குரு பார்க்க கோடி நன்மை ! அதிஷ்டம் கொட்டப் போற அந்த ராசி உங்களுடையதா ! பார்த்து விடுங்கள் ராசி பலனை !

குரு பார்க்க கோடி நன்மை ! அதிஷ்டம் கொட்டப் போற அந்த ராசி உங்களுடையதா ! பார்த்து விடுங்கள் ராசி பலனை !

இன்று வியாழக்கிழமை மூல நட்சத்திரம் அஷ்டமி திதி . பங்குனி மாதம் 14ம் நாள். இன்று உங்கள் ராசி பலன் பற்றி பார்க்கலாம். (astro)


மேஷம்


உங்களை எது தொந்தரவு செய்தாலும் பிரார்த்தனைகள் உங்களுக்கு உதவி செய்யும். உங்கள் இஷ்ட தெய்வத்தோடு மனம் விட்டு உரையாடுங்கள்.உங்களுக்கு தேவையான செய்திகள் உங்கள் கனவிலோ அல்லது ஒருவர் மூலமாகவோ பாடல்கள் வழியாகவோ வந்தடையும்.அதனை நம்பிக்கையோடு பின்தொடருங்கள்.


ரிஷபம்


பணம் தொடர்பான அத்தனை கவலையையும் விடுங்கள்.பணம் பற்றிய உங்கள் எண்ணங்களை நீங்கள் மாற்றுங்கள், நேர்மறை சக்தி உங்களை தேடி வரும். பணம் உங்களுக்கு வரும் என்று நம்புங்கள். நிச்சயம் அது உங்களை நோக்கி வரும்.உங்கள் பேஷனோடு எதனையும் செய்தீர்கள் என்றால் அபிரிமிதமான அருளும் பணமும் நிச்சயம் கிடைக்கும்.


மிதுனம்


உங்கள் கனவிற்கு எல்லைகளை வரையாதீர்கள். அதனை அடைய எவ்வளவு சிறிய முயற்சி ஆனாலும் எடுங்கள். வெளியே சென்று மனிதர்களை சந்தியுங்கள். அவர்களின் உதவியை பெறுங்கள். அதனைக் கொண்டு உங்கள் கனவை நிறைவேற்ற முதல் அடி எடுத்து வையுங்கள்.


கடகம்


நீங்கள் சோர்வாகவும் சோம்பலாகவும் இருப்பதால் உடலுக்கு புத்துணர்ச்சி அளிக்க ஒரு குளியல் போடுங்கள்.அல்லது உடலில் உள்ள நச்சுக்களை அகற்றுங்கள். ஒரு வாரத்திற்கு பழச்சாறு டயட் எடுங்கள் , விரதம் இருங்கள், சத்தான உணவுகளை சாப்பிடுங்கள்.ஆரோக்கியமான உடல் உங்களுக்கு எல்லாவற்றையும் சாதித்து தரும்.


சிம்மம்


இயற்கையை அனுபவையுங்கள். சுத்தமான காற்றை சுவாசியுங்கள். இதனால் உங்கள் கற்பனை வளம் மற்றும் படைக்கும் திறன் அதிகமாகும்.இயற்கையோடு கொஞ்சம் நேரம் செலவழியுங்கள். உங்கள் கவலைகளை மணலில் எழுதுங்கள் உங்கள் மனம் லேசாகும்.


கன்னி


உங்கள் சந்தோஷத்தை தியாகம் செய்ய வேண்டிய அவசியமில்லை. பொருளாதார ரீதியாக நீங்கள் தடுமாறிக் கொண்டிருக்கலாம். அதற்காக ஏழ்மையை நினைத்து நீங்கள் கவலைப்பட வேண்டாம். உங்களிடம் உள்ளவர்களுக்காக நன்றி செலுத்துங்கள்.உங்கள் செலவுகளை நன்றியோடு செய்யுங்கள். பணத்தை ஆகர்ஷியுங்கள்.


துலாம்


உங்கள் அருகே இருப்பவர்கள் உங்கள் வெற்றி மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு தடையாக இருப்பார்கள். எதிர்மறை ஆட்களிடம் இருந்து விலகி இருப்பது உங்களுக்கு நல்லது.உங்களை சுற்றிலும் சந்தோஷமான மனிதர்கள் இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள்.


விருச்சிகம்


உங்கள் குற்ற உணர்ச்சியை மறந்து விடுங்கள். அன்று உங்களுக்கு சரி என்று பட்டதை செய்திருப்பீர்கள். உங்களை மன்னித்து உங்கள் அனுபவத்திடம் இருந்து கற்றுக் கொள்ளுங்கள்.அந்த தவறை மீண்டும் செய்யாமல் இருங்கள். அதிலிருந்து கிடைத்த பாடத்தை வைத்து அழகான எதிர்காலத்தை உருவாக்குங்கள். கிடைத்த ஞானத்தில் இருந்து மேலும் வளர ஆரம்பியுங்கள்.


தனுசு


நீங்கள் ஆசைப்படும் ஒரு பொருள் ஏற்கனவே உங்களுடையாத நிர்ணயிக்கப்பட்ட ஒன்றுதான் என்பதை நீங்கள் நம்பத் தொடங்குங்கள்.ஒரு அற்புதமான வாழ்க்கை உங்களுடையது என்பதாக நினைத்து அதன்படி நடக்கலாம்.உங்கள் அத்தனை அவநம்பிக்கை , எதிர்மறை எண்ணங்களை மாற்றி நல்லதாக யோசியுங்கள்.உங்கள் நம்பிக்கை உங்கள் வாழ்வை மாற்றும் அற்புதத்தை காண்பீர்கள்.


மகரம்


உங்கள் எண்ணங்கள் அற்புதமானவை.அதற்கான பண உதவிகள் உங்களுக்கு வெகு விரைவில் கிடைக்கும். இதற்கான விரிவான விளக்கமான திட்டத்தை தயாரித்து வைத்துக் கொண்டு மற்றவர்களிடம் பேசுங்கள். உதவி தானாக கிடைக்கும்.பணம் மற்றும் உதவி இல்லாத காரணத்திற்காக உங்கள் சிந்தனைகள் செத்து போக வேண்டாம்.


கும்பம்


தேவையில்லாமல் செலவு செய்வதை விடுங்கள் உங்கள் திருமணத்திற்கு அல்லது விடுமுறை கொண்டாட்டங்களுக்கு அல்லது வீடு மனை வாங்குவதற்கு பணத்தை சேமியுங்கள். உங்களுக்கு பெருமையைத் தரக்கூடியவர்களுக்கு செலவு செய்யுங்கள்.


மீனம்


நீங்கள் எவ்வளவு சம்பாதித்தாலும் உங்களை பாதுகாக்க கொஞ்சம் பணத்தை ஒதுக்குங்கள்.உங்களை சிறப்பாக கவனியுங்கள். நீங்கள் யாருக்காக சம்பாதிக்கிறீர்கள் உங்களுக்காகவும்தானே.இப்போது உங்கள் சந்தோஷம்தான் உங்களுக்கு முக்கியம். இது உங்களை மேலும் சாதிக்கத் தூண்டும்.


---


POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!


மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும் பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo.