செல்வசெழிப்பும் பணவரவும் தேடி வரும் அந்த ராசி உங்களுடையதா !

செல்வசெழிப்பும் பணவரவும் தேடி வரும் அந்த ராசி உங்களுடையதா !

இன்று திங்கள் கிழமை. சித்திரை மாதம் இரண்டாம் நாள். மக நட்சத்திரம் ஏகாதசி திதி. இன்றைக்கு உங்கள் ராசிப்படி உங்கள் நாள் எப்படி இருக்க போகிறது என்று பார்க்கலாம். ( Astro)


AstrologyHeader


மேஷம்


மிக முக்கியமான மாற்றத்திற்கு உங்களை தயார்படுத்துங்கள். மிக அதிகமான அழுத்தங்களை நீங்கள் உணர்ந்திருக்கலாம். இது ஆவதிற்கில்லை என்று நீங்கள் யோசித்திருக்கலாம். உங்களுக்கு தெரியுமா உங்கள் வாழ்க்கையை சுத்தம் செய்யும் வேலை நடந்து கொண்டிருக்கிறது. தைரியமாக இருங்கள். எதிர்மறை எண்ணங்களை உள்ளே வர விடாதீர்கள்


ரிஷபம்


உங்களை சுற்றி இருப்பவர்களை பற்றி உங்களுக்கு நன்றாக தெரியுமா? உங்கள் நம்பிக்கைக்குரியவர்தானா ? நேர்மையானவர்தானா?உங்கள் மனதை திறந்து பேசும் முன் இதையெல்லாம் யோசியுங்கள். உங்கள் புதிய ஐடியாக்கள் மற்றும் சொந்த விவரங்களை யாருடனும் பகிராதீர்கள். ஒருவருடன் கமிட் செய்யும் முன் அவரை பற்றிய விபரங்கள் எல்லாம் சேகரியுங்கள்.


மிதுனம்


ஒரு சாகசம் உங்களுக்காக காத்திருக்கிறது. உங்களுக்குள் கவனிக்கத்தக்க மாற்றம் ஒன்று நடக்க போகிறது. வாழ்க்கை முன்னே நகர்த்த உங்களை தூண்டுகிறது. உங்கள் காரண அறிவு உங்களை குழப்பலாம் ஆனால் தைரியமாகவும் தன்னம்பிக்கையோடும் இருங்கள். நீங்கள் வெற்றியடையப்போகிறீர்கள்.


கடகம்


நீங்கள் குழப்பத்தோடும் அழுத்தத்தோடும் இருக்கிறீர்கள். இதை எப்படி கையாள்வது என்று கவலையும் என்ன செய்வது என்று தெரியாத மனநிலையும் இருக்கும். அடுத்தவர்களின் அறிவுரையை நீங்கள் கேட்கலாம். கொஞ்சம் தளர்வடையுங்கள். உங்களுக்கு மிக முக்கியமானது என்ன என்பதை யோசியுங்கள். விடை உண்டு.


சிம்மம்


நீங்கள் பொருளாதார மாற்றங்களை அனுபவமாக பெறுவீர்கள். உங்கள் அருகே இருக்கும் சில விஷயங்களை இழக்க நேரிடலாம். ஆனால் நினைவு கொள்ளுங்கள் இதுவரை நீங்கள் இருந்த இடத்தில் இருந்து மாற வேண்டிய காலம். இதே விஷயங்கள் வேறு எங்காவது தேவைப்படலாம். நீங்கள் ஆன்மிக தேடல் உடையவர் உங்கள் வாழ்க்கையின் பொக்கிஷம் என்ன என்பது உங்களுக்கு தெரிந்திருக்கும்.


கன்னி


கவனிக்கத்தக்க மாற்றங்கள் உங்கள் வாழ்க்கையில் நடக்கும். பணம், வேலை குடும்பம் என வாழ்க்கை உங்கள் முன் வைக்கும் அத்தனை கோரிக்கைகளையும் ஏமாற்ற உங்களுக்கு தெரிந்திருக்கலாம். கவனமாகவும் கொஞ்சம் வளைந்து கொடுக்கும் தன்மையும் இருந்தால் எல்லாவற்றையும் நீங்கள் அடையலாம்


துலாம்


என்ன செய்ய வேண்டும் என்பதை பட்டியல் போடுங்கள். நிதானமாக பொறுமையாக அதனை நிறைவேற்றுங்கள். நீங்கள் வேலை செய்கிறீர்கள் ஆனால் திட்டமிடுவதில்லை. அதனால் உங்கள் முயற்சிகளும் ஆற்றல்களும் வீணாகின்றன. ஆகவே இப்போது அதனை கொஞ்சம் நிறுத்தி ஓய்வெடுத்து உங்களுக்கு எதிரே என்ன இருக்கிறது என்பது பற்றி யோசியுங்கள். உங்களுக்கு ஒத்து வராதவைகளை மாற்றியமையுங்கள்.


விருச்சிகம்


புதிய ஆரம்பங்களுக்கும் அபிரிமிதமான வெற்றி செல்வசெழிப்பு மற்றும் திருப்தி உங்களை நாடி வர போகிறது. கவனமான தெளிவான அணுகுமுறை மற்றும் திட்டங்கள் உங்களுக்கு மேற்கண்டதை கொண்டு வரும், உங்களுக்கு பலன்கள் கண்கூடாக தெரியும். சிறந்ததை எதிர்பாருங்கள்


தனுசு


நீங்கள் சவால்களையும் தடைகளையும் சந்தித்து அதனை வெற்றி கொள்வீர்கள். வாழ்க்கை உங்கள் மீது பீரங்கி குண்டுகளை வீசினாலும் அதனை சாமர்த்தியமாக தாண்டும் தைர்யம் உங்களிடம் உள்ளது. பிரகாசமாக உங்கள் வாழ்க்கை மாறும். எங்கெல்லாம் சீரமைக்க முடியுமோ அங்கெல்லாம் சீரமையுங்கள்


மகரம்


உங்களுக்குள் இருக்கும் உங்களைப்பற்றி நீங்கள் எதையெல்லாம் நம்புகிறீர்களோ அதைத்தான் வெளிப்படுத்துவீர்கள். உங்களிடம் அத்தகைய சக்தி உள்ளது. நீங்கள் சந்திக்கும் ஒவ்வொரு சவாலும் தடைகளும் இறைவன் உங்களுக்கு தரும் ஞானம் என்பதை உணர்ந்து கொள்ளுங்கள். உங்கள் சக்திகளை மற்றவர்களுக்கு உதவி செய்யவும் ஊக்குவிக்கவும் பயன்படுத்துங்கள்


கும்பம்


கொஞ்சம் ஓய்வெடுங்கள். உங்களுக்கு சோம்பலாக எதிலும் ஈடுபாடற்ற எண்ணங்கள் இருப்பதால் ஓய்வு தேவை. அதைப்போலவே கிரியேட்டிவ் யோசனைகளை தடைப்பட்டதால் வருத்தமாக இருக்கும். உங்கள் ஆற்றல்களை சுத்தம் செய்யும் நேரம் இது என்பதை உணர்ந்து கொள்ளுங்கள். புதிய வேலைகள் எதையும் ஏற்று கொள்ளாதீர்கள்.


மீனம்


சந்தோஷத்தை கொண்டாட வேண்டிய நாள் உங்கள் உள்ளுணர்வையும் மனம் சொல்வதையும் பின்பற்றினீர்கள் என்றால் உங்கள் வெற்றிகளுக்கு எல்லை இல்லை. உங்களுக்குள்ளே காதல் ஆற்றல் நகர்வதை நீங்கள் உணரும் நேரம். அது உங்களை மேலும் முன்னே தள்ளும் நீங்கள் இன்னும் சாதிக்க முடியும்.


ஜோதிட பலன்களை கணித்தவர் ஆஷா ஷா.Translated by Deepalakshmi


---


POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!


மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும் பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo.