பேக்கிங் சோடா : பயன்கள், நன்மைகள்  மற்றும் பக்க விளைவுகள் (Benefits Of Baking Soda In Tamil)

பேக்கிங் சோடா : பயன்கள், நன்மைகள்  மற்றும் பக்க விளைவுகள் (Benefits Of Baking Soda In Tamil)

நாம் பெரும்பாலும் சமையல் அறையில் இருக்கும் பொருட்களை பயன்படுத்தி நம் சருமத்தை பராமரித்து இருப்போம். அங்குள்ள சில பொருட்கள் உங்கள் சருமத்தின் பிரச்னையை எளிதில் தீர்த்து வைத்திருக்கும் ! எலுமிச்சை , தேங்காய் எண்ணெய், தக்காளி , வெங்காயம் , தென் என்று அனைத்தையும் நீங்கள் உபயோகித்திருப்பீர்கள். இந்த வரிசையில் , மற்றோரு பொருள் தான் - பேக்கிங் சோடா.  ஆம்! கேக்கில் சேர்க்கும் அதே பேக்கிங் சோடாதான் !


பேக்கிங் சோடாவை நீங்கள் சமையல் அறையில் உணவு தயாரிக்கும்போது பயன்படுத்தி இருக்கலாம். ஆனால் அதில் பல மற்ற பலன்களும் அடங்கி உள்ளது. உண்மையில்,  பிராண்டட் பொருட்களை விட பேக்கிங் சோடா பல விஷயங்களில் உங்கள் வேலையை எளிதில் முடித்துக்கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் விளையும் மலிவு ! ஆகையால், உங்களுக்கு பேக்கிங் சோடாவின் அணைத்து பயன்களையும் (uses)  நாங்கள் இங்கு தர இருக்கிறோம் . இதை உங்கள்  தேவைக்கேற்ப பயன்படுத்தி பலனடையுங்கள் .


பேக்கிங் சோடா, பேக்கிங் பவுடரில் இருந்து எவ்வாறு வேறுபடுகிறது?


பேக்கிங் சோடாவின் பயன்கள்


பேக்கிங் சோடாவின் மற்ற நன்மைகள்


பேக்கிங் சோடாவால் ஏற்படும் பக்க விளைவுகள்


பேக்கிங் சோடா, பேக்கிங் பவுடரில் இருந்து எவ்வாறு
வேறுபடுகிறது? (Difference Between Baking Soda and Baking Powder)


பேக்கிங் சோடா (Baking Soda) மற்றும் பேக்கிங் பவுடர் "லீவெனிங் ஏஜெண்டுகள் " என்று அளிக்கப்படுகிறது அதாவது சுட்ட (பெக்ட் ) உணவுகளில் இதை சேர்த்தால் கார்பன் டை ஒக்ஸிட் (carbon - di- oxide) உற்பத்தி ஆகி இது உணவை  உப்பி வர உதவுகிறது. அதற்கான ருசியையும் அளிக்கிறது. பேக்கிங் சோடாவை சேர்க்கும் போது நீங்கள் இத்துடன் எலும்ஜச்சை சாறு, வினிகர், அல்லது ஏதேனும் ஒரு ஆசிட் பொருளை சேர்ப்பது அவசியம். இதுவே கார்பன் டை ஒக்ஸிட் உற்பத்தி ஆக உதவும்.


பேக்கிங் பவுடர் என்பது பேக்கிங் சோடா மற்றும் வேறு ஒரு ஆசிடின் (acid) கலவையே. இது பேக்கிங் சோடாவை விட பல மடங்கு எதிர்வினை கொண்டது.


பேக்கிங் சோடா (baking soda) நீண்ட காலம் நீடிக்கும். அதற்கு இதை ஒரு வறண்ட / குளிர் இடத்தில் நன்கு மூடி வைத்தால் போதும். பேக்கிங் பவுடர் ஒரு முறை திறந்து விட்டால் அதை சீக்கிரமாக உபயோகித்து முடிக்கவேண்டும். குறைந்தது ஆறு மாதம் வரை நீடிக்கும்.


பேக்கிங் சோடாவின் பயன்கள் (Benefits of Baking Soda In Tamil)


சருமத்திற்கு (Benefits of Baking Soda For Skin) 


1) முக ஸ்க்ரப் ஆக செயல்படுகிறது (Use As Facial Scrub) 


முதலில் உங்கள் முகத்தை நன்கு கழுவிக்கொண்டு, ஒரு டேபிள் ஸ்பூன் பேக்கிங் சோடாவுடன் இரண்டு ஸ்பூன் ஆரஞ்சு சாரை புழிந்து கலந்து கொள்ளுங்கள். இதை உங்கள் முகத்தில் பூசிக்கொண்டு மிதமாக மசாஜ் செயுங்கள். பேக்கிங் சோடா உங்கள் சருமத்தில் இருக்கும் டெட் செல்சை அகற்றி விடும். மேலும் ஆரஞ்சு சாரின் வைட்டமின் C உங்கள் முகத்தில் ஒரு புதுப்பொலிவு கொடுக்க உதவும்.


இதை 10-20 நிமிடம் உங்கள் முகத்தில் வைத்துவிட்டு ஒரு ஈரமான பஞ்சை வைத்து துடைக்கவும் அல்லது முகத்தை கழுவிடலாம். இதை வாரம் ஒரு முறை பயன்படுத்தினால் முகம் இயல்பாகவே ஜொலிக்க ஆரம்பிக்கும் !!


Benefits Of Baking Soda In Tamil2


2) பருக்கள் / முகப்பருவை அகற்ற (Helps To Get Rid Of Pimples / Acne) 


இதற்கு நீங்கள் ஏதும் பெரிதாக  செய்யவேண்டாம். பார்லர் அல்லது ஏதேனும் அழகு சார்ந்த பொருட்களிலும் செலவழிக்க வேண்டாம். வெறும் ஒரு ஸ்பூன் பேக்கிங் சோடாவை எடுத்துக்கொண்டு அதில் அதே அளவிற்கு தண்ணீரை கலந்து உங்கள் பருக்கள் கொண்ட சருமத்தில் பூசுங்கள். இதை ஒரு 10-15 நிமிடம் கழித்து சற்று வெதுவெதுப்பான தண்ணீரில் கழுவுங்கள். உங்கள் சருமம் இதனால் வறண்டு போகலாம் . அதை தவிர்க்க ஒரு நல்ல மாய்ஸ்சுரைசரை பயன்படுத்துங்கள் . இதன் விளைவாக உங்கள் முகத்தில் இருக்கும் துளைகள் திறந்து கொள்ளலாம். அதை மீண்டும் மூட ஐஸ் கட்டி அல்லது ஏதேனும் ஒரு  டோனரை (toner) பயன்படுத்துங்கள்.  


அல்லது, ஒரு டேபிள் ஸ்பூன் சோடாவுடன் இரண்டு டேபிள் ஸ்பூன் தேனை எடுத்து நன்கு கலந்து கொள்ளுங்கள் .இதை முகத்தில் பூசினால் அக்னே போன்ற  சரும பிரெச்சனைகளில் இருந்து விடுபெறலாம். உணர்திறன் சருமத்தில் சோதனை செய்து பிறகு பயன்படுத்தவும்.


3) பிரகாசிக்கும் சருமத்தை பெற (For Glowing Skin) 


ஒரு டேபிள் ஸ்பூன் பேக்கிங் சோடாவுடன் சிறிது ஒலிவ் எண்ணையை கலந்து கொள்ளுங்கள். அதோடு சிறிது திராட்சைப்பழம் சாறை கலக்கவும் . இந்த கலவையை உங்கள் முகத்தில் 15 நிமிடம் வைத்துவிட்டு முகத்தை கழுவிடுங்கள் .ஒலிவ் எண்ணையில் ஆக்சிஜெனேற்றத்தடுப்பான் மற்றும்  ஆன்டிபாக்டீரியாவின் (antioxidant & antibacterial) குணங்கள் இருப்பதினால் , திராட்சைப்பழத்தில் வைட்டமின் C இருப்பதினாலும், பேக்கிங் சோடா உங்கள் சருமத்தின் எண்ணையை உறிஞ்சி , உங்கள் சருமத்தை எளிதில் ஜொலிக்க வைக்கும்.


மற்றொரு முறை -


பேக்கிங் சோடாவில் சிறிது எலுமிச்சை சாறை புழிந்து அதை ஒரு பேஸ்ட் போல் செய்து முகத்தில் தடவலாம். எலுமிச்சையும் உங்கள் முகத்தை ஒளிர வைக்க உதவும். ஆனால் இதற்கு பிறகு நீங்கள் ஒரு SPF 50 கொண்ட சந்ஸ்கிரீன்  லோஷனை தடவிக்கொண்டு வெளியில் செல்லவேண்டும் . ஏனெனில், எலுமிச்சை சாறை பயன்படுத்திய பிறகு சூரிய ஒளியில் செல்லும் போது அது உங்கள் சருமத்தை அடர் ஆக்கிவிடும் வாய்ப்புகள் உள்ளது .


4) அடர் முழங்கால் - முழங்கையில் இருந்து விடுபெற (Remove Unwanted Dead Cells) -


உங்கள் முட்டி மற்றும் முழங்கையில் இருக்கும் அடர் நிறம் பெரும்பாலும் டெட் செல்ஸ்களிலால் உருவாகுகிறது. இதை நீக்க , பேக்கிங் சோடா மற்றும் சிறிது பால் போதுமானது. ஏனெனில் பேக்கிங் சோடாவில் இருக்கும் எக்ஸ்போலிஎட்  ( தோலை தளரவைக்கும் ) குணம் உங்கள் சருமத்தில் இருக்கும் தேவையற்ற டெட் செல்ஸ்ஸை அகற்றிவிடும் . மேலும், அதை மென்மையாக்கி போதுமான ஊட்டச்சத்தை அளிக்கிறது பாலில் உள்ள நர்குணங்கள்! இனி அந்த அடர் முழங்கால்களுக்கு டாடா !


5) கருமுள்  அகற்ற (Baking Soda Prevents Blackheads) -


1Benefits Of Baking Soda In Tamil


அதாவது ங்கள் சருமம் எண்ணெய் கொண்டதாக இருந்தால் அதில் துளைகள் பெரிதாக தெரிய வாய்ப்புள்ளது. அதனால் அழுக்கு , எண்ணெய், பருக்கள் , கருமுள் என அனைத்தும் வந்துவிடும் . இதை தவிர்க்க நீங்கள் ஒரு ஸ்பிரே  பாட்டிலில் சிறிது பேக்கிங் சோடா மற்றும் தண்ணீரை கலந்து உங்கள் சருமத்தில் ஒரு டோனரை (toner) போல தினமும் பயன்படுத்தவும் . இதன் மூலமாக உங்கள் முகத்தில் உள்ள துளைகள் சிறிதாகி மூடிவிடும். இனி கருமுளிற்கு பயம் வேண்டாம்!


அல்லது , வெறும் தண்ணீர் அல்லது சிறிது எலுமிச்சை சாறை பயன்படுத்தி உங்கள் சருமத்தில் இருக்கும் கருமுள் மீது  தடவி சிறிது நேரம் கழித்து குளிர் நீரால் கழுவலாம். இரண்டு வகையிலுமே உங்கள் துளைகளை எவ்வாறு குறைத்து மூடுவது என்று தான் கூறியிருக்கிறோம் . அதை கண்டறிந்து செயல் படுங்கள் . இதை பயன்படுத்திய பிறகு முகம் எரிச்சலாக இருந்தால் சிறிது மொய்ச்சுரைசரை தடவுங்கள் .  


6) உதட்டை எக்ஸ்போலிஎட் செய்ய (Baking Soda for Soft, Pink Lips) -


முகத்தை போல உங்கள் உதடுகளிலும் சில டெட் செல்ஸ் இருக்கத்தான் செய்யும் . அதை சமயத்துக்கு அகற்றிவிடுவதே மேல் . அதற்கும் பேக்கிங் சோடா உங்களுக்கு பயனளிக்கும். இதில் சிறிது தென் கலந்து உங்கள் உதடுகளில் பூசிக்கொண்டு மிதமாக தேயுங்கள் .சிறிது நேரம் ஊற வைத்து கழுவுங்கள். தென் உங்கள் உதடுகளை மென்மையாகிவிடும். மேலும் இந்த செயல் முறை (தொடர்ந்து செய்யும்போது) உங்கள் உதடுகளை இளஞ்சிவப்பாக மாற்றிவிடும்! 


பேக்கிங் சோடா- உடம்பிற்கு (Baking Soda For Body Care) :


1) டீடாக்ஸ் (Detox)


பேக்கிங் சோடாவில் குளிப்பதால் பல சிகிச்சையின் பண்புகள் இருக்கிறது. அதாவது , சிறுநீரக  நோய் , அரிப்பு , வெடிப்பு, சொறி சிரங்கு , சின்னம்மை என பல நோய்கள் வராமல் தடுக்கலாம் . இதற்கு நீங்கள் ஒரு பாத் டப்பில் வெதுவெதுப்பான தண்ணீரில் சிறிது பேக்கிங் சோடாவை (இரண்டு கப்) கலந்து அதில் ஒரு 30-40 நிமிடம் இருங்கள். இது உங்கள் உடம்பின் உள்ளே மட்டும் இல்லாமல் வெளியிலும் மிக அற்புதமாக உங்கள் சருமத்தை பாதுகாக்கும். தேவையற்ற டெட் செல்சை அகற்றி சுத்தமான சருமத்தை எளிதில் பெறலாம்.


இதற்கு நீங்கள் ஒரு பாடி ஸ்க்ரப் , மிதமான சோப் ஒன்றை வைத்துக்கொண்டு டெட் செல்சை அகற்றிவிடுங்கள்.இதற்கு பிறகு ஒரு மொய்ஸ்சுரைசர் பூசிக்கொள்ளுங்கள். இருப்பினும், இதை கர்ப்பிணி பெண்கள், நீரிழிவு நோய் , பிளட் பிரஷர், அல்ர்ஜி உள்ளவர்கள்  , முயற்சிப்பதை தடுக்கவும்.


2) மென்மையான வெடிப்பில்லாத பாதத்திற்கு (Baking Soda for Feet Care)


4Benefits Of Baking Soda In Tamil


அதேபோல உங்கள் பாதத்தை மிக எளிதில் வெடிப்பில் இருந்து காப்பாத்த பேக்கிங் சோடாவை உபயோகியுங்கள் . ஒரு சிறு டப்பில் வெதுவெதுப்பான நீரில் சிறிது பேக்கிங் சோடாவை கலந்து உங்கள் கால்களை அரை மணி நேரம்  ஊற வைக்கவும். பாதத்தில் இருக்கும் டெட் செல்ஸ் மற்றும் வெடிப்பை அகற்ற ஒரு புட் ஸ்கரப்பை பயன்படுத்தி அதை தேய்த்து எடுக்கவும். இதற்கு பிறகு ஒரு புட் கிறீமை தடவிக்கொள்ளுங்கள்.


3) உடல் துர்நாற்றத்தை குறைக்க (Helps To Get Rid Of Body Odour) -


இயல்பாகவே சிலருக்கு உடம்பில் துர்நாற்றம் ஏற்படும். இதை தவிர்க்க  முடியாமல் நீங்கள் அவதி படுகிறீர்கள் என்றால் , இனி அந்த கவலை வேண்டாம். ஒரு ஸ்பிரே பாட்டிலில் சிறிது பேக்கிங் சோடா, எலுமிச்சை  இரண்டையும் கலந்து ஒரு பேஸ்ட் அல்லது ஸ்பிரே ஆக்கிக்கொள்ளுங்கள். இதை துர்நாற்றம் வரும் இடங்களில் (அக்குள் ) குளிக்கும் முன்பதாக அடித்துக்கொண்டு சிறிது நேரம் கழித்து குளிக்க செல்லுங்கள்.


இதை தொடர்ந்து செயும்போது உங்கள் உடம்பில் இருக்கும் துர்நாற்றத்தை  உருவாக்கும் பாக்டீரியாக்கள் அழிந்து, வியர்வை குறைந்து விடும் !


பேக்கிங் சோடாவின் மற்ற நன்மைகள் (Other Uses Of Baking Soda)


பேக்கிங் சோடா - பற்களுக்கு (Baking Soda For Teeth) : 


உங்கள் பற்களை எளிதில் பளபளப்பாக மாற்ற உங்கள் டூத் பேஸ்ட்டில் சிறிது பேக்கிங் சோடாவை தூவி பல் விளக்கவும். இருப்பினும்  , இது அனைவருக்கும் ஒத்துப்போகும் என்று எந்த உத்தரவாதமும் இல்லை ஏனெனில் சிலருக்கு பற்கள் தேய்ந்தும் போகலாம். வாரம் இரண்டு முறை செய்தாலே உங்களுக்கு வித்யாசம் தெரியும். அடுத்தது, உங்கள் மவுத் வாஷாக இதை பயன்படுத்த ஒரு கிளாஸ் தண்ணீரில் பேக்கிங் சோடாவை கலந்து வாயை கொப்புளிக்கவும். இதனால் உங்கள் வாயில் இருக்கும் பாக்ட்ரியாக்களை அளித்து தூர்நாற்றத்தை  அகற்ற உதவுகிறது பேக்கிங் சோடா ! இனி நீங்கள் எங்கு சென்றாலும் நம்பிக்கையுடன் பேசலாம் !


பேக்கிங் சோடா - மேக்கப் பிரஷை சுத்தம் செய்ய (Use To Clean The Makeup Brush) :


6Benefits Of Baking Soda In Tamil


மேக்கப் ப்ரஷ் அனைத்தையும் நீங்கள் எப்போது கடைசியாக சுத்தம் செய்தீர்கள் என்று ஞாபகம் இருக்கிறதா ? அதை அடிக்கடி சுத்தம் சேயாவிட்டால் பாக்டீரியாக்கள் தங்கி உங்கள் சருமத்தில் மேற்கொண்டு பிரச்னைகளை உண்டாக்கும். ஆகையால், ஒரு சிறு சிறு கப்பில் வெதுவெதுப்பான நீரில் இரண்டு ஸ்பூன் பேக்கிங் சோடாவை சேர்த்து உங்கள்  அணைத்து மேக்கப் ப்ரஷ்களையும் ஊறவைத்து விடுங்கள். இதை ஒரு தூண்டில் காயவைத்து எடுக்கவும்.


பேக்கிங் சோடா -கூந்தலுக்கு (Baking Soda For Hair) :


நீங்கள் கூந்தலை அடிக்கடி அலச முடியாவிட்டால், டக்கென்று அந்த எண்ணெய் கொண்ட கூந்தலில் இருந்து விடு பெற  இதை செய்யலாம் - பேக்கிங் சோடாவை தலையில் நன்கு தேயுங்கள். அது உங்கள் உச்சந்தலையில் உள்ள எண்ணையை உறிஞ்சிவிடும். ஆஹா ! அப்போ ஷாம்பு இல்லாமலே பிரெஷாக தெரிவீர்கள்!


அடுத்து, கூந்தல் அடர்த்தியாகவும் பளப்பாக தெரியவும் பேக்கிங் சோடாவில் கூந்தலை அலசுங்கள். உங்கள் கூந்தல் வறண்ட தன்மை கொண்டதானால் இதற்கு பிறகு ஒரு கண்டிஷனர் மிக அவசியம். உங்கள் கூந்தல் எண்ணெய் கொண்டதாக இருந்தால் , பேக்கிங் சோடா நிச்சயம் உங்கள் கூந்தலை சுத்தம் செய்து , கெமிக்கல், தூசி  அனைத்தையும் அகற்றி மென்மையாக மாற்றிவிடும் . 


பேக்கிங் சோடா - கறையை  நீக்குவதற்கு (Helps To Remove Stains): 


உங்கள் துணிகளில் உள்ள கறைகளை எளிதில் நீக்க வெறும் 1/4 கப் பேக்கிங் சோடா தண்ணீரில் கலந்து ஊற வைத்து பிறகு அலசி  எடுங்கள்( ஒரு பேஸ்ட் ஆக செய்து கரைகளிலும் பூசலாம்). இது உங்கள் துணிகளில் உள்ள அழுக்கு மற்றும் கறைகளை மற்ற கெமிக்கல் கலந்த பவுடர்களை விட சிறப்பாக வேலை செய்து அகற்றிவிடும் .


பேக்கிங்  சோடாவால் ஏற்படும்  பக்க விளைவுகள் (Side Effects Of Baking Soda) -


3Benefits Of Baking Soda In Tamil


'அளவுக்கு அதிகமாக  போனால் அமிர்தமும் விஷம் '  என்பது போல பேக்கிங் சோடாவை நீங்கள் தேவைக்கேற்ப உபயோகிப்பது நல்லது. அதிகமாக பயன்படுத்தினால் சில விளைவுகள் வர கூடும் .


  • பற்களில் உங்கள் பேஸ்ட்டில் சிறிதாக கலந்து உபயோகிக்கவும். சோடியம் அதிகம் இருப்பதால், தினம் உபயோகிக்கும்போது  இது பல் எனாமலை அரித்துவிடும்.

  • மேலும், உணவு தயாரிக்கையில்  ( கேக் , பிரட்,பிஸ்கட் ) இதை பயன்படுத்தும் போது அதிகம் சோடியம் இருப்பதால் வாந்தி, பேதி போன்ற தொந்தரவுகளும் வரலாம்.  சில சமயங்களில் , வயிற்றில் ஆசிட் தொல்லையால் இதை நீங்கள் உண்ணும் போது, சோடியம் அதிகம் இருப்பதால் அதுவே மேற்கொண்டு ஆசிட் எதிர்வினை அதிகரிக்கலாம்.ஆகையால் நீங்கள் உங்கள் உடம்பிற்கு ஏற்ற விதத்தில் இதை உண்ணுவது சிறந்தது.

  • பேக்கிங் சோடா பல தோல் சம்பந்த பட்ட பிரச்சனைகளில் தீர்வாக இருந்தாலும் இதை உணர்திறன் கொண்ட சருமத்தில் உபயோகிக்க முடியாது ஏனெனில் சருமம் சிவந்து,தடிப்புகள் உடன் எரிச்சலை உண்டாக்கலாம் . மேலும், சில சமயங்களில் உங்கள் சருமம் மிகவும் வறண்டு போய்விடும். ஆகையால் , அனைவருக்கும் இது பொருந்துமா என்றது உங்கள் சருமத்தின் அடிப்படையை கொண்டு தீர்மானிக்க வேண்டிய விஷயம்.


 


மேலும் வாசிக்க - 


Baking Soda Benefits in Hindi


 


பட ஆதாரம்  - shutterstock 


POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்திதமிழ்தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!


மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும் .பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo.