பேஷன்னை தனது சொந்த பாணியில் மறுவரையுறை செய்த கோலிவுட் பிரபலங்கள் : குறிப்பு எடுங்கள்

பேஷன்னை தனது சொந்த பாணியில் மறுவரையுறை செய்த கோலிவுட் பிரபலங்கள் : குறிப்பு எடுங்கள்

பேஷன் (fashion) என்றது காலம் காலமாக மாறிக்கொண்டேதான் இருக்கிறது. பெண்களுக்கு தேவையான விதத்தில் அணைத்து ஆடைகளும் மார்க்கெட்டில் வந்துகொண்டுதான் இருக்கிறது. இதில் எதை நாம் அணியலாம் எதை தவிர்க்கலாம் என்று நமக்கு எளிதில் புரியவைக்கும் விதத்தில் இருக்கிறது இந்த கோலிவுட் கதாநாயகிகளின் பேஷன் டைரி ! இவர்கள் தனது நடிப்பு திறனிற்கு மட்டுமில்லாமல் தன்னுடைய உடைகளுக்கும்/ பேஷனிற்கும் கூட பிரபலமானவர்கள். 


அதிலும் இவர்களின் இன்ஸ்டாகிராம் பக்கங்கள் மற்றும் இவர்கள் பங்கேற்கும் விழாக்கள் /நிகழ்ச்சிகள் அனைத்திலும் மிக அசத்தலாக தோற்றம் அளித்து தமிழ்நாட்டு பெண்மணிகளை மட்டுமில்லாமல் அணைத்து பெண்களுக்கும் ஒரு வழிகாட்டியாக மாறிவிட்டனர் (#StrengthOfAWomen) இந்த கோலிவுட் கதாநாயகிகள். சரி ! யார் அந்த பிரபலங்கள் என்று தெரிந்துகொள்ளுங்கள்...


1. புன்னகை அரசி சினேகா -


மறுக்கவே முடியாத அளவிற்கு சினேகா தனது பாணியை தனது ஒவொரு படத்திலும் மற்றும் போது நிகழ்ச்சிகளிலும் அற்புதமாக காட்டி கொண்டேதான் இருக்கிறார். அவர் நடித்த பெரும்பாலான படங்களில், குறிப்பாக ஜனா, பம்மல் K சம்பந்தம், வசூல் ராஜா Mbbs இல் இவரின் ஆடை வடிவமைப்பு அழகாக அமைந்திருக்கும்.
இன்றைய தேதியில் ஒரு பிரபல தொலைக்காட்சியில் இவர் நடுவராக பங்கேற்கும் ஒரு நடன போட்டியிலும், இவரின் ஆடைகளை திரும்பி பார்க்கும் அளவிற்கு அட்டகாசமாக அணிந்து வருகிறார் ! மேலும் இவரின் இன்ஸ்டாகிராம் பக்கஙகளில் இருந்து சில அற்புதமான தோற்றங்கள் உங்களுக்காக....


 sneha


படம்


2. சமந்தா -


சமந்தா திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்த காலத்தில் இருந்தே இவரின் ஆடைகள் மற்றும் இவரின் பாணி தனித்துவமாக அமைந்த ஒன்றாகும். இவர் நடித்து வெற்றியின் சிகரத்தை பிடித்த நான் ஈ படத்தில் இவர் அணிந்திருந்த குஞ்சம் வைத்த குர்திகள் அனைத்தும் அற்புதமான தோற்றத்தை இவருக்கு அளித்தது( என்னையும் மிகவும் ஈர்க்க வைத்த ஆடை அது). மேலும் இவர் நடித்த  மெர்சல், இரும்புத்திரை படங்களில் இவரின் புடவை தோற்றம் அற்புதமான ஒன்றாக இருந்தது. சரி படத்தில் மட்டும்தானே என்று நினைக்காதீர்கள். சமந்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கங்களில் அட்டகாசமான ஆடைகளில் தனித்துவமான பாணியை மிக அற்புதமாக முன்வைத்திருக்கிறார். இதை பார்த்து ரசிக்காமல் இருக்கமுடியாது. அவரின் ஆடைகளில், இன்றைய நவீன பெண்மணிக்கான அணைத்து வடிவமைப்புகளையும் நீங்கள் கண்டறியலாம்.  மேலும் அலுவலகம், போது நிகழ்ச்சி, பார்ட்டி, வெஸ்டர்ன் மற்றும் ட்ரடிஷனல் உடைகள் என அணைத்து விதங்களும் அடங்கி இருக்கும் அவரின் இன்ஸ்டாகிராம் பக்கங்களில். ஆஹா ! இதல்லவா வேண்டும் நவீன பெண்களுக்கு.குறிப்பு எடுங்கள்!


samantha


படம்


3. கீர்த்தி சுரேஷ் -


கீர்த்தியின் பாணி (style) அவரின் ஆளுமையை முன்வைக்கும் விதத்தில் இருக்கும். அவர் நடித்த  சர்கார் மற்றும் சாமி 2 படங்களில் துறுவென ஒரு காதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இவர் அதற்கேர்த்த ஆடைகளை அட்டகாசமாக அணிந்திருந்தார். குறிப்பாக சர்கார் படத்தில் அந்த ஆடைக்கேற்ற அழகிய ஷ்ரக் (shrug) என்னை கவர்ந்த ஒரு அம்சம். ஏனெனில், இதை நீங்கள் உங்கள் உடல் அமைப்புக்கு தகுந்த வகையில் அணிந்து எளிதில் ஒரு அற்புதமான தோற்றத்தை பெறலாம்.
இதுபோல் மாடர்ன் ஆடைகள் ஒரு புறம் என்றால், மறுபுறம் இவரின் புடவை தோற்றங்கள் மிக அற்புதமாக அமைந்துள்ளது. நீங்கள் கனமான தோற்றமாக/ஒல்லியாக  இருந்தாலும், கீர்த்தியின் புடவை பாணி உங்களையும் புடவை அணிய நிச்சயம் இழுத்துச்செல்லும் !!


keerthyபடம்


8 அற்புதமான தோற்றங்களில்  கீர்த்தி சுரேஷ் நம்மை மீண்டும் சேலையின் மீது காதல் கொள்ள வைத்தார் 


மேலும் நீங்கள் எளிதில் கிளாஸ்ஸியாக தெரிய சில குறிப்புக்கள் -1. உங்களுக்கு மிகவும்  பிடித்த ஆடையாக இருந்தாலும் அதை அணிந்து பார்த்து சரியான அளவில் வாங்கவும்
2. உங்கள் சருமத்தின் நிறத்தை நன்கு அறிந்து அதற்கேற்ற நிறங்களுடன் ஒற்றுப்போக கற்றுக்கொள்ளுங்கள். இது உங்களை மிக அற்புதமாக காட்டும்.
3. அழகிய விதவிதமான அணிகலன்கள் (கம்மல்,  கை பை, ஷூஸ், செயின் ) உங்கள் தோற்றத்தை மேம்படுத்த தேவையானவை.
4. உங்கள் அணைத்து ஆடைகளும் உங்களுக்கு அற்புதமாக பொருந்த, ஒரு நல்ல டைலர் அதாவது விலையில் மட்டுமில்லாமல் வேளையிலும் திறமையான ஒருத்தரை தேடி வைத்துக்கொள்ளுங்கள்.


அப்போ இந்த மங்கையர் தினத்தில் இருந்து நீங்களும் ஒரு புதிய தோற்றத்திற்கு மாற தயாரா?!


gifskey %2811%29


பட ஆதாரம்  - ஜிபிPOPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி,  தமிழ், தெலுங்கு , மராத்தி மற் றும் பெங்காலி !மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும் .பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo.