குண்டாக ஒல்லியாக இருக்கும் பெண்கள் எந்த மாதிரி உடை அணியலாம்

குண்டாக ஒல்லியாக இருக்கும் பெண்கள் எந்த மாதிரி உடை அணியலாம்

பெண்கள் குண்டாக ஒல்லியாக எப்படி இருந்தாலும் அதை பற்றி கவலை படவேண்டாம். நாம் எப்படி இருக்கிறோமோ அதுவே அழகுதான். சிலர் குண்டாக இருப்பதால் அசிங்கமாக இருப்பதாக நினைக்கின்றனர். அப்படி இல்லை குண்டாக இருந்தாலும் அதுவும் அழகுதான். தேவையில்லாமல் உங்கள் மனதை போட்டு குழப்பிக்கொள்ளாதீர்கள். குண்டாக மற்றும் ஒல்லியாக இருப்பவர்கள் தங்களின் தோற்றத்திற்கு ஏற்ற உடையை(Dresses) தேர்வு செய்து அணிந்தால்(Dresses) போதும் இன்னும் அழகாக காணப்படுவீர்கள். சரி ஆடையை(Dresses) எவ்வாறு தேர்வு செய்வது என்பதை இங்கு பார்ப்போம்.


எடை அதி­க­மா­ன­வர்­க­ளுக்கு


* வேலைப்­பா­டு­கள் அற்ற பிளெய்ன் ஆடை­களை(Dresses) அணி­ய­வும். காட்­டனை தவிர்க்­க­வும்.
* கோடு­கள் மேலி­ருந்து கீழாக இருந்­தால் ஒல்­லி­யாக காட்­டும்.
* ஹாப் ஸ்கர்ட் அணி­ய­லாம்.
* வி நெக் டிஷர்ட், டாப்ஸ் உய­ர­மா­க­வும் ஒல்­லி­யா­க­வும் காட்­டும்.
* குட்­டைக்கை மற்­றும் முழுக்கை ஆடை­யின் மீது ஷ்ரக் அணிந்­து­கொள்­ள­வும்.
* ஒல்­லி­யா­ன­வர் மற்­றும் உயர­மா­ன­வர்­க­ளின் பிரச்­னையே கூன் விழு­வ­து­தான். நீங்­கள் எந்த உடை­ய­ணிந்­தா­லும் நிற்­கும்­போ­தும் நடக்­கும்­போ­தும் கூன் விழு­வதை தவிர்த்­தாலே உட­ல­மைப்பு சிறப்­பாக வெளிப்­ப­டும்.


உள்­ளா­டை­களை தேர்வு செய்­யும்­போது


* டாப்ஸ் மற்­றும் டிஷர்ட் அணி­யும் போது டிஷர்ட் பிரா அணி­யுங்­கள். அப்­போ­து­தான் வழக்­க­மா­னதை விட பிட்­ன­ஸாக தெரி­வீர்­கள். பிரா­வின் கொக்­கியோ இல்லை ஸ்ட்ராபோ வெளியே தெரி­யா­வண்­ணம் இருக்­கும். ஒல்­ல­யான குண்­டான எவ­ரும் இதை அணி­ய­லாம்.
* ஒல்­லி­யான பெண்­க­ளின் மார்­ப­கங்­களை எடுப்­பாக காட்ட பேடட் பிரா இல்லை பிரீ–பார்ம்டு பிரா அணி­ய­லாம்.
* தளர்ந்­து­போன மார்­ப­கங்­களை கொண்­ட­வர்­கள் பிட்­ஷேப் தர அண்­டர் ஒய் பிரா அணி­ய­லாம். இதில் கப்­பு­க­ளுக்கு கீழே பிளாஸ்­டிக் இல்லை மெல்­லிய உலோ­கத்­தி­னா­லான ஓயர் போன்­றவை மார்­பகங்க­ளுக்கு நல்ல கிரிப் தரும்


குள்ளமாக குண்டாக இருப்பவர்கள்
பெண்களுக்கு மிக முக்கியமான அம்சம் குறிப்பாகக் குள்ளமாக இருப்பவர்களுக்கு ஷோல்டர் அகலமாக இருப்பது, உங்கள் ஷோல்டர் அகலமாக இருக்க வேண்டியது அவசியம்.


ஒரு சிலருக்கு ஷோல்டர் அகலம் குறைவாக இருக்கும். அவர்களுக்கு இருக்கும் ஒரே வழி காட்டன் புடவைகள் தான். இவைகள் தான் உங்கள் சோல்டரை மறைத்து அகலப்படுத்திக் காட்டும்.


அதோடு காட்டன் புடவை என்பதால் சதை பகுதிகளை அப்பட்டமாகக் காட்டாது.


பெண்கள் சுடிதார் அணியும் போது கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயம் தொள தொளன்னு அணியக் கூடாது குறிப்பாகக் குள்ளமாகக் குண்டாக உள்ளவர்கள்.


அதே போல ரொம்ப இறுக்கமாகவும். இடுப்புப் பகுதியில் அளவு குறைத்து ஓரளவாவது ஸ்ட்ரக்சர் கொண்டு வரும் படி இருக்க வேண்டும்.


ரொம்ப இறுக்கமாகவும் இருந்தால் பின்புறம் அசிங்கமாகத் தெரியும். எனவே, இடை பகுதியில் கவனமெடுத்து சுடிதார்(Dresses) அணிய வேண்டும்.


ஒல்லியாக உள்ளவர்கள்
ஒல்லியாக உள்ளவர்கள் ரொம்ப மெல்லிய உடையைத் தவிர்க்க வேண்டும், இவை உடலை குச்சி குச்சியாகக் காட்டும். எலும்புகள் துருத்திக்கொண்டு அசிங்கமாக இருக்கும். சுடிதார் அணியும் போது கையின் அளவு ரொம்பக் குறைவாக வைக்கக் கூடாது.


இது உங்களின் நீண்ட கைகளை (ஒல்லியாக இருப்பதால்) இன்னும் நீண்டதாகக் காட்டும். தேர்வு செய்யும் உடை திக்கான உடையாகப் பார்த்துக்கொள்வது நல்லது.


நான் குண்டும் இல்ல ஒல்லியுமில்ல குள்ளமும் இல்ல பர்ஃபெக்ட்டான ஸ்ட்ரக்சர் இருந்தாலும் ஸ்மார்ட்டாகத் தெரியலை என்று வருத்தப்படுகிறீர்களா! இதற்கெல்லாம் காரணம் உடை மட்டுமே. ஏனோ தானோவென்று உடை அணிவதாலே அவ்வாறு தெரிகிறீர்கள்.


இதற்கும் உங்கள் முக அழகிற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை.


கறுப்பாக மாநிறமாக இருப்பவர்கள் ப்ரைட்டான உடைகள் தேர்வு செய்வது நலம். நீங்கள் பேன்ட் அணிபவராக இருந்தால் பெண்களுக்கு என்றே தற்போது பல ப்ரேண்ட்களில் அலுவலக உடை வெளியிட்டு உள்ளார்கள், நீங்கள் அதைப் பயன்படுத்தலாம்.


பேன்ட் மற்றும் வழுவழுப்பான சட்டை தான் தற்போதைய ஃபேஷன். மாடர்னாகவும் அதே சமயம் கவர்ச்சியாகவும் இருக்கும். சுடிதார் அணிபவராக இருந்தால் சரியான ஃபிட் உள்ள இடுப்பளவு சின்னதாக உள்ள சுடிதாரை தான் தேர்வு செய்ய வேண்டும், லூசான உடைகளை அணியக்கூடாது.


நான் அலுவலகம் எல்லாம் போவதில்லை சுடிதாரும் போடுவதில்லை புடவை மட்டும் தாங்க கட்டுவேன் என்று சொல்கிறீர்களா! கவலையே படாதீங்க.


உலகிலேயே டீசன்ட்டாகவும் அதே சமயம் செக்ஸியாகவும் உள்ள உடை என்றால் அது புடவை தான். நல்ல ஸ்ட்ரக்சர் உள்ளவர்களுக்கு எந்தப் புடவை வேண்டும் என்றாலும் கட்டலாம் அனைத்துமே சிறப்பாக இருக்கும்.


புடவை கட்டுவது பெரிய விஷயமில்லை அதைச் சரியான முறையில் கட்ட வேண்டும்.


என்னங்க நீங்க! எவ்வளவு வருசமாகப் புடவை கட்டுறேன் எனக்குப் புடவை கட்டுறத பற்றிச் சொல்றீங்களே என்று கோபப்படாதீங்க.


ஒரு சிலர் புடவையை ஃப்ளீட் ஒழுங்காக வைக்க மாட்டார்கள், கால் முழுவதும் மறையும் படி கட்ட மாட்டார்கள் தூக்கியபடி இருக்கும், பார்டர் சரியான பக்கத்தில் அளவில் இருக்க வேண்டும்.


முந்தானை நீளம் குறைவாக இருக்கும், கீழ் பகுதியில் ஃப்ளீட் சரியாக எடுத்து விடாமல் அசிங்கமாக இருக்கும், உடலை சுத்தி வைத்துக் கட்டியது போல இருக்கக் கூடாது(Dresses) இது மாதிரி நிறைய இருக்கு.


முக்கியமான விஷயம் பெண்களின் லோ ஹிப். பெரும்பாலும் இதைப் போல இப்போதைய பெண்கள் கட்ட விரும்புகிறார்கள். ஆனால், அது அனைவருக்கும் நன்றாக இருக்காது. ஒரு சிலருக்கு மட்டுமே நன்றாக இருக்கும்.


இதை விலாவாரியாக விவரிக்க முடியாது என்பதால் நீங்களே புரிந்து கொள்ளுங்கள்  செக்ஸியாக இருக்க வேண்டுமே தவிர ஆபாசமாகவோ அல்லது மற்றவர்கள் பார்த்து வேறு விதமாகக் கிண்டலடிக்கும் படியோ உடை அணியக்கூடாது.


அதிகப்படியான லோ நெக் மற்றும் லோ ஹிப் அவ்வாறான தோற்றத்தைத் தந்து விடும். ஒரு சிலருக்கு அது அழகாக இருக்கலாம் ஆனால், அவர்கள் பெரும்பான்மையானவர்கள் கிடையாது.


அதே போலப் பெண்களுக்கே உள்ள எண்ணம் மிகவும் விலை உயர்வான ஆடையை(Dresses) அணிந்தால் மட்டுமே அழகாகத் தெரிவோம் என்று, இது முற்றிலும் தவறான எண்ணம்.


மிகக் குறைந்த விலைகளில் கூட அழகான புடவைகள் உள்ளது. எந்த உடையாக இருந்தாலும் நமக்குப் பொருத்தமாக உள்ளதா என்று தான் பார்க்க வேண்டுமே தவிர, விலை உயர்ந்ததாக உள்ளதா என்று பார்க்கக் கூடாது.


நான் கூறிய எல்லாவற்றையும் விட மிக மிக மிக முக்கியமானது தன்னம்பிக்கையும், தாழ்வு மனப்பான்மையும் இல்லாமல் இருப்பதும் தான்.


POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!


மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும்.
பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo