இன்று வெள்ளி கிழமை. நேற்று இரவு 7.11 முதல் இன்று மாலை 5.20வரை சித்ரா பௌர்ணமி. இன்று புனித வெள்ளி. தேவாலயங்களுக்கு சென்று பிரார்த்தனை நடத்துதல் நன்று. சிவன் அம்பாள் வழிபாடு நலன் தரும்.
மேஷம்
நீங்கள் பொறுமை இருப்பதாக உணரலாம், அது உங்களை பாதிக்காத வரை நல்லது. நீங்கள் அன்பு மற்றும் இரக்கத்துடன் என்ன செய்கிறீர்களோ அதையே செய்யுங்கள். சங்கடமான சூழ்நிலைகளுக்குள் பொறுமையுடன் இருங்கள்.
ரிஷபம்
உங்கள் விருப்பம் உண்மைதான் ஆனால் தாழ்மையுடன் இருக்க கற்றுக்கொள்ளுங்கள். அன்பு மற்றும் இரக்கத்துடன் செயல்பட உங்கள் மிகப்பெரிய கனவுகளை மெதுவாக நகர்த்துவீர்கள். வாழ்க்கையின் ஆழமான அர்த்தத்தையும் உங்கள் வாழ்க்கையின் அனுபவங்களையும் நீங்கள் புரிந்துகொள்கிறீர்கள்.
மிதுனம்
உங்கள் ஆற்றல்கள் மற்றும் அதிர்வுகளை சுத்தப்படுத்த சில அனுபவங்கள் தேவைப்பட்டன. நீங்கள் ஒரு சிறந்த நோக்கத்திற்காக இங்கே இருக்கிறீர்கள். சில விஷயங்கள் உங்களைத் தொந்தரவு செய்தால் மனச்சோர்வாக உணர வேண்டாம். உங்கள் பூமிக்குரிய தேவைகளைப் பற்றி கவலைப்படாதீர்கள், அது அற்புதமான வடிவங்களில் உங்களிடத்தில் வரும்.
கடகம்
உங்களை காயப்படுத்திய துன்பப்படுத்திய எல்லா காரியங்கள் மற்றும் கசப்பான அனுபவங்கள் உங்களை விட்டு கடந்து செல்லும் நேரம் இது. பூ கொத்துடன் நல்ல விடயங்கள் உங்களை தேடி வருகின்றது.
சிம்மம்
சில காரியத்தின் மீது ஆழமான நம்பிக்கையும் ஆசையையும் வைத்திருந்தீர்கள். ஆனால் நீங்கள் எதிர்பார்த்தது போன்று உங்களுக்கு நடக்க வில்லை. உங்கள் தவறை ஒப்புக்கொள்ள மனம் தயங்குகின்றது.கவலை வேண்டாம் உங்களை அரவணைக்க அனைவரும் காத்திருக்கின்றனர்.
கன்னி
தற்போதைய சூழ்நிலைகள் உங்கள் கடந்தகாலத்தில் வேரூன்றியுள்ளன. கடந்த காலத்தின் அந்த நபர் அல்லது இதேபோன்ற சூழ்நிலையுடனான கடந்த காலத்தை குணப்படுத்துங்கள். இது உங்கள் வாழ்க்கையை குணப்படுத்தும் நேரமாகும், இதனால் பாதை தெளிவாகவும் எந்த சவால்களும் தடைகளும் இல்லாமல் இருக்கும்.
துலாம்
உங்கள் எல்லா பொறுப்புகளையும் கவனித்துக் கொண்டிருக்கும்போது வாழ்க்கையை அனுபவிக்க பழகுங்கள். உங்கள் வாழ்க்கை, வேலை, குடும்பம், ஓய்வு நேரம், ஆன்மீக நடைமுறைகள் ஆகியவற்றின் அனைத்து அம்சங்களையும் சமன் செய்ய கற்றுக்கொள்ளுங்கள். உங்கள் வாழ்க்கையில் சமநிலை மற்றும் ஒற்றுமை இருக்கும் போது மென்மையாக இருக்கும்.
விருச்சிகம்
உங்கள் தேவதையிடம் பேசுங்கள். மனம் விட்டு பேசுங்கள் காரியம் அனைத்தும் நினைத்தது போன்று நிறைவேறும். கொஞ்சம் பொறுமையுடன் காத்திருப்பது மிகவும் முக்கியம்.
தனுசு
இப்போது நீங்கள் என்ன செய்ய வேண்டுமென்று நினைக்கிறீர்களோ அதை நீங்கள் விசுவாசத்துடன் செய்யுங்கள், நீங்கள் விரும்பும் அனைத்தும் உங்களிடம் வரும்.
மகரம்
சரியான நேரத்தில் உறுதியான முடிவை எடுங்கள். எதிர்காலம் முடிவெடுக்கும் என்று காத்திருக்க வேண்டாம். அப்படி நீங்கள் நினைத்தால் காலம் எடுக்கும் முடிவு நேர்மறையாக இருக்க வாய்ப்பு உள்ளது
கும்பம்
எல்லா எதிர்மறையான எண்ணங்களையும் மனதில் தெளிவுபடுத்துங்கள். உங்களை வீழ்த்தவும் அல்லது எதிர்மறையைப் பேசவும், நல்ல எண்ணங்களைக் கொண்டிருக்காதவர்களைத் துண்டிக்கவும் தயங்க வேண்டாம். தீய சக்தியை விட்டு விலகி மகிழ்ச்சியாக இருங்கள்.
மீனம்
பல்வேறு வாய்ப்புகள் புதிய மக்கள், ஆசிர்வாதங்கள் என அனைத்து நல்ல காலங்களும் உங்களை நோக்கி வருகின்றது. செல்வங்களை வரவேற்ற காத்திருங்கள். கடந்த கால அனுபவத்தை பற்றி யோசிக்க வேண்டாம்.
ஜோதிட பலன்களை கணித்தவர் astro ஆஷா ஷா.
Translated by Deepalakshmi
—
POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!
மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும் பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo.