இன்று வியாழக்கிழமை சதுர்த்தி திதி அஸ்தம் நட்சத்திர சித்திரை மாதம் 5ம் நாள். சுப முகூர்த்த நாள். இரவு 7.11ல் இருந்து சித்ரா பௌர்ணமி திதி தொடங்குகிறது. திருவண்ணாமலை கிரிவலம் செழிப்பை தரும். இன்றைய நாளில் உங்கள் ராசிபலன் என்ன சொல்கிறது என்று பார்க்கலாம். (astro )
மேஷம்
விநாயகர் உங்களை ஆசீர்வதிப்பார். அவர் நமக்கு பலத்தையும் தைரியத்தையும் தருகிறார், இதனால் நம் பாதையில் உள்ள எதையும் நாம் சமாளிக்க முடியும். அவர் நமக்கு பரந்த பார்வையை தருகிறார், பல்வேறு அம்சங்களில் இருந்து விஷயங்களை கையாளவும், அனைவருக்கும் நன்மையளிக்கும் ஒரு தீர்வைக் கொண்டு வருகிறார்.
ரிஷபம்
இதயத்தின் மௌன மொழியை கேளுங்கள். இது உங்களிடம் ஏதோ சொல்லிக்கொண்டு இருக்கிறது, ஆனால் உங்களைச் சுற்றியுள்ள குரல்களைக் கேட்பதில் மிகவும் பிஸியாக இருப்பதால் மளது சொல்வதைக் கவனிக்கவில்லை. உங்களை அமைதியாக்கி உங்கள் உள் வழிகாட்டலைக் கேளுங்கள்.
மிதுனம்
நீங்கள் குடும்ப உறுப்பினரிடமோ அல்லது உங்கள் செல்லப்பிராணியிடமிருந்தோ வலுவான உணர்ச்சி மற்றும் ஆவிக்குரிய பிணைப்பைப் பெறுவீர்கள். நீங்கள் இதுவரை அனுபவித்த எல்லா வலியும் சந்தோஷமாக, மகிழ்ச்சியாக, மிகுதியாகவும், செழிப்பாகவும் மாற்றிக்கொண்டிருக்கிறது. அன்பு உங்களை சுற்றிலும் இருக்கிறது.
கடகம்
கடந்த சில மாதமாக ஒரு சில உறவுகள் உங்களுக்கு தொல்லை கொடுத்து வந்தன. இன்றுடன் அது உங்களை விட்டு விலகி நல்லது நடக்க காத்திருக்கின்றது. நல்லதுக்கு வழிவிட்டு காத்திருங்கள்
சிம்மம்
நீங்கள் விரும்பும் வாழ்க்கையை உருவாக்க உங்களுக்கு சக்தி தருகின்ற தெய்வீக படைப்பில் நீங்கள் இருக்கிறீர்கள். நீங்கள் உங்கள் வாழ்க்கையையும் சூழ்நிலைகளையும் மாற்றிக்கொள்ளலாம். அதே சமயத்தில் உங்கள் ஆசைகள் வெளிப்படையானதாக மாற்றிக்கொள்ளுங்கள்.
கன்னி
திடீரென்று எல்லாம் மாறும், வேகத்துடன் நகரும். அனைத்து இவ்வுலகில் வழக்கமான மற்றும் சாதாரண விஷயங்களாக மாறும். திடீரென்று பல வாய்ப்புகள் கதவுகளை தட்டுவதை நீங்கள் உணர்வீர்கள்.
துலாம்
உங்களுடைய சொந்த பதில்களையும் உணர்வுகளையும் பார்க்க மறுத்துவிட்டதால் வாழ்க்கையின் சில பிரச்னைகளை சந்தித்து இருப்பீர்கள். நீங்கள் உங்கள் சூழ்நிலைகளில் இருக்கும் வழியை மாற்றியமைக்க வேண்டும்.
விருச்சிகம்
உங்கள் வாழ்க்கை மாறி வருகிறது. நீங்கள் இப்போது அனுபவிக்கும் மாற்றங்களை தடுக்கவோ அல்லது கட்டுப்படுத்தவோ வேண்டாம். எல்லாவற்றையும் தெய்வீக திட்டத்தின்படி நடப்பதாக நினைவில் கொள்ளுங்கள். முடிவை சரியான நேரத்தில் எடுக்கும்போது நல்ல பலனை பெறுவீர்கள்.
தனுசு
நீங்கள் உங்களுக்காக நிற்க வேண்டும், ஒரு குறிப்பிட்ட நபரை முற்றிலுமாக நம்புகிறாய். ஆனால் அவர்கள் உனக்கு எல்லாவற்றிலும் உதவவோ நன்மையானதை செய்யவோ முடியாது. உங்களை நீங்கள் நம்ப வேண்டும்
மகரம்
கடந்தகால உணர்வுகளையும் உணர்ச்சிகளையும் உங்களுக்குள்ளேயே நீங்கள் உணரலாம். சில நாட்களாக ஒரு ரோலர் கோஸ்டர் போன்ற வாழ்க்கையில் இருந்திருப்பீர்கள். அதை குறித்து கவலைப்படாமல், மதிப்புமிக்க பாடங்களைக் கற்பிப்பதற்காக உங்கள் கடந்த காலத்திற்கு நன்றி சொல்லுங்கள்.
கும்பம்
உங்கள் மனதில் உள்ளே மற்றும் வெளிப்புற சூழலில் ஒரு மகிழ்ச்சியான மாற்றத்தை உணருவீர்கள். அன்பு, அமைதி, நிம்மதி எல்லாம் உங்களை தேடி வரும். இந்த உலகத்தில் மிகவும் ஆசிர்வதிக்கப்பட்ட உணர்வை அடைவீர்கள். உங்கள் மனம் காற்றில் மிதந்து கவிபாடும் நாள் இது
மீனம்
கண்களை மூடி ஓய்வெடுங்கள். உங்கள் பிரச்னைகள் அனைத்தையும் இந்த உலக காரியங்களிடம் கொடுத்து விடுங்கள். தேவையில்லாததை யோசித்து மனதை கவலைக்கு தள்ள வேண்டாம்
ஜோதிட பலன்களை கணித்தவர் ஆஷா ஷா.
Translated by Deepalakshmi
—
POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!
மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும் பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo.