அலுவலகம் செல்லும் பெண்கள் ஆடை அணியும் போது மிகவும் கவனமாகவும் அதே சமயம் மற்றவர் கண்களை உறுத்தாத படியும் இருக்கவேண்டும்.
அலுவலகம் செல்லும் பெண்கள் புடவை, சுடிதார், பேன்ட், ஃபார்மல் சட்டைகள், ஸ்கர்ட் போன்றவற்றை அணிந்துச் செல்லலாம். இவற்றை அணியும் போது மிகவும் கவனமாகவும் அதே சமயம் மற்றவர் கண்களை உறுத்தாத படியும் இருக்கவேண்டும். காரணம், நூற்றுக்கு மேற்பட்டவர்கள் ஓர் இடத்தில் வேலை செய்யும் போது நாம் அணியும் உடைகள்(dress) மற்றவர்களின் கவனத்தை ஈர்க்கக்கூடாது.
சில அலுவலகங்களில் மேற்கத்திய உடைகளை(dress) தங்கள் ஊழியர்கள் அணிவதை விரும்புவார்கள். சில நிர்வாகங்கள் பாரம்பரிய உடைகள்தான் உடுத்த வேண்டும் என்று எதிர்ப்பார்ப்பார்கள். மேற்கத்திய உடைகள்(dress) என்றால் பேண்ட், அதற்கு ஏற்ப ஷர்ட் அணியலாம். கறுப்பு, பிரவுன் மற்றும் அடர் நீல நிற பேன்டுகளுக்கு வெள்ளை, நீலம், பேச் நிறங்களில் சட்டைகள் அணியலாம். ஆனால், உடலை இறுக்கிப் பிடிக்கும்படி அணியக்கூடாது. சட்டைகள் அணியும் போது கழுத்தை சுற்றி ஸ்கார்ப் அணியலாம் அல்லது வெயிஸ்ட்கோட் அணிந்தால் பார்க்க நேர்த்தியாக இருக்கும். புடவையென்றால் நன்றாக சலவை செய்த காட்டன் அல்லது சிந்தடிக் புடவைகள் அணியலாம். இதற்கு பிளவுஸ் சாதாரணமாக இருக்கவேண்டும். அதிக வேலைப்பாடு, முதுகில் ஜன்னல், கயிறு போன்றவை இருக்கக்கூடாது. அதேபோல் டீப்நெக் மற்றும் ஸ்லீவ்லெஸ் ஆகியவற்றையும் தவிர்க்க வேண்டும். புடவைகளை பிளீட் எடுத்து பின் குத்தவேண்டும். சிங்கிள் பிளிட் வைக்கக் கூடாது.
பொதுவாக அலுவலகத்தில் ஜீன்ஸ் போடக்கூடாது என்று இருக்கும். சில அலுவலகங்களில் வார இறுதி நாட்களில் கேஷுவல் உடைகள்(dress) அணியலாம். இப்போது சுடிதார் போலவே ஜீன்சுகளும் வருவதால், இதனை அலுவலகத்திற்கு அணிந்துச் செல்லலாம். முட்டிக்கால்க்கு மேல் இருக்கும் ஸ்கர்ட் போன்ற உடைகளை(dress) தவிர்க்க வேண்டும். சுடிதார் மற்றும் ஜீன்களுக்கு டாப் அணியும் போது, உங்களின் பின்புறம் மறைக்கும் படியான மோலாடைகள் இருப்பது நல்லது.
சுடிதாரில் காட்டன் மற்றும் சிந்தடிக் அலுவலகம் செல்லும் பெண்களுக்கு ஏற்றது. துணி மெல்லியதாக இருந்தால், உள் துணி வைத்து தைக்கவேண்டும். லெக்கிங்ஸ், உடல் ஒட்டி அணியக் கூடிய பேன்ட். இதற்கு முட்டிக்கு கீழ்வரக் கூடிய டாப் அணிய வேண்டும். சுடிதார்களுக்கு துப்பட்டா அணியும் போது அழகாக பிளீட் எடுத்து பின் செய்யலாம் அல்லது சால்வை போல் போர்த்திக் கொள்ளலாம். ஒரு பக்கம் மட்டும் தொங்கவிட வேண்டாம்.
உடைகள்(dress) அணியும் போது அதற்கு ஏற்ப அணிகலன் அணிவது அவசியம். அலுவலகம் என்பதால், கை நிறைய வளையல்கள், நிறைய சலங்கைகள் கொண்ட கொலுசு, டக்டக் என சத்தம் எழுப்பும் செருப்புகள், பெரிய கம்மல்கள் ஆகியவற்றை தவிர்ப்பது நல்லது. ஒரு கையில் சிம்பிளான ஸ்ட்ராப் வாட்ச், மறுகையில் ஒரு வளையல் அல்லது மெல்லிய பிரேஸ்லெட், கழுத்தில் மெல்லிய செயின், கிளிப் செய்யப்பட்ட தலைமுடி, கையில் ஒரு கைப்பை போதுமானது.
சரியான உடைகளை(dress) தேர்வு செய்யும் பலருக்கு, தங்களுக்கு ஏற்ற நிறங்களை தேர்வு செய்யத் தெரிவதில்லை. கறுப்பு, பிரவுன், ஆலிவ்பச்சை, நீலம், வெள்ளைநிற சட்டைகளை எல்லோரும் அணியலாம். வெள்ளை சருமம் உள்ளவர்கள் நீலம், கருப்பு, பிரவுன் மற்றும் அடர்நிற உடைகளை தேர்வு செய்யலாம். கறுப்பாக உள்ளவர்கள் பேஸ்டல், ஹாப்வயிட், ஆலிவ் பச்சை மற்றும் வெளிர் நிறங்களில் உடைகளை அணியலாம். ஒரு சில அலுவலகங்களில் வார இறுதி உடைகள் உள்ளன. அன்று மட்டும் டி-ஷர்ட், ஜீன்ஸ், லாங்ஸ்கர்ட் போன்ற உடைகளை அணிந்து செல்லலாம்.
டிரெஸ் கோடு என்கிற ஒன்று அனேகமாக இன்று எல்லா அலுவலகங்களிலும் ஒரு முக்கியமான விஷயமாக வலியுறுத்தப்படுகிறது. இன்னன்ன வேலைகளில் இருக்கும் பெண்கள் இப்படித்தான் உடை அணிய வேண்டும்… நகை அணிய வேண்டும் என ஒரு வரையறை விதிக்கப்படுகிறது. ஒரே அலுவலகத்திலேயே பல பிரிவுகளில் பெண்கள் வேலை பார்க்கும் போது, அந்தந்த பிரிவுக்கேற்ப அவர்களது உடையும் அலங்காரமும் இருக்க வேண்டும் என்ற விதிகளைச் சொல்லும் பணியிடங்களும் உண்டு.
இப்படி எந்த விதிமுறைகளும் இல்லாத இடங்களில் வேலை பார்க்கிற பெண்களும் இருக்கிறார்கள். எளிமையான ஒரே ஒரு செயின், காதில் சின்னதாக ஒரு தோடு… இதுதான் பெரும்பாலானவர்களின் விருப்பம். அடுத்தபடியாக மணிகள் வைத்த, கழுத்தை ஒட்டின மாதிரியான நெக்லஸ். ஒரு சரமோ, இரட்டைச் சரமோ… அது அவரவர் விருப்பம். அதற்கு மேட்ச்சாக அதே கலர் மணிகள் வைத்த தோடு. மிகப்பொடியான மணிகளில் செய்த கொத்தாக, முறுக்கின மாதிரியான கழுத்தணிகள், அதற்கேற்ப காதணிகளை விரும்புவோரும் உண்டு.
எந்த நாளும், எல்லா உடைகளுக்கும் பொருந்துகிற மாதிரி வெள்ளை முத்துக்கள் கோர்த்த சரமும், தோடும் அணிகிறவர்களும் உண்டு.முத்துக்களோடு, கலர் மணிகள் சேர்த்த கழுத்தணி மற்றும் குட்டியாக வட்ட வடிவ தோடு, அதில் சின்னதாக ஒரே ஒரு தொங்கல்… இதுவும் வேலைக்குச் செல்கிறவர்களின் விருப்பங்களில் ஒன்று. இந்த எல்லாமே எளிமையாக உடை அணிகிறவர்களுக்கான நகைகள். காட்டனோ, சிந்தெடிக்கோ… அதிக ஆடம்பரமில்லாத புடவை அல்லது சல்வார் அணிகிற போது, உடையின் கலருக்கேற்ப மேட்ச்சாக அணிய நினைப்பவர்களுக்கு மேலே சொன்ன அத்தனை சாய்ஸும் உண்டு.
மேட்ச்சிங் நகைகளில் விருப்பமில்லாதவர்கள், மெலிதான சங்கிலி, மெலிதான வளையல்கள், பொடி கல் வைத்த வளையல்கள், மயில், பூ மாதிரியான நளினமான டிசைன்கள் பதித்த மெலிதான பிரேஸ்லெட்டுகள் அணியலாம். தங்க நகைகள் அணிய வசதியோ, விருப்பமோ இல்லாதவர்களுக்கு இன்று அப்படியே தங்கம் போலவே தோற்றமளிக்கிற கியாரண்டி நகைகள் கிடைக்கின்றன. பட்ஜெட்டும் இடிக்காது. தினம் ஒன்றாக அணியலாம். பாதுகாப்பும்கூட.
வரவேற்பாளராக வேலை பார்க்கிற பெண்கள், உடை மற்றும் நகை விஷயத்தில் அதிக அக்கறை காட்ட வேண்டியிருக்கும். இரட்டைச் சரமாகக் கட்டிய மணி மாலை, பிளாக் மெட்டல் அல்லது சில்வர் ஃபினிஷ் நகைகளை அணியலாம். கழுத்துக்கு அணிகிற மாலை, உடைக்கு மேட்ச்சாக ஒரே கலரிலோ அல்லது 2 கலர்கள் கலந்தோ இருக்கலாம். பெரிய காதணிகளைத் தவிர்க்க வேண்டும். அதிகபட்ச கவனம் ஈர்க்கும் வகையில் பளபளா நகைகளோ, கன்னாபின்னா கலர் காம்பினேஷனோ கூடாது. சுருக்கமாகச் சொன்னால் அவர்களது உடையோ, நகையோ பார்வையாளர்களை உறுத்தவோ, கவனத்தைத் திசைத் திருப்பவோ கூடாது.
ஒரு நிறுவனத்தின் உயர்ந்த பதவியில் இருப்பவர்களுக்கு டிரெஸ் கோடு என்பது ரொம்பவே முக்கியம். அலுவலகத்தில் அப்படியொரு விதி இல்லாவிட்டாலும், தனிப்பட்ட முறையில் அவர்களுக்கு அதில் ஒரு அக்கறை அவசியம்.சேலை அணிகிறவர்கள் என்றால், காட்டன் சேலை, அதற்கு மேட்ச்சான முத்து வைத்த நகைகள் அணியலாம். காதுகளுக்கு அதிக நீளமான தொங்கட்டான்கள் இல்லாத காதணிகள் பெஸ்ட். கோல்டன் ஃபினிஷில் குட்டி பென்டென்ட் வைத்த சங்கிலி, மெலிதான மோதிரம் பொருத்தமாக இருக்கும்.
வேலைக்குச் செல்கிற பெண்கள் பெரும்பாலும் வெள்ளிக் கிழமைகளிலும், விசேஷ நாட்களிலும் வழக்கத்தைவிட சற்றே ஆடம்பரமாகச் செல்வதை விரும்புவதுண்டு. பட்டுச்சேலை அல்லது டிசைனர் சேலை என்றால், கோல்டன் ஃபினிஷும், உடைக்கு மேட்ச்சான பீட்ஸும் வைத்துச் செய்த நகைகள் அணியலாம். ஜிமிக்கி விரும்பிகள் விதம் விதமான ஜிமிக்கிகள் அணியலாம். பொடி கல் பதித்த அட்டிகை மாடல் நெக்லஸ், அதே மாடலில் வளையல்கள் அணியலாம். இதுபோன்ற விசேஷ தினங்களுக்கு அணிய சிவப்பு, வெள்ளை மற்றும் பச்சை கல் அல்லது முத்துக்கள் பதித்த நகைகள் அட்டகாசமாகப் பொருந்தும். ஃப்ளோரல் டிசைன் எனப்படுகிற பூக்கள் வடிவிலான செட்டு களையும் அணியலாம். அதில் கழுத்துக்கு, காதுக்கு, மோதிரம் எல்லாம் வரும்.
டிப்ஸ்… டிப்ஸ்…
ஒரே கலரில் இரண்டு, மூன்று உடைகள் வைத்திருக்கிறீர்களா? பொதுவாக ஒரே ஒரு செட் நகை மட்டும் வைத்திருக்காமல், வேறு வேறு டிசைன்களில் இரண்டு, மூன்று செட் வாங்கிக் கொள்ளுங்கள். ஒவ்வொரு முறையும் மாற்றி அணிகிற போது, புதிதாக இருக்கும்.
மணி, முத்து கோர்த்த நகைகள் வாங்கும் போது, ஒழுங்காகக் கோர்க்கப்பட்டிருக்கிறதா என சரிபார்த்து வாங்குங்கள். சில நேரங்களில் காதணிகளிலோ, வளையல்களிலோ எண்ணிக்கை கூடக் குறைய இருக்கலாம். வாங்கும்போது வித்தியாசம் தெரியாது. ஆனால், அணிகிற போது ஒரு முத்து கூடவோ, குறைவாகவோ இருந்தாலும் ஒரு மாதிரியாகத் தெரியலாம்.
இரட்டைச்சரம் வைத்த கழுத்தணிகள் வாங்கும் போது, அது உங்கள் கழுத்தில் ஒட்டிப் படிந்தபடி பொருந்துகிறதா என சரிபார்த்து வாங்கவும். புரளவோ, உறுத்தவோ கூடாது. எப்போதும் உங்கள் கைப்பையில் ஒரு செட் காதணிகள், எக்ஸ்ட்ரா திருகுகள் வைத்திருங்கள். நிறைய பேருக்கு அடிக்கடி தொலைந்து போகிற அயிட்டங்கள் இவைதான். அந்த மாதிரி சந்தர்ப்பங்களில் சட்டென உங்கள் கைவசம் வைத்திருக்கிற எக்ஸ்ட்ரா செட் கைகொடுக்கும்.
வேலைக்குச் செல்லும் போது, நீங்கள் அணிகிற எந்த நகையும் அடுத்தவர்களின் கவனத்தைத் திசைத் திருப்பக்கூடாது. அதாவது, அவை அதிக பளபளப்பாகவோ, சலசலவென சத்தம் எழுப்பும்படியோ இருக்கக் கூடாது.
POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!
மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும்.
பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo