இன்னைக்கு உங்க ராசி என்ன சொல்ல போகுதுனு கேட்டுட்டு போங்க ! (astro)
மேஷம்
எதுவாக இருந்தாலும் உடனே வேண்டும் என்கிற மனப்பான்மை உங்களுக்கு இருக்கிறது. அதனால் நீங்கள் எரிச்சலைடைவீர்கள். நீங்கள் நினைத்தபடி எல்லாம் எப்போதும் நடந்து விடாது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.பொறுமையாக இருங்கள்.
ரிஷபம்
நீங்கள் திட்டமிட்டபடி சில விஷயங்கள் நடக்காமல் போகலாம்.அது உங்கள் நன்மைக்காகவே இருக்கும் ஏனெனில் நீங்கள் நினைத்ததை விடவும் சிறந்த விஷயங்கள் உங்களுக்கு அரங்கேறும்.
மிதுனம்
நீங்கள் சலிப்பாக உணரலாம். நீண்ட காலமாக பயணிப்பதால் ஏன் இந்தப் பாதையை தேர்ந்தெடுத்தோம் என்பதை நீங்கள் மறந்திருப்பீர்கள். இதனை நினைவில் நிறுத்தினால் இந்த சலிப்பு மறந்து புத்துணர்வு பிறக்கும்.
கடகம்
நீங்கள் இன்னமும் அப்படியேதான் இருக்கிறீர்கள். ஆகவே நீர்த்து போகும் எந்த விஷயங்களுக்காகவும் செட்டில் ஆகாதீர்கள். நீங்கள் இன்னும் அத்தனை அற்புதமானவர் என்பதை உணருங்கள்.அதனால்தான் இத்தனை திறமையாக விஷயங்களை செய்துள்ளீர்கள். குறைவாக மதிப்பிடாதீர்கள்.
சிம்மம்
நீங்கள் பிறக்கும்போதே தலைமைப் பண்புடன் பிறந்தவர். ஆனாலும் மற்றவரின் தேவை அறிந்து நிறைவேற்ற வேண்டியதும் உங்கள் கடமைதான்.சில விஷயங்கள் சிறப்பாக முடிய வேண்டும் என்றால் நீங்கள் வெறும் அதிகாரம் செய்பவராக மட்டும் இருக்க கூடாது.
கன்னி
சில சமயம் உங்கள் வாழ்க்கையில் நீங்கள் ஆழ்ந்து போய் விடுவதால் உங்கள் உடன் இருக்கும் மனிதர்களுக்கு நீங்கள் தேவை என்பதையே கூட மறந்து விடுகிறீர்கள். உங்களை நேசிப்பவருக்கு இன்று உதவி செய்யுங்கள். அன்பில் இருங்கள்.
துலாம்
இன்று நீங்கள் உங்கள் மொழி அறியாத ஒருவருடன் தொடர்பு கொள்ள முயல்வீர்கள். ஆகவே உங்கள் உடல்மொழிகளை பயன்படுத்திதான் நீங்கள் பேச வேண்டி வரும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
விருச்சிகம்
இதைப் பற்றி ஏற்கனவே நீங்கள் யோசித்ததுதான். இந்த அத்தியாயத்தை நீங்கள் முடிக்க வேண்டிய நேரம் வந்தாயிற்று. இதிலிருந்து அடுத்த கட்டத்திற்கு நகருங்கள்.பழையதை நினைத்துக் கொண்டிருக்காமல் புதிய அத்தியாயங்களை கவனத்தில் கொள்ளுங்கள்.
தனுசு
உங்களுக்கு முழுமையாக தெரியாத ஒரு விஷயத்தை எண்ணி நீங்கள் கவலைபட்டுக் கொண்டு இருப்பீர்கள். உங்கள் வாழ்க்கைத்துணை உடன் பேசுங்கள். இருவரும் இணைந்து செயல்படுவதால் சூடான உங்கள் மனநிலை குளிர்ச்சியாக மாறும்.
மகரம்
நீங்கள் புதியபடி எடுத்து வைத்திருக்கிறீர்கள். அங்கு எல்லாமே மிக சரியாக இருக்கிறது. இருந்தாலும் அடியில் உள்ள அடுக்குகளில் ஏதோ ஒரு பிழை இருக்கிறது. அதனையும் உரித்து பார்த்து விட்டு பின்னர் ஓகே சொல்லுங்கள்.
கும்பம்
கடந்த காலத்தில் உங்களை பற்றிய எதிர்மறை இமேஜை நீங்கள் ஏற்படுத்தி இருப்பதால் அந்த நபர் இன்னும் உங்களை தவறாகவே நினைப்பார் என்று நினைத்து கொண்டிருப்பீர்கள். ஆனால் உங்களை அந்த நபர் வெறுக்கவில்லை என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்
மீனம்
உங்கள் கடந்த காலத்தை விட்டு வெளியே வாருங்கள். அது அப்போது நடந்தது. இப்போதைய நிமிடங்களுக்கு வாருங்கள். நிறைய விஷயங்கள் மாறிவிட்டன. நீங்களும்தான். உங்கள் எதிர்காலத்தை நம்பிக்கையோடு அணுகுங்கள்.
—
POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!
மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும் பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo.