சந்தோஷ செய்திகளால் துள்ளி குதிக்க போகும் ராசிக்கு சொந்தக்காரர் நீங்களா!பார்த்து விடுங்கள் உங்கள் ராசிபலனை !

சந்தோஷ செய்திகளால் துள்ளி குதிக்க போகும் ராசிக்கு சொந்தக்காரர் நீங்களா!பார்த்து விடுங்கள் உங்கள் ராசிபலனை !

இன்று புதன் கிழமை திரயோதசி திதி உத்திர நட்சத்திரம் சித்திரை மாதம் நான்காம் நாள். சுபமுகூர்த்தம் மற்றும் பிரதோஷ நாள். சிவனை வழிபடல் நன்று. இன்றைய நாளில் உங்கள் ராசி உங்களுக்கு என்ன செய்தி வைத்திருக்கிறது என்று பார்க்கலாம். ( astro )


மேஷம்


யாரோ ஒருவர் உங்கள் சூழ்நிலைகளை சரியாக்க உதவி செய்யலாம். அல்லது என்ன செய்ய வேண்டும் என்பதற்கான வழிகாட்டல்கள் கிடைக்கலாம். இனி அவ்வளவுதான் என்று நீங்கள் நினைக்கும் சமயங்களில் எல்லாம் ஒரு நம்பிக்கை ஒளி உங்களுக்கு தென்பட்டிருக்கிறது. உங்கள் வாழ்க்கையை அற்புதமாக மாற்றியிருக்கிறது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.


ரிஷபம்


உங்களை வழிநடத்தக் கூடிய அறிவுரைகளை உற்று கவனியுங்கள். உங்களை சுற்றி பல்வேறு கூக்குரல்களை கேட்பதால் உங்கள் உள்ளுணர்வின் குரல் உங்களுக்கு கேட்கவில்லை. அதிகம் பேசாமல் வெறுமனே கவனியுங்கள். கேட்பதற்கும் கவனிப்பதற்கு இடையே நிறைய வித்யாசங்கள் உள்ளது.


மிதுனம்


நீங்கள் சரியான திசையில் முன்னே சென்று கொண்டிருக்கிறீர்கள். சரியான பாதையில் செல்லும் நீங்கள் வெகு சீக்கிரமே உங்கள் கனவுகளை ஆசைகளை அடைவீர்கள் . இது மெதுவாக இருக்கிறது என்று நீங்கள் நினைத்தாலும் சீக்கிரமே உங்கள் லட்சியங்களை நிறைவேற்றுவீர்கள்.


கடகம்


உங்களை மகிழ்ச்சியில் துள்ளி குதிக்க செய்யும் செய்தி ஒன்றை கேட்க போகிறீர்கள். உணர்வு ரீதியாக நீங்கள் நிறைய மேடு பள்ளங்களை பார்த்து விட்டீர்கள். இப்போது உங்களுக்கு தேவை நிலை தன்மை மற்றும் வீட்டில் இருந்த படி அன்பை பெறும் தருணம்தான்.


சிம்மம்


ஒரு நல்ல செய்தி உங்களுக்கு ஆச்சர்யத்தையும் ஆனந்தத்தையும் அளிக்க போகிறது. உங்கள் மனதில் என்ன இருந்தாலும் உங்கள் உடன் இருப்பவர் நன்மைக்காக அது நிறைவேற போகிறது. நீங்கள் இதனை செய்தாலும் அது உங்களுக்கு வளர்ச்சி, வெற்றி, பாராட்டு மற்றும் செல்வ செழிப்பை வாரி வழங்கும்.


கன்னி


நீங்கள் தற்போது கையாண்டு கொண்டிருக்கும் எந்த விஷயமாக இருந்தாலும் அதனை பற்றிய நுணுக்கமான விபரங்களையும் தெரிந்து கொள்ளுங்கள். ஏதாவது ஒரு விஷயத்தை தவற விட்டாலும் அதனை பற்றி நீங்கள் பின்னால் வருத்தப்பட நேரிடலாம். தெளிவாக தெரியாமல் எந்த பத்திரத்திலும் கையெழுத்து போடாதீர்கள்


துலாம்


மன்னியுங்கள் மற்றும் மன்னிப்பை தேடுங்கள். உங்கள் இதயத்தை தொட்ட ஆனால் நீங்கள் நாட்கள் தொடர்பில் இல்லாதவர்களை நீங்களே தொலைபேசியில் அழைத்து பேசுங்கள். எந்தவிதமான வன்மங்களையும் மனதில் வைத்து கொள்ளாதீர்கள். அன்பை அனுப்புங்கள் அமைதியோடு முன்னே நகருங்கள்.கடந்த கால காயங்களை மனதிலிருந்து அழித்து விடுங்கள்.


விருச்சிகம்


வெளியேற முடியாத ஏதோ ஒன்றில் நீங்கள் பலமாக சிக்கி கொண்டதாக நினைப்பீர்கள். தொடர்ந்த சவால்களாலும் தாமதங்களாலும் சூழப்பட்ட நீங்கள் முன்னேறாமல் இருப்பீர்கள். இந்த நிலையை உங்கள் கட்டுக்குள் கொண்டு வர நினைக்காதீர்கள். மாறாக ஆழமாக மூச்செடுத்து அவைகளை கன்ட்ரோல் செய்ய நினைக்கும் உங்கள் மனதை சாந்தப்படுத்துங்கள்.


தனுசு


எதிலும் அவசரப்பட வேண்டாம். ஒரு வேலையை முடிக்காமல் இன்னொரு வேலையை தொடங்க வேண்டாம். முக்கியமான வேலைகளுக்கு முன்னுரிமை கொடுத்து மற்ற வேலைகளை பகிர்ந்து கொடுங்கள். வேலைக்கான பலன்களை உடனே எதிர்பார்க்காமல் உங்கள் தருணம் வரும் வரை பொறுத்திருங்கள். அது உங்கள் பலனை உயர்வான இடத்தில் வைக்கும்.


மகரம்


இந்த பிரபஞ்சம் உங்கள் கனவுகளை நிறைவேற்ற கூடவே இருந்து உதவி செய்கிறது. இந்த நேரத்தில் சந்தேகமோ எதிர்மறை எண்ணங்களோ இல்லாமல் இருப்பது அதற்கு உதவியாக இருக்கும். நீங்கள் சந்தேகப்பட ஆரம்பித்தால் நீங்கள் தடைகளை உருவாக்குகிறீர்கள் என்று அர்த்தம். நம்பிக்கையோடு ப்ரபஞ்சத்திடம் சரணடையுங்கள்.


கும்பம்


உங்கள் செயல்களுக்கோ முடிவுகளுக்கோ யாரோ ஒருவரின் வழிகாட்டுதல் உங்களுக்கு இப்போது தேவையாக இருக்கலாம்.உங்கள் உள்குரலை நம்புங்கள் அது எப்போதும் உங்களை தவறான பாதைக்கு இட்டு சென்றதில்லை. அனைவரது கருத்துகளையும் கேளுங்கள் ஆனால் உங்கள் மனத்தின்படி செயல்படுங்கள். உங்கள் உள்குரலை பின்தொடருங்கள் தெய்வீகத்தின் அறிகுறிகளை மனதில் கொள்ளுங்கள்


மீனம்


உங்கள் மனதில் இருக்கும் ஐடியாக்களை செயல்படுத்துங்கள். அதை பற்றிய சந்தேகங்களை விட்டு விடுங்கள். இப்போது நீங்கள் எதை தொட்டாலும் பொன்னாகும் என்பதில் நம்பிக்கையோடு இருங்கள். உங்கள் ஆர்வத்திற்காக துணிந்து செயல்படுங்கள். உங்கள் தீரா ஆர்வம் எப்போதும் உங்களுக்கு பரிசுகளையே கொண்டு வரும்.


ஜோதிட பலன்களை கணித்தவர் ஆஷா ஷா.


---


POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!


மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும் பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo.