இந்த நான்கு ராசிக்காரர்களுக்கு இன்னிக்கு அதிர்ஷ்டம் அடிக்க போகுது ! சரிபாருங்கள் உங்கள் ராசிபலனை !

இந்த நான்கு ராசிக்காரர்களுக்கு இன்னிக்கு அதிர்ஷ்டம் அடிக்க போகுது ! சரிபாருங்கள் உங்கள் ராசிபலனை !

இன்று ஞாயிற்று கிழமை நவமி திதி அவிட்ட நட்சத்திரம். சித்திரை மாதம் 15ம் நாள். இன்றைய நாளில் உங்கள் ராசிபலனை பார்க்கலாம்.மேஷம்


மற்றவர்களிடம் இருந்து உங்களை துண்டித்து கொள்ளுங்கள். அதிகமாக ஒருவரை சார்ந்திருப்பது உங்களுக்கு நிறைய வலிகளை தரும். ஒரு நபருக்கு உங்களால் எவ்வளவு நேரம் செலவழிக்க முடியும் என்பதில் கவனமாக இருங்கள். நீங்கள் தரும் அன்பையே பெறவும் முடியாது என்பதை புரிந்து கொள்ளுங்கள்


ரிஷபம்


உங்கள் மனதை தேவையற்ற எண்ணங்களில் இருந்து வெளியே கொண்டுவாருங்கள். கற்பனைகளை காட்சி படுத்துவதை நிறுத்துங்கள். பலவித எதிர்பார்ப்புகளோடு உங்கள் மனம் நிரம்பி இருக்குமானால் தெய்வீகம் எப்படி உங்களுக்குள் வர இடம் இருக்கும் என்பதை யோசியுங்கள். உங்கள் மனதை காலியாக்கி உங்களை திறந்து வையுங்கள் பேரருள் உங்களை நாடி வருகிறது


மிதுனம்


உங்களுக்கு மிகுந்த நன்மை தர கூடிய ஒரு விஷயம் ஏற்கனவே உங்களிடம் இருக்கிறது என்கிற நம்பிக்கையில் உங்கள் ஆசைகளை விட்டு விடுங்கள்.அது வெகு சீக்கிரம் உங்களை வந்தடையும். பிரபஞ்சம் உங்களுக்கு விருப்பமான விஷயத்தை தொடர்ந்து செய்ய சொல்லி வலியுறுத்துகிறது. உங்கள் கனவுகள் நனவாகும் காலம் இது.


கடகம்


உங்களுக்கு என்ன வேண்டும் என்பது உங்களுக்கு உறுதியாக தெரியுமா? உங்களை நீங்களே கேளுங்கள் நீங்கள் விரும்பும் விஷயம் உங்களை சந்தோஷப்படுத்தவா அல்லது உங்கள் அருகில் இருப்போரை சந்தோஷமாக வைத்து கொள்ளவா என்பதில் தெளிவாகுங்கள். யாரையும் தயவு செய்து கொண்டு நீங்கள் இருக்க வேண்டாம்.யாருக்கும் உயர்வாகவும் உங்களை கருத வேண்டாம்.


சிம்மம்


உங்களை மற்றவர்களோடு ஒப்பிட்டு கொண்டு வாழ்க்கையில் நீங்கள் தவற விட்டவைகளை எண்ணி கவலை கொள்வீர்கள். உங்கள் வாழ்க்கையில் நீங்கள் கைவசம் வைத்திருப்பவைகளை எண்ணி சந்தோஷம் கொள்ளுங்கள். உங்களிடம் இருப்பவைகளுக்கு நன்றி கூறுங்கள். உங்களுக்கு தெரியாது யாரோ ஒருவர் உங்கள் வாழ்வை வாழ ஏங்கி கொண்டிருக்கலாம். நீங்கள் நல்ல இடத்தில் இருக்கிறீர்கள்


கன்னி


நீங்கள் பிரார்த்தித்த எல்லா விஷயங்களும் நீங்கள் எதிர்பார்க்காத ஒரு தருணத்தில் நடந்தேறும். உங்கள் பிரார்த்தனைகளை கூறுங்கள், நேர்மறையோடு இருங்கள் அர்ப்பணிப்போடு நம்புங்கள். நல்லது நடக்கும்.


துலாம்


உங்களை தொந்தரவு செய்யும் எல்லாவற்றையும் விலக்கி விடுங்கள். பிரபஞ்சம் உங்களிடம் ஏற்கனவே சொல்லியிருக்கிறது. கவலைப்படுவதையும் சந்தேகப்படுவதையும் விட்டு விடுங்கள். நம்பிகையோடு சரணடையுங்கள் உங்களுக்கு தகுதியானது உங்களை தேடி வருகிறது. உங்கள் செயல்களை முடித்து விட்டீர்கள். நிம்மதியாக காத்திருங்கள்


விருச்சிகம்


நாளைக்கு என்ன நடக்குமோ என்பது பற்றிய கவலையில் நீங்கள் இருப்பீர்கள். உங்கள் ப்ரியத்துக்குரியவர்களுக்கு என்ன நடக்குமோ என்று பயப்படுவீர்கள். உங்கள் சேருமிடம் பற்றிய கவலைகளை விட்டு விடுங்கள். முதலில் சில அடிகள் எடுத்து வையுங்கள். நன்மை உங்கள் வசம்.


தனுசு


நீங்கள் கடந்து வந்த பாதையை கவனியுங்கள். எவ்வளவு தூரம் பயணித்திருக்கிறீர்கள் என்ன சாதித்திருக்கிறீர்கள் என்பதை பாருங்கள். மற்றவர்களோடு உங்களை ஒப்பிடாதீர்கள்.மற்றவர்கள் வாழ்க்கைக்கு முக்கியத்துவம் கொடுக்காதீர்கள். உங்கள் வாழ்வை மேலும் அழகாகும் விஷயங்களை தொடர்ந்து செய்யுங்கள். எதனை சாதிக்க வேண்டும் என்று நினைக்கிறீர்களோ அதனை சாதியுங்கள்


மகரம்


வெற்றிக்காகவும் உள்மன அமைதிக்காகவும் நீங்கள் ஏங்குகிறீர்கள். அதை சாதிப்போம் என்கிற தன்னம்பிக்கை உங்களுக்கு இருந்தாலும் அதனை பற்றி சந்தேகமும் அடிக்கடி இருக்கும். தாமதங்களுக்கும் திருப்பு முனைக்களுக்கும் நன்றி சொல்லுங்கள். புற சூழ்நிலைகளால் உங்கள் மனதை சிதற விடாதீர்கள். நீங்கள் விரும்பியது வந்து கொண்டிருக்கிறது.


கும்பம்


உங்களுடைய எல்லா செயல்களிலும் நேர்மையாக போலியில்லாமல் இருங்கள். உங்கள் வேலையை பற்றிய நல்ல எண்ணங்கள் உங்களுக்கு இல்லாமல் இருந்தால் நீங்கள் உங்கள் தொழிலில் வெற்றி பெற்றாலும் அது நிரந்தரமாக இருக்காது. உங்கள் உணர்வுகள் மற்றும் ஆசைகள் இவற்றில் உண்மையாக இருங்கள்


மீனம்


உங்கள் தொழில் திறமை மூலம் நீங்கள் அடையாளம் காணப்படுவீர்கள். உங்கள் கடந்த கால வேலைகள் எல்லாம் இப்போது பலவிதங்களில் செல்வங்களையும் அருளையும் உங்களுக்கு கொண்டு வந்து தரும். உங்கள் கர்வம் இதையெல்லாம் நாசம் செய்யாமல் பார்த்து கொள்ளுங்கள். உங்கள் அறிவையும் ஆசீர்வாதங்களையும் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்


ஜோதிட பலன்களை கணித்தவர் astro ஆஷா ஷா.


---


POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!


மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும் பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo.