இன்றைக்கு காதல் வசப்பட போகிற அந்த ராசிக்காரர் நீங்கள் தானா என்பதை சரிபார்த்து விடுங்கள்!

இன்றைக்கு காதல் வசப்பட போகிற அந்த ராசிக்காரர் நீங்கள் தானா என்பதை சரிபார்த்து விடுங்கள்!

இன்றைய நாள் உங்களுக்கு என்ன செய்தி வைத்திருக்கிறது என்பதை அறிந்து கொள்ளுங்கள். (astro)


மேஷம்


உங்கள் உடன் பணிபுரிபவர்களுடன் சில சிக்கல்கள் ஏற்படலாம். சின்ன தவறுகள் பெரிதாகலாம். ஆகவே பொறுமையாக கையாள வேண்டியது அவசியம்


ரிஷபம்


உங்கள் திறமை மீது நீங்கள் அபார நம்பிக்கை வைக்க வேண்டிய தருணம்.எல்லா நேரங்களிலும் பிரச்னைக்கான தீர்வுகள் கிடைக்காது. நீங்கள் சந்திக்க வேண்டிய சிக்கல்கள் வழக்கத்திற்கு மாறாக இருக்கலாம். திறந்த மனதுடன் அதனை எதிர்கொள்வது நல்லது.


மிதுனம்


உங்கள் குடும்பத்தாரிடம் இருந்தும் நண்பர்களிடம் இருந்தும் புத்தம் புதிய சக்தியையும் ஊக்கத்தையும் பெரும் நாள் இன்று. இது இந்த வாரத்தை நீங்கள் மனதளவிலும் உடலளவிலும் எதிர்கொள்ள உதவியாக இருக்கும்


கடகம்


இன்றைக்கு உங்கள் பொறுமையை இழந்து எரிச்சலடைவீர்கள். உங்கள் உடன் பணிபுரியும் சில மோசமானவர்கள் இதனை ஏற்படுத்தலாம். அடிக்கடி நீர் அருந்துவதும் புரத சத்து அதிகம் உள்ள காலை உணவும் உங்களை இதில் இருந்து காப்பாற்ற தெம்பு தரும்


சிம்மம்


உங்கள் குழு உங்கள் மீது அதிக நம்பிக்கை கொண்டிருப்பார்கள். அவர்களின் ஒளிவிளக்காக உங்களை பார்ப்பார்கள். அவர்களை அழைத்துக் கொண்டு குழுவாக மதிய உணவு உண்பது அவர்களுக்கும் உங்களுக்கும் இடையிலான புரிதலை அதிகப்படுத்தும்.


கன்னி


உங்கள் குடும்பத்தோடு நேரம் ஒதுக்கி விடுமுறையை கொண்டாட தயார் ஆகுங்கள். நீங்கள் தாமதமாக வருவதால் அவர்கள் ஒதுக்கப்பட்டது போல உணரலாம். அவர்களோடு நேரம் ஒதுக்குகையில் உங்களுக்கும் அது புத்துணர்ச்சியை ஏற்படுத்தும்


துலாம்


இன்று பணி புரியும் இடத்தில எல்லாம் உங்கள் திட்டபடியே நடக்கும் உங்கள் குழுவில் முக்கியமான ஆட்களிடம் சற்று கவனம் செலுத்துங்கள். நேரம் செலவழியுங்கள்.


விருச்சிகம்


உங்களிடம் மறைந்திருக்கும் அந்தக் காதலை இன்று வெளிப்படுத்துங்கள். நீங்கள் ஆச்சர்யப்படும் வகையில் எல்லாம் உங்கள் வசமாகும்


தனுசு


உங்களது ஆரோக்கியத்தையும் அழகையும் பேண நீங்கள் இதுவரை செலவழித்த நிமிடங்கள் எதுவும் வீண் போகவில்லை என்பதை உணர்வீர்கள். ஒரு ஹெல்த் செக் அப் உங்களை மேலும் உற்சாகமாக்கும்!


மகரம்


நேற்றைய உற்சாக அலைகள் இன்றும் தொடர்கின்றன. நேற்று ஒருவேளை உங்கள் துணையுடன் நேரம் கழிக்காமல் இருந்தீர்கள் என்றால் இன்றைக்கு முயற்சியுங்கள். உங்கள் காதல் வலிமையாகும் மேலும் ஆழமாகும்.


கும்பம்


உங்களையும் உங்கள் துணையையும் இன்று சிறப்பான நாளாக மாற்றும். வெளியே செல்வீர்கள். நல்ல உணவகத்தில் காதலோடு உணவருந்தி மகிழ்வீர்கள் அல்லது வீட்டில் நல்ல படத்தை ரசித்து மகிழ்வீர்கள்.என்னவாக இருந்தாலும் சரி உங்களிருவர் இடையே உள்ள மென்மையான காதலை போற்றுங்கள்


மீனம்


வேலையில் ஏற்பட்ட பின்னடைவுகளை சரி செய்வீர்கள். மேலோட்டமாக இருங்கள். இல்லாவிட்டால் பதட்டம் ஏற்படலாம். எந்த சூழ்நிலையையும் ஒரு சவாலாக பாருங்கள் பின்னடைவாக பார்க்க வேண்டாம்.இப்போது நீங்கள் யோசிக்கும் சில தீர்வுகள் உங்கள் எதிர்காலத்திற்கு பயன்படும்


---


POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!


மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும் பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo.