கெட் தி லுக் : வாணி போஜனின் முத்துக்கள் பதித்த ஆப் - வைட் பார்ட்டி வெற் சாறி லுக்கை பெறுவது எப்படி?

கெட் தி லுக் : வாணி போஜனின் முத்துக்கள் பதித்த ஆப் - வைட் பார்ட்டி வெற் சாறி லுக்கை பெறுவது எப்படி?

சின்னத்திரை நட்சத்திரங்களின் ஒருவரான வாணி போஜன் அவர்கள் சத்யா என்ற கதாபாத்திரத்தில் நம் அனைவரின் மனதிலும் இடம் பிடித்தார். மேலும் இவர் அதை தொடர்ந்து பல டிவி ஷோக்களில் பங்கேற்று வந்தார்.படங்களில், வாணி கோலிவுட் மற்றும் டோலிவுட்டில் சில படங்களில் கமிட் ஆகி இருக்கிறார். விரைவில் அவர் வெள்ளித்திரையில் தோன்றுவார் என்று குறிப்பிடத்தக்கது. 


வாணி தனது தனித்துவத்தை தனது ஆடைகளின் பாணியில் மிகவும் அற்புதமாக பல இடங்களில் முன்வைத்திருக்கிறார் . இதற்கான முக்கிய உதாரணமாக அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தை நாம் பார்க்கலாம். இதை தொடர்ந்து மேலும் அவர் நமக்கு ஒரு அற்புதமான தோற்றத்தை அளித்திருக்கிறார்! இதில் நாம் கவனிக்க வேண்டிய விஷயங்கள் -


1.சாறி மற்றும் பிளவுஸ் (Saree & Blouse) -


ஆப் வைட் சேலையில் , ஜார்ஜெட் மெட்டீரியலில் அணிந்திருக்கும் இந்த சேலையின் (சாறி) பிளவுஸ் டிசைன் - கிளோஸ்ட் காலர் மற்றும் நெட்டெட் ஸ்லீவ் ! இதன் கலவை மிக அற்புதமாக அமைத்திருக்கிறது. இதை நிச்சயம் உங்கள் வட்ராப்பில் வைத்துக்கொள்ள வேண்டிய ஒரு ஆடை ஆகும். இதைப் பார்ட்டி, பண்டிகை என பல விசேஷ நாட்களில் (festive wear) நீங்கள் நிச்சயம் அணிந்து செல்லலாம். இது உங்களை ஒரு நவீன பெண்மணியாகவும் கிளாஸியாகவும் காட்டும். இதன் தனித்துவம் இதில் பதித்திருக்கும் முத்துக்களே!
 

 

 


View this post on Instagram


 

 

❤️


A post shared by Vani Bhojan (@vanibhojan_) on
2.அணிகலன்கள் (Jewellery) -


இதுபோல் ஒரு கால்ர்டு ப்ளாவிஸிற்கு ஏற்ற ஒரு அணிகலன் மிக அவசியம். பெரும்பாலும் கழுத்தணிகள் இல்லாமல் வெறும் காதணிகளே இதற்கு சிறப்பாக அமையும். அதை மிக அற்புதமாக காட்டியுள்ளார் வாணி போஜன். காதில் ஒரு பெரிய வட்டமிட்ட ஸ்டட் ஒன்றை தனது சேலைக்கு மேட்சாக அணிந்திருக்கிறார். இது ஒன்றே இந்த தோற்றத்திற்கு (look) மிக முழுமையாக அமைந்திருக்கிறது. குறிப்புகள் எடுத்தீர்களா பெண்களே?


3.மேக்கப் (makeup) -


இதில் நீங்கள் கவனிக்க வேண்டியது-


  • முதலில் உங்கள் சருமத்தை ஒப்பனைக்கு தயார் செய்வதற்கு ஒரு நல்ல பிரைமர் ஒன்றை பூசவும். அதற்கு மேல் உங்கள் தோற்றத்திற்கு ஏற்ற ஒரு பவுண்டேஷனை பூசுங்கள். இது ஒரு டியூ (dew) பிணிஷாக இருந்தால் நன்றாக இருக்கும். மேலும் கன்சீலரை பயன்படுத்தி முகத்தில் இருக்கும் குறைபாடுகளை ஒத்தி எடுங்கள்.

  • இரண்டாவது படியாக ப்ளஷ் மற்றும் ஹைலைட்டரை பயன்படுத்துங்கள்.

  • உதட்டிற்கு இதுபோல் ஒரு பளிச்சிடும் நிறம் அதாவது சிவப்பு , அடர் பழுப்பு நிறங்கள் இதற்கு அற்புதமாக அமையும்.

  • புருவங்களை இன்னும் அடர்த்தியாகவும் அழகாகவும் காட்ட ஒரு ஐ ப்ரோ பிரஷை பயன்படுத்துங்கள் .


4) சிகை  (hairstyle) -


உங்கள் உதட்டு சாயத்திற்கு மேட்சாக அந்த ரோஜாப்பூக்களை மறந்து விடாதீர்கள். சிகை அலங்காரம் இதில் கவனிக்க வேண்டிய ஒன்று. சாதாரண பன் ஸ்டைல் கொண்டையில் இதுபோல் ஒரு ரோஜாப்பூ அலங்காரம் ஈர்க்கவைக்கும் தோற்றத்தை (லுக்) அளிக்கும்.


மேலும் படிக்க - பூக்களை கொண்டு உங்கள் சிகையை அலங்கரிக்க சில தனிப்பட்ட வழிகள்


இதை எங்கே வாங்கலாம் (Where to buy ) - 


1)


 Untitled design %2832%29


விலை - Rs.2699


இங்கே வாங்குங்கள்


2)


Untitled design %2831%29


விலை - Rs.5346


இங்கே வாங்குங்கள்


3)


Untitled design %2830%29


விலை - Rs.659


இங்கே வாங்குங்கள்


 


பட ஆதாரம்  - இன்ஸ்டாகிராம்  


POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற் றும் பெங்காலி !


மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும் .பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo.