நடிகை ஜோதிகா தனது படங்களின் உச்சக்கட்டத்தில் வெற்றிநடைபோட்டு கொண்டிருந்தபோது டக்கென்று அவர் கல்யாணம், வாழ்க்கை என்று திசை திரும்பிவிட்டார். அவரது ரசிகர்களுக்கு இது ஏமாற்றமாக இருந்தாலும், அவர் மீண்டும் நடிக்க ஆரம்பித்தது அனைவருக்கும் மகிழ்ச்சியே!!! அவரின் நடிப்பு திறனால், அவர் பல்வேறு பெண்களின் மனதை கவர்ந்திருக்கிறார். மேலும், இவர் நடித்த பெண்கள் சார்ந்த கதைகள் மற்றும் கருத்துகள் பல பெண்களுக்கு ஒரு உதாரணமாகவும் எடுத்துக்காட்டாகவும் அமைந்திருக்கிறது. அதுமட்டுமில்லாமல், அவர் தன்னுடைய சொந்த வாழ்க்கை மற்றும் வேலையை சமநிலை படுத்தி பல பெண்களுக்கு ஒரு வழிகாட்டியாகவும் இருந்திருக்கிறார்.இந்நிலையில், இவர் நடித்து வெளியாகிய காற்றின் மொழி படம் வேலைக்கு செல்லும்/செல்ல தோன்றும் பெண்களிற்கு தரும் சில முக்கிய குறிப்புகள் என்னவென்று பார்க்கலாம் –
கெளம்பிட்டாலே விஜயலட்சுமி !!
என்று படம் முழுவதும் வரும் Bgm நமக்கு மீண்டும் மீண்டும் கூறும் செய்தி : தயங்காதே, துணிந்து நில், நிமிர்ந்து செல், என்றதுதான்.
எதையும் செய்யலாம் என்ற தன்னம்பிக்கை மற்றும் லட்சியம் –
தனது வீட்டில் தன்னுடைய தந்தையே அவரை குறைவாக இடைப்போட்டு தனது அக்காக்களுடன் ஒப்பிட்டு பேசையில், ஜோதிகாவின் கதாபாத்திரமான விஜயலட்சுமி காயம் அடைத்தாலும், தனது கணவரிடம் என்னால் முடியும் என்று நம்பிக்கை உடன் சொல்லும் ஒரு ஒரு நொடியும், நீங்கள் உங்களுக்குள்/ உங்கள்மேல் உள்ள நம்பிக்கையை தட்டி எழுப்ப வேண்டிய நொடிகள். நீங்கள் செய்ய நினைக்கும் காரியம் /இஷ்டப்படும் விஷயம் சிறிதோ /பெரிதோ, அதை ஒரு லட்சியத்துடன் (ambition) செய்துபாருங்களேன்.. எளிதில் வெற்றி அடையலாம்.
மேலும், அவருக்கு தற்செயலாக FM ஸ்டேஷனில் வேலை வாய்ப்பு கிடைக்கும்போதும், அந்த வேலை எவ்வாறு இருந்தாலும் சரி, ‘என்னால் முடியும் மேடம்‘ என்று அவர் சொல்லும் வசனம் எனக்கு, வேலைக்கு போக ஆசைதான் ஆனால் அங்கு எப்படி இருக்குமோ என்று தயங்கும் பெண்களை ஊக்குவிக்கும் வார்த்தைகள் !!
வழியில் வரும் தடைகளை சமாளிக்கும் திறன் –
விஜயலட்சுமி வேளையில் ஒருவழியாய் அமர்ந்து விட்டாலும், அவரின் பணியோ கொஞ்சம் வித்தியாசமானது ! அதை மற்றவர்கள் எவ்வாறு பார்த்தாலும் சரி, அதற்கான திறன் இவருக்குள் இருந்ததால் அதை துணிந்து செய்ய துடங்குகிறார். இதுபோல் நீங்கள் உங்கள் மனதிற்கும் உங்கள் நெறிமுறைகளுக்கும் ஏற்ற ஒரு பணியை (job) தயங்காமல் செய்யுங்கள்.
நீங்கள் நேசிப்பதை மட்டும் செய்யுங்கள் –
நீங்கள் செய்யும் பணியை (work) நேசிக்க ஆரம்பித்து விடீர்கள் என்றால் அல்லது உங்கள் மனதிற்கு பிடித்த ஒரு வேலை கிடைத்தும், மக்கள், சமுதாயம், தோழிகள், என்று மற்றவர்களின் கருத்து நேர்மாறாக இருந்தாலும், மனதை மாற்றிகொல்லாதீர்கள். உங்கள் பார்ட்னரிடம் கலந்து ஆலோசித்து, உங்களது மற்றும் அவரின் கருத்தை மட்டுமே மதிப்பீட்டு சிறந்த முடிவிற்கு வாருங்கள்.
விஷயங்களை எவ்வாறு கையாளவேண்டும் –
விஜலட்சுமியோ தனது வேளையில் சில நெறிமுறையற்ற நபர்களுடன் உரையாடலில் ஈடுபட நேர்ந்தபோது, அதை அவள் மிக அற்புதமாக நேர்மறையாகவும் உறுதியாகவும் பதில் அளித்திருப்பார் ! அதேபோல…. அலுவலகத்தில்/வெளியில், தனது பணியில் பல விதமான ஆட்களை நீங்கள் சந்திக்கலாம். அவர்களை மாற்றுவது அல்லது ஒழுங்கீனமாக பேச கற்றுத்தருவது நம் வேலை இல்லை. இங்கு எல்லோரும் பெரியவர்களே மற்றும் தொழில்பன்பற்றவர்கள் ஆவார். ஆகையால், மற்றவர்கள் என்ன சொல்ல்கிறார்கள் / எவ்வாறு நடந்து கொள்கிறார்கள் என்றதைவிட நீங்கள் அதை கையாளும் விதம் மற்றும் உங்களின் பதில்களே உங்களின் ஆளுமையை முன்வைக்கிறது. இதை ஞாபகத்தில் எப்பொழுதும் வைத்துக்கொண்டீர்கள் என்றால், கடினமான தருணங்களையும் எளிதில் சமாளிக்கலாம்.காரணம் – பதில் உங்களிடம் உள்ளது!
மேலும் படிக்க- அலுவலக வேலையை சாமார்த்தியமாக கையாள முதல் மணிநேரத்தை எவ்வாறு கையாளுவது ?
அப்ப நீங்களும் விஜயலட்சுமியைப்போல் கெளம்பிடீங்க தான?!
பட ஆதாரம் – படம்
POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற் றும் பெங்காலி !
மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும் .பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo.