logo
ADVERTISEMENT
home / Astrology
காதல் ப்ரகாசமான எதிர்காலம் ஐஸ்வர்யம் எல்லாமே இந்த ஐந்து ராசிக்காரர்களுக்கு வொர்க் அவுட் ஆக போகுது! சரிபாருங்கள் உங்கள் ராசியை !

காதல் ப்ரகாசமான எதிர்காலம் ஐஸ்வர்யம் எல்லாமே இந்த ஐந்து ராசிக்காரர்களுக்கு வொர்க் அவுட் ஆக போகுது! சரிபாருங்கள் உங்கள் ராசியை !

இன்று திங்கள் கிழமை தசமி திதி அவிட்ட நட்சத்திரம் சித்திரை மாதம் 16ம் நாள். இன்றைய நாளில் உங்கள் ராசிபலனை பார்க்கலாம்.

மேஷம்

எல்லா விதத்திலும் நேசிக்கும்படி உங்கள் மனதை திறந்து வையுங்கள், நீங்கள் இது நாள் வரை அனுபவித்த வலிகளை காதல் ஆற்றுபடுத்தும். மற்றவர்களின் மகிழ்ச்சிக்காக நீங்கள் உங்கள் வளையத்தில் இருந்து வெளியேறி உதவினீர்கள். இப்போது அதெல்லாம் திரும்ப கிடைக்க போகிறது. மகிழ்ச்சி உங்களை தேடுகிறது.

ரிஷபம்

எதிர்ப்பாராத விதமாக பணம், பரிசுகள், நல்வாய்ப்புகள் , மற்றும் மற்றவர்களின் உதவி உங்களுக்கு கிடைக்க போகிறது. தங்கள் தொழிலை மாற்றிக்கொள்ள நினைப்பவர்கள் மாற்றி கொள்ளலாம். வளர்ச்சிக்கு தகுந்த ஏராளமான வாய்ப்புகள் காத்திருக்கின்றன.

ADVERTISEMENT

மிதுனம்

தடைகளும் தாமதங்களும் உங்கள் வாழ்வை விட்டு விலகுகின்றன. நீங்கள் புதிய பிரகாசமான எதிர்காலத்தை நோக்கி நகரலாம். உங்கள் தோள்களில் இருந்த பெரிய பாரம் இறங்குகிறது. ஆகவே நீங்கள் லேசாகவும் நிம்மதியாகவும் இருக்கலாம். இனிமேல் நீங்கள் யாரையும் சார்ந்திருக்க தேவையில்லை.

கடகம்

சமமான அன்பு மற்றும் அக்கறைக்காக அடுத்தவர்களின் உதவியை நாடுங்கள். இப்போதிருக்கும் சூழ்நிலையை விட நீங்கள் வலிமையாக வளர்வீர்கள்.உங்களிடம் இருக்கும் கவலைகள் எல்லாம் விலகி விடும். இப்போது நீங்கள் தவறவிட்ட சந்தோஷம் மற்றும் களிப்பு மீண்டும் உங்களை வந்தடையும்

சிம்மம்

நீங்கள் ஏதாவது சவால்களை சந்தித்து கொண்டிருக்கிறீர்கள் என்றால் நீங்கள் உடனடியாக செயலில் இறங்கி உங்கல் தன்னம்பிக்கையை நிரூபிக்க வேண்டிய நேரம் என்பதை புரிந்து கொள்ளுங்கள். உங்களுக்குள் இருக்கும் வலிமையை நீங்கள் உணர வேண்டும் உங்களுக்கு வெளியே எதுவும் இல்லை. ஒரு தீவிரமான காதல் உறவிற்கு வாய்ப்பிருக்கிறது.

கன்னி

உங்களிடம் தீவிரமான நோக்கமும் அர்ப்பணிப்பும் இருந்தால் வெற்றி உங்களிடம் இல்லை என்று சொல்லாமல் தேடி வரும். நீங்கள் சுய ஒழுக்கத்துடன் மற்றும் தீவிரத்துடன் வேலை செய்தால் உங்கள் கனவுகளை இலக்குகளை அடைய முடியும். பொறுப்போடு இருங்கள்

ADVERTISEMENT

துலாம்

அற்புதமான நேர்மறை மாற்றங்கள் உங்களை தேடி வருகின்றன. உங்கள் கஷ்டகாலங்களில் இருந்து நீங்கள் விடுபடுவீர்கள். இந்த பிரபஞ்சம் உங்களுக்கு நல்ல அறிகுறிகளை தரப்போகிறது, அன்பு காதல் மகிழ்ச்சி மற்றும் செல்வம் ஆகியவை உங்கள் வசப்படப்போகிறது.

விருச்சிகம்

உங்கள் வருமானத்தையும் செலவினங்களையும் கவனிக்க வேண்டிய நேரம்.மழைக்காலத்திற்காக கொஞ்சம் பணத்தை சேமியுங்கள்.ஒரு அறக்கட்டளையோடு இணைந்து நல்ல எதிர்காலம் வேண்டுவோருக்கு உதவி செய்யுங்கள்.கொடுப்பதும் வாங்குவதும் உங்களுக்கு அதிக ஆசீர்வாதங்களை அருளும்.

தனுசு

உங்கள் கடந்த காலத்தை போக விடுங்கள். இந்த சூழ்நிலையை முடித்து விடுங்கள்.இதனால் உங்களுக்கு எந்த நன்மையையும் கிடைக்க போவதில்லை.உங்களை வளரவோ அதிகரிக்கவோ மகிழ்வாகவோ இருக்க விடாத சூழ்நிலையில் இனியும் நீங்கள் இருக்க வேண்டாம். அமைதியோடு முன்னோக்கி நகருங்கள்

மகரம்

உங்கள் முகத்திற்கு முன் விடப்பட்ட சவால்களை ஒத்தி வைக்காதீர்கள். உங்களைப்பற்றி தெளிவாக பயனுள்ள வகையில் விளக்குங்கள்.நீங்கள் வரைந்து வைத்திருக்கும் கோட்டை யாரும் தாண்ட கூடாது என்பதை மற்றவர்களுக்கு புரிய வையுங்கள். உங்களுக்காக நீங்கள் பேசாவிட்டால் வேறு யாரும் பேச போவதில்லை

ADVERTISEMENT

கும்பம்

நீங்கள் இப்போது குழப்பத்தில் இருக்கிறீர்கள். என்ன செய்வது என்று உங்களுக்கு தெரியாமல் இருக்கலாம்.முடிவெடுக்க முடியாமல் இருப்பது உங்களை பின் தங்க வைக்கிறது. நீங்கள் இப்போது செயலில் இறங்காவிட்டால் வேறு யாரோ ஒருவர் உங்கள் வாய்ப்பை எடுத்து கொள்வார்.உங்கள் புத்திக்கும் மனதுக்கும் நடுவே நல்லிணக்கத்தை கொண்டு வாருங்கள்.

மீனம்

உங்கள் சூழ்நிலைக்கு ஏற்ற அறிவுரையை தேடுங்கள்.உங்களுக்கு தேவை எனில் யாரிடமும் உதவி கேட்க தயங்காதீர்கள். உங்களால் தனியாக இந்த நிலையை சமாளிக்க முடியாது. உங்களுக்கு தேவையான உதவியையும் துணையையும் நாடுங்கள்

 

ஜோதிட பலன்களை கணித்தவர் astro ஆஷா ஷா.

ADVERTISEMENT

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!

மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும் பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo.

28 Apr 2019

Read More

read more articles like this
good points

Read More

read more articles like this
ADVERTISEMENT