சுட சுட சுவையான முட்டை நூடுல்ஸ் செய்வது எப்படி?

சுட சுட சுவையான முட்டை நூடுல்ஸ் செய்வது எப்படி?

இன்றைய குழந்தைகளுக்கு எது பிடிக்கிறதோ இல்லையோ, பர்க்கர்,பீட்சா நூடுல்ஸ்(noodles) போன்றவை மிகவும் பிடிக்கும். அத்தகையவற்றில் இப்போது புரோட்டீன் அதிகம் உள்ள முட்டையை சேர்த்து, ஒரு நூடுல்ஸ்(noodles) செய்து பள்ளிக்கு செல்லும் போது கொடுத்தால், குழந்தைகள் மிச்சம் வைக்காமல் காலி செய்து கொண்டு வருவார்கள்.


விடுமுறை நாட்களில் குழந்தைகள் விரும்பி சாப்பிடும் வகையில் காலை உணவு செய்து கொடுக்க வேண்டுமானால், முட்டை நூடுல்ஸ்(noodles) செய்து கொடுங்கள். இதனால் குழந்தைகள் காலையில் முட்டை சாப்பிட்டவாறு இருப்பதுடன், அவர்களுக்கு பிடித்த நூடுல்ஸ் சாப்பிட்டவாறும் இருக்கும். அதுமட்டுமின்றி, முட்டை நூடுல்ஸில்(noodles) காய்கறிகள் சேர்த்து செய்வதால், காய்கறிகளையும் அவர்களுக்கு கொடுத்த மாதிரி இருக்கும். இங்கு அந்த முட்டை நூடுல்ஸின்(noodles) எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் பார்த்து உங்கள் குழந்தைக்கு செய்து கொடுங்கள். குழந்தைகள் மிச்சம் வைக்காமல் பிளேட் முழுவதையும் காலி செய்து விடுவார்கள்.


இது சைனிஸ் உணவு என்று சொன்னாலும் நம் இந்திய பாரம்பரிய காய்கறிகள் மற்றும் மசாலா சேர்த்து செய்யும் போது இதன் ருசி இந்தியன் மசாலா டேச்டை தரும். எனவே பயப்படாமல் குழந்தைகளுக்கு வீட்டிலேயே செய்து கொடுக்கலாம்.


ஒரு முறை செய்து கொடுத்தீர்கள் என்றால் திரும்ப திரும்ப உங்களிடம் கேட்டு அடம் பிடிப்பார்கள். கிச்சனில் நீங்கள் தான் இனி மாஸ்டர்.


egg noodles003

தேவையான பொருட்கள்:
நூடுல்ஸ் - 2(noodles)
கப் காய்கறிகள் - 1 1/4 கப் (முட்டைக்கோஸ், கேரட் மற்றும் குடைமிளகாய்)
சோயா சாஸ் - 3/4 டீஸ்பூன்
சில்லி சாஸ் - 1/2 டேபிள் ஸ்பூன்
முட்டை - 2
பூண்டு - 2 டீஸ்பூன் (பொடியாக நறுக்கியது)
மிளகு தூள் - 1 டீஸ்பூன்
ஆலிவ் ஆயில் - 2 டேபிள் ஸ்பூன் + 1 டீஸ்பூன் உப்பு - தேவையான அளவு


செய்முறை: முதலில் ஒரு பாத்திரத்தில் முக்கால் அளவு தண்ணீர் ஊற்றி, 1/2 டீஸ்பூன் எண்ணெய் சேர்த்து அடுப்பில் வைத்து கொதிக்க விட வேண்டும். நீரானது நன்கு கொதிக்க ஆரம்பிக்கும் போது, அதில் நூடுல்ஸை சேர்த்து ஒரு கொதி விட்டு, பின் அதனை இறக்கி, நீரை வடிகட்டி, பின் குளிர்ந்த நீரில் ஒருமுறை அலசி, தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1/2 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், முட்டையை உடைத்து ஊற்றி, உப்பு மற்றும் மிளகுத் தூள் சேர்த்து நன்கு கிளறி, பின் இறக்கி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். பிறகு மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்தமும், பூண்டு சேர்த்து வதக்கி, பின் காய்கறிகளை போட்டு மிதமான தீயில் காய்கறிகளில் இருந்து பச்சை வாசனை போகும் வரை நன்கு வதக்க வேண்டும். அடுத்து, சோயா சாஸ், சில்லி சாஸ் சேர்த்து நெருப்பை அதிகரித்து, சிறிது நேரம் நன்கு கிளறி விட்டு, பின் முட்டையை சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும். பின்னர் நூடுல்ஸை சேர்த்து 2 நிமிடம் நன்கு கிளறி விட்டு அடுப்பில் இருந்து இறக்கினால், முட்டை நூடுல்ஸ் ரெடி.


சும்மா அசத்துங்க!

திருமணத்திற்கு சிறந்த பட்டுப் புடவை தேர்வு செய்யும் முறைகள்!


அழகான மெஹந்தி டிசைன்ஸ் வீட்டிலிருந்து வரைவது எப்படி?


பெண்களிடம் ஆண்களுக்கு மிகவும் பிடித்த அந்தரங்க ரகசியங்கள்!


பட ஆதாரம் - gifskey, pexels, pixabay, Youtube


POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!


மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும்.
பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo