மீ டூ புகழ் சின்மயிக்கு பாட வாய்ப்பு தந்த பிரபல இயக்குநர்!

மீ டூ புகழ் சின்மயிக்கு பாட வாய்ப்பு தந்த பிரபல இயக்குநர்!

மீ டூ மூலம் அதிகமாக பிரபலம் அடைந்தவர் பாடகி சின்மயி(chinmayi). இவரது பதிவிற்கு பலர் ஆதரவு தந்தாலும் அதிமான எதிர்ப்புகளை சந்தித்து வருகின்றார். கடந்த 6 மாதமாக எந்தவித வேலையும் இன்று வீட்டிலேயே இருந்து வருகின்றார்.


காரணம் அவர் வைரமுத்து மீது அளித்த புகார். வைரமுத்து தன்னை தப்பான நோக்கத்துடன் தீண்டியதாகவும் பாலியல் தொடர்பான பிரச்சணைகள் கொடுத்ததாகவும் சின்மயி(chinmayi) சமூக வலைதளத்தில் புகார் அளித்திருந்தார். பெண்களுக்கான அமைப்புகள் இவருக்கு ஆதரவு தெரிவித்தாலும் பல இடங்களில் இருந்து இவருக்கு எதிர்ப்புகள் வழுக்கத்தொடங்கி சுவற்றில் அடித்த பந்தை போன்று இவரை அடித்து வந்த இடத்திற்கே மீண்டும் அனுப்பிவிட்டனர்.


பாலியல் தொல்லையால் பாதிக்கப்பட்ட பெண்களின் கதையை பகிர்ந்து வரும் பாடகி சின்மயி(chinmayi), பெண்கள் மட்டுமல்ல ஆண்களுக்கும் இந்த மீ டூ அனுபவம் உள்ளதாக தெரிவித்துள்ளார்.

ஹாலிவுட் முதல் கோலிவுட் வரை திரையுலகில் பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் இருந்து வருகிறது. இந்நிலையில், பெண்கள் தங்களுக்கு நேர்ந்த பாலியல் தொல்லை குறித்து #MeToo என்ற ஹேஷ்டேக் மூலம் சமூக வலைத்தளங்களில் வெளிப்படையாக பேசி வருகின்றனர்.


இந்தியா முழுவதும் இந்த மீ டூ பாலியல் அனுபவம் மீதான காரசார விவாதங்கள் அதிகரித்துள்ள நிலையில், தமிழ் திரையுலகில் பாடகி சின்மயி(chinmayi) கவிஞர் வைரமுத்து தொடங்கி பாடகர் கார்த்திக் வரை ஏராளமான பிரபலங்கள் மீது சுமத்தப்படும் பாலியல் புகார்களை அம்பலமாக்கி வருகிறார்.


இந்நிலையில், பெண்கள் மட்டுமல்லாமல் ஆண்களும் சிறுவயதில் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டிருப்பதாக சின்மயி(chinmayi) தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தனது ஃபேஸ்புக் லைவில் பேசியிருந்த சின்மயி, இந்த மீ டூ மூலம் ஆண்களும் தங்களுக்கு நேர்ந்த மோசமான பாலியல் அனுபவம் குறித்து பேசத் தொடங்கியுள்ளனர்.

வைரமுத்து மீது சில பாடகிகள் புகார் கூற தயங்குகின்றனர். எனக்கு எந்த பயமும் இல்லை. யாருக்கும் பயப்பட வேண்டிய அவசியம் இல்லை. நான் பத்தினியா என்ற சந்தேகம் உங்களுக்கு இருக்க வேண்டிய அவசியம் இல்லை. 50 ஆண்டுகளுக்கு முன் நடந்த பாலியல் அனுபவம் குறித்து தற்போது பேசினால் என்ன தவறு. சமூக மாறி வருகிறது, மாற்றத்திற்கு தயாராகுங்கள்.


எனக்கு நடந்த பாலியல் அனுபவம் மட்டுமல்லாமல் மற்றவர்களின் குரலாய் இருப்பதில் எனக்கு மகிழ்ச்சி. பாலியல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளானவர்கள் வெட்கப்பட தேவையில்லை, பாலியல் துன்புறுத்தல் செய்தவர்கள் தான் வெட்கப்பட வேண்டும் என்று சின்மயி(chinmayi) பேசியுள்ளார்.


அதன் பிறகு அவருக்கு திரையுலகில் இருந்து அனைத்து வாய்ப்புகளும் மறுக்கப்பட்டன. வீட்டிலேயே ஆறு மாதக்காலம் சும்மாதான் இருந்து வருகின்றார். தேடி வரும் வாய்ப்புகளையும் வேண்டாம் என அதிகமான மன உளைச்சலில் இருப்பதாக தகவல் வட்டாரங்கள் தெரிவித்து வந்தனர்.

டப்பிங் யூனியனில் இருந்து நீக்கப்பட்டுள்ளதால் பாடகி சின்மயி கடந்த ஆறு மாதங்களாக எந்த படத்திலும் பாடவோ டப்பிங் பேசவோ இல்லை.


சங்கத்தின் தலைவராக இருக்கும் நடிகர் ராதாரவி மீது இதுபற்றி சின்மயி தொடர்ந்து புகார் தெரிவித்து வருகிறார்.


இந்நிலையில் 96 படத்திற்கு இசையமைத்த கோவிந்த் வசந்தா தான் தடையை மீறி சின்மயிக்கு பாட வாய்ப்பு தரப்போவதாக தெரிவித்துள்ளார்.

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!


மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும்.
பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo