அதிகப்படியான பணவரவும் நல்வாழ்க்கையும் அமையப்போற அந்த அதிர்ஷ்டசாலி ராசிக்காரர் நீங்கதானா ! சரிபாருங்கள் உங்கள் ராசிபலனை!

அதிகப்படியான பணவரவும் நல்வாழ்க்கையும் அமையப்போற அந்த அதிர்ஷ்டசாலி ராசிக்காரர் நீங்கதானா ! சரிபாருங்கள் உங்கள் ராசிபலனை!

இன்று செவ்வாய் கிழமை ஏகாதசி திதி சதய நட்சத்திரம் சித்திரை மாதம் 17ம் நாள். இன்றைய நாளில் உங்கள் ராசிபலனை பார்க்கலாம்.மேஷம்


வாழ்க்கை மிக மென்மையாக போய்க்கொண்டிருக்கிறது. ஆனாலும் உங்கள் மனம் வெறுமையில் இருக்கிறது. உங்கள் வாழ்க்கையை நீங்கள் வாழவில்லை என்று மனம் சொல்கிறது.ஒரு சில சவால்கள் உங்கள் வாழ்க்கையை பற்றி உங்களுக்கு பாடம் நடத்த வரலாம்.இது அவசியம்தான். அப்போதுதான் நீங்கள் உங்கள் பாதையில் பயணிப்பீர்கள்.


ரிஷபம்


மனதளவில் உங்களுக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை.ஆனால் உங்கள் காரண அறிவு உங்களை செயல்பட விடாமல் தடுக்கிறது. உங்கள் அறிவை மூடி உங்கள் உள்குரலை பின்பற்றுங்கள். அந்த உணர்வுகள் உங்களுக்கு சரியான பாதையை மட்டுமே காட்டும் என்பதை நம்புங்கள்


மிதுனம்


சூழ்நிலைகளை வேறு வேறு கோணங்களில் ஆராய பழகுங்கள். உங்களிடம் எதிர்காலத்தை கணிக்க கூடிய தெய்வீகத்தின் பரிசு இருக்கிறது. இப்போதைய இடைப்பட்ட ஓய்வு காலம் ஒரு காரணத்திற்காகத்தான் என்பதை புரிந்து கொள்ளுங்கள். சீக்கிரமே நீங்கள் முன்னேறி வேகமெடுப்பீர்கள். வெற்றியை அனுபவிப்பீர்கள்.


கடகம்


உங்களுக்கு பிடித்த வேலைகளை செய்வதில் நீங்கள் சுறுசுறுப்பாக ஈடுபட்டிருக்கிறீர்கள். அதே சமயம் வேறு சில வேலைகளும் உங்களை ஆக்கிரமித்துள்ளன. இந்த பிரபஞ்சம் உங்களை பிஸியாகவே இருக்க வைத்திருக்கிறது. முக்கியமற்ற வேலைகளில் உங்களை நீங்கள் ஈடுபடுத்திக்கொள்ள அது விரும்பவில்லை. உங்களுக்கு பிடித்த வேலைகளை செய்து பொழுதை கழியுங்கள்


சிம்மம்


மிகப்பெரிய வெற்றிக்கான நேரம். நீங்கள் எந்த வேலை எடுத்தாலும் அது நேர்மறையாகவே முடியும். எதிர்பாரா வேலைவாய்ப்புகள் உங்களுக்கு வரலாம். உங்களுக்கு அவை நன்மையே தரும்.உங்கள் எதிர்பார்ப்புகளை மறந்து நம்பிக்கையோடு ஆர்வமாக அவற்றை ஏற்று கொள்ளுங்கள்.


கன்னி


உங்கள் தேவையற்ற கவலைகள் அழுத்தங்கள் கற்பனையான பயங்கள் எல்லாவற்றையும் தூக்கி போடுங்கள்.அதிகமாக கற்பனை செய்யும் பழக்கம் உங்களிடம் இருக்கிறது பெரும்பாலும் அதனால் உங்களுக்கு ஒரு பயனும் இல்லை. பலனே கிடைக்காத வேலைகளை நீங்கள் செய்து வருகிறீர்கள். நேரத்தை வீணடிப்பதை நிறுத்துங்கள்


துலாம்


பணத்தை பற்றிய உங்கள் பார்வை மற்றும் நம்பிக்கை என்ன.. எதனாலோ அவை உங்களை வந்து அடைய முடியாமல் தடுக்கப்படுகிறது.பணத்தை பற்றிய உங்கள் பார்வையை உடனே மாற்றுங்கள்.எந்த கணம் உங்கள் நம்பிக்கைகளை நீங்கள் மாற்றி கொள்கிறீர்களோ அந்த கணத்தில் இருந்தே உங்கள் வாழ்க்கை பிரகாசமாக மாறும்.நீங்கள் சந்தோஷம் அடைவீர்கள்.


விருச்சிகம்


ஒரு லேசான கயிற்றில் நீங்கள் பாதுகாப்பில்லாமல் நடப்பது போல உங்கள் வாழ்க்கை இருக்கலாம். ஒரே நேரத்தில் உங்களுக்கு எது முக்கியம் என்கிற கவனமே இல்லாமல் பல வேலைகளை செய்கிறீர்கள். பல வேலைகளுக்கு இடம் கொடுக்காதீர்கள்.உங்களுக்கு முக்கியமானவைகளை முதலில் செய்யுங்கள். விளையாட்டாக செய்யுங்கள் அது நல்லது


தனுசு


உங்கள் மன மற்றும் உடல் ஆற்றல்களை உறிஞ்சும் எதிர்மறை ஆட்களை உங்கள் அருகில் வைத்திருக்கிறீர்கள். ஆகவே தனியாக நிறைய நேரம் செலவழியுங்கள்.மந்திரங்களை சொல்லுங்கள் த்யானம் செய்யுங்கள் உங்கள் ஆற்றல்களை சுத்தம் செய்து கொள்ளுங்கள். தெளிவையும் வழிகாட்டுதலையும் வாங்குங்கள். இப்போது உங்களுக்கு யாரும் உதவ மாட்டார்கள் நீங்கள்தான் உங்களுக்கு வழிகாட்டி


மகரம்


நீங்கள் இப்போது பலன் மற்றும் வெற்றியடைய கூடிய சூழ்நிலைகளில் இருக்கிறீர்கள். ஆகவே செயலில் இறங்குங்கள். நீங்கள் நினைப்பதை விட அதிகமாகவே உங்களால் சாதிக்க முடியும்.முழுமையான அர்ப்பணிப்பு மற்றும் பொறுப்புடன் உங்கள் வேலையை நீங்கள் செய்யும்போது அதிகமான செல்வம் மற்றும் நல்வாழ்க்கை எல்லா திசைகளில் இருந்தும் உங்களை நோக்கி வரும்.


கும்பம்


உங்கள் வாழ்க்கையை பற்றிக் கொண்டிருக்கும் கடந்த காலத்தை விட்டு வெளியே வாருங்கள்.. ஒரு புதிய பயணத்தை புதிய கோணத்தில் இருந்து ஆரம்பியுங்கள். புதிய நம்பிக்கைகள் மற்றும் புதிய எண்ணங்களை ஆரம்பியுங்கள். உங்களுக்கு என்ன தேவையோ அதனை தருவித்து கொள்ளும் சக்தி படைத்தவர் நீங்கள். ஒரே கவனத்தோடும் முழு நம்பிக்கையோடும் இறங்குங்கள். எல்லாம் நலமாகும்


மீனம்


மிக ஆழ்ந்த ஆன்மீகம் மற்றும் உள்ளார்ந்த தேடல்களுக்கான நேரம். உங்களை சுற்றிலும் ஆர்வம் மற்றும் ஊக்கப்படுத்துகிற மக்களை வைத்து கொள்ளுங்கள்.உங்களை போன்ற கனவுகளோடு இருக்கும் நபர்களோடு இணைவது உங்கள் ஆற்றலை மேம்படுத்தும். அடுத்தவர்களிடம் இருந்து கற்று கொள்ள வழிவகுக்கும்.


ஜோதிட பலன்களை கணித்தவர் astro ஆஷா ஷா.


---


POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!


மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும் பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo.