காதலிக்க கூடாதவரை காதலிக்கும் சாரா அலிகான் ? புகைப்படக்காரர்களிடம் கெஞ்சிய ஜோடி !

காதலிக்க கூடாதவரை காதலிக்கும் சாரா அலிகான் ? புகைப்படக்காரர்களிடம் கெஞ்சிய ஜோடி !

சயீப் அலிகான் மற்றும் அம்ரிதா சிங்கின் மகளான சாரா அலிகான் (sara alikhan) தனது முதல் படத்திலேயே சூப்பர் ஹிட் அடித்து பாலிவுட்டில் வெற்றி பெற்ற நடிகையானார்.


கேதார்நாத் எனும் அந்த படம் வெற்றி பெற்றதை தொடர்ந்து சிம்பா எனும் படத்தில் ரன்வீர் சிங்குடன் நடிக்க அந்த படமும் சூப்பர் ஹிட் ஆனது.


அதன் பின் பல படங்களில் ஒப்பந்தம் ஆகியிருக்கும் சாரா அலிகான் காதலித்து வருவதாக தகவல்கள் கசிகிறது.தனது முதல் படத்தில் தன்னுடன் இணைந்து நடித்த சுஷாந்த் சிங் உடன்தான் சாரா காதல்வயப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.


இருவரும் ரகசியமாக அவரவர் வீட்டில் சந்தித்து கொள்வதாகவும் பாலிவுட் கிசுகிசுக்கிறது.


இப்படியான ஒரு ரகசிய சந்திப்பில் புகைப்படக்காரர்கள் புகைப்படம் எடுத்து விட அதனை நீக்க வேண்டும் என்று அந்த ஜோடி புகைப்படக்காரர்களிடம் கெஞ்சியதாம். அதனால் புகைப்படங்கள் நீக்கப்பட்டன.


அபிஷேக் கபூரின் இயக்கத்தில் வெளியான கேதார்நாத் படம் சாராவுக்கு மிக பெரிய வெற்றியை தந்தது. உத்தரகண்ட் வெள்ளத்தை பின்னணியாக வைத்து முஸ்லீம் பித்தூ மன்சூருக்கும் (சுஷாந்த்) பதாகினி பண்டிட் மகள் மந்தாகினி (சாரா) ஏற்படும் காதல் பற்றிய கதைதான் கேதார்நாத்.இந்த திரைப்படத்தில் தங்கள் இணக்கத்தை ஏற்படுத்திய ஜோடி பின்னர் வெளி உலகிலும் அடிக்கடி சந்திக்க ஆரம்பித்தனர். கடந்த ஜனவரி 21 தனது 33வது பிறந்த நாளை சுஷாந்த் கொண்டாடும் போது அந்த நாளை சாரா மிஸ் செய்யவில்லை.


தனது டேரா டூன் ட்ரிப்பை இதற்காகவே சீக்கிரம் முடித்துக் கொண்ட சாரா சுஷாந்த் வீட்டின் முன் கேக் உடன் இறக்கி விடப்பட்டார்.அதன் பின் இரவு உணவை முடித்து சுஷாந்த் சாராவை அவரது வீட்டில் ட்ராப் செய்தார்.அதனை பின் கொஞ்ச காலம் அமைதியாக இருந்த ஜோடி தற்போது மீண்டும் சர்ச்சையில் சிக்கி உள்ளது.


சாராவுக்கு முன்னர் சுஷாந்த் க்ரிட்டி சனோன் மீது காதல்வயப்பட்டார். அதன் பின்னர் அங்கிதா லோகந்தேவை காதலித்திருக்கிறார் என்பது குறிப்பிடத் தக்கது.


சயிப் அலிகானின் இரண்டாவது மனைவி கரீனா கபூர் முதல் பட ஹீரோவை காதலித்து விடாதே என எச்சரித்தும் சாரா அலிகான் முதல் பட ஹீரோவை  காதலிப்பதாக தெரிய வருகிறது.படங்கள் ஆதாரம் பிக்ஸ்சா பே , பாக்ஸெல்ஸ் , மற்றும் ட்விட்டர்                                                                                                                        


---


POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!


மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும் பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo.