இன்றைக்கு வார விடுமுறை, வீ்ட்டில் எல்லோரும் இருப்பார்கள். பசங்கள் கணவர் என எல்லாரும் விதவிதமான சமையல் செய்ய சொல்லி கேட்டு உங்களை தொல்லை படுத்துவார்கள் தானே. என்ன சமயல் செய்றது சாய்ங்காலம் ஸ்னாக்ஸ் என்ன செய்றதுன்னே தெரியாம குழம்பி போய் இருப்பீங்க தானே. உங்களுக்கு தான் இந்த ரெசிபி. வீட்டில் இருந்தே சுவையான சிக்கன் பர்க்கர்(burger) செய்வது எப்படி என்பதை இந்த பகுதியில் பார்க்கலாம்.
எலும்பில்லாத சிக்கன் – 200 கிராம்,
வெங்காயம் – 1,
கொத்தமல்லி – 1 கைப்பிடி,
மிளகுத்தூள், மிளகாய்த்தூள், கரம்மசாலாத்தூள், இஞ்சி பூண்டு விழுது – தலா 1/2 டீஸ்பூன்,
பிரெட் தூள் – 1 கப்,
உப்பு, பொரிக்க எண்ணெய் – தேவைக்கு.
பர்க்கர்(burger) பரிமாற
பர்க்கர்(burger) பன் – 4,
சீஸ் ஸ்லைஸ் – 4,
மையோனஸ், வெண்ணெய் – தலா 1 டேபிள்ஸ்பூன்,
லெட்டூஸ் – தேவைக்கு.
செய்முறை
கொத்தமல்லி, வெங்காயத்தை பொடியாக நறுக்கிகொள்ளவும்
சிக்கனை நன்றாக சுத்தம் செய்து மிக்சியில் போட்டு அரைத்து கொள்ளவும்.
அரைத்த சிக்கனை ஒரு பாத்திரத்தில் போட்டு அதனுடன் வெங்காயம், கொத்தமல்லி, மிளகுத்தூள், மிளகாய்த்தூள், கரம்மசாலாத்தூள், இஞ்சி பூண்டு விழுது, உப்பு, பிரெட் தூள் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.
இந்த சிக்கன் கலவையில் சிறிதளவு எடுத்து கட்லெட் போன்று தட்டி வைக்கவும். இவ்வாறு அனைத்தையும் செய்து வைக்கவும்.
கடாயில் பொரிப்பதற்கு தேவையான எண்ணெய் ஊற்றி சூடானதும் செய்து வைத்துள்ள கட்லெட்டுகளை போட்டு பொரித்து எடுத்து தனியாக வைக்கவும்.
பர்க்கர்(burger) பன்னை இரண்டாக வெட்டிக்கொள்ளவும்.
பர்க்கர்(burger) பன்னில் உட்புறம் வெண்ணெய் தடவி, செய்த பர்க்கர்(burger) (கட்லெட்) பேட்டியை அதன் நடுவில் வைத்து அதன் மேல் லெட்டூஸ் வைத்து மையோனைஸ் 1 டீஸ்பூன் தடவி, அதற்கு மேல் சீஸ் ஸ்லைஸ், பர்க்கர்(burger) பன்னை வைத்து மூடி பல் குச்சி சொருகி, தேவையானால் மைக்ரோவேவில் 1 நிமிடம் சூடு செய்து பரிமாறவும்.
சூப்பரான சிக்கன் பர்க்கர்(burger) ரெடி.
வெஜ் சிக்கன் பர்க்கர் செய்ய தேவையானவை
சிக்கன் பிரெஸ்ட்- 250 கிராம்
உப்பு – 2tsp
மிளகு தூள் – 1tsp
கரம் மசாலா பவுடர் – 1tsp
மிளகாய் தூள் – 1tsp
இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1tbsp
முட்டை – 1
ரொட்டி தூள் – தேவைக்கு
எண்ணெய் – தேவைக்கு
பர்கர் பன்
ஷீஸ், தக்காளி, வெங்காயம், வெள்ளரிக்காய், முட்டை கோஸ், கேரட்- தேவைக்கு
செய்முறை விளக்கம்:
சிக்கனை மிக்ஸியில் நன்கு அரைத்து அதனுடன் உப்பு, மிளகு தூள், கரம் மசாலா, மிளகாய் தூள், இஞ்சி பூண்டு பேஸ்ட் எல்லாம் சேர்த்து நன்கு பிரட்டி 1/2 மணி நேரம் ஊர வைத்து, வட்டமாக தட்டி அடித்து வைத்த முட்டையில் முக்கி பிரட் தூளில் பிரட்டி தவாவில் எண்ணெய் ஊற்றி பொரித்து வைத்துக் கொள்ளவும்.
பின்பு பர்க்கர் பண்ணில் தக்காளி, வெங்காயம், வெள்ளரிக்காய், முட்டை கோஸ், கேரட் எல்லாம் வட்ட வடிவமாக கட் செய்து வைத்து,
இதற்கு மேல் பர்க்கர் ஷீஸ் வைத்து பொரித்த சிக்கன் கட்லட்டையும் வைத்து மைக்ரோ அவனில் 2 நிமிடம் வைத்து எடுத்தால் சுவையான சிக்கன் பர்கர் தயார்
குழந்தைகள் அதிகம் விரும்பக்கூடிய பர்கரை வீடிலேயே செய்து அசத்துங்கள்.
மஞ்சள் உடையில் கிளாமரில் கலக்கும் தமிழ் நடிகைகள்
ரகசியம்: திருமணத்திற்கு பெண்கள் தங்களை தயார் செய்து கொள்வது எப்படி?
வீட்டில் இருக்கும் பொருட்களை கொண்டு முடி உதிர்வை தடுக்கும் எளிய வழிகள்
பட ஆதாரம் – gifskey, pexels, pixabay, Youtube
POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!
மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும்.
பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo