எடையை குறைத்து நல்ல வடிவம் பெற சென்னையில் 5 சிறந்த ஜூம்பா உடற்பயிற்சி கூடம்

எடையை குறைத்து நல்ல வடிவம் பெற சென்னையில் 5 சிறந்த ஜூம்பா உடற்பயிற்சி கூடம்

நடனம் பெரும்பாலும் அனைவருக்கும் பிடித்த ஒன்றானது. இதில் ஜிம் அல்லது வெறுமனே உடற்பயிற்சி என்றால் அது நிச்சயம் அலுப்பாக தான் இருக்கும். இதுபோல் நீங்கள் யோசித்தால் இது உங்களிற்கான குறிப்பு. ஏதேனும் ஒரு பாடலை போட்டுக்கொண்டு அதற்கு ஆட்டம் ஆடும் போது வரும் மகிழ்ச்சியே தனி. இதைதான் ஸும்பா (zumba) எனும் நடன கலை நமக்கு அளிக்கிறது. ஸும்பாவில் நீங்கள் பாலிவுட் மற்றும் லாட்டின் (Latin) என கருதப்படும் இசை வரிசையில் சில நடனங்களை ஆட வேண்டும் . இதை ஸும்பா/ஜூம்பா சான்றிதழ் பெற்ற நிபுணர்கள் உங்களுக்கு பயிற்சி அளிப்பார்கள். இதன் மூலம் உங்களுடைய அதிக எடையை எளிதில் குறைக்கலாம் மேலும் புத்துணர்ச்சியுடனும் உடல் ஆரோக்கியத்துடனும் இருக்க இதுவே ஒரு அற்புதமான வழி! 


சென்னையில் சிறந்த ஜூம்பா பயிற்சி வகுப்புகள் ( Best Zubma classes in Chennai) - 


நீங்கள் ஸும்பாவை எங்கு கற்றுக் கொள்ளலாம் என்று தேடிக் கொண்டிருந்தால் சென்னையில் (chennai) சில சிறந்த இடங்களை (கிளாஸ்) நாங்கள் உங்களுக்கு அளிக்கிறோம். 


1) தி ஸ்விங்கர்ஸ் டான்ஸ் (The swingers dance) - 


சென்னை மற்றும் பெங்களூரில் இருக்கும் இந்த நடன அரங்கம் பல்வேறு நடன வகைகளை கற்றுத்தருகிறார்கள். அதில் லேடினோடிக்ஸ் , டான்ஸ் X ,ஜூம்பா, டான்ஸ், தியேட்டர் பயிற்சி மற்றும் தொழில்முறை நடன சான்றிதழ் ப்ரோக்ராம் எனும் அனைத்தும் அமைந்துள்ளது.


முகவரி -
ஸ்விங்ஸ் டான்ஸ்
ஸ்டார் டவர்ஸ், 3 வது மாடி,
இல்லை: 101/102 புதிய ஆவடி சாலை,
கீழ்பாக் , சென்னை - 600 010.


தொலைபேசி : +91 95001 99088


இணையதளம்: http://www.swingersdance.com/


Untitled design %2837%29


2) லியோஸ் டான்ஸ் அகாடமி (Leo's dance) - 


இயந்திர பொறியியல் துறையில் இளங்கலை பட்டம் பெற்ற லியோ டால்ஸ்டாய் நடன அரங்கத்தின் நிறுவனர் ஆவார் . இவர் இந்த அரங்கத்தை கடந்த 2008 ஆண்டு துவங்கினார். முன்னாள் மற்றும் மறைந்த முதல் அமைச்சர் திருமதி ஜெ.ஜெயலலிதா அவர்கள் கையால் இவர் சிறந்த கோரியோக்ராபர்(choreographer) எனும் விருதை கடந்த  2013 ஆம் ஆண்டு வாங்கினார்.இங்கு நீங்கள் ஸும்பா/ஜூம்பா மட்டுமில்லாமல் சால்சா ,ஜாஸ் ,பாலேட் , ஹிப் ஹாப் எனும் அணைத்து வகையான நடனங்களையும் கற்றுக் கொள்ளலாம் .முகவரி -
லியோ டான்ஸ் அகாடமி,
கதை # 45, 2 ஏ, 2 வது தளம்,
திருமலை நகர் அண்ணா,
பெருங்குடி, சென்னை 97,

தொலைபேசி: +91 9840501105
இணையதளம் - http://www.leodance.in/index.html


3) நட்ராஜ் டான்ஸ் கோரியோகிராபர் (Natraj dance choreographer) -


திரு நடராஜ் அவர்கள் நடனத்துறையில் கடந்த 11 வருடமாக பல வகை நடனங்களை சிறப்பாக கற்று தந்து வருகிறார். சென்னையில் பிரபலமான நடன நிபுணர்களில் ஒருவரான இவர் ஸும்பா சான்றளிக்கப்பட்ட பயிற்றுநராக பணியாற்றி வருகிறார். இது மட்டுமல்லாமல் பல உடற்பயிற்சிக்கான நடனங்கள் அதாவது சால்சா, கொண்டேம்போரரி மேலும் திருமணங்களில் நடனமாட, நடன நிகழ்ச்சிகளில்,பெருநிறுவன நிகழ்வுகள் என்று அனைத்தையும் இவர் கோரியோகிராபியால் சிறப்பாக
செயலாற்றி வருகிறார்.


முகவரி - பழைய மஹாபலிபுரம் சாலை,
சென்னை.


தொலைபேசி: 9994867933


இணையதளம் -http://www.natrajdancechoreographer.in/#contact-me


4) ஹிப்ஸ் அண்ட் டோஸ் (Hips and toes ) -


Untitled design %2835%29


ஜிம் செல்ல உங்களுக்கு அலுப்பாக இருந்தால் ஜூம்பா மற்றும் ஏரோபிக்ஸ் கற்றுக்கொண்டால் போதும் உங்கள் எடையைக் குறைத்து நல்ல உடல் நிலைக்கு சீக்கிரமாக வந்து விடலாம். இதை சுலபமாக அடைய ஹிப்ஸ் அண்ட் டோஸ் உடற்பயிற்சி கூடம் பல வகுப்புகளை அளிக்கிறது. 2007 ஆம் ஆண்டு கலை இயக்குனர் திரு.ராம் அவர்கள் ஒரு சிறிய அளவில் தொடங்கி வைத்தாலும் 2010ஆம் ஆண்டு இடைவெளியில் பெரிய டான்ஸ் கம்பெனியாக அமைக்கப்பட்டது.இவர்களின் தற்போதைய உடற்பயிற்சி கூடம் சென்னை மடிப்பாக்கத்தில் உள்ளது. உங்களுக்குள் உள்ள நடன ஆசையை இவர்கள் நிச்சயம் ஊக்குவித்து அங்கீகரித்து அடுத்த நிலைக்கு எடுத்துச் செல்ல இவர்கள் பயிற்சி அளிப்பார்கள்.


முகவரி -
ஹிப்ஸ் 'n' டோஸ்,
எண் 477 a, 5 வது குறுக்கு தெரு,
ராம் நகர், மடிப்பாக்கம், சென்னை - 600 091,
தமிழ்நாடு, இந்தியா.


தொலைபேசி: 044-42737376; +91 8695777000
வலைத்தளம்: www.hipsntoez.com


5) தவல்க்கர்ஸ் சூர்பா (Tawalkars's zorba) -


இது மவுண்ட் ரோடில் இருக்கும் ஒரு பிரபலமான உடற்பயிற்சி மையம் (class) . இதில் பல பெண்களும் ஆண்களும் தனது அதிகமான எடையை குறைத்து ஒரு அழகிய வடிவத்திற்கு தனது உடலை கொண்டு வந்திருக்கிறார்கள் என்று இவர்களின் இப் பயிற்சி முகாம் மாணவர்கள் பகிர்ந்திருக்கிறார்கள். தவல்க்கர்ஸ் சூர்பா உங்கள் உடலின் அதிக எடையை மகிழ்ச்சியுடன் ஜூம்பா ஆடி எளிதில் குறைக்க ஒரு சிறந்த இடமாகும்.


முகவரி -
770A, தேவா டவ்ர்ஸ் , அடித்தளம், ஸ்பென்சர்ஸ் பிளாசாக்கு அடுத்தது, மவுண்ட் ரோடு சென்னை 600002.


தொலைபேசி - 9841132345
வலைத்தளம் - http://www.talwalkars.net/gym 


மேலும் படிக்க - உடல் எடையை குறைப்பதையும் தாண்டி உடற்பயிற்சியால் கிடைக்கும் மற்ற நன்மைகள்


பட ஆதாரம்  - instagram, youtube , wikipedia commons  


POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற் றும் பெங்காலி !


மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும் .பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo.