இன்றைய நாள் ஒவ்வொரு ராசிகளுக்கும் என்ன சொல்கிறது என்று பார்க்கலாமா ! (astro)
மேஷம்
அழகான நபரிடம் இருந்து மிகப்பெரிய சோதணை வர வாய்ப்புள்ளது. உங்கள் காதலில் நீங்கள் உறுதியாய் இருங்கள்
ரிஷபம்
உங்கள் அதீத சிந்தனையால் ஏற்கனவே முடிவு செய்த ஒன்றில் இருந்து பின்வாங்க நினைப்பீர்கள். ஆனால் அது தவறானது. நீங்கள் முன்பு எடுத்த முடிவுதான் நல்லது.
மிதுனம்
உங்கள் விரக்தியையும் ஏமாற்றங்களையும் உங்கள் உறவில் காட்டிக் கொள்ள வேண்டாம். இதனை திசை திருப்ப நீங்கள் உங்கள் துணையுடன் ஒரு லாங் டிரைவ் அல்லது நீச்சல் குளத்தில் ஒன்றாக நீந்துவது போன்றவற்றை முயற்சியுங்கள்
கடகம்
சமீபத்தில் நீங்கள் உங்களுக்கு சாதகமான பலன் தரக் கூடிய ஒப்பந்தம் ஒன்றை செய்திருப்பீர்கள், என்றாலும் மீண்டும் அதன் சட்டதிட்டங்களை ஒருமுறை தெரிந்து கொள்ளுங்கள். உங்களால் செய்ய முடிந்தவற்றை பட்டியல் போட்டு வையுங்கள்.அப்போதுதான் உங்களால் அந்த பக்கத்தில் இருக்க முடியும்.
சிம்மம்
பேச்சு மிகவும் மலிவானது என்பதைக் கருத்தில் கொள்ளுங்கள். உங்களை யாராவது நம்ப வேண்டும் என்று விரும்பினால், செயல்களில் நிரூபித்துக் காட்டுங்கள்.
கன்னி
இன்றைய நாளை கஷ்டமான வேலைகளில் நீங்கள் ஆரம்பிக்க விரும்பாமல் சுலபமான வேலைகளை தேர்ந்தெடுத்து தொடங்குவீர்கள்.முடிந்தால் கஷ்டமான வேலைகளை நாளைக்கு கூட தள்ளி போடுவீர்கள்.
துலாம்
இன்று நீங்கள் நிதி தொடர்பான புத்தகம் ஒன்றை வாசிப்பீர்கள். அதில் இருந்து சேமிப்பு குறித்த பல்வேறு விஷயங்களை நீங்கள் தெரிந்து கொள்வீர்கள், இது உங்கள் எதிர்கால சேமிப்புக்கு உதவும்.
விருச்சிகம்
உங்கள் எக்ஸ் உடன் நட்பாக இருப்பது தவறில்லை. ஆனால் அவரோடு மீண்டும் உணர்ச்சிவசப்படாமல் இருக்க வேண்டியது அவசியம். இல்லாவிட்டால் நீங்கள் மீண்டும் காயப்பட நேரிடும்.
தனுசு
உங்கள் எதிரிக்கு உதவி செய்ய வேண்டிய வாய்ப்பு வந்தால் துணிந்து செய்யுங்கள். உங்கள் பெருமையை தூர வைத்து விட்டு அன்பையும் ஆறுதலையும் கொடுங்கள்.
மகரம்
சில சமயம் உங்கள் வாழ்க்கையில் நீங்கள் ஆழ்ந்து போய் விடுவதால் உங்கள் உடன் இருக்கும் மனிதர்களுக்கு நீங்கள் தேவை என்பதையே கூட மறந்து விடுகிறீர்கள். உங்களை நேசிப்பவருக்கு இன்று உதவி செய்யுங்கள். அன்பில் இருங்கள்.
கும்பம்
உங்கள் அருகில் இருக்கும் யாரோ ஒருவர் செய்த தவறு உங்கள் வாழ்க்கைக்கு சிக்கலை உருவாக்கலாம்.அந்த நபர் தான் செய்த தவறுக்கு பொறுப்பெடுத்துக் கொள்ளாமல் போனாலும் நீங்கள் இந்த சிக்கலை சமாளிக்க ஏதாவது செய்தாக வேண்டும்.
மீனம்
உங்கள் வாழ்க்கையை மாற்றுவதற்கான வாய்ப்பு இன்று கிடைக்கும். உங்கள் உள்ளுணர்வு மற்றும் உங்களிடமிருக்கும் திறமைகளை சோதித்திட வாய்ப்பு கிடைக்கும்.
—
POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!
மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும் பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo.