ஸ்ரீதேவியின் ஆசையை நிறைவேற்றிய அஜீத்! சிவாவுடன் மீண்டும் ஒரு படம்

ஸ்ரீதேவியின் ஆசையை நிறைவேற்றிய அஜீத்! சிவாவுடன் மீண்டும் ஒரு படம்

தல அஜீத்(ajith) நடிப்பில் சிவா இயக்கத்தில் வெளியான விசுவாசம் திரைப்படம் பட்டி தொட்டி எங்கும் நல்ல வரவேற்பை பெற்றது. இதனைத் தொடர்ந்து தற்போது தல அஜீத்(ajith) ஹெச். வினோத் இயக்கத்தில் உருவாகும் 'பிங்க்' ரீமேக்கில் பிஸியாக நடித்து வருகிறார். போனிகபூர் தயாரிக்கும் இப்படம் வருகின்ற தல பிறந்த நாளான மே 1ம் தேதி வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. அதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. 


ஹிந்தியில் வெற்றி பெற்ற பிங்க் திரைப்படம் தமிழில் நேர்கொண்ட பார்வை என்ற பெயரில் உருவாகிவருகின்றது. தல அஜீத்(ajith) உடன் மீண்டும் ஒரு படம் நடிக்க வேண்டும் என்பது போனிக்கபூரின் மனைவி ஸ்ரீ தேவி ஆசை. மனைவியின்  ஆசையை நிறைவேற்றவே போனிக்கபூர் அஜத் வைத்து படம் தயாரிக்கின்றார் என தகவல் வட்டாரங்கள் பேசுகின்றன. அஜீத்தும் இப்படத்தை சிறப்பாக நடித்து கொடுக்க வேண்டும் என்பதில் அதிக தீவிரம் காட்டி வருகின்றார். இதற்காக வயதானவர் போன்ற தோற்றத்தையும் வக்கீல் போன்ற கம்பீர தோற்றத்திற்கும் தன்னை தயார் படுத்தி வருகின்றார் தல அஜீத்.


பிரச்சினையில் மாட்டி இருக்கும் 3 இளம் பெண்களை காப்பாற்றும் வக்கீல் வேடத்தில் அஜீத்(ajith)குமார் இப்படத்தில் நடிக்கின்றார். இவருக்கு ஜோடியாக வித்தியாபாலன் நடிக்கின்றார். மிகவும் விருவிருப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் இப்படத்தின் படபிடிப்பு. சதுரங்க வேட்டை படத்தை எடுத்து பிரபலமான வினோத் இப்படத்தை இயக்குகிறார்.


இப்படத்தை தொடர்ந்து போனிக் கபூருடன் மீண்டும் ஒரு படத்தில் தல அஜீத் நடிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகிவுள்ளது. அதனைத் தொடர்ந்து 5வது முறையாக சிவா இயக்கத்திலும் அஜீத்(ajith) நடிக்கின்றார்.


ஏற்கனவே இவர்கள் கூட்டணியில் வீரம், வேதாளம், விவேகம் படங்கள் வந்து வெற்றியும் பெற்றன. மீண்டும் இவர்கள் கூட்டணி ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.


நேர்கொண்ட பார்வை ஏற்கனவே ஹிந்தியில் மக்கள் பாரத்திருந்தாலும் இதில் அஜீத்(ajith) நடிக்கின்றார் என்பது தான் கூடுதல் சிறப்பும் மற்றும் எதிர்பார்ப்புகள் அதிகமாவதற்கும் இது தான் காரணம்.


கூட்டணி உறுதி


தல அஜித்தின் அடுத்த படத்தை யாரு இயக்குவது என்று தமிழ் சினிமாவில் மிகுந்த போட்டியே நிலவி வந்தது. அந்த வகையில் இயக்குநர் வெங்கட்பிரபு, ஹெச்.வினோத், விஷ்ணுவர்தன் என பலருடைய பெயர் நீண்ட டிஸ்டில் அடிபட்டு வந்தது.


இதனிடையில் தல அஜித்தின் 'விஸ்வாசம்' படத்தின் 50 நாள் வெற்றி விழாவில் கலந்து கொண்ட தயாரிப்பாளர் சத்யஜோதி தியாகராஜன் பேசியதாவது, "நாங்கள் எதிர்பார்த்த வெற்றியை விட, மிகப்பெரிய வெற்றியைக் மக்கள் கொடுத்துள்ளனர். அஜித் சாரை வைத்து மீண்டும் இதே காம்போவில் படம் பண்ண முயற்சி செய்வோம்" என்று தெரிவித்திருந்தார். அதனை உறுதி செய்யும் விதமாக மீண்டும் சிவாவுடன் தான் கூட்டணி என்பது உறுதியாகி இருப்பதாக தற்போதைய தகவல்கள் வெளியாகி உள்ளன.


தமிழில் தனக்கென ரசிகர்களை கொண்டிருக்கும் தல அஜீத்(ajith) ஹிந்தி படத்தின் ரீமேக்கின் மூலம் பாலிவுட்டிலும் ரசிகர்களை பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது என பேசப்படுகின்றது.


 

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!


மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும்.
பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo