’தி வேர்ல்ட் பெஸ்ட்’ நிகழ்ச்சி சாம்பியன் லிடியன் நாதஸ்வரத்தை நேரில் சந்தித்த இசை புயல் ஏ.ஆர்.ரஹ்மான்

’தி வேர்ல்ட் பெஸ்ட்’ நிகழ்ச்சி சாம்பியன் லிடியன் நாதஸ்வரத்தை நேரில் சந்தித்த இசை புயல் ஏ.ஆர்.ரஹ்மான்

அமெரிக்காவின் மிகவும் பிரபலமான அனைவராலும் பாராட்டப்படுகின்ற, நிகழ்ச்சியில் பங்கு பெற வாய்ப்பு கிடைத்தால் போதும் என்கிற அளவில் போட்டியாளர்களையும் உலக அளவிளான ரசிகர்களையும் கொண்ட நிகழ்ச்சி ’தி வேர்ல்ட்’ஸ் பெஸ்ட்’.


சமீபத்தில் இந்த நிகழ்ச்சி இறுதி நிலையை எட்டியது. இதில் மிகவும் சந்தோஷமாக அதிசயமான விஷயம் என்வென்றால் உலக முழுவதிலுள்ள பொழுதுபோக்கு ரசிகர்களை தன்பக்கம் திருப்பி இருக்கிறார் சென்னையைச்  சேர்ந்த லிடியன்  நாதஸ்வரம்(nadhaswaram).


வெறும் 13 வயது நிரம்பிய சிறுவனான இவர் தனது இசைத்திறமையால் உலகத்திலுள்ள ரசிகர்கள், இசை ஜாம்பவான்கள் அனைவரையும் தன் பக்கம் திருப்பியுள்ளார்.


கடந்த  பிப்ரவரி மாதம் துவங்கப்பட்ட இந்த நிகழ்ச்சியில் பல்வேறு நாடுகளிலிருந்து  கலைஞர்கள் குழுவாகவும், தனி நபராகவும் கலந்து கொண்டனர்.


இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாட்டின் சென்னையைச் சேர்ந்த பியானா கலைஞரான சிறுவன் லிடியன் நாதஸ்வரமும்(nadhaswaram) கலந்து கொண்டார். தனது தந்தையின் துணையுடன் அனைத்து நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு அடுத்தடுத்த சுற்றுகளுக்கு தகுதி பெற்று சென்றுக்கொண்டிருந்தார்.


இதன் காரணமாக பிரபல ஹாலிவுட் டிவி நிகழ்சிகளான எலன் ஷோ உள்ளிட்டவைகளில் லிடியன் கலந்து கொண்டார். தொடர்ந்து பல்வேறு நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு தனது திறமையை வெளிப்படுத்திக் கொண்டிருந்த லிடியன்  நாதஸ்வரத்திற்கு(nadhaswaram) தமிழ்நாட்டு பிரபலங்களிடம் இருந்து பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் இருந்தது.


குறிப்பாக அவ்வப்போது நிகழ்ச்சியை பார்த்துக்கொண்டிருந்த ஆஸ்கர் நாயகன் ஏ. ஆர். ரஹ்மான் தனது வாழ்த்துக்களை அவ்வப்போது டிவிட்டரில் தெரிவித்துக்கொண்டிருந்தார்.


பல்வேறு நாடுகளைச் சேர்ந்த  நடுவர்கள் பங்கேற்ற இந்த நிகழ்ச்சி தனது இறுதி கட்டத்தை எட்டியது. கடைசி சுற்றான இறுதி நிகழ்ச்சியில் குக்கிவான்ஸ் கலைஞர்களுடன் மோத ரெடியான லிடியன் நாதஸ்வரம்(nadhaswaram) இரண்டு பியானோக்களை ஒரே நேரத்தில் வாசித்து இசை கலைஞர்களை இன்ப வெள்ளத்தில் ஆழ்த்தினார். சிலர் லிடியன் நாதஸ்வரத்தின் வாசிப்பில் கண்ணீர் விட்டு அழுதனர். சிலர் மெய்சிலிர்த்து பார்த்துக்கொண்டிருந்தனர். சிலர் உணர்ச்சி வசத்தால் கத்த தொடங்கினர்.


அனைவரையும் மகிழ்வித்தது மட்டுமின்றி இன்ப வெள்ளத்தில் ஆழ்த்திய லிடியன் நாதஸ்வரம்(nadhaswaram) இறுதி சுற்றில் வெற்றி பெற்று “தி வேர்ல்ட் பெஸ்ட்” நிகழ்ச்சிக்கான பட்டத்தை மட்டுமின்றி 1 மில்லியன் டாலர் பரிசையும் வென்றார்.


இவர் வெற்றி பெற்றதை திரைதுறையை சார்ந்த பல்வேறு பிரபலங்கள் மற்றும் இசை புயல் ஏ.ஆர் ரஹ்மான் தனது பாராட்டுக்களை டிவிட்டரி்ல் தெரிவித்திருந்தார்.


உலக புகழ்பெற்ற பட்டத்தை வென்ற லிடியன் நாதஸ்வரத்தின்(nadhaswaram) தந்தை பல்வேறு திரைப்படத்திற்கு இசையமைத்த இசையமைப்பாளர் வர்ஷன் சதீஷ் என்பது குறிப்பிடத்தக்கது.தற்போது லிடியன் நாதஸ்வரம்(nadhaswaram) ஏ.ஆர் ரஹ்மான்னால் சென்னையில் நடத்தப்பட்டு வரும் KM Music Conservatory சென்றுவருகின்றார். இந்நிலையில் லிடியன் நாதஸ்வரத்திற்கு டிவிட்டரில் மட்டுமே வாழ்த்துக்களை தெரிவித்து வந்த இசைபுயல் ஏ.ஆர் ரஹ்மான் நேரில் செல்ல ஆசைப்பட்டிருக்கின்றார்.


ஓர் அழகிய பூங்கொத்துடன் லிடியன் நாதஸ்வரத்தை வீட்டிற்கு சென்று இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார். நீண்ட நேரம் அவர்களுடன் உறையாடிய பிறகு லிடியன் நாதஸ்வரத்தின் பியானோ வாசிப்பை நேரடியாக அமர்ந்து கேட்டுள்ளார். லிடியன் நாதஸ்வரத்திற்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்து நீண்ட உரையாடலுக்கு பிறகு திரும்பியுள்ளார்.


தனது விட முயற்சியும் இசைத்திறமை மூலம் இன்னும் பல்வேறு விருதுகளை லிடியன் நாதஸ்வரம் பெற்று இந்தியாவிற்கு பெருமை சேர்க்க வேண்டும் என வாழ்த்துகிறோம்.

Subscribe to POPxoTV

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!


மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும்.
பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo