கோடைகாலத்திற்கு ஏற்ற பாதுகாப்பான உணவுகள்! கட்டுக்கதைகளும் உண்மைகளும்

கோடைகாலத்திற்கு ஏற்ற பாதுகாப்பான உணவுகள்! கட்டுக்கதைகளும் உண்மைகளும்

கோடைகாலம்(summer) என்றதும் நம் அனைவரின் நினைவிற்கு வருவது வெப்பம், வெயில், சூடு தான். இந்த வெப்பத்திலிருந்து தங்களை காத்துக்கொள்ள அனேகர் சுற்றுலா செல்வது வழக்கம். குளிரான பிரதேசம் தேடி செல்வர். வசதியில்லாதவர்கள் கோடையின் தாக்கத்தில் இருந்து உங்களை காத்துக்கொள்ள கீழே உள்ள டிப்ஸ்களை பாலோ பண்ணுங்கள். நல்ல பலன் கிடைக்கும்.


கோடைக்காலத்தில்(summer) நீர்ச்சத்து அதிக அளவில் தேவைப்படும். காய்கறிகளில் அதிக நீர்ச்சத்து காணப்படுகிறது. காய்கறிகளை முடிந்தவரை பச்சையாகவோ அல்லது லேசாக வேகவைத்தோ உட்கொண்டால் தான் அதிகளவிலான நீர்ச்சத்தை நாம் பெற முடியும்.


காய்கறிகளைப் போன்று பழங்களிலும் நிறைய நீர்ச்சத்து உள்ளது. காய் கறிகளையும், பழங்களையும் இந்த கோடையில்(summer) எவ்வளவுக்கு எவ்வளவு அதிகமாக உட்கொள்கிறோமோ அந்த அளவுக்கு நல்லது. கோடை வெயிலில்(summer) சிறிது தூரம் நடந்தாலே வியர்த்துக் கொட்டி விடும்.


வெங்காயத்தை உணவில் அதிக அளவில் சேர்த்துக் கொண்டால் வெப்பத்தால் ஏற்படக்கூடிய அரிப்பு வராது. வெங்காயத்தில் உள்ள “குவர்ச டின்” என்று வேதிப் பொருள் அதற்கு உதவுகிறது. இப்போது தர்பூசணி பழங்கள் நிறைய கிடைக்கும். அந்த பழத்தில் இருப்பது 90 சதவீதம் தண்ணீர் தான். தர்பூசணி போன்று வெள்ளரிக்காயிலும் நிறைய நீர்ச்சத்து உள்ளது.


அதனால் இவற்றை அதிக அளவில் சாப்பிடுங்கள். காய்கறிகளைக் கொண்டு சூப் தயார் செய்து அதை குளிரவைத்து உட்கொள்வதும் சிறந்தது என்கிறார்கள் அமெரிக்க மருத்துவர்கள். வாழைப்பழம் நிறைய சாப்பிடுவதும் கோடை காலத்தில்(summer) நல்ல உடல்நலத்தை தக்கவைக்கும். வெயிலின் தாக்கம் தாங்காமல் நாம் குளிராக எது கிடைத்தாலும் குடிப்போம், சாப்பிடுவோம்.


நம்முடைய பலவீனத்தைத் தெரிந்து கொண்டு தான் கலர், கலரான குளிர் பானங்களை எல்லாக் கடைகளிலும் விற்கிறார்கள். தாகம் அடங்க வேண்டும் என்பதற்காக அவற்றை அதிக விலை கொடுத்து வாங்கி உபயோகிக்கிறோம். இந்த குளிர் பானங்களால் உடலில் தேவையற்ற கலோரி தான் சேருமே தவிர வேறு எந்தவித பலன்களும் கிடையாது என்கிறார்கள் மருத்துவர்கள். இப்போதெல்லாம் ஐஸ் காபி, ஐஸ் டீ ஆகிய வையும் அமோகமாக விற்பனையாகின்றன.


ஆரோக்கியம் கருதி இவற்றை தவிர்ப்பது நல்லது. எண்ணெயில் பொரித்து எடுக்கும் சைவ மற்றும் அசைவ உணவு வகைகளை இந்த கோடையில்(summer) முடிந்த வரை தவிர்ப்பது இன்னொரு ஆரோக்கிய ரகசியம். வெயில் நேரத்தில் வெளியே செல்ல நேரிட்டால் சுத்தமான குடிநீரை கை யோடு கொண்டு செல்லுங்கள். இல்லையென்றால் இயற்கை பானமான இளநீரை வாங்கி குடியுங்கள்.


மோர், எலுமிச்சை பழச்சாறு ஆகியவையும் நல்லது தான். அதே நேரம் அவற்றில் சேர்க்கப்படும் தண்ணீர் சுத்தமானதாக இருக்க வேண்டும். முடிந்த வரை அவற்றை நீங்களே வீட்டில் தயார் செய்து உட்கொள்வது தான் சிறந்தது. தினமும் 2 டம்ளர் மோர் குடித்து வாருங்கள். வரண்ட சருமம் நீங்கி தோல் பொலிவு பெறும்.


தோல் நீக்கிய ஆப்பிள் பழத்தை நன்றாக மசித்து அதனுடன் சிறிது தேன், ஓட்ஸ் பவுடர் ஆகியவற்றை கலந்து அந்த கலவையை முகத்தில் பூசி சுமார் அரை மணி நேரம் ஊறவிட்டு முகத்தை கழுவவும். வெயிலின் தாக்கத்தால் பாதிப்புக்குள்ளான உங்கள் வறண்ட சருமம் பொலிவு பெறும். தினமும் காலை, மாலை இரு வேளை குளியுங்கள்.


காலைக் குளியலின் போது மட்டும் தலை மற்றும் உடல் முழுவதும் தேங்காய் எண்ணெய் தேய்த்து நன்றாக ஊறவிட்டு அதன் பின் குளிப்பது நல்லது. இப்படிச் செய்வதால் உடல்சூடு குறையும். மாலையில் எண்ணைக் குளியல் ஆகவே ஆகாது.


கோடையில்(summer) கண்கள் எளிதில் சோர்ந்து போய்விடுவதால் எரிச்சல் கொடுக்க ஆரம்பித்து விடும். அதைப் போக்க இரவில் தூங்கும் முன் கண்களை சுற்றி விளக்கெண்ணெயை தடவி விடுங்கள். கண்கள் குளிர்ச்சி பெறும்.


வெப்பத்தைத் தணித்துக் கொள்ள சில டிப்ஸ்…


* அறை தட்பவெப்ப அளவை விடக் கொஞ்சம் மாறுபாட்டோடு இருக்கிற தண்ணீர் குறிப்பாகப் பானைத் தண்ணீர் அல்லது வெதுவெதுப்பான நீரை அருந்தவும். இரண்டுமே தாகத்தைத் தணிக்கும். குளிர்பதனப் பெட்டியில் உள்ள ‘ஜில்’ தண்ணீர் ஒரு சில வினாடிகளுக்கு மட்டுமே திருப்தி தரும். அது உண்மையிலேயே தாகத்தை தணிக்காது.

* தர்பூஸ், அன்னாசி, கொய்யா, சாத்துக்குடி, ஆரஞ்ச், திராட்சை ஆகிய பழங்களை சாப்பிடுவது புத்துணர்ச்சியைத் தரும்.


* வெள்ளரிக்காய், கேரட், தக்காளி, முட்டைகோஸ் போன்றவை அடங்கிய சாலட் சாப்பிடுவது ஆரோக்கியத்துக்கு ஏற்றது.


* உப்புக் கலந்த எலுமிச்சை ஜூஸ், நீர்மோர், இளநீர் வெப்பத்தைத் தணிக்கும் குளிர்பானங்கள்.


* சர்க்கரையும் முட்டையும் கலந்த பால், ஜெல்லி, மில்க் ஷேக்ஸ் போன்ற இனிப்புகள் தேவையான ஊட்டச் சத்துகளை வழங்கும்.
* மோர் கலந்த பழைய சாதத்தை ஊறுகாய் மற்றும் வெங்காயத்துடன் சாப்பிடலாம். உடலுக்குக் குளிர்ச்சியையும் இயற்கைச் சத்தையும் கொடுக்கும்.


* ஆரஞ்ச், தர்பூஸ், பப்பாளி, அன்னாசி, எலுமிச்சை ஆகிய பழங்களின் அறுசுவை பானம் உடல் நலத்துக்கு நல்லது.


கோடை காலத்தின்(summer) கட்டு கதைகளும் உண்மைகளும்
* கட்டுக்கதை: பப்பாளி சூட்டைக் கிளப்பும் பழம் என்பதால் அதை இளம் பெண்களும் கருவுற்றிருக்கும் தாய்மார்களும் உண்ணக் கூடாது.


உண்மை: பப்பாளியில் வைட்டமின் ஏ சத்து உள்ளிட்ட ஏராளமான ஊட்டச் சத்துகள் இருக்கின்றன. பப்பாளி எந்த விதத்திலும் கருவை பாதிக்காது.


* கட்டுக்கதை: மாம்பழம் உடல் சூட்டைக் கிளப்பும் என்பதால் சாப்பிடக் கூடாது.


உண்மை: உண்பதற்கு முன் மாம்பழத்தைத் தண்ணீரில் சிறிது நேரம் போட்ட பிறகு சாப்பிடலாம். ஏதேனும் பிரச்னை இருந்தால் மாம்பழம் சாப்பிட்ட பிறகு பால் குடிக்கலாம், சரியாகிவிடும்


* கட்டுக்கதை: குளிர்ந்த தண்ணீர் அல்லது ஐஸ்க்ரீம் சளியை ஏற்படுத்தும்.


உண்மை: சளிக்குக் காரணம் வைரஸ் கிருமிகள். குளிர்ந்த நீரை அருந்துவதாலோ, குளிர்ந்த உணவுகளை உண்பதாலோ சளி ஏற்படாது. குளிர்ந்த உணவு அல்லது நீர் ஒவ்வாமை இருந்தால் மட்டுமே பிரச்னைகள் ஏற்படும்.


* கட்டுக்கதை: கோடை காலத்தில் குறைந்தபட்சம் 2 அல்லது 3 லிட்டர் தண்ணீர் அருந்த வேண்டும்.


உண்மை: தண்ணீர் அருந்துவது அவரவர் இருக்கும் சூழலைப் பொறுத்தது. வெயிலிலும் சூரிய வெப்பத்திலும் அலைபவர்கள் உடலின் தேவையைக் கருத்தில் கொண்டு தேவையான 1 அல்லது 2 லிட்டர் தண்ணீரைக் குடிக்கலாம். வெப்பம் குறைந்த அல்லது குளிர்சாதன அறையில் இருப்பவர்களுக்கு மேற்கண்ட தண்ணீர் அளவு தேவைப்படாது.


POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!


மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும்.
பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo