். படத்தில் உள்ளது போல சாதம் மேலே தெரியும்


prepare-wonderful-biriyani004
இந்த பதத்தில் வெந்து இருக்கும் மட்டன் கிரேவியில் சாதத்தை கொட்டி விடவும்


அடுத்து பேப்பரோ இல்லையென்றால் ஃபாயில் பேப்பரோ கொண்டு மூடி போட்டு பதினைந்து நிமிடம் சிறு தீயில் தம்மில் போடவும்


பின்னர் எடுத்து சாதம் உடையாமல் கிளறி மேல் அலங்கரிக்க முந்திரி, கிஸ்மிஸ், வெங்காயம் எண்ணெயில் பொரித்து போட்டால் டேஸ்ட்டியான மட்டன் பிரியாணி(Biriyani) ரெடி.


வயதில் குறைவான நடிகர்களை காதலித்து திருமணம் செய்துக்கொண்ட நடிகைகள்


ஆணுறையை(condom) பயன்படுத்தும் போது கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கிய குறிப்புகள்!


வீட்டிலேயே தக்காளி பேஷியல் செய்துக்கொள்வது எப்படி


பட ஆதாரம் - gifskey, pexels, pixabay, Youtube


POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!


மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும்.
பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo