பிரபஞ்சத்தின் பேரருள் கிடைக்கப் போகும் அந்த அதிர்ஷ்டக்கார நபர் நீங்கள்தானா? பார்த்து விடுங்கள் உங்கள் ராசிபலனை!

பிரபஞ்சத்தின் பேரருள் கிடைக்கப் போகும் அந்த அதிர்ஷ்டக்கார நபர் நீங்கள்தானா? பார்த்து விடுங்கள் உங்கள் ராசிபலனை!

இன்று வெள்ளிக்கிழமை பங்குனி மாதம் 15ஆம் தேதி நவமி திதி பூராடம் நட்சத்திரம். உங்கள் ராசிபலன் இன்று உங்களுக்கு என்ன சொல்கிறது என்று பார்க்கலாம். (astro)


மேஷம்


இப்போதே செயல்படுத்துங்கள். தள்ளிப்போடுதல்கள் தாமதங்கள் தவிர்த்தல்கள் இனி கூடவே கூடாது. உங்கள் ஆர்வத்தை பின் தொடருங்கள்.உங்கள் கனவுகளையும் இலக்குகளையும் அடைய உழைக்க ஆரம்பியுங்கள். பொறுப்போடு வலிமையாக இருங்கள். உங்கள் இலக்கை அடையாமல் நீங்க ஓய்வெடுக்க கூடாது.ரிஷபம்


உங்களுடன் தொடர்பு கொள்ள இதுவே நேரம்.உங்கள் பெற்றோர் மற்றும் உடன்பிறப்புகளாகிய வேர்களுடன் தொடர்பில் இருங்கள்.இயற்கையோடும் மௌனத்தோடும் அதிகம் கலந்திருங்கள். புற்களில் உங்கள் பாதம் பதிய விடுங்கள்.உங்களுக்குள் ஒலிக்கும் குரலை செவிமடுங்கள்.மிதுனம்


உங்கள் உறவினர்களோடு இணக்கம் ஆகுங்கள். இணைய வேண்டியவர்களோடு இணையுங்கள். விலக வேண்டியவரோடு விலகுங்கள். உறவுகளை சரி செய்வதில் தயக்கம் வேண்டாம். மன்னிப்பு கேட்க தயங்காதீர்கள். உறவுகளோடு பின்னி இருப்பது நல்லது. உங்களில் சிலருக்கு பழைய நினைவுகள் எழலாம். யாரையாவது நீங்கள் மிஸ் செய்யலாம்.கடகம்


உங்களுக்கு என்ன வேண்டும் என்பதில் தெளிவாகவும் கவனமாகவும் இருங்கள்.அது ஏன் வேண்டும் எதற்காக வேண்டும் எப்படி வேண்டும் என்பதை ஒரு காகிதத்தில் எழுதுங்கள். வாய்ப்புகள் சீக்கிரமே வரலாம். அந்த சமயம் அதனை பற்றி கொள்ள உங்களுக்கு தெளிவு வேண்டும்.சிம்மம்


உங்களில் சிலர் வேலை விஷயமாக தொலைதூரம் சென்றிருக்கலாம். ஒரு சிலர் தங்களின் வாழ்க்கையில் அடுத்த படி எடுத்து வைக்க தேவையான மாற்றங்களை செய்யத் தொடங்கி இருக்கலாம். புதிய திசைகளை பற்றி யோசிக்க வேண்டிய நேரம் இது.கன்னி


உங்கள் சந்தோஷத்திற்காக நீங்கள்தான் முன்னெடுக்க வேண்டும்.உங்கள் வாழ்க்கை நல்லபடியாக மாற அது பற்றிய உங்கள் கருத்துக்கள் கோணங்கள் நம்பிக்கைகள் போன்றவற்றை நேர்மறையாக கடைபிடித்தால் மற்றவர்களுக்கும் உதாரணம் ஆவீர்கள்.உங்கள் மகிழ்ச்சியை மற்றவரோடு பகிருங்கள்.துலாம்


வியாபார விரிவுகளை பற்றிய கவனம் இருக்கட்டும். உங்கள் எதிரிகளை எப்படி திசை மாற்ற போகிறீர்கள் மேலும் உங்கள் உள்ளுணர்வை எப்போது கவனிக்க போகிறீர்கள்? அப்படி செய்தால் தான் உங்கள் செயல் அதன் எதிர்வினை எல்லாமே சந்தோஷமாக இருப்பதை நீங்கள் உணர முடியும். அருகில் இருப்பவர்களிடம் சந்தோஷத்தை தேடுங்கள்.விருச்சிகம்


உங்கள் உள்ளுணர்வு அல்லது உள் குரலை நீங்கள் பின்பற்றினால் நீங்கள் ஒரு அற்புதமான சூழலை எதிர்கொள்ள தயார் ஆகலாம். இந்த பிரபஞ்சம் தேர்ந்தெடுத்த அருளை உங்கள் மீது பொழியப் போகிறது. உங்கள் கனவுகள் நனவாக போகிறது.தனுசு


உங்கள் கடந்த காலம் உங்களை கவலைப்பட வைத்திருக்கலாம். அழுது தீர்த்து அந்த காயங்களில் இருந்து வெளியே வாருங்கள். நீங்கள் திரும்ப அங்கே போக முடியாது ஏன் இன்னும் அதையே நினைத்து கவலை படுகிறீர்கள். அதனை அமைதியாக போகவிட்டு நீங்கள் மனம் ஆறுதல் அடையுங்கள். அதே வடிவமைப்பை மீண்டும் தொடராதீர்கள்.மகரம்


உங்கள் சந்தோஷத்திற்கான முதல் அடியை எடுத்து வையுங்கள். உங்கள் கனவுகள் உங்கள் இலக்கு உங்கள் நோக்கம் இதனை கண்டடையுங்கள். எதற்குமே வயது ஒரு தடை அல்ல.உங்களிடம் இது இல்லை அது இல்லை என்று வருத்தமே படாதீர்கள். நீங்கள் சாதிக்கத்தான் போகிறீர்கள்.கும்பம்


முன்னே நகர்ந்து கொண்டே இருங்கள். இந்த பிரபஞ்சம் உங்கள் வளர்ச்சிக்கு உதவ காத்திருக்கிறது. நீங்கள் சுயமாகவும் தொழிலும் முன்னேற பல விஷயங்கள் காத்து கொண்டிருக்கிறது. அவற்றை கையில் எடுங்கள். வெற்றி உங்கள் கையில்.மீனம்


உங்கள் மனம் சொல்வதை செய்யுங்கள். அதற்கான லாஜிக்கல் காரணங்களை தேடிக் கொண்டிருக்காதீர்கள். உங்கள் மனதுக்கு எது சரி என்று தெரியும். ஆகவே அதனை நம்புங்கள்.முதல் அடியை எடுத்து வையுங்கள். உங்கள் உற்சாகமான எதிர்காலத்தில் இதற்காக நன்றி கூறுங்கள்.---


POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!


மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும் பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo.