#StrenthOfAwomen: பிரீலான்சிங்- தொழில்நூட்பம் இன்றைய காலத்தில் நமக்கு மிகவும் கடினமான விஷயங்களை சுலபமாக்கி விட்டது என்பதுதான் நிஜம். அதை நாம் போதுமான அளவிற்கு சிறந்த விதத்தில் புத்திசாலித்தனமாக பயன்படுத்தினால் வெற்றி நமதே ! உங்களை ஊக்குவிக்கும் அந்த பணியை நீங்கள் சில காரணங்களால் தொண்டர்ந்து செய்யமுடியாமல் போய்விட்டாள், கவலை வேண்டாம் . இனியும் அலுவலகம் சென்றுதான் வேலை செய்யவேண்டும் என்று எந்த நிபந்தனைகளும் கிடையாது. அதிலும் நீங்கள் ஒரே ஒரு அலுவலகத்திற்கு மட்டுமே வேலை செய்யவேண்டும் என்றதும், மேலும் மாதாந்திர சம்பளம் மட்டுமே சம்பளம் என்று நினைப்பது அனைத்தும் பழையதாகி விட்டது . ஆம்! பிரீலான்சிங்கில் தினம் அல்லது வார வாரம் சம்பாதிக்கலாம். அல்லது ப்ராஜெக்ட் வாரியாகவும் சம்பாரிக்கலாம். ஆகையால் நீங்கள் மாதம் முடியும் வரை உங்கள் உழைப்பிற்கான பலனை(பணம்) பெற காத்திருக்க தேவை இல்லை!
நான் ஒரு தொழில்நூட்ப அலுவலகத்தில் காலை முதல் மாலை வரை வேலை பார்த்தேன். ஆனால் எனக்குள் அந்த சுவாரஸ்யத்தை தூண்டியது பிரீலான்சிங் ( freelancing work) எனும் பணி தான். இதில் எனக்கு கிடைத்த சுதந்திரம் வேறெதிலும் கிடைக்கவில்லை. மன அழுத்தத்துடன் வீட்டில் அணைத்து வேலைகளையும் காலையில் முடித்து விட்டு, அந்த நெரிசலான பேருந்தை பிடிப்பது, நாள் முழுவதும் ஒரே இடத்தில் ஒரே பணியை செய்வது, யாருக்கோ பயந்து அவர்கள் கூறுவதை செய்வது என்று பல விஷயங்களை எளிதில் அகரற்ற கூடியதுதான் இந்த பிரீலான்சிங் பணி!
நீங்களும் ஒரு சிறந்த பிரீலான்சர் ஆக நாங்கள் உங்களுக்கு சில உத்திகளை அளிக்கிறோம். இதில் மிக முக்கியமாக நீங்கள் செய்ய வேண்டிய ஒரு விஷயம், உங்கள் துறை /திறமையை கண்டறிவதுதான். நாங்கள் உங்களுக்கு சிறந்த/ எப்போதும் வேலை வாய்ப்புகள் அதிகம் உள்ள ஐந்து பிரீலான்சிங் பணிகளை வழங்குகிறோம்.
எழுத்தாளர் –
நீங்கள் புத்தகங்கள் படிக்கும் பழக்கம் உள்ள ஒருத்தர் என்றால், இதுபோல் ஏதேனும் ஒரு வாடிக்கையாளருக்கு நீங்கள் உங்கள் மனதில் இருக்கும் அணைத்து சிந்தனைகளையும் எழுத ஆரம்பிக்கலாம். மேலும், நீங்கள் சொந்தமாகவே ஒரு ப்ளாக் (blog) ஆரம்பிக்கலாம். இன்றைக்கு உள்ள தொழில்நூட்பம், வலைத்தளங்கள், சமூக ஊடகங்களில் கட்டூரை, கதை மற்றும் விமர்சனங்கள் இவை அனைத்தும் பெரிதளவில் தேவைப்படுகிறது. இதற்க்கு என்றும் குறையாத மார்க்கெட் உள்ளது. மேலும் நீங்கள் பல துறைகளில் அதாவது பயணம், உணவு, ஆரோக்கியம், தொழில்நூட்பம் இருந்து உங்களுக்கு பிடித்த ஒன்றில் சிறப்பாக செயல்படலாம்.
கிராபிக்ஸ் டிசைன் –
நீங்கள் ஏதேனும் ஒரு சாப்ட்வேர் / கருவி அதாவது போட்டோஷாப், கான்வா, வென்னாஜ் தெரிந்தவராக இருந்தால் இதுபோல் ஒரு சிறந்த கிராபிக்ஸ் டிசைனராக உங்கள் பணியை அமைத்துக்கொள்ளலாம். இதிலும் பல அலுவலகங்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் ஒரு சிறந்த கிராபிக்ஸ் டிசைனரை தேடிக்கொண்டுதான் இருக்கிறார்கள். அவர்களின் தேவையை நீங்கள் பூர்த்தி செய்தால் உங்களுக்கு ஒரு நல்ல எதிர்காலம் இதில் உண்டு. ஏனெனில் இதுபோல் கிராபிக்ஸ் இன்றைய காலகட்டத்தில் மிக அவைசியாமான ஒன்றாகும் ! நீங்கள் இதற்கான கோர்ஸ் ஒன்றை படித்து உங்களை இதில் மேம்படுத்திக்கொள்ளலாம்.
ஆராய்ச்சியாளர் –
நீங்கள் கூகிளில் நன்கு ஆராய்ச்சி செய்ய தெரிந்தவர்கள் என்றால் நீங்கள் இதுபோல் ஒரு வேலையை தேர்ந்தெடுங்கள். இன்றைக்கு அணைத்து பிரபல அலுவலகங்களில் / அமைப்புகளில் தேவையான ஒன்று டேட்டா ! இது இல்லாமல் எந்த அமைப்பும் செயல் பட முடியாது. அதற்கு தேவையான அணைத்து தகவல்களையும் நீங்கள் வீட்டில் இருந்தபடியே தேடி கண்டறிந்து குடுக்கலாம்.
விர்ச்சுவல் அசிஸ்டன்ட் (உதவியாளர் )-
இது ஒரு மிக சுவாரசியமான வேலை ஆகும். இதில் எந்த நிபந்தனைகளும் இல்லாமல், நீங்கள் உங்கள் வீட்டில் அமர்ந்த படி தினம் உங்கள் பணியாளர் கூறும் அட்மின் வேலைகளை லேப்டாப்பின் மூலம் செய்து தரவேண்டும். அவளவுதான் ! இதற்கு பொதுவாக சில தொழில்நூட்ப கருவிகள் (மைக்ரோசாப்ட் எஸ்சல், வர்ட் )உங்களுக்கு தெரிந்திருக்க வேண்டும்.
மொழிபெயர்ப்பாளர் –
உங்களுக்கு பல மொழிகள் அத்துப்படி என்றால் இதுபோல் ஒரு பணியை தேர்தெடுங்கள். பெரிய அமைப்புகளில் ஆங்கிலத்தில் இருந்து பிற மொழிகளில் மாற்றி எழுதும் தேவைகள் உள்ளனர். வெறும் கட்டுரைகள் மட்டுமில்லாமல் படங்கள், புத்தகங்களிலும் இதுபோல் தேவைகள் அதிகரித்துக்கொண்டே உள்ளது. இந்த வாய்ப்பை தவற விடாதீர்கள்.
குரல் வல்லுநர் –
இது எனக்கு மிகவும் பிடித்த ஒரு பணியாகும். உங்கள் குரல் மற்றும் பேச்சு திறன் சிறப்பாக இருந்தால், உங்களுக்கு ஏற்ற பணி இதுவே. சிறு கதைகள், அலுவலக விமர்சனங்களில் இருந்து ஆரம்பித்து பல புத்தகங்கள்,தியான குறிப்புக்கள், பயண குறிப்புக்கள் எனும் பல விஷயங்களை உங்கள் குரலில் நீங்கள் பதிவு செய்து சம்பாரிக்கலாம் ! இது உண்மையில் ஒரு மகிழ்ச்சி அளிக்கும் பணியாகும் !!
ஆளெடுப்பு –
பல அலுவலகங்களில் ஆட்கள் தேவைகள் வருஷம் முழுதும் இருக்கும். இருப்பினும் அதற்கு தேவையான நேரம் மற்றும் சாதனம் அவர்களிடம் இருக்காது. அல்லது அதில் அவர்களின் பட்ஜெட் குறைவாகவே இருக்கும். இதுபோல் செயல் படும் நிறுவனங்களில் நீங்கள் ஆளெடுப்பு பணியாளர் ஆக அவர்களுக்கு தேவையான ஆட்களை தேடி, நேர்காணல் அல்லது தொலைபேசி மூலம் அவர்களின் திறமைகளை புரிந்து தேந்தெடுத்து அனுப்பினால் உங்களுக்கான தொகையை (money) நீங்கள் எளிதில் சம்பாரிக்கலாம்.
இவை அனைத்தும் உங்களுக்குள் இருக்கும் திறனை தட்டி எழுப்பும் விதத்தில் நாங்கள் அளித்திருக்கும் ஒரு யோசனை தான். இதில் இருக்கும் வேலை வாய்ப்புகள் ஏராளமாக உள்ளது. உங்கள் ஆன்லைன் பிரீலான்சிங் பணியை இன்றே ஆரம்பியுங்கள், மகிழ்ச்சியுடன் மனதிற்கு பிடித்ததை செய்து, ஸ்மார்ட்டாக சம்பாரியுங்கள்!
பட ஆதாரம் – பிக்ஸாபெ,ஜிபி,பேக்செல்ஸ்
POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற் றும் பெங்காலி !
மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும் .பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo.