பெண்கள் கணவரிடம் எதிர்பார்க்கும் முக்கியமாக விஷயங்கள்!

பெண்கள் கணவரிடம் எதிர்பார்க்கும் முக்கியமாக விஷயங்கள்!

பெண்களாகிய நாம் அனைவருக்கும் ஓர் எதிர்பார்ப்பு கட்டாயம் இருக்கும். நமக்கு வரபோகும் கணவர்(husband) எப்படியெல்லாம் இருக்க வேண்டும் என ஒர் கற்பனை வைத்திருப்பார்கள். அந்த கற்பனை அனைவருக்கும் 100% சாத்தியப்படுவதில்லை. குறிப்பாக சில ஏற்ற இரக்கங்கள் இருக்கத்தான் செய்யும். ஆனால் திருமணம் முடிந்த பிறகு பெண்கள் சில அடிப்படையான மிகவும் வேடிக்கையான எளிமையான விஷயங்களை கணவரிடம் இருந்த அதிகம் எதிர்பார்க்கின்றனர். இது கணவர்களாக(husband) இருக்கும் உங்களுக்கு தெரியுமா? தெரிந்துக்கொள்ள கட்டாயம் இங்கே படியுங்கள்.


காது கொடுத்து கேட்க வேண்டும்
மனைவி சுவாரசியமாக தனது நண்பர்கள் பற்றியோ அல்லது உறவினர்கள் பற்றியோ பேசிக்கொண்டிருக்கும் போது வேறு எங்கையாவது கவனத்தை வைத்துக்கொண்டு கண்டுக்காமல் இருப்பதை பெண்கள் விரும்பமாட்டார்கள். இதனால் தான் நிறைய வீடுகளில் சண்டை வருகின்றது. மனைவி சொல்வதை காது கொடுத்து கேளுங்கள்.


உடை
வெயிஇடத்திற்கு பெண்கள் செல்லும் போது உடை மற்றும் தங்களை அழகு படுத்திக்கொள்வதில் அதிக அக்கறை காட்டுவார்கள். அழகான உடை அதற்கேற்ற அழங்காரம் செய்ய சிறிது நேரம் எடுக்கும். கோபப்பட்டு கத்தாமல் சற்று பொறுமையாக முடிந்தால் அவர்கள் செய்யும் ஒப்பனையை ரசிக்க பழகுங்கள். கிளம்பியதும் இன்று நீ அழகாக இருக்கிறாய் என சொல்லிப்பாருங்கள். அன்று கிடைக்கு மரியாதையே தனி தான்.


காதல்
அடிக்கடி உங்கள் மனைவியிடம் I Love You சொல்லுங்கள். இதை அநேக பெண்கள் விரும்புவார்கள். அதற்காக கோபத்தில் உச்சியில் இருக்கும் போது இதை செய்யாதீர்கள். எரிகின்ற நெருப்பில் எண்ணெய் ஊற்றியது போன்று ஆகிவிடும். நல்ல தருணங்கள் கிடைக்கும் போது குறிப்பாக சமையல் நன்றாக இருக்கும் போது ஒரு I Love You சொல்லுங்கள். காதல் அதிகமாக இதுவும் ஒரு காரணம்.


செல்போன்
எப்போதும் செல்போனிலேயே மூழ்கியிருக்கும் கணவர்(husband) மீது மனைவிக்கு அதிருப்தி மேலிடும். வீட்டுக்கு வந்த பிறகு செல்போனில் தொடர்பில் இருந்துகொண்டே தன்னுடைய முகத்தை பார்க்காமல் பேசிக்கொண்டிருக்கும் கணவர்(husband) மீது கடும் அதிருப்தி கொள்வார்கள்.


முக்கியத்துவம்
தன்னை விட மற்றவர்களுக்கோ, மற்ற பொருட்களுக்கோ அதிக முக்கியத்துவம் கொடுப்பதை ஒரு போதும் விரும்பமாட்டார்கள். கணவன்-மனைவி இருவரும் தனித்தனி இருசக்கர வாகனங்களை பயன்படுத்துபவர்களாக இருந்தால் இரண்டு வாகனங்களின் பராமரிப்புக்கும் கணவர்(husband) முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். கணவர்(husband) தன்னுடைய வாகனத்திற்கு மட்டும் கூடுதல் அக்கறை எடுத்துக்கொள்வதை மனைவியால் ஏற்றுக்கொள்ள இயலாது.


எதிர்மறையான கருத்து
கணவர்(husband) தன் நலனில் மிகுந்த அக்கறை கொண்டவராக, மற்றவர்கள் மத்தியில் தன்னை விட்டுக்கொடுக்காதவராக இருக்க வேண்டும் என்று பெண்கள் எதிர்பார்ப்பார்கள். தன்னிடம் நன்றாக பேசிவிட்டு, நெருக்கமான உறவுகளிடம் எதிர்மறையான கருத்துக்களை கூறுவதை ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். உறவினர் முன்பாக அடிக்கடி சண்டையிடுவதையும் பெண்கள் விரும்பமாட்டார்கள்.


ஆசைக்கு
தங்களுடைய எதிர்பார்ப்புகளுக்கு கணவரிடம் இருந்து சாதகமான பதில் கிடைக்காதபட்சத்தில் வருத்தம் அடைவார்கள். அதுவே தொடர்கதையாக தொடரும் பட்சத்தில் கணவர் மீது கடும் அதிருப்தி கொள்வார்கள். தங்கள் ஆசைகளில் ஒருசிலவற்றையாவது கணவர்(husband) நிறைவேற்றித்தர வேண்டும் என்று ஆசைப்படுவார்கள்


கோபம்
சின்ன சின்ன விஷயங்களுக்கெல்லாம் கணவர்(husband) கோபப்படுவதையோ, குற்றம், குறை கூறிக்கொண்டே இருப்பதையோ ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். தாங்கள் செய்யாத தவறை கணவர் நம்பாவிட்டால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆகாகிவிடுவார்கள்.

மற்றவரின் பேச்சை கேட்பது
மூன்றாம் நபர்களின் பேச்சை கேட்டு கணவர்(husband) தன்னை வழி நடத்த முற்படுவதை விரும்பமாட்டார்கள். அதிலும் மற்றவர் களின் பேச்சை கேட்டு கணவர் தன்மீது நம்பிக்கை இழக்கும்போது மிகுந்த மன வேதனையடைவார்கள்.  


உடலுறவு
செக்ஸ் விஷயங்களில் கணவர்(husband) தன்னிடம் அனுமதியோ அல்லது இன்று உனக்கு ஓகேவா என சம்மதம் கேட்கும் பட்சத்தில் சந்தோஷத்தின் உச்சிக்கே சென்றுவிடுவார்கள். காரணம் செக்ஸ் என்பது இரண்டு தரப்பினருக்கும் சமமாக இருக்க வேண்டும். ஒருவர் ஆதிக்கம் இருந்தால் அது அதிக வெறுப்பை தரும்.


என்ன கணவன்மார்களே மேலே சொன்ன விஷயங்களை குறிப்பெடுத்துக் கொண்டிருக்கிறீர்களா! அனைத்தையும் பின்பற்றி மனைவியிடம் நல்ல பெயர் எடுங்க முயற்சி செய்யுங்கள்.


POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!


மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும்.
பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo