இந்த ராசிக்காரங்ககிட்ட கொஞ்சம் ஜாக்கிரதையாவே இருங்க!

இந்த ராசிக்காரங்ககிட்ட கொஞ்சம் ஜாக்கிரதையாவே இருங்க!

இந்த உலகம் அன்பிற்காக ஏங்கிக் கொண்டிருக்கும் அதே கணத்தில்தான் ஒருவரை நியாயமே இல்லாமல் புறக்கணிக்கவும் ஏமாற்றவும் செய்கிறது. 


யாருடன் பழகினாலும் கொஞ்சம் பயத்தோடுதான் பழக வேண்டி உள்ளது. இந்த சமயத்தில் யார் உங்களிடம் எப்படி இருப்பார்கள் என்று உங்களுக்கு கொஞ்சம் டிப்ஸ் கிடைத்தால் உங்களால் நிம்மதியாக பழக முடியும் இல்லையா. (astro)


குறிப்பிட்ட ராசிக்காரர்களுக்கு உதவி செய்யும்போது மட்டும் யோசித்து செய்யுங்கள். ஏன் என்பதற்கான காரணங்கள் இதோ


ரிஷபம்இவர்களுக்கு யாராவது உதவி செய்தால் அவர்களிடம் நன்றியோடு இருக்க மாட்டார்கள். தான் நன்றி கூறிவிட்டால் தன்னிடம் மற்றவர்கள் பயப்படமாட்டார்கள் என்று நினைப்பார்கள்.அதிகமாக ஆசைப்படும் இவர்களை உங்களால் திருப்தி செய்யவே முடியாது. எவ்வளவு செய்தாலும் அடுத்தது என்ன என்றுதான் எதிர்பார்ப்பார்கள்.


மிதுனம்இவர்கள் எப்போதும் இவர்களுக்கு ஆதாயம் கிடைத்தால் மட்டுமே மற்றவரை நேசிப்பார்கள். ஆதாரமின்றி யாரேனும் இவரை உயிராக பாவித்து வந்தாலும் கூட இவர்கள் அதனை அலட்சியப்படுத்தி விடுவார்கள். நீங்கள் பரிசுகள் தந்தால் உங்களை நினைவில் வைத்திருப்பார்கள். அருகிலேயே நேரம் செலவழிப்பவர்களை மறந்து விடுவார்கள்.


கன்னிகன்னி ராசிக்காரர்கள் சுயநலமிகள். தன்னைத் தவிர யாரும் சிறந்தவர்களாக இருக்க கூடாது என்று விரும்புவதுடன் அப்படி இருப்பவர்களின் புகழைக் குறைக்க எது வேண்டுமானாலும் செய்வார்கள். இவர்களிடம் நன்றி உணர்வே இருக்காது. எல்லோரும் தனக்கு உதவி செய்யக் கடமைப் பட்டவர்கள் என்றுதான் நினைப்பார்கள். எதிர்பார்த்துதான் பழகுவார்கள். எதிர்பார்த்தது கிடைத்தால் நன்றியுணர்வே இல்லாமல் விலகி விடுவார்கள்.


விருச்சிகம்இவர்கள் எப்போதும் அதிக எதிர்பார்ப்பு மற்றும் ஆசைகளுடன் வாழ்வார்கள். மற்ற அனைவரும் தன்னை விடத் தாழ்ந்தவர்கள் என்றொரு எண்ணம் இவர்களுக்கு அதிகமாகவே இருக்கும். மற்ற அனைவரும் தனக்கு வேலை செய்யத்தான் பிறந்தவர்கள் என்று எண்ணுவார்கள். இவர்களுக்காக நீங்கள் படக்கூடாத கஷ்டங்கள் பட்டு அவர்களுக்கு உதவி செய்தாலும் அதையெல்லாம் நினைத்துக் கூட பார்க்க மாட்டார்கள், மதிக்கவும் மாட்டார்கள்.


---


POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!


மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும் பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo.