கருமுட்டை(ovulation) என்றால் என்ன?
ஒவ்வொரு பெண்ணும் இரண்டு கருமுட்டை(ovulation) பைகள் உள்ளடக்கியுள்ளனர். இரண்டும் கருப்பையின் இரு பக்கங்களிலும் இணைந்துள்ளன. இக்கரு முட்டைப் பைகள் கருமுட்டையை(ovulation) உற்பத்தி செய்கின்றன. கருமுட்டை(ovulation)கள், விந்துவுடன் இணையும்போது குழந்தை உருவாகிறது இக்கருமுட்டைப்(ovulation) பைகள் விடலைப் பருவத்தின் முடிவில் ஒவ்வொரு மாதமும், ஒரு வளர்ந்த கருமுட்டையும்(ovulation) அல்லது ஒன்றுக்கும் மேற்பட்டவையை கரு அடையும்போது, ஒரு ஆணின் வளமான விந்துவினால் உட்கவரப்பட்டு, குழந்தை பிறக்க ஏதுவாக அமைகிறது.
பாலியல் வன்முறை
வீடு என்பது பாதுகாப்பாக இருந்தது. ஆனால் இன்று வன்முறைகளமாகும் பொழுது என்ன செய்வது. அப்பாவும், அண்ணணும் தம்பியும் நெருங்கின உறவினர்களும் பெண்ணுக்கு பாதுகாப்பை தர வேண்டியவர்கள் என்று கருதப்படுகிறவர்கள். ஆனால், அவர்களாலேயே ஆபத்து வர நேர்ந்தால் பெண் இதை எப்படி எதிர்கொள்வாள்? பாலுறவு என்பது இருமணங்களின் ஆரோக்கியமான உறவின் நிகழ்வு, சம்பந்தப்பட்ட இருவரும் இணைந்து உடலாலும், மனதாலும் ஒன்றுபடுவது. ஆனால் பாலுணர்வு இச்சையை அறியாத வயதில், ஒரு பெண்ணின் மேல் இது வன்முறையாக திணிக்கப்பட்டால் அந்த பெண் உடல் ரீதியான பாதிப்பை மட்டுமல்ல, மனரீதியாகவும் வாழ்நாள் முழுவதும் பாதிக்கப்படுகிறாள்.
சிறுவயதில் பாலியல் வன்முறைக்கு ஆளான பெண் பின்னாளில் மணவாழ்வில் பாலுணர்வு இன்பமானது என்று அணுகாமல் பெரும் பயத்துடனேயே எதிர்கொள்கிறாள். திருமணம், காதல், உறவு, ஆண் பெண் நட்பு என எல்லா உறவுகளுமே அவளுக்கு அருவெறுப்பையும் பயத்தையும் தருகிறது. இறுதியில் செக்ஸ் பற்றிய பயமும், வெறுப்புணர்சியுமே மிஞ்சுகிறது. அறிமுகம் இல்லா ஆண்களின் வன்முறை தரும் பாதிப்பை விட இது பலமடங்கு அதிகமானது. வீட்டில் தினம் பழகிய ஆண் உறவினர்களால் வன்முறை நிகழ்த்தப்படும்பொழுது வன்முறையால் பாதிக்கப்படும் பெண் வாழ்க்கையில் உறவுகள் பற்றிய நம்பிக்கையே இழந்து போகிறாள். தன்மீதே அவளுக்கு வெறுப்பும், உடல் சார்ந்த அருவெறுப்பும் ஏற்படுகிறது. இதிலிருந்து விடுபட வருடகணக்காகிறது. சிலர் இந்த உணர்வுகளிலிருந்து விடுபடாமலேயே வாழ்க்கை முழுவதும் மன உளைச்சல்களுக்கு உள்ளாகிறார்கள். இவர்களுடைய பாலுறவு வாழ்க்கையும் சிக்கலுக்கு உள்ளாகிறது. இப்பொழுது தான் இதுபற்றி பெண்கள் ஓரளவுக்கு வெளியே பேச ஆரம்பித்திருக்கிறார்கள். மருத்துவ கவுன்சிலிங்குக்கும் போகத் துவங்கியிருக்கிறார்கள். பாதிக்கப்பட்ட பெண்கள் மனத்திற்குள் வைத்து புழுங்குவதைவிட, அம்மாவிடம் பேசலாம், வயதில் பெரிய பெண்களான அக்கா, அத்தை, ஆசிரியை, டாக்டர்.. இவர்களோடு பேசலாம் வாழ்க்கை வாழவேண்டும் என்ற சலிப்போடில்லாமல், தெளிவாக, திடத்தோடு வாழ்வு பற்றி நம்பிக்கையுடன் வாழ்தல் மிக முக்கியம். வாழ்க்கை எதோனோடும் முடிந்து விடுவதில்லை. அது தொடர்கிறது. உன் உடல் உன்னுடையது தான். உன் அனுமதி இன்றி எவரும் தொடவோ, சொந்தம் கொண்டாடவோ உடலுறவு கொள்ளவோ முடியாது.
வளரிளம் பெண்களுக்கென வாழ்க்கை திறன்கள். ?
வளரிளம் பெண்கள் தங்களுடைய வயதில் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை புரிந்து, நல்ல பழக்கவழக்கங்களை அறிந்து, அதில் சரியானதைத் தேர்வு செய்து கடைபிடித்திடும் திறனை வாழ்க்கைத் திறன் என்கிறோம். உலக சுகாதார நிறுவனத்தின் கூற்றுப்படி, வாழ்க்கைத்திறன் என்பது கீழ்குறிப்பிட்ட திறன்கள் அடங்கியது ஆகும்.
ஆக்கப்பூர்வமாக சிந்தித்தல்
பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் திறமை
திறனாய்வு அல்லது மதிப்பீடு செய்யும் ஆற்றல்
பேச்சுத்திறன்
தனிநபர் தொடர்பு கொள்ளும் திறன்
சுய விழிப்புணர்வு
சுய வேலைவாய்ப்பு திறன்
உணர்ச்சிவசப்படுதல், அழுத்தங்களை சமாளிக்கும் திறன்
பணியிடத்தில் தன்னை பாதுகாத்துக் கொள்ளுதல் மற்றும் அங்கு ஏற்படும்
பிரச்சனைகளை எதிர்கொள்ளும் திறன்.
மேற்குறிப்பிட்ட வாழ்க்கைத் திறனை வளரிளம் பெண்கள் உணர்ந்து கொள்ள வேண்டும். வளரிளம் பெண்களிடையே மேற்குறிப்பிட்ட திறன்கள் இல்லாமல் இருந்தாலும் அல்லது குறைவாக இருந்தாலும் இத்திறன்களை முழுமையாக வளர்த்துக் கொள்ள தொடர்ந்து முயற்சிகளை அவசியம் மேற்கொள்ளவேண்டும். சினேகிதியில் உறுப்பினராக சேரவேண்டும். உடல் ஆரோக்கியமும் பாலுறுப்புகளின் சுத்தமும் நாம் நம் உடலை தினமும் சுத்தமாக வைத்திருக்கிறோம், என்றால் நம் உடலை நல்ல முறையில பராமரிக்கின்றோம் என்று பொருள். அதனால் நம் உடல் பல நோய்களிலிருந்து பாதுகாப்பைப் பெறுகிறது.
தினசரி குளிப்பது, பல் துலக்குவது, தூய்மையான ஆடைகளை அணிவது அதேபோல்தான் பாலுறுப்புகளின் சுத்தமும், அவற்றை தினமும் கவனம் செலுத்தி தூய்மையாக வைத்திருக்க வேண்டும். இல்லை என்றால் தொற்று கிருமிகள் சூழ்ந்து பல நோய்களை உருவாக்கும் நிலை ஏற்படும். இயற்கையாகவே பாலுறப்புகளில் சுரக்கும் திரவம் அவ்வுறுப்புகளை தூய்மை செய்து வருகிறது. இந்த திரவம் பெண்ணுறுப்பின் உள் இருக்கும்வரைதான் அது நோய்கிருமிகளை எதிர்த்து அப்பகுதிகளை தூய்மையாக வைக்கிறது. இது பெண்ணுறுப்பின் வெளிபுறத்தில் வரும்போது அதுவே நமக்கு தீமையை விளைவிக்கும். அதற்கு வெளிச்சூழல்தான் காரணம்.
வெளிச்சூழலில் இருக்கும் பாக்டீரியாக்களின் தாக்குதலால் துர்நாற்றம் வீசும் நிலை ஏற்படுகிறது. நாம் மிக கவனமுடன் அப்பகுதிகளை எப்போதும் சுத்தமாக பேண வேண்டும். ஒவ்வொரு முறை நம் உடலிலுள்ள கழிவுகளை வெளியேற்றும்போது, அப்பகுதிகளை மிகவும் நன்றாக தூய்மை செய்ய வேண்டும். ஏனென்றால், நம் உடலிலிருந்து வரும் கழிவுகளில் ஏராளமான நுண்கிருமிகளும் வெளிவரும். அவை அப்பகுதிகளில் தங்கிவிடக்கூடும். பாலுறுப்புகளை தூய்மை செய்ய நாம் அன்றாடம் உடம்பிற்கு பயன்படுத்தும் சோப்பே போதும். ஏதாவது அரிப்பு ஏற்பட்டால் டெட்டால் உபயோகப்படுத்தாலம். டெட்டால் ஓர் கிருமிநாசினியாக பயன்படுகிறது. இது தவிர, லோஷன் அல்லது ரசாயான பொருட்கள் உபயோகிப்பது சிறந்த முறை அல்ல.
POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!
மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும்.
பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo