ஷாப்பிங் : பெண்களே! சரியான செலவில், ஸ்மார்ட் ஷாப்பிங் செய்து, ஸ்டைலாக தோன்ற சில வழிகள்

ஷாப்பிங் : பெண்களே! சரியான செலவில், ஸ்மார்ட் ஷாப்பிங் செய்து, ஸ்டைலாக தோன்ற சில வழிகள்

ஷாப்பிங் பெண்களாகிய நாம் எல்லோருக்கும் பிடித்த ஒரு விஷயம். தேவைக்கேற்ப வாங்குவதை விட மன நிலைக்கு ஏற்றபடி வாங்குவதுதான் அதிகம் ! இப்போதெல்லாம் அப்செட் ஆனால் ஷாப்பிங் வலைத்தளத்தை திறந்து நாலு பொருளை வாங்கி மகிழ்ச்சி அடையும் நிலைமை வந்துவிட்டது. அதற்க்கு பின்பு அதை நாம் பயன்படுத்துவோமா இல்லையா என்று பெரும்பாலானவர்கள் யோசிப்பதில்லை.


இதை இப்படி யோசித்து பாருங்களேன்.... உங்களுக்கு மிகவும் தேவைப்படும் (பணம் ) நேரத்தில் அதே மதிப்பில் உங்கள் அலமாரியில் பல வாரங்கள் /மாசங்களாக தூங்கி கொண்டிருக்கும் உங்கள் ஆடை, நீங்கள் பயன்படுத்தாத உங்கள் ஆடை, உங்களுக்கு எவாறு உதவும்?! ச்சா... அந்த மூவாயிரம் கையில் இருந்திருந்தால் இந்த செலவை சரி செய்ய உதவிருக்குமே என்று யோசிப்பீர்கள்.


ஆகையால், பட்ஜெட் ஷாப்பிங் (shopping) செய்து பழகுங்கள். இதில் நீங்கள் குறைவான செலவில், ஸ்டைலாக தோன்ற நாங்கள் உங்களுக்கு சில அற்புதமான உத்திகளை அளிக்கிறோம்.


பிரதான ஆடை -


pexels-photo-933499


உங்கள் ஆடைகளில் முக்கியமான வகைகள், அதாவது வெள்ளை மற்றும் கறுப்பு குர்தி, வெள்ளை மற்றும் கறுப்பு டாப், மேலும் சில நடுநிலையான நிறங்கள் (நியூட்ரல்) அவசியம் தேவையானது. இது உங்கள் பெரும்பாலான செலவுகளை சரிசெய்ய உதவும். இவை இருந்தால், ஏதேனும் ஒரு ப்ளூ/கருப்பு ஜீன் ஒன்றுக்கு அணிந்து நொடியில் ரெடியாகி செல்லலாம். அதனால், பேஸிக்ஸ் முக்கியம்.


ஓரு ஆடை, பல பயன்கள் -


நான் சமீபத்தில் ஒரு சிவப்பு க்ரோஷட் ஓவர்கோட் வாங்கினேன். அதை நான் எந்த குர்தி உடன் அணிய வாங்கினேனோ அதை தவிர வேறு எதற்கெல்லாம் அதை அணியலாம் என்று யோசித்து அதன் பிறகே வாங்கினேன். இதுபோல் எந்த ஒரு ஆடை வாங்கினாலும் அதை இரண்டு அல்லது நான்கு முறை பயன்படுத்த முடியுமா (வெவ்வேறு வழிகளில், வெவ்வேறு தோற்றத்திற்கு )என்று யோசித்து வாங்குங்கள். இதில் நிச்சயம் உங்கள் சேமிப்பு (saving) அதிகரிக்கும்.


பிராண்டட் ஐட்டம் -


ஆம் ! பிராண்டட் பொருட்கள் கட்டாயம் இருக்க வேண்டும். ஆனால் உங்கள் செலவு நியாயமாகவும் இருக்கவேண்டியது அவசியம். ஏதோ ஒரே ஒரு நாள் அல்லது நான்கு வாரங்களிற்கு ஒரு முறை அணியும் அந்த லெக்கிங்ஸ் பிராண்டட் ஆக இருக்க தேவை இல்லை. அதேபோல், நீங்கள் தினம் உபயோகிக்கும் லெக்கிங்ஸ்( கறுப்பு /வெள்ளை ஸ்டைல்) மற்றும் ஜீன்ஸ் (ப்ளூ/ கருப்பு ) கட்டாயம் பிராண்டட் ஆக இருந்தால் உங்கள் தோற்றம் இன்னும் கிளாஸ்ஸியாக தோன்றும்.


pexels-photo-313707


அதேபோல், ட்ரெண்டில் இருப்பதையும் அணிவது அவசியமே. நான் சமீபத்தில் ஒரு வெள்ளை நிற ஷூஸ் வாங்கினேன். அதில் ரிப்பன் கட்டிய நவீன வடிவமைப்பு என்னை மிகவும் கவர்ந்தது. இப்போது அதை நான் சாதாரணமாக என்னுடைய எல்லா ஜீன்ஸ் வெற்களுக்கும் அணியலாம். இதுபோல், ட்ரெண்டில் இருக்கும் பை, பெல்ட், கண்ணாடி எனும் அனைத்தும் உங்கள் பார்வைக்கு ஏற்பதாக இருந்தால், மேலும் அது பெரும்பாலான ஆடைகளில் பொருந்தும் என்றால் நிச்சயம் வாங்குங்கள்.


உங்கள் கலர் பாலெட் -


என்னுடைய வாட்ராப்பில் அதிகமாக இருக்கும் நிறங்கள் இண்டிகோ ப்ளூ, மெரூன் மற்றும் வெள்ளை. ஏனோ இவை என் அலமாரியில் அதிகபட்சமாக அமைத்திருக்கிறது ! இது என் நிறத்திற்கு ஏற்றதும் கூட ஏனெனில் நான் பளிச்சிடும் நிறங்களை அதிகம் அணிவதில்லை. இதைபோல் உங்கள் நிறத்திற்கு ஏற்ற கலர் பாலெட் என்ன என்று நீங்கள் தீர்மானியுங்கள். அதை வைத்து உங்கள் ஆடைகளை வாங்கும்போது தேவை இல்லாததை எளிதில் அகற்றலாம்.


ஆன்லைனில் விற்க -


ecommerce-2140603 960 720


நீங்கள் தேவை இல்லாத ஆடைகளை புதிதாகவே உங்கள் அலமாரியில் வைத்திருந்தால் அதை ஈ - பே போன்ற வலைத்தளங்களில் விற்றுவிடுங்கள். இல்லாவிட்டால் ஆசிரமங்களில் தானம் செய்யுங்கள். இப்படி தேவையான பொருட்களை உங்களுக்கு பிடித்த, அதிகம் பயன்படுத்தும் பொருட்களை மட்டும் உங்கள் அலமாரியில் வைத்திருங்கள்.


அவளவுதான்! உங்கள் ஆடை எதுவாக இருந்தாலும், உங்களை ஸ்டைலாக காண்பிக்க -
1)நன்கு ஐயன் செய்து ஆடைகளை அணியுங்கள்.
2)மிதமான மேக்கப்பில் செல்லவும்.
3)ஏதேனும் ஓரு பிராண்டட் பொருளை அணிந்துருந்தால்   மற்றவை குறைவாக அணிந்து செல்லுங்கள்.
4)ஆம் ! இது அனைத்திற்கும் மேல், அந்த விலையில்லா   புன்னகையை மறந்துவிடாதீர்கள் !! (#strengthofawomen)


பட ஆதாரம்  - பிக்ஸாபெ,ஜிபி,பேக்செல்ஸ் ,இன்ஸ்டாகிராம்  


POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற் றும் பெங்காலி !


மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும்.பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo.