logo
ADVERTISEMENT
home / வாழ்க்கை
மற்றெல்லா நாட்களை விடவும் மஹாசிவராத்திரி ஏன் மகத்துவம் வாய்ந்தது என்று அறிந்து கொள்வோம் வாருங்கள் !

மற்றெல்லா நாட்களை விடவும் மஹாசிவராத்திரி ஏன் மகத்துவம் வாய்ந்தது என்று அறிந்து கொள்வோம் வாருங்கள் !

மஹாசிவராத்திரி இரவு நாம் விழித்திருப்பதால் நமக்கு என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்று அறிந்து கொள்வோம் வாருங்கள் 

ஊழி நேரத்தில் பிரம்மன் உள்பட அவர் சிருஷ்டித்த அனைத்துமே அழிந்து போனது. இதனால் கவலையுற்ற அன்னை பார்வதி சிவனை விடாமல் பூஜித்து வந்தார். மாசிமாதம் தேய்பிறை சதுர்த்தியில் அவர் இந்த பூஜையை செய்தார். நான்கு ஜாமமும் அம்பிகை விடாமல் பூஜிக்க சிவன் அம்பிகை கேட்ட அனைத்து வரங்களையும் நல்கினார்.

இந்த மஹாசிவராத்திரி நாளில் சூரியன் அஸ்தமனத்திற்கு பின்னர் மீண்டும் உதயம் ஆகும்வரை எவரெல்லாம் இறை நினைப்பில் இருக்கிறாரோ அவருக்கு எல்லா செல்வங்களையும் வழங்கி மோட்சமும் அளிக்க வேண்டும் என்று அன்னை பார்வதி இறைவனை வேண்டிக் கொண்டார் என்பது ஐதீகம்.    

ADVERTISEMENT

இதனை ஏற்றுக் கொண்ட சிவபெருமான் மஹாசிவராத்திரி (mahashivratri) அன்று தன்னை வணங்கும் பக்தர்களுக்கு அனைத்து செல்வங்களையும் அளிக்கிறார்.

அறிவியல் ரீதியாக பார்த்தோமானால் அமாவாசைக்கு முன்தினம் மிகவும் இருட்டாக இருக்கும். அன்று பூமியில் இருக்கும் அத்தனை உயிர்களின் சக்தி நிலையும் அதிகரித்துக் காணப்படும். வான் நோக்கி எழும்ப விரும்பும். அதனால்தான் கடல்கள் பொங்குகின்றன.      

இந்த மஹாசிவராத்திரி இரவு ஆன்மிக செயல்களுக்கான அற்புத இரவு என்கிறது மெய்ஞ்ஞானம். வருடம் முழுவதும் மாதாமாதம் ஒரு சிவராத்திரி வந்தாலும் இந்த ராத்திரியே மஹாசிவராத்திரி என்று அழைக்கப்படுகிறது. காரணம் மற்ற சிவராத்திரிகளை விடவும் இது சிறப்பான ராத்திரியாக இருக்கிறது என்பதுதான்.

ADVERTISEMENT

இந்திய ஆன்மிகத்தில் முக்கிய மையப்புள்ளியாக கருதப்படுவது குண்டலினி எனும் சக்திதான். இதனை தட்டி எழுப்பினால் சாதாரண மனிதன் அடைய முடியாத பல சித்திகளை நாம் அடைய முடியும். இதனை சரிவர உபயோகித்தவர்கள்தான் வானில் பறந்தும் நீரில் நடந்தும் சாகாவரம் பெற்ற சித்தர்கள் எனப்படுகிறார்கள்.

இவர்களது அண்மையை ஆன்மிகத் தேடல் கொண்டவர்களால் மட்டுமே உணர முடியும். இவர்கள் அனைவருமே இந்த மஹாசிவராத்திரி நாளை பயன்படுத்தி முக்தி அடைந்தவர்கள்தான்.             

இந்த மஹாசிவராத்திரி நாளில் நமது முதுகுத் தண்டை நேராக வைத்திருக்க வேண்டும். அதன் மூலம் எந்தவித யோகாவும் செய்யாமலேயே நமக்குள் சக்தி நிலை உயர்கிறது. எதுவும் செய்யாமலே இருந்தாலும் இந்த ஒரு நாளை ஆன்மிக சாதனைக்காக மிக சரியாக பயன்படுத்தினால் நிச்சயம் உயிர்சக்தி உயர்வதை உணர முடியும்.           

ஆகவே நாம் எல்லா நாளை போல உறங்கி விட்டால் முதுகுத்தண்டு நேராக இருக்க முடியாது என்பதாலேயே இன்றைய நாளில் நாம் உறங்காமல் இருக்க வேண்டும் என்று முன்னோர்கள் கூறினார்கள்.           

ADVERTISEMENT

சும்மா விழித்திருக்க சொன்னால் தூங்கி விடுவோம் என்பதற்காக நான்கு ஜாமமும் பூஜை நடத்த வைத்தார்கள். முடிந்தவர்கள் கோயில்களுக்கு சென்றும் முடியாதவர்கள் வீட்டில் இருந்தபடியேவும் பூஜைகளை செய்கின்றனர்.    

இயற்கையாகவே நமது சக்தியை மேம்படுத்திக் கொள்ள நமக்கு ஒரு வாய்ப்பாக இந்த மஹாசிவராத்திரி நாள் அமைவதால் இதனை அனைவரும் பயன்படுத்தி சிவனை அடைவோம்.       

 

ADVERTISEMENT

படங்கள் ஆதாரம் பிக்ஸ்சா பே , பாக்ஸெல்ஸ்.       

மேலும் வாசிக்க – 

Mahashivratri Shayari in Hindi

Status for Mahashivratri in Hindi    

ADVERTISEMENT

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!

மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும் பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo.

01 Mar 2019

Read More

read more articles like this
good points

Read More

read more articles like this
ADVERTISEMENT