அழகான அடர்த்தியான புருவங்கள்ளுக்கான ரகசிய டிப்ஸ்!

அழகான அடர்த்தியான புருவங்கள்ளுக்கான ரகசிய டிப்ஸ்!

புருவங்கள்(eyebrows) முகத்தின் சிறந்த அம்சங்களில் ஒன்று. புருவங்கள்(eyebrows) அழகாக இருந்தால் உங்கள் கண்களில் அழகு கூடும், முகமே புது பொலிவு பெறும். ஆனால் புருவங்களை சரியாக வடிவமைப்பதே பலருக்கு பெரும் பிரச்சனையாக உள்ளது.


  • அடர்த்தியான புருவத்துக்கு விளக்கெண்ணெய் சிறந்த வழி என்பது எல்லோருக்கும் தெரியும். அதனுடன் ஆலிவ் ஆயில் சேர்ந்தால் இன்னும் எஃபெக்டிவாக இருக்கும். 8 சொட்டு விளக்கெண்ணெயுடன் 10 சொட்டு ஆலிவ் ஆயில் கலந்து, லேசாகச் சூடாக்கி, சின்ன பாட்டிலில் ஊற்றி வைத்துக்கொள்ளுங்கள். இந்தக் கலவையை நடுவிரல்களால் தொட்டு, இரண்டு புருவங்களிலும் தடவி, மசாஜ் செய்து, ஒரு மணி நேரம் ஊறவைக்கவும். இப்படித் தினமும் செய்துவந்தால், புருவ முடியின்(eyebrows) வளர்ச்சி மெள்ள மெள்ள அதிகரிக்கும்.

  •  மேலே சொன்ன எண்ணெய்க் கலவையைப் புருவத்தில் தடவி இரவு முழுக்க ஊறவைக்கும் பெண்கள், இந்த எண்ணெயுடன் 4 அல்லது 5 துளசியிலையைப் போட்டு எண்ணெயை லேசாகச் சூடுபடுத்தி வைத்துக் கொள்ளுங்கள். விளக்கெண்ணெயின் குளிர்ச்சி, மொத்தமாகப் புருவங்களில் இறங்காது. தவிர, துளசியிலைச் சாறு முடி(eyebrows) வளர்ச்சியைத் தூண்டியும் விடும்.

  •  சில பெண்களுக்குப் புருவ முடிகள்(eyebrows) கொட்டுவது போலவே, கண் இமைகளில் இருக்கும் முடிகளும்(eyebrows) உதிரும். இவர்கள் தினமும் துளசியிலைப் போட்டு சூடாக்கிய ஆலிவ் எண்ணெயைப் புருவங்களிலும் இமைகளிலும் தடவி வந்தால், புருவ முடிகள் மற்றும் கண் இமைகள் கொட்டுகிற பிரச்னை தீரும்.


beauty-tips-for-thickening-eyebrows003


  • தலையில் பேன் மற்றும் பொடுகு அதிகம் இருக்கும் பெண்களில் சிலருக்கு, புருவங்களிலும் பொடுகு, பேன் இருக்கும். இதனால், அந்த இடங்கள் அரிக்கும். சொரியும்போது, அந்த இடங்களில் இருக்கும் முடிகள்(eyebrows) உதிர்ந்து, புருவ அழகு குறைந்து போகும். இவர்கள், விளக்கெண்ணெயில் இரண்டு வேப்பிலையைப் போட்டுக் காய்ச்சி, தினந்தோறும் புருவங்களிலும் கண் இமைகளிலும் தடவி வந்தால், ஒரு வாரத்தில் மேலே சொன்ன பிரச்னை சரியாகிவிடும்.

  • ரோஸ்மேரி ஆயிலுக்கும் புருவ முடிகளின்(eyebrows) வளர்ச்சியைத் தூண்டிவிடும் தன்மை உண்டு. புருவத்தில்(eyebrows) முடியே இல்லையென வருத்தப்படும் பெண்கள், இந்த ஆயிலையும் முயற்சி செய்யலாம்.

  • சிலருக்குப் புருவ முடிகள்(eyebrows) கலைத்துப் போட்டது போல இருக்கும். அவர்கள், புருவத்தை ஷேப் செய்யச் செய்ய, முடிகளின் ஃபாலிக்கிள்ஸ் தூண்டப்பட்டு வளர ஆரம்பிக்கும்.

  • சிலருக்குப் புருவத்தை ஷேப் செய்யும்போது, வலி தாங்க முடியாமல்(eyebrows) தவிப்பார்கள். இத்தகையவர்கள், கிராம்பு தைலம் கலந்த வலி நீக்கி ஜெல்லை புருவங்களில் தடவி, ஷேப் செய்ய பியூட்டிஷியனிடம் சொல்லலாம்.

  • சில பியூட்டிஷியன்கள், புருவ முடியை(eyebrows) அழுத்திப் பிடுங்குவார்கள். அப்படி அழுத்திப் பிடுங்கும் போது கண்களுக்குள் மின்னல் வெட்டுவது போல தெரியும். இது தவறான முறை. அவர்களிடம் அடுத்த முறை நீங்கள் செல்லாமல் இருப்பதே நல்லது.


பருக்கள் வீட்டு வைத்தியம் படிக்கவும்


beauty-tips-for-thickening-eyebrows004


  • மாதம் ஒருமுறை புருவங்களை ரெகுலராக ஷேப் செய்யும் பெண்கள், கர்ப்பமாக இருக்கிற போதும் ஐப்ரோ திரெட்டிங் செய்து கொள்ளலாம். எப்போதாவது ஒரு முறை செய்து கொள்பவர்கள், கர்ப்பமாக இருக்கும்போது ஐப்ரோ திரெட்டிங் செய்யாமல் இருப்பதே நல்லது. எப்போதாவது ஒருமுறை ஐப்ரோ திரெட்டிங் செய்யும் போது வலி அதிகமாக இருக்கும். கர்ப்பிணிகள் உணர்கிற வலியை அவர்கள் பிள்ளைகளும் உணர்வார்கள் என்பதால், கருவுற்றிருக்கும் போது ஐப்ரோ திரெட்டிங் செய்யாமல் இருப்பதே நல்லது.

  • சிலருக்குப் புருவங்களின் இடையில் சில முடிகள்(eyebrows) வளராமல் இருக்கும். அவர்கள், சிறிது சர்க்கரையை அந்த இடத்தில் தடவி, மிகமிக மென்மையாகத் தேய்த்துக் கொடுத்தால், மூடிக் கொண்டிருக்கும் முடியின்(eyebrows) வேர்க்கால்கள் திறந்து முடி வளர ஆரம்பிக்கும்.


மேற் சொன்ன முறைகளை பின்பற்றி அழகான அடர்த்தியான புருவத்தினை நீங்களும் பெற்றிடுங்கள்.


வயதில் குறைவான நடிகர்களை காதலித்து திருமணம் செய்துக்கொண்ட நடிகைகள்


ஆணுறையை(condom) பயன்படுத்தும் போது கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கிய குறிப்புகள்!


வீட்டிலேயே தக்காளி பேஷியல் செய்துக்கொள்வது எப்படி


பட ஆதாரம் - gifskey, pexels, pixabay, Youtube


POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!


மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும்.
பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo