இன்று அன்பினால் ஆளப் போகும் ராசி யார் அவஸ்தை படப் போகும் ராசி யார் என்று பார்த்து விடுவோமா !

இன்று அன்பினால் ஆளப் போகும் ராசி யார் அவஸ்தை படப் போகும் ராசி யார் என்று பார்த்து விடுவோமா !

இன்றைய உங்கள் ராசி (Astro) உங்களுக்கு என்ன செய்யப் போகிறது என்பதை அறிந்து கொள்ளுங்கள்.


மேஷம்


இன்று நீங்கள் எவ்வளவுக்கெவ்வளவு மனந்திறந்து பேசுகிறீர்களோ, அவ்வளவுக்கு அவ்வளவு உங்கள் துணை உங்களை நெருங்கி வருவார். பரஸ்பர மரியாதை உங்கள் இருவரையும் ஒன்றாக இணைக்கும்.


ரிஷபம்


இன்று உங்களைத் தவறாக நினைக்கும் நபர்களிடம் இருந்து விலகி இருங்கள். உங்களைச்சுற்றி நேர்மறை எண்ணங்கள் இருக்கும்படி பார்த்துக்கொள்ளுங்கள்.


மிதுனம்


இன்று நீங்கள் எடுத்திருக்கும் ப்ரொஜெக்ட்கள் குறித்து நம்பிக்கையுடன் இருங்கள். சிலர் உங்கள் ஆற்றலை குறைக்க முயற்சிப்பார்கள், எனினும் நேர்மையாக இருங்கள். அது ஒரு சிறந்த அனுபவமாக இருக்கக்கூடும்.


கடகம்


இன்று உங்கள் துணையுடனான உறவுக்காக நீங்கள் அவருக்கு நன்றி செலுத்துங்கள். ஏனெனில் எல்லோருக்கும் அதுபோன்ற உறவு கிடைப்பதில்லை.


சிம்மம்


வேலை தேடுபவர்கள் தங்களின் எதிர்பார்ப்பு குறைவாக இருக்கும்போது, வேலை கிடைக்கப் பெறுவார்கள். உங்களுக்கான வாய்ப்புகளை வெளிப்படையாக வைத்திருங்கள்.


கன்னி


எல்லா விஷயங்களிலும் சாதக,பாதகங்கள் உள்ளன. ஏதோவொரு விஷயம் தொடர்பாக நீங்கள் கவலையை உணர்ந்தால், என்ன விலை கொடுத்தேனும் அதுபோன்ற சூழ்நிலைகளை தவிர்த்திடுங்கள்.


துலாம்


ஒருவருடன் காதலில் இருக்கும்போது வேறு ஒருவர் மீது அன்பு செலுத்துவதைத் தவிருங்கள். காதல் என்பது எளிதானது அல்ல. காதலைத் தக்கவைத்திட உங்களிடம் இருந்து அன்பு மற்றும் சமரசம் தேவைப்படுகிறது.


விருச்சிகம்


இன்று நீங்கள் நிதி தொடர்பான புத்தகம் ஒன்றை வாசிப்பீர்கள். அதில் இருந்து சேமிப்பு குறித்த பல்வேறு விஷயங்களை நீங்கள் தெரிந்து கொள்வீர்கள், இது உங்கள் எதிர்கால சேமிப்புக்கு உதவும்.


தனுசு


இன்று வேலை தொடர்பான உங்கள் மனப்பான்மையை மாற்றிக்கொள்வதற்கான நாள் இன்று. மாற்றங்களை திறந்த மனதுடன் ஏற்றுக் கொள்பவர்களுக்கு நல்ல விஷயங்கள் நடக்கும்.


மகரம்


இன்று உங்கள் உடல் குணமடைவதற்கு சிறிது நேரம் கொடுங்கள். நன்றாக சாப்பிட்டு, நன்றாக ஓய்வு எடுங்கள். இது உங்கள் வாராந்திர திட்டங்களைப் போல இருக்க வேண்டும்.


கும்பம்


இன்று பணியிடத்தில் உங்கள் ரகசியங்கள் எதையும் வெளிப்படுத்த வேண்டாம். மற்றவர்கள் அதனை சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ள வாய்ப்பு உள்ளது.


மீனம்


இன்று பணியிடத்தில் வதந்தி பேச்சுக்கள் வேண்டாம். உங்கள் வேலையை மட்டும் செய்துவிட்டு வீட்டிற்கு செல்லுங்கள்.                                                                                                                    


---


POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!


மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும் பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo.