இன்று திங்கள் கிழமை த்ரிதியை திதி அனுஷ நட்சத்திரம் சித்திரை மாதம் 9ம் தேதி. இன்றைய நாளில் உங்கள் ராசி உங்களை பற்றி என்ன சொல்கிறது என்று பார்க்கலாம்.
மேஷம்
உங்கள் வாழ்க்கையைப் பற்றி சிந்தித்துப் பாருங்கள், நீங்கள் எதை அடைந்தீர்கள், என்ன மாற்ற வேண்டும், உங்கள் வாழ்க்கையில் இணைந்திருப்பது என்ன என்று யோசித்துப் பாருங்கள். உங்கள் கனவுகள் விரிவாக்க மற்றும் அடைய விரும்பினால் நீங்கள் பெரிய மாற்றங்களை செய்ய வேண்டும். ஒரு புதிய அணுகுமுறை உங்களுக்கு உதவும்.
ரிஷபம்
உங்கள் செலவு பழக்கங்களைக் கவனித்து, வாழ்க்கையில் சேமிப்பை காத்துக்கொள்ளுங்கள். நீங்கள் சேமிப்பதை விட அதிகமாக செலவு செய்கிறீர்களா? நீங்கள் வேலை மற்றும் பார்ட்டிக்கு செலவழிக்கும் நேரத்தை குடும்பம் மற்றும் அன்புக்குரியவர்களுடன் இணைக்க முயற்சி செய்யுங்கள்..
மிதுனம்
நீங்கள் புதிதாக ஒன்றை ஆரம்பித்து வேலையில் அல்லது தொழில் வாழ்க்கையில் மாற்றத்தை தேடுகிறீர்கள் என்றால், இது சரியான நேரம். உங்கள் பேரார்வம் மற்றும் கனவுகளை வளர்த்துக் கொள்ளுங்கள், அது உங்கள் யதார்த்தமாக மாறும். இப்போது புதிய மற்றும் புதிய வாழ்க்கையில் வேலை செய்வதற்கான நேரம்.
கடகம்
நேசிப்பதற்கும், அக்கறையுடனும், மகிழ்ச்சியுடனும் இருக்க திறந்திருங்கள். மற்றவர்கள் உங்களை அனுகுவதற்கு அனுமதிக்கவும், உங்கள் வாழ்க்கையை சிறப்பாக மாற்றும் அழகான நபருடன் காதலில் விழ வேண்டிய நேரம் இது.
சிம்மம்
வாழ்க்கை உங்களுக்கு கொடுத்ததை திரும்ப கொடுக்கும் நேரம் இது. உங்கள் குடும்பம், நண்பர்கள், அன்புக்குரியவர்கள் அல்லது ஆதரவு தேவைப்படும் எவருக்கும் உங்கள் திறமை, அறிவைப் பகிர்ந்து கொள்வதன் மூலம் உங்கள் நேரத்தையும், பணத்தையும், கொடுத்து அவர்களுக்கு உதவுங்கள்.
கன்னி
உங்கள் கனவுகள் மற்றும் இலக்குகளை அடைய உங்கள் நோக்கங்கள், வார்த்தைகள் மற்றும் செயல்களுக்கு இடையிலான இணக்கத்தையும் ஒழுங்கு படுத்துங்கள். என்னவெல்லாம் நீங்கள் வெளிப்படுத் வேண்டும் என்று நீங்கள் நினைக்கும் உணர்வுகளையும் வார்த்தைகளையும் கவனியுங்கள்.
துலாம்
உங்கள் ஆசீர்வாதங்களை மையமாக வைத்து, வாழ்க்கையில் நன்றியுணர்வைக் காட்டுங்கள். உங்கள் நடப்பு சூழ்நிலையில் நேர்மறையான அம்சங்களைக் குறிப்பிட்டு, அனைவரையும் ஆசீர்வதிக்கவும், மகிழ்ச்சியை கொண்டுவரும் விளைவுகளையும் செய்யுங்கள்.
விருச்சிகம்
எதிர்பார்த்த மற்றும் எதிர்பாராத ஆதாரங்களில் இருந்து நீங்கள் ஆதரவைப் பெறுவீர்கள். உங்கள் கனவுகள் இலக்குகளை அடைய உங்களுக்கு உதவும். நீங்கள் விரும்பும் விஷயத்தில் தெளிவாக இருக்கவும், உங்களிடம் வரும் எந்த உதவியையும் ஏற்கவும்.
தனுசு
உங்கள் நடவடிக்கைகள் உங்களை மட்டும் பாதிக்காது, உங்கள் குடும்பத்தினர் மற்றும் பிரியமானவர்களை பாதிக்கும். எந்த நடவடிக்கையும் எடுப்பதற்கு முன் ஆழமாக யோசித்துப் பாருங்கள். உங்கள் விளைவுகளுக்கு மற்றவர்களைக் குற்றஞ்சாட்டாதீர்கள், ஆனால் உங்கள் செயல்களுக்கு பொறுப்பேற்க கற்றுக்கொள்ளுங்கள்.
மகரம்
உங்கள் வாழ்க்கையை ஒழுங்கமைக்கவும். நீங்கள் மற்ற அம்சங்களை புறக்கணித்து, உங்களுக்கு சவால்களை உருவாக்கும் வாழ்க்கைக்கு மிகவும் முக்கியத்துவம் கொடுக்க முனைகின்றன. வாழ்க்கையின் அனைத்து அம்சங்களிலும் சமநிலை மற்றும் இணக்கத்தை ஏற்படுத்துங்கள்.
கும்பம்
உங்கள் நாள் மற்றும் உங்கள் பணிகளை ஒழுங்கமைத்து, பட்டியலை தயார் செய்யுங்கள், இதனால் முக்கிய விஷயங்கள் மற்றும் தகவல்களை நீங்கள் தவறாமல் இருக்கலாம். இன்றைய தினம் மிக முக்கியமாக இருப்பதால் சிறிய விவரங்களையும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.
மீனம்
நன்மை தரக்கூடிய சில மாற்றங்களை ஏற்க தயாராக இருக்க வேண்டும். உங்கள் கருத்துக்களில் மிகவும் பிடிவாதமாக இருக்காதீர்கள், மற்றவர்களுடைய பார்வைகளையும் உணர்ச்சிகளையும் மனதை திறந்து வையுங்கள். ஒரு குழுவாக பணியாற்றினால் மகிழ்ச்சி கட்டாயம் உண்டு.
ஜோதிட பலன்களை கணித்தவர் astro ஆஷா ஷா.
—
POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!
மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும் பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo.