வெயிளிற்கு குட் பை சொல்லும் ஃப்ரூட் பேஷியல்!

வெயிளிற்கு குட் பை சொல்லும் ஃப்ரூட் பேஷியல்!

பொதுவாக பெண்கள் தங்களை அழகாக வைத்து கொள்ள வேண்டும் என்று நினைப்பதுண்டு. அதற்கு பார்லர் தான் போக வேண்டும் என்கிற கட்டாயம் இல்லை. வீட்டிலேயே முகத்தை அழகாக வைத்து கொள்ளலாம். வீட்டில் உள்ள சில எளிய பொருட்களை கொண்டு ஃப்ரூட்(Fruit) பேஷியல் செய்து உங்கள் அழகை மேலும் அதிகரிக்கலாம்.


பால் - அனைவருக்கும் வீட்டில் காலையில் எழுந்தவுடன் பயன் படுத்தும் முதல் பொருள் பால் தான். இதை சிறிது பஞ்சில் நனைத்து ஒத்தடம் கொடுப்பது போன்று முகத்தில் தடவி வந்தால் போதும். முகத்தில் இருக்கும் அழுக்குகளை விரட்ட இது ஒரு சிறந்த க்ளென்சிங் முறையாகும். இது முகத்தில் இருக்கும் அழுக்குகளை விரட்டி முகத்தை மென்மையாக வைத்திருக்க உதவுகின்றது.


பாதாம் பருப்பு - இது தினமும் முகத்தில் தடவி வந்தால் முகம் பளபளப்பாவதுடன் கரும் புள்ளிகள் மறைந்து பிராகசமாக இருக்கும். முகத்திற்கு நல்ல பொழிவை தரும்.


ஸ்கிரப் - முகத்தை நன்றாகவும், இயற்கையான முறையிலும் ஸ்க்ரப் செய்ய சர்க்கரை உதவுகிறது. சிறிதளவு கரும்பு சக்கரையுடன் தேன் மற்றும் எலுமிச்சை சாறு கலந்து வட்ட வடிவில் 3 - 5 நிமிடங்கள் மென்மையாக முகத்தில் மசாஜ் செய்ய வேண்டும். பின்னர் முகத்தை நீரில் கழுவி விட வேண்டும்.


fruitfacial003
மசாஜ் - முகத்திற்கு மசாஜ் செய்வது முகத்தில் இரத்த ஓட்டத்தை அதிகரித்து முகத்திற்கு பொலிவை உண்டாக்கும். வாழைப்பழம் அல்லது பப்பாளிப்பழத்தை அரைத்து அதனை முகத்தில் இட்டு 10 நிமிடங்கள் ஃப்ரூட்(Fruit) மசாஜ் செய்ய வேண்டும்.


ஆவி பிடித்தல் - ஒரு பாத்திரத்தில் தண்ணீரை எடுத்துக்கொண்டு அதை நன்றாக கொதிக்க வைக்க வேண்டும். இந்த நீரில் ஆவி பிடிப்பதால் முகத்தில் உள்ள அழுக்குகள், துளைகளில் தங்கிய அழுக்குகள் நீங்கும்.


சருமத்திற்கு பாதாமி பழத்தின் நன்மைகளையும் படியுங்கள்


ஃப்ரூட்(Fruit) பேஸ் பேக் 1- முகத்திற்கு பேக் போட நீங்கள் எந்த ஃப்ரூட்(Fruit)களை வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளலாம். உதாரணமாக தக்காளியை எடுத்து நன்றாக அரைத்து, அதில் ஒரு டீஸ்பூன் எலுமிச்சை சாறு கலந்து, முகத்தில் அப்ளை செய்ய வேண்டும். 20 நிமிடங்கள் கழித்து இதனை கழுவி விட வேண்டும்.


ஃப்ரூட்(Fruit) பேஸ் பேக் 2 - ஆப்பிளை நன்றாக அரைத்து அதில் ஒரு டீஸ்பூன் தேன் கலந்து முகத்தில் தடவி 20 நிமிடங்கள் கழித்து கழுவி விட வேண்டும்.


ஃப்ரூட்(Fruit) பேஸ் பேக் 3 - வாழைப்பழத்தை நன்றாக அரைத்து அதனுடன் தேன் கலந்து முகத்தில் தடவி 20 நிமிடங்கள் கழித்து கழுவி விட வேண்டும்.


டோனிங் மற்றும் மாய்சுரைசிங் - டோனிங் மற்றும் மாய்சுரைசிங் செய்வதற்காக வெள்ளரி சாறுடன் எலுமிச்சை சாறு கலந்தோ அல்லது ரோஸ் வாட்டரை பஞ்சில் நனைத்தோ முகத்தில் அப்ளை செய்து கொள்ள வேண்டும்.


கிவி பழ நன்மைகளைப் பற்றியும் படிக்கவும்


ஃப்ரூட்(Fruit) பலன்கள் 1. முகத்தில் உள்ள இறந்த செல்களை நீங்குகிறது. 2. விட்டமின்கள் அதிகமாக உள்ளது. 3. இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது. 4. சருமத்தை மிருவதுவாகவும், ஈரப்பதமாகவும் பராமரிக்க உதவுகிறது. 5. வயதான தோற்றத்திலிருந்து பாதுகாக்கிறது.


இது போன்று வாரம் ஒரு முறை வீட்டில் செய்தால் போது, கோடையிலிருந்து தப்பித்து நல்ல பொலிவை பெறலாம்.


சுட சுட சுவையான முட்டை நூடுல்ஸ் செய்வது எப்படி?


சண்டைக்கு பிறகு கணவன் மனைவி சமாதானம் ஆவது எப்படி?


ஸ்ருதி ஹாசனின் காதல் முறிவிற்கு இது தான் காரணமா? சோகத்தில் ஸ்ருதி


பட ஆதாரம் - gifskey, pexels, pixabay, Youtube



POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!


மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும்.
பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo