logo
ADVERTISEMENT
home / ஃபேஷன்
வித விதமான ஸ்டெயிலில் துப்பட்டா அணியலாம்

வித விதமான ஸ்டெயிலில் துப்பட்டா அணியலாம்

கல்லுாரி செல்லும் பெண்கள் ஒரே விதமாக துப்பட்டா(dupatta) அணிவது என்பது எவ்வளவு கடினமான விஷயம் தெரியுமா? துப்பட்டாவை ஒரு பக்கம் பிடித்துக் கொண்டு பஸ்சில் ஏறி இறங்கி வருவதற்குள் ஒரு வழியாகி விடுவோம். நியூ மாடலில் இனி நீங்களும் கலக்கலாம்.

லெஹெங்கா, ஸ்ரக், பிளேசர், லாங் டாப், ஜீன்ஸ் அண்டு டி-ஷர்ட் என டிரெண்டுகளும் ஃபேஷன் அப்டேட்களும் மாறிக்கொண்டே வருகின்றன. விஷேச வீடுகளுக்கு கிராண்டான காஸ்டியூம்ஸ், அலுவலகத்துக்கு சிம்பிள் அண்டு நீட் லுக், அவுட்டிங்குக்கு டிரெண்டி என ஒவ்வொன்றுக்கும் பொருத்தமான ஆடையைத் தேர்வுசெய்து அணிந்து அசத்துகிறார்கள் இன்றைய தலைமுறைப் பெண்கள்.

அப்படி இருக்கும் பட்சத்தில் காலேஜ், அலுவலகம், பள்ளிக் கூடம், மற்றும் இதர மற்ற இடங்களுக்கு செல்லும் போது ஒரே விதமான ஆடைகளை அணிந்து செல்வது கொஞ்சம் போராக்கத்தான் இருக்கும். ஆனாலும் என்ன செய்ய தினமும் சுடிதார் அணிந்து செல்வது நமது வழக்கமாகி விட்டதே. தற்போதெல்லாம் அலுவலகங்களில் கூட ஜீன்ஸ் அனுமதிப்பது இல்லை.

முடிந்த வரை சுடிதாரில் தான் வர சொல்லி ரூல்ஸ் போடுகின்றனர். மீறி மற்ற ஆடைகளில் வந்தால் அதற்கான தண்டனை வழங்கும் வழக்கம் கூட இன்னும் நம் சமூகத்தில் இருக்கின்றன. அப்படி இருக்க தினமும் சுடிதார் அணிவது என்பது எவ்வளவு கடுப்பாக இருக்கும் என்று நினைத்துப் பாருங்கள்.

ADVERTISEMENT

அதனால் தான் பெண்கள் தினமும் தாங்கள் அணியும் சுடிதாருக்கு வித விதமாக துப்பட்டாவினை(dupatta) அணிய ஆசைப்படுகின்றனர். ஒரே மாதிரியான சுடிதார் ஒரே மாதிரியான துப்பாட்டா போர் அடிக்கத்தான் செய்யும். இதே சுடிதாருக்கான துப்பட்டாவை(dupatta) வித விதமாக அணித்தால் மிகவும் சுவாரசியமாக இருக்கும். தினம் தினம் புது மார்டனில் கலக்கலாம். சரி வித விதமாக சுடிதாருக்கான துப்பட்டாவினை(dupatta) எப்படி அணிவது இது தானே உங்கள் அடுத்த கேள்வி. சரி தாங்க நீங்கள் கேட்கும் கேள்வி அதற்கான பதிலைத்தான் தற்போது தர போகிறோம்.

சுடிதாரை அவசர அவசரமாக மாட்டிக் கொண்டு கன்ன பின்னாவென துப்பட்டாவை அணிந்துக் கொண்டு வேலைக்கும் செல்லும் பெண்கள் அநேகரை நாம் பார்க்க முடியும். இதில் இந்த துப்பட்டா(dupatta) எப்போது வண்டியில் மாட்டும் அல்லது பேருந்தில் யார் பிடித்து இழுப்பார்கள் என பயந்து பயந்து பயணிப்பதை விட நாங்கள் சொல்லும் வழிகளை பின்பற்றினால் எந்த வித பயமும் இன்றி நிம்மதியாக செல்லலாம்.

சுடிதாருக்கான துப்பாட்டாவை வெறுமனே மேலே போட்டுக்கொள்ளாமல் மாடர் மாடர்னாக எப்படி உபயோகிக்கலாம் என்பதை இந்த வீடியோவில் பார்க்கலாம்.

துப்பட்டாவை(dupatta) வெறுமனே மேலே மட்டும் போடாமல் கோர்ட்ட மாதிரி, வீ ஷேப்பில் மற்றும் கெவுன் மாதிரி கூட வித விதமாக போடலாம். இப்படி போடும் போதும் நாம் போட்ட உடையை மறுபடியும் போட்டால் கூட போட்ட மாதிரி தெரியாது. ஏதோ புது வடிவிலான உடையை நாம் அணிந்திருப்பது போன்ற உணர்வு நமக்கும் நம்மை சுற்றி இருப்பவர்களுக்கும் ஏற்பம். இந்த வீடியோவில் இருக்கும் முறையை நீங்களும் பின்பற்றி பாருங்கள். மிக எளிதாக குறைந்த நேரத்தில் உங்களை அழகு படுத்திக்கொள்ளலாம்.

ADVERTISEMENT

அப்புறம் என்ன தினம் தினம் புது டிரஸ்சா என அனைவரும் உங்களை கேட்க தயங்கமாட்டார்கள்.

ஆணுறையை(condom) பயன்படுத்தும் போது கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கிய குறிப்புகள்!

பெண்களின் உடல் எடையை குறைக்கும் 10 அற்புதமான எளிய உடற்பயிற்சிகள்

அதிக சம்பளம் வாங்கும் தென்னிந்திய நடிகைகள்

ADVERTISEMENT

பட ஆதாரம் – gifskey, pexels, pixabay, Youtube, shutter stock

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!

மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும்.
பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo

 

ADVERTISEMENT
08 Apr 2019

Read More

read more articles like this
good points

Read More

read more articles like this
ADVERTISEMENT