logo
ADVERTISEMENT
home / வாழ்க்கை
எந்நேரமும் உங்களை நீங்கள் மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ள சில குறிப்புகள்!

எந்நேரமும் உங்களை நீங்கள் மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ள சில குறிப்புகள்!

இன்றைய வாழ்க்கைச் சூழலில் அனேக மனிதர்கள் மகிழ்ச்சியான வாழ்க்கை என்றால் என்னவென்று கேள்வி கேட்கும்படியான நிலை ஏற்பட்டுள்ளது. இதற்குப் பல காரணங்கள் உள்ளது. பத்து இருபது வருடங்களுக்கு முன் வாழ்ந்தவர்களின் வாழ்க்கையும் இன்று நாம் வாழ்த்து கொண்டிருக்கும் வாழ்க்கையிலும் பல மாற்றங்கள் உள்ளது. குறிப்பாக சொல்லப் போனால், இந்த மாற்றத்திற்கு ஒரு பெரிய முக்கிய காரணம், தொழில்நுட்பம்.

இது சற்று ஆச்சரியமான விடயமாக இருக்கலாம், கடந்த பத்து வருடங்களாக தொழில்நுட்பத்தில் ஏற்பட்டுள்ள பல முன்னேற்றங்கள் நம் மனித வாழ்க்கையில் பல மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது. அது ஒரு மனிதனின் உத்தியோகம், கல்வி என்று மட்டுமல்லாமல் தனி மனித வாழ்க்கையையும் மாற்றியுள்ளது. இதனால் மனிதர்கள் எப்போதும் ஏதாவது ஒரு வேலையில் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறார்கள். ஓயவேடுக்கவோ அல்லது தன் குடும்பத்தினர்களுடனும், நண்பர்களுடனும் நேரம் ஒதுக்க முடியாமல் இருக்கிறார்கள். இதனாலேயே அவர்களது மகிழ்ச்சியான வாழ்க்கை பாதிக்கப்பட்டு மன அழுத்தத்தோடு வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

மகிழ்ச்சியாக வாழ்வதால் ஏற்படும் நன்மைகள் ( Benefits Of A Happy Life) 

நாம் இந்த பூமிக்கு வந்த நோக்கம் அறியாமல் பலர் தன் வாழ்க்கையை வீணாக்கிக் கொண்டிருக்கிரார்கள் என்று தான் கூற வேண்டும். எனினும், நீங்கள் மகிழ்ச்சியான வாழ்க்கையைத் தேடிக் கொண்டிருக்குரீர்கள் என்றால், அது நிச்சயம் உங்களுக்குக் கிடைக்கும்.

ADVERTISEMENT

மகிழ்ச்சியாக வாழ்வது உங்கள் மனதிற்குப் புத்துணர்ச்சியை ஏற்படுத்துவது மட்டுமல்லாமல் உங்கள் ஆயுளையும் அதிகப் படுத்தும். நீங்கள் மகிழ்ச்சியாக (சந்தோஷம்) வாழ்வதனால் உங்களுக்குக் கிடைக்கும் சில நன்மைகள், இங்கே:

• மருத்துவ செலவுகள் குறையும். இதில் உங்களுக்கு எந்த வித சந்தேகமும் தேவை இல்லை. மகிழ்ச்சியாக வாழ்வதால் நோய் ஏற்படும் வாய்ப்பு மிகக் குறைவு. அதனால் உங்கள் மருத்துவ செலவுகள் நிச்சயம் குறையும்

• மனம் தெளிவு பெரும். மகிழ்ச்சியாக இருக்கும் போது உங்களுக்குள் ஒரு புத்துணர்ச்சி ஏற்பட்டு உங்கள் மனதை அது அமைதிப் படுத்தும். இதனால் நீங்கள் தெளிவான சிந்தனைகளோடு இருப்பீர்கள்

• ஆயுள் நீடிக்கும். நம் அனைவருக்கும் இக்காலத்தில் நீண்ட ஆயுள் என்பது ஒரு கேள்விக்குறியாக உள்ளது. நீங்கள் உங்கள் மனதை மகிழ்ச்சியாக வைத்துக் கொண்டு வாழும் போது உங்கள் ஆயுள் நிச்சயம் அதிகருக்கும்.

ADVERTISEMENT

மேலும் படிக்க -பதற்றத்தை எப்படி கையாளுவது? சில எளிய குறிப்புகள் உங்களுக்காக!

• ஆரோக்கியமான வாழ்க்கை. இந்த ஆரோக்கியம் உங்கள் உடலை மட்டும் குறிப்பிடாமல் உங்கள் மனம், எண்ணம் மற்றும் வாழ்க்கையையும் குறிப்பிடுகிறது. அதனால் நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பது நல்லது

• பிறரும் மகிழ்ச்சியாக இருப்பார்கள். நீங்கள் மகிழ்ச்சியாக இருந்தால் உங்களை சார்ந்த உங்கள் குடும்பத்தினர்களும் மகிழ்ச்சியுடன் இருப்பார்கள். இது குறிப்பாக கணவன், மனைவி நல உறவிற்கு மிக முக்கியமான ஒன்றாகும்.

மகிழ்ச்சியாக வாழ நீங்கள் செய்ய வேண்டிய 9 விடயங்கள் (Things To Do For A Happy Life)

இனி நீங்கள் எப்போதும் மகிழ்ச்சியாக வாழலாம். இங்கே உங்களுக்காக 9 எளிதான மற்றும் முக்கிய குறிப்புகள். இதனை நீங்கள் பின்பற்ற முயற்சி செய்தால் போதும். நீங்கள் தேடிக் கொண்டிருக்கும் அந்த மகிழ்ச்சியான வாழ்க்கை உங்களுக்கு உடனே கிடைத்து விடும்.

ADVERTISEMENT

1. ஒரு சாவகாசமான நடை

முடிந்த வரை எப்போதெல்லாம் நேரம் கிடைக்கிறதோ அப்போதெல்லாம் தனியாகவோ அல்லது உங்கள் நண்பர் அல்லது குடும்பத்தினர் அல்லது நீங்கள் நேசிப்பவர், ஏன், யாரும் இல்லை என்றாலும் நீங்கள் வளர்க்கும் செல்லபிராணியுடன் ஒரு சாவகாசமான நடை செல்லுங்கள். இதற்க்கு நேரம் காலம் இல்லை. நிச்சயம் உங்கள் மனம் புத்துணர்ச்சிப் பெரும்.

2. நீங்கள் விரும்புபவருடன் மனம் விட்டு பேசுங்கள்

உங்கள் நண்பர் அல்லது நீங்கள் விரும்பும் உங்கள் குடும்பத்தினருடன் மனம் விட்டு பேசுங்கள். எப்போதெல்லாம் உங்களுக்கு நேரம் கிடைக்கிறதோ அப்போதெல்லாம் உங்கள் மனதில் நீங்கள் மகிழ்ச்சியான மற்றும் உங்கள் வாழ்க்கையில் நடந்த சுவாரசியமான விடயங்கள் பேசி பகிர்ந்து கொள்ளுங்கள். இது உங்களுக்கு நிச்சயம் மகிழ்ச்சியைத் தரும்.

3. உங்கள் வீட்டில் அழகான சுற்றுச்சூழலை உருவாக்குங்கள்

இன்று பெருமபாலானோர் அடுக்குமாடி குறி இருப்புகளிலேயே வாழ்கிறார்கள். அங்கு நிச்சயம் உங்களுக்குத் தோட்டம் வைக்கவோ அல்லது விரும்பியப் படி உங்கள் வீட்டை வடிவமைக்கவோ முடியாமல் போகலாம். எனினும் இருக்கும் சிறு இடத்திலும் நீங்கள் முடிந்த வரை உங்களுக்குப் பிடித்த செடிகள் மற்றும் அழகுப் பொருட்களை வைத்து உங்கள் வீட்டின் சூழலை அழகாக்கலாம். இது உங்கள் மனதிற்கு ரமியமான உணர்வை உண்டாக்கும். இதனால் உங்கள் மனமும் மகிழ்ச்சி அடையும்.

ADVERTISEMENT

4. மனதிற்கு பிடித்த விடயங்களை செய்யுங்கள்

முடிந்த வரை உங்கள் மனதிற்குப் பிடித்த நல்ல விடயங்களை செய்ய முயற்சி செய்யுங்கள். குறிப்பாகப் பிறருக்கு உதவி செய்வது, உங்கள் வீட்டில் பறவைகளுக்குத் தண்ணீர் மற்றும் உணவு வைத்து அவற்றை வரவேற்ப்பது, மேலும் அவ்வாறு உங்கள் வீட்டிற்கு வரும் பறவைகளை கண்டு மகிழ்ச்சி அடைவது, பிடித்த உணவை நீங்கள் நேசிப்பவருடன் அல்லது உங்கள் கணவன் அல்லது உங்கள் குழந்தைகளுடன் ஒன்றாகச் சேர்ந்து சமைத்து சாப்பிடுவது என்று உங்கள் மனதிற்கு பிடித்த விடயங்களை செய்யும் போது உங்கள் மனம் மகிழ்ச்சி அடையும்.

5. புன்னகைக்க முயற்சி செய்யுங்கள்

நாம் அனைவரும் தொலைத்துக் கொண்டிருக்கும் ஒரு விடயம் புன்னகை. நீங்கள் புன்னகைக்க காரணம் இல்லை என்றாலும், உங்களை சுற்றி இருக்கும் மற்றும் உங்கள் மனதிற்கு அமைதித் தரக்கூடிய ஏதாவது ஒன்றை பார்த்து புன்னகையுங்கள். எதுவும் இல்லை என்றால் வானத்தைப் பார்த்தோ அல்லது உங்கள் வீட்டில் விட்டத்தை பார்த்தோ புன்னகைத்துக் கொண்டு இருங்கள். இல்லை என்றால் கண்ணாடி முன் நின்று உங்கள் முகத்தை பார்த்து புன்னகையுங்கள். நீங்கள் புன்னகைக்கும் போது உங்கள் மனமும் எண்ணமும் புத்துணர்ச்சிப் பெறுகிறது. இதனால் நீங்கள் நல்ல சக்த்தியும் பெறுகிறீர்கள்.

6. புதிதாக ஏதாவது கற்றுக் கொள்ளுங்கள்

செய்ததையே மீண்டும் மீண்டும் செய்துக் கொண்டிருப்பதை விட, புதிதாக ஏதாவது ஒன்றை செய்ய முயற்சி செய்யுங்கள். இது சற்று உங்கள் மனதிற்கு ஒரு மாற்றத்தைத் தரும். இதனால் நீங்கள் மகிழ்ச்சி அடைய வாய்ப்பு உள்ளது. நீங்கள் புதிதாகக் கற்றுக்கொள்ள ஏராளமான விடயங்களை யூடுயுப் மற்றும் வலைத்தளங்களில் பார்த்துத் தெரிந்துக் கொள்ளலாம்.

ADVERTISEMENT

7. பிடித்த பாடலைக் கேளுங்கள்

இசையை விட வேறொரு மருந்து அல்லது தீர்வு இல்லை. உங்களுக்கு விருப்பமான இசையை அவ்வப்போது போட்டுக் கேளுங்கள். இதற்க்கு நேரம் காலம் இல்லை. இசையால் நிச்சயம் உங்கள் மனதில் உள்ள எண்ணங்களை மாற்றவும் புதுப்பிக்கவும் முடியும். உதாரணத்திற்கு எத்தனை புதிய இசையமைப்பாளர்கள் வந்தாலும், இளையராஜாவின் இசைக்கு என்றும் ஒரு தனித்துவம் உள்ளது. அப்படி உங்களுக்குப் பிடித்த இசையமைப்பாளர்களின் இசையை நீங்கள் கேட்கும் போதும் அதனுடன் சேர்ந்து நீங்களும் பாடும் போதும் உங்கள் மனம் ஒரு புது வித மகிழ்ச்சியைப் பெரும். மேலும், உங்களுக்கு ஏதாவது இசைக் கருவி வாசிக்கத் தெரியும் என்றால் நேரம் கிடைக்கும் போதெல்லாம் வாசித்து உங்கள் மனதை மகிழ்ச்சிப் படுத்திக் கொள்ளலாம்.

8. பிடித்த போலுதொபோக்குகளை செய்யலாம்

நம் அனைவருக்கும் ஏதாவது ஒரு பொழுதுபோக்கு திறன் இருக்கும். குறிப்பாக படம் வரைதல், தோட்டம் வளர்ப்பது, தாயம், சோழி, சதுரங்கம் போன்ற விளையாட்டுகள் விளையாடுவது, கோலம் போடுவது, புதிதாக ஏதாவது சமைத்து முயற்சி செய்வது, புதிதாக வடிவமைத்து ஆடை தைப்பது, எம்ப்ரைடிங் செய்வது என்று இருக்கும். அதில் உங்களுக்குப் பிடித்த் ஒன்றை நீங்கள் தேர்ந்தெடுத்து செய்யலாம். இது உங்களுக்கு ஒரு புத்துணர்ச்சியைத் தருவதோடு உங்களை மகிழ்ச்சிப் படுத்தவும் செய்யும்.

9. நினைவுகளை சேகரியுங்கள்

நேரம் கிடைக்கும் போது உங்கள் வாழ்க்கையில் நடந்த சுவாரசியமான் விடயங்களை அழகான நினைவுகளாகச் சேகரித்து அசைப்போடுங்கள். இத்தகைய செயல் நிச்சயம் உங்கள் மனதை பெரிய அளவில் மகிழ்ச்சிப்படுத்துவதோடு, புத்துணர்ச்சிப் பெறவும் உதவும். மனிதர்களின் வாழ்க்கையில் அழகான நினைவுகளுக்கா பஞ்சம்?

ADVERTISEMENT

இவை மட்டுமல்லாமல், ஒவ்வொரு தனி மனிதனுக்கும் தனக்கு மகிழ்ச்சித் தரும் விடயங்கள் வேறுபடலாம். குறிப்பாகப் பயணம் செய்வது, கடற்க்கரை ஓரத்தில் நடப்பது. பல வேறுபட்ட மற்றும் வித்யாசமான உணவகங்களுக்குச் சென்று புது வகை உணவைச் சுவைப்பது, பிடித்த பொருட்கள் வாங்குவது என்று இன்னும் பல.

மேலும் படிக்க – உலகம் மாற ஒவ்வொரு பெண்ணும் விரும்பும் பத்து சின்ன வழிகள்!

மகிழ்ச்சியாக இருக்க தவிர்க்க வேண்டிய சில விடயங்கள்

எப்படி மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளும் போது, எதைத் தவிர்த்தால் நாம் மேலும் மகிழ்ச்சியாக இருக்க முடியும் என்பதையும் நீங்கள் தெரிந்து கொள்வது நல்லது. அப்படி நீங்கள் தவிர்க்க வேண்டிய சில விடயங்களில் இங்கே சில, உங்களுக்காக:

• அதிகப் பற்று வைக்காதீர்கள். எந்த ஒரு உறவு, விடயம் அல்லது பொருட்கள் மீதும் அதிக பற்று வைக்காதீர்கள். அது உங்களை விட்டுச் செல்லும் போது அல்லது சேதம் அடைந்து விட்டாலோ உங்கள் மனதை அதிகம் பாதிக்கக்கூடும்

ADVERTISEMENT

• பணத்தின் பின் ஓடாதீர்கள். பணம் இன்றைய வாழ்க்கைக்கு முக்கியமே. எனினும் அதனை மட்டுமே குறிக்கோளாக வைத்துக் கொண்டு ஓடிக் கொண்டிருந்தாள் உங்கள் மகிழ்ச்சியை நீங்கள் தொலைத்து விட நேர்ந்து விடும்

• தவறான நட்பைத் தவிர்த்து விடுங்கள். முடிந்த வரை நல்ல நண்பர்கள் வட்டத்தை அமைத்துக் கொள்ளுங்கள். அப்படி முடியவில்லை என்றாலும் தவறான வட்டத்திற்குள் சிக்கி விடாதீர்கள்.

• தொழில்நுட்பத்தை – ஸ்மார்ட் போன் உபயோகத்தை குறைத்துக் கொள்ளுங்கள். இன்றைய பெரும்பாலான குடும்பங்களில் பிரச்சனையை வருவதற்கும், கணவன் மனைவி உறவு விவாகரத்து வரை போவதற்கும் தொழில்நுட்பமும் ஸ்மார்ட் போன்களும் ஒரு பெரிய காரணியாக உள்ளது. அதனால் தேவைக்கு மட்டும் இவற்றைப் பயன் படுத்திக் கொண்டு தள்ளி வைத்து விடுவது நல்லது. உங்கள் மகிழ்ச்சி பன் மடங்கு அதிகரிக்கும்.

ADVERTISEMENT

• கடந்த காலத்தில் நடந்த துயரமான சம்பவங்களை நினைப்பதை தவிர்த்து விடுங்கள். அவ்வாறு செய்து விட்டு வரும் காலத்தில் உங்களுக்காகக் காத்திருக்கும் வசந்தமான விடயங்களை எண்ணி மகிழ்ச்சி அடைய முயற்சி செய்யுங்கள் இது நிச்சயம் உங்கள் மகிழ்ச்சியை அதிகப்படுத்தும்.

சுருக்கமாகச் சொல்லப் போனால் உங்களுக்குப் பிடித்த மாதிரி வாழ்வது தான் உங்களுக்கான மகிழ்ச்சி. நம்மில் பெரும்பாலானோர் பிறர் எண்ணக் கூறுவார்கள் என்று எண்ணிக் கொண்டே தன் வாழ்க்கையை சுருக்கிக் கொண்டு மகிழ்ச்சியை கட்டுப்படுத்திக் கொண்டு வாழ்கிறார்கள். அதை மாற்றி, பிறருக்கும் சங்கடங்களை ஏற்படுத்தாமல் நாமும் மகிழ்ச்சியாக இருக்க முடியும் என்றால், உங்களுக்குப் பிடித்த விதத்தில் வாழ்வது தான் ஒரு சிறந்த வழி.

பட ஆதாரம்  – pixabay, gifsky,giffy,pexels,instagram 

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி,  தமிழ், தெலுங்கு , மராத்தி மற் றும் பெங்காலி !

ADVERTISEMENT

மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும் .பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo.

30 Apr 2019

Read More

read more articles like this
good points

Read More

read more articles like this
ADVERTISEMENT