ஒப்பனை என்பது ஒரு கலை.அதை எளிதில் அடைய சில வித்தைகள் உள்ளது.இதை நீங்கள் இப்போது தான் தொடங்குபவர் என்றால் ஒப்பனை உங்களுக்கு பயமுறுத்தலாக இருக்கலாம். அதற்குமேல் ஒப்பனை தூரிகைகள் (makeup brush) இன்னும் குழப்பமாக இருக்கலாம். எந்த பிரச்னை எதற்கு பயன்படுத்துவது என்று தெரியாமல் அறியாமல் பல தவறுகளை செய்யலாம் அதனால் நாம் அடைய வேண்டிய லுக் சரியாக அமையாமல் போகவும் வாய்ப்புகள் உள்ளது.
இதை அனைத்தையும் தவிர்க்க, நாங்கள் உங்களுக்கு சில மேக்கப் பிரஷ் வகைகளை (types) பற்றி விளக்கம் அளிக்க இருக்கிறோம் எந்தெந்த ப்ரஷ்களை எதற்கு உபயோகிக்கலாம் மேலும் அதன் பயன்கள் (use) என்னவென்று இங்கு நீங்கள் பார்க்கலாம்.
1.ஃபவுண்டேஷன் ப்ரஷ் –
இது ஒரு பவுடர் ப்ரஷ் மற்றுமொரு கன்சீலர் ப்ரஷுக்கு நடுவில் இருக்கும் ஒரு மெல்லிய ப்ரஷ். இதன் வடிவமைப்பு, உங்கள் ஃபவுண்டேஷனை, ஒப்பனையின் போது மிக சுத்தமாகவும் மென்மையாகவும் பூச பயன்படுகிறது. சமதளமான ஒரு பினிஷ் வேண்டுமென்றால் உங்கள் கண்ணங்களில் இருந்து ஆரம்பித்து காது வரை வெளியே செல்லும் வகையில் இதை அடிக்கவும்.
விலை – Rs.380
2.கன்சீலர் ப்ரஷ் –
இதுதான் ஒரு கன்சீலர் அடிப்பதற்கான ப்ரஷ். இது ஃபவுண்டேஷன் பிரஷை விட கொஞ்சம் சிறிதாக இருக்கும். இதன் நுனியில் வட்ட வடிவமைப்பு நிலையில் உள்ளதால் உங்கள் கண்கள், மூக்கு, வாய் பகுதியில் இருக்கும் கருவளையங்களை மிக எளிதில் குறைபாடின்றி மறைத்துவிடலாம். ஃபவுண்டேஷன் பூசுவது போல் இல்லாமல் கன்சீலரை பயன்படுத்தி உங்கள் கருமுள் , அக்னே , பருக்கள் இடத்தில் ஒத்தி எடுக்கவும்.
விலை – Rs.226
3.ஐ லைனர் ப்ரஷ் –
இந்த பிரஷ்ஷில் கண்களை மிக அழகாகவும் வடிவமாகவும் காண்பிக்க உபயோகிக்கலாம். இதை பயன்படுத்தி நீங்கள் ஒரு கேட் -ஐ (cat eye) வரைய முயற்சிக்கலாம். உள்ளிருந்து ஆரம்பித்து வெளியில் செல்லும்படி இதில் வரைய வேண்டும். ஸ்கெட்ச்சை விட ஒரு ஐ-லைனர் ப்ரஷ் இது போல் உங்களுக்கு மிகவும் அழகான தோற்றத்தை அளிக்கும்.
விலை -Rs.143
மேலும் படிக்க-வளைந்த அடர் அழகிய புருவங்களை பெற சில தந்திரங்கள்!
4.ஐ ஷாடோ ப்ரஷ்-
கன்சீலர் பிரஷை விட சிறிதாக இருக்கும் இந்த ப்ரஷ் உங்கள் கண்களை முழுமையாகவும் அழகாகவும் காட்ட உதவும். இதுபோல் ஒரு பிரஷ் இருந்தால் உங்களது ஐ பாலேட்டில் இருந்து நிறத்தை எடுத்து கண்களின் மேல் பகுதியில் பூச மிக உதவியாக இருக்கும்.
விலை – Rs.103
5.பவுடர் ப்ரஷ் –
இந்த ப்ரஷ் அனைத்து தூரிகைகளையும் விட பெரிதாக இருக்கும். ஏனெனில் இதன் முக்கியத்துவம் என்னவென்றால் உங்கள் முகத்தில் ஒப்பனை அடித்து முடித்தவுடன் பவுடரால் சரி செய்ய இது உதவும். மேலும் மேட் ஃபினிஷ்ஷில் இருக்கும் உங்கள் ஒப்பனையை க்ளாஸி அல்லது ஒரு ஷைன் அளிக்க இது உதவுகிறது.தடிமனாக இருக்கும் இந்த பவுடர் டிரஸ் சிறப்பாக செயல்பட கன்னங்களில் இருந்து ஆரம்பித்து வெளியே வரும்படி வட்டவடிவத்தில் இதை அடித்து வரவும்.
விலை – Rs.475
6.காண்டூர் ப்ரஷ் –
காண்டூர் ப்ரஷ் உங்கள் முகத்தை உங்கள் விருப்பம் போல் ஒப்பனையில் மாற்றி அமைக்க இதுபோல் ஒரு காண்டூர் ப்ரஷ் அவசியம். பார்க்க கன்சீலரை போல் இருந்தாலும் இதன் நுனிகள் சருக்கு முனைகளாக காண்டூர் செய்ய உதவும்படி அமைக்கப்பட்டுள்ளது.
விலை – Rs.611
7.பிளண்டர்-
இது ஒப்பனையில் ஒரு முக்கியமான பகுதிக்கான பொருள் . நீங்கள் பவுண்டேஷன், கன்சிலர், பிரைமர் என்று அனைத்து பொருட்களையும் உங்கள் முகத்தில் அடித்த உடன் அதை பிளண் செய்வது மிக அவசியம். அதை சரியாக செய்ய இதுபோல் ஒரு பிளண்டர் தேவை.இது உங்கள் விரல்களை விட மிக அற்புதமாக அனைத்து கிரீம்களையும் சமதளம் ஆக்க உதவும்.
விலை – Rs.145
8.ப்ளஷ் ப்ரஷ்-
இது பார்க்க பவுடர் ப்ரஷ் போல் இருந்தாலும் இதன் பயன் வேராகும். பவுடர் பிரஷ்க்கும் இதற்கும் உள்ள முக்கிய வித்தியாசம் – இது தடிமனாக இருக்கும். இதைப் பயன்படுத்தி கன்னங்களில் லேசான அழுத்தத்தை கொடுத்து பூசவும்.
விலை – Rs.152
9.ஹயிலைட்டர் ப்ரஷ் –
பேன் வடிவத்தில் இருக்கும் இந்த ப்ரஷ் உங்கள் முக்கிய பகுதிகளை ஹைலைட் செய்ய உதவும். உதாரணத்திற்கு பிரான்ஸ் (bronze), ஹைலைட், ப்ளஷ் என்று அனைத்தையும் இதுபோல் ஒரு பிரஷ் வைத்து நீங்கள் செய்து கொள்ளலாம்.உங்கள் தேவைக்கு ஏற்ப பல வேளைகளில் உங்களுக்கு உதவும் இந்த பேன் ப்ரஷ்(brush).
டிப் – ஐ ஷாடோ/ ப்ளஷை அதிகமாக எடுத்துக் கொண்டு விட்டீர்கள் என்றால் அதை சரிசெய்ய இந்த பேன் பிரஷால் நீங்கள் தட்டி அகற்றலாம்.
விலை -Rs.143
சரி! இப்போது தெரிந்து விட்டதா எந்த pressed எதற்கு உபயோகிக்கனும் என்று நீங்கள் உங்கள் கற்பனையை தெளிவாகவும் திறமையாகவும் கையாளலாம்.
மேலும் படிக்க – மேக்கப் : யாரும் உங்களிடம் கூறாத சில ஒப்பனை குறிப்புகள்
பட ஆதாரம் – shutterstock
POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற் றும் பெங்காலி !
மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும் .பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo.