இந்த நட்சத்திரக்காரர்கள் வாழ்நாள் முழுக்க இப்படித்தான் இருப்பார்களா!நீங்க எப்படினு பார்த்துக்குங்க!

இந்த நட்சத்திரக்காரர்கள் வாழ்நாள் முழுக்க இப்படித்தான் இருப்பார்களா!நீங்க எப்படினு பார்த்துக்குங்க!

இந்த உலகில் பிறக்கும் அனைவருமே 27 நட்சத்திரங்களுக்குள் அடங்கி விடுகிறார்கள் என்பது சுவாரஸ்யமான உண்மைதான் இல்லையா. இந்த 27 நட்சத்திரங்களும் 12 ராசிகளுக்குள் அடங்கி விடுகின்றன.


நட்சத்திர பலன்கள் (star) ராசி பலன்களை விட அற்புதமான பலன்களைக் கொடுக்க கூடியவை. இந்த 27 நட்சத்திரங்களுக்கும் ஒவ்வொரு குணங்கள் உண்டு. அதன்படிதான் ஒருவரது குணங்களும் இருப்பதாகக் கூறப்படுகிறது.


ஒருவர் பிறந்த தேதி மற்றும் நேரம் அடிப்படையில் இந்த நட்சத்திரங்கள் கணிக்கப்படுகின்றன. நாம் மட்டுமல்ல தெய்வங்களுக்கும் நம்மை போன்றே நட்சத்திரங்கள் உள்ளன என்பது ஆச்சர்யம்தான் இல்லையா. ஸ்ரீ ராமர் புனர்பூசம், நரசிம்மர் ஸ்வாதி , நடராஜர் திருவாதிரை என ஒவ்வொரு தெய்வங்களுக்கும் ஒவ்வொரு நட்சத்திரங்கள் உண்டு.


ஜோதிடத்தில் இத்தனை முக்கியத்துவம் வாய்ந்த நட்சத்திரங்களைக் கொண்டு ஒருவரது வாழ்நாள் முழுவதும் எப்படி இருப்பார் என்பதைக் கூறிவிட முடியும் என்பது உண்மைதான். அதன்படி உங்களுக்குத் தெரிந்தவர்கள் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ளவும் உங்கள் வாழ்நாள் முழுக்க நீங்கள் எப்படி இருப்பீர்கள் என்பது பற்றியும் அறிந்து கொள்ள நீங்கள் ஆவலாக இருக்கிறீர்களா.


அஸ்வினி நட்சத்திரம்


இவர்கள் எப்போதும் எனர்ஜியுடனே இருப்பார்கள். ஆச்சாரம் அனுஷ்டானங்களை அப்படியே கடைபிடிப்பார்கள். கொஞ்சம் சொன்னதையே சொல்வது சுத்தம் செய்ததையே சுத்தம் செய்வது போன்ற குணங்கள் இவர்களுக்கு இருந்து கொண்டே இருக்கும். தான் சொல்வதை தான் செய்வார்களே தவிர யார் சொல்வதையும் கேட்கமாட்டார்கள்.பரணி நட்சத்திரம்


இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்ளுக்கு தண்ணீர் அலர்ஜி. நேருக்கு நேராக பேசிவிடுவார்கள் என்றாலும் கிசுகிசுக்களை பரப்புவது இவர்களுக்கு தனிப்பட்ட பிரியம். குரூரம் மற்றும் நன்றியின்மை போன்ற குணங்கள் இவர்களிடம் காணப்படும்.கிருத்திகை நட்சத்திரம்


எல்லோரும் தன்னை பார்த்து பொறாமைப்படும் ஒரு வாழ்வை இவர்கள் வாழ்வார்கள். ஆனால் கோபக்காரர். மற்றவர்கள் இதனால் இவரை அணுகவே பயப்படுவார்கள். நல்ல நட்பு வட்டம் இவர்களுக்கு இருக்காது.ரோஹிணி நட்சத்திரம்


இவர்கள் ஆன்மிக ரீதியாக சலனப்படுபவர்கள். குறிப்பிட்ட மதம் என்பது இவர்களுக்கு இல்லை. எம்மதமும் சம்மதம். மற்றவர்களை பற்றிய கவலை இவர்களுக்கு இருக்காது. தங்களது கெளரவம் தகுதி இதன் மேல் பற்று அதிகமாக இருக்கும்.மிருகசீரிஷம் நட்சத்திரம்


மிக அழகானவர்களாக இருப்பார்கள். பொருளாதார சிரமங்கள் இருந்தாலும் அதனை வெளிப்படையாக மற்றவர்களிடம் கூற மாட்டார்கள். சிக்கல் நிறைந்தாலும் அதனை சமாளிப்பதில் வல்லவர்கள்.திருவாதிரை நட்சத்திரம்


இவர்களுக்கு மனிதர்களை விட பொருள்கள் மீது பிரியம் அதிகமாக இருக்கும். அருகில் இருப்பவர்களோடு அன்பாக இருக்க மாட்டார்கள், தங்கள் மனநிலை மற்றும் வாழ்க்கையின் யதார்த்தம் இரண்டுக்குமான இடைவெளியை சமன் செய்ய கஷ்டப்படுவார்கள்.புனர்பூடம் நட்சத்திரம்


எப்போதும் நண்பர்கள்தான் இவர்களுக்கு உயிராக இருப்பார்கள். எப்போதும் சுறுசுறுப்பானவர் மற்றும் அதீத உற்சாகம் கொண்டவராக இருப்பார்கள். நட்பின் காரணமாக இவர்கள் அனைவரையும் நம்புவார்கள். பின் ஏமாற்றம் அடைவார்கள்.பூசம்


பெரும்பாலும் விதிகளை மதிப்பார்கள். மதிக்கத்தவர்களை வெறுப்பார்கள். பெரியவர்கள் பெற்றவர்கள் மீது மரியாதை இருக்காது. ஆன்மிக குணங்களும் இவர்களுக்கு கிடையாது.ஆயில்யம் நட்சத்திரம்


இவர்கள் குடும்பத்தை நேசிப்பவர்கள். ஆனாலும் பயணம் என்பது இவர்களுக்கு பிடித்தமான ஒன்று. பயணத்திற்காக குடும்பத்தை அடிக்கடி பிரிவார்கள். தங்களது நலத்திற்காக மட்டுமே தாங்கள் சம்பாதித்ததை செலவழிப்பார்கள்.மகம் நட்சத்திரம்


இவர்கள் அமைதியாக இருந்தாலும் ஆபத்தானவர்கள். தனது தகுதிக்கு மீறியே ஆசைப்படுவார்கள். அதனை அடைந்தும் விடுவார்கள். பண விஷயத்தில் நேர்மையானவர்கள். ஆன்மிகத்தில் ஈடுபாடு அதிகம். போதை பழக்கங்களுக்கு அடிமையானவர்கள்.பூரம் நட்சத்திரம்


இவர்கள் யதார்தமானவர்கள் போலத் தெரிந்தாலும் அப்படி இருக்க மாட்டார்கள். தங்களது கணக்கு தப்பாது எனும் தைர்யம் உடையவர்கள். ஒன்றுக்கும் மேற்பட்ட உறவில் கில்லாடிகள். சட்டத்திற்கு புறம்பாக எதையும் செய்யாத நேர்மைவாதிகள்.உத்திரம் நட்சத்திரம்


மிக அன்புடையவர். இதனால் அனைவரிடமும் நல்லதொரு உறவு நிலை கொண்டாடுவார்கள். எல்லா காரியங்களையும் சாதிப்பதில் வல்லவர்கள். சமூகத்தில் நல்ல பெயர் எடுப்பார்கள்.ஹஸ்தம் நட்சத்திரம்


ஆன்மிக ஈடுபாடு இருக்கும் படிப்பில் முதல்வராக இருப்பார்கள் ஆனாலும் பொறாமை படுவார்கள். பயணத்தில் இருக்க விரும்புவார்கள்.சித்திரை நட்சத்திரம்


வெளியில் பசுவாகவும் உள்ளே நரியாகவும் இருப்பார்கள். சந்தர்ப்பவாதிகள் அதனால் எல்லாவற்றையும் வெற்றி கொள்வார்கள். அறிவு பற்றிய தேடல் அதிகம் இருக்கும்.ஸ்வாதி நட்சத்திரம்


இவர்கள் நேரானவர்கள். இதனால் பல சிக்கல்களை சந்திப்பார்கள். சூதுவாது பற்றிய விருப்பம் இல்லாதவர்கள் ஆகவே அனைவரையும் நம்பி ஏமாறுவது இவர்கள் இயல்பு.. ஆனாலும் பிற்பாதி வாழ்க்கையில் சரியாவார்கள். தங்கள் அருகில் உள்ளவர்களூடைய சக்தியை பயன்படுத்தி கொள்வார்கள்.விசாகம் நட்சத்திரம்


தொலை நோக்கு பார்வை கொண்டவர்கள். குறுக்கு வழி இவர்களுக்கு பிடிக்காது. மற்றவர் பற்றிய பொறாமை இருக்கும். ஆனால் இவர்கள் செயல்கள் தாமதமானாலும் வெற்றியடையும். மிக பெரிய நட்புவட்டம் இவர்களுக்கு எரிச்சலை தரும்.அனுஷம் நட்சத்திரம்


தாய் தகப்பனோடு நல்ல உறவு இருக்காது. மனதளவில் பலவீனமானவர்கள். வாழ்வில் தடைகளை தாண்டியபடியே இருக்க நேரிடும். உணவையும் உடல் நலத்தையும் கவனிப்பது நல்லது.கேட்டை நட்சத்திரம்


ஒருநிலையில் இருக்க மாட்டார்கள். தொழிலை மாற்றி அமைப்பார்கள். உடல் ஆரோக்கியம் இருக்கும். நிலையான உறவினை மதிக்க மாட்டார்கள். அவசரப்பட்டு தவறு செய்து விட்டு நிதானமாக மன்னிப்பு கேட்பார்கள்.மூலம் நட்சத்திரம்


நல்ல அற்புதமான வாழ்வை வாழும் இவர்கள் சமாதான தூதர்கள். அமைதிக்கு எதிராக யார் இருந்தாலும் ஆக்ரோஷமடைவார்கள். பயணிப்பதால் பல்வேறு ஞானம் பெறுவார்கள்.பூராடம் நட்சத்திரம்


தாங்கள் மிக அறிவாளி என்பதை அடுத்தவருக்கு சொல்லியபடியே இருப்பார்கள். ஆனால் ஒரு சிறிய முடிவைக் கூட எடுக்க தடுமாறுவார்கள். முகமூடி அணிவதை இவர்களால் நிறுத்த முடியாது.உத்திராடம் நட்சத்திரம்


இவர்களுக்கு யார் மீதும் நம்பிக்கை இருக்காது. நன்றாக வேலை செய்யும் நபர்தான் என்றாலும் மனம் ஒத்துழைக்கவில்லை என்றால் செய்யமாட்டார்கள். உள்நோக்கத்தோடு பணிபுரிவார்கள்.திருவோணம் நட்சத்திரம்


இவர்கள் மதநூல்களை பின்பற்றுவர். தனது அமைதியால் எதிரிகளை வீழ்த்த எண்ணுவார்கள். உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுவது வழக்கம். மற்றவர் மீது நம்பிக்கை இருக்காது. தன்னை நம்பியவர்களை ஏமாற்றுவதில் சிறந்தவர்கள்.அவிட்டம் நட்சத்திரம்


கோபத்தால் தங்கள் வாழ்வை கெடுத்துக் கொள்வார்கள். திருமண வாழ்க்கை தாமதமாகத்தான் நடைபெறும். அல்லது சந்தோஷம் இல்லாத மணவாழ்வு இவர்களுக்கு அமையலாம்.சதயம் நட்சத்திரம்


மிக எளிமையானவர். மற்றவர் பற்றிய கவலைகள் இருக்காது. நேர்மையானவர். சொந்த விருப்பு வெறுப்புகளுக்கு மதிப்பு கொடுத்து அதன்படிதான் வாழ்வார்கள்.பூரட்டாதி நட்சத்திரம்


தன்னை உலகம் வியந்து போற்ற வேண்டும் என்று விரும்புவார்கள். தனது சொல்லும் செயலும் வேறு வேறாக இருக்கும். நியாயவாதி போல இருப்பார்கள் என்றாலும் இவர்கள் சந்தர்ப்பவாதிகள்.உத்திரட்டாதி நட்சத்திரம்


ஞானம் கொண்டவர்கள். பயணம் இவர்களுக்கு அதீத அறிவை வழங்கும். பிறந்த இடத்தை விட்டு வெளியேறி வாழ்வார்கள். மற்றவர்களுக்காக உயிரை தரவும் தயங்காத நேசம் உடையவர்கள்.ரேவதி நட்சத்திரம்


மிகவும் அடம் பிடிப்பவர்கள். கோபமும் இவர்கள் இயல்பு. ஒருவரின் முகமூடியை களைந்து பார்க்கும் திறன் இல்லாததால் யாரையும் நம்புவார்கள். ஆன்மிக ஈடுபாடு இருக்கும். மற்றவருக்கு ஒன்று என்றால் இவர்கள் துடிப்பார்கள் இதுதான் இவர்கள் சிக்கல். 


படங்கள் ஆதாரம் பிக்ஸ்சா பே , பாக்ஸெல்ஸ்


---


POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!


மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும் பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo.