அடையாளம் தெரிந்து கொள்ளுங்கள்: ஒரு மகர ராசி பெண்ணின் அனைத்து தனித்துவமான பண்புகள்

அடையாளம் தெரிந்து கொள்ளுங்கள்: ஒரு மகர ராசி பெண்ணின் அனைத்து தனித்துவமான பண்புகள்

 


மகர ராசி பெண்கள் அனேக நட்பு மிகுந்த பண்புகள் (traits) கொண்டவர்கள். அவர்கள் நல்ல நட்பு ஏற்படுத்திக் கொள்ள சிறந்த பெண்கள் மேலும் சிறந்த குணங்கள் கொண்டவர்கள். மகர ராசி பெண்கள் தன்னம்பிக்கையும் அதிர சக்தி நிறைந்தவர்களாகவும் இருப்பவர்கள். உங்களுக்கு மகர ராசி பெண்களைத் தெரிந்திருந்தால் அவர்களுடன் நீங்கள் எளிதாகள் நட்பு ஏற்படுத்திக் கொள்ளலாம்.


மகர ராசி கொண்ட அழகான பிரபலங்கள் அனேகமானவர்கள் உள்ளனர். அவர்களுள் ஐஸ்வர்யா ராஜேஷ், தீபிகா படுகோன், வித்யா பலன் குறிப்பிடத்தக்கவர்கள். இந்த பெண்களிடம் ஒன்று பொதுவாக உள்ளது என்றால், அது அவர்கள் மனதில் இருந்து பேசுகிறார்கள் மற்றும் தங்கள் பிரகாசத்தை யாரையும் மழுங்கடிக்க விடுவதில்லை. தன்னை கீழே தள்ளுபவரை விளக்கி வைப்பதில் இருந்து தங்களை நேசிப்பவருக்காக துணிந்து எழுந்து நிர்ப்பது வரை, இந்த ராசி பெண்கள் தனித்துவம் பெற்றவர்கள்.


இதோ நாங்கள் மேலும் கூற விரும்புவது!


அவர்களது ஆளுமை பற்றி சற்று தெரிந்து கொள்வோம்!


output-onlinejpgtools


ஒரு மகர ராசியில் பிறந்த பெண் எதையும் தன மனதோடு வைத்துக் கொள்வாள். மற்றவர்களை மகிழ்ச்சி அடைய செய்ய தன்னுடைய ஆசைகளையும் விருப்பங்களையும் விட்டுக் கொடுப்பாள். மகர ராசி பெண்கள் குறிக்கோள் மிக்கவர்கள். அவர்கள் தங்களது தகுதிக்கு தகுந்தபடி அனைத்து வேலைகளையும் செய்வார்கள். அதனால் தன்னுடியி குறிக்கோளை அடைய கடினமாக உழைப்பார்கள்.


மகர ராசி பெண்கள் நம்பகமிக்கவர்கள். அவர்கள் எதற்காகவும் பொய் பேச மாட்டார்கள். எப்போதுமே அதை செய்ய மாட்டார்கள். நீரின் அடையாளமாக இருந்தாலும், அவர்கள் ஆன்மீகத்தின் மீது அதிக ஈடுபாடு கொண்டவர்கள். மேலும் பொருட்களை விட உணர்வுகளுக்கு அதிகம் முக்கியத்துவம் கொடுப்பவர்கள்.


அவர்களுக்கு கலப்பின ஆளுமையும் உண்டு. அதாவது இரண்டு குனங்களுக்கிடையே ஏமாற்று வித்தை காட்டுவார்கள். அவர்கள் சில சமயங்களில் தன்னைத் தானே குறைத்து மதிப்பிடுவார்கள். எனினும் சில தருணங்களில் தன்னுடைய வாழ்க்கையில் தன்னம்பிக்கையோடு பிரகாசிப்பார்கள்.


மகர ராசி பெண்களின் வாழ்க்கைத் தேர்வு


மகர ராசி பெண்கள் மூர்க்கமானவர்கள். அதிக இறக்க குணம் கொண்டவர்கள். மேலும் நேர்மையாகவும் கண்ணியத்தோடும் உழைக்கக் கூடியவர்கள். தனக்கு கொடுக்கப் பட்டுள்ள வேலையை தக்க நேரத்தில் எந்த நிலுவையும் இல்லாமல் முடிக்கும் திறன் கொண்டவர்கள். அலுவலகத்தில் பனி புரியும் போது அதிக பொறுமையோடு இருப்பார்கள். அதனால் அவர்கள் எதையும் எளிதாக தன்னுடன் வேலை பார்ப்பவர்களுடன் சேர்ந்து விரைவாக வேலையை முடிப்பார்கள். குறிக்கோளுடன், திடமாகவும் கடுமையாகவும் உழைக்கக் கூடியவர்கள். அவர்களது இந்த குணமே அவர்கள் வெற்றி பெற முக்கியமாக உள்ளது.


மகர ராசிக் காரர்கள் சில சமயங்களில் நம்பிக்கையற்றவர்களாக இருப்பார்கள். அது அவர்களுடைய உற்பத்தித் திறனை பெரிதும் பாதிக்கக் கூடும். எனினும் அவர்கள் தன்னுடைய கடமையை உணர்ந்து மீண்டும் எழுந்து விரைவாக வேலையை முடிக்க முயற்சி செய்வார்கள். தன்னுடைய உறுதியான நம்பிக்கையால் எதையும் நடத்தி முடிக்கும் வல்லமை கொண்டவர்கள். தனாலேயே அவர்கள் தொழில், மருத்துவம், நிதி போன்ற துறைகளில் பனி புரிய ஏற்றவர்களாக இருப்பார்கள். அவர்கள் தேர்ந்தெடுக்கும் தொழில் அவர்களை பொறுமையாகவும், சீராகவும் நல்ல பலன்களை அல்லது உற்பத்தியை ஏற்படுத்தக் கூடியவர்களாகவும் ஆக்குகின்றது.


அலுவலகத்தில் மகர ராசி பெண்கள்


output-onlinejpgtools %281%29


மகர (capricorn) ராசி பெண்கள் சாதனையாளர்கள். தனக்கு கொடுக்கப் படும் எந்த வேலையாக இருந்தாலும் அதனை முழுமையாக முடித்து விடுவார்கள். அவர்கள் குறிக்கோளுடன் செயல் படுபவர்கள். தான் எடுத்த காரியத்தை முடிக்காமல் போகமாட்டார்கள். அவர்கள் தங்களது பனியின் மீது அதிகம் கவனத்தோடும் அக்கறையோடும் சீராக செய்ய வேண்டும் என்ற குறிக்கோளுடனும் இருப்பார்கள். அவர்களது இந்த குணத்திற்காகவே (character) எந்த முக்கிய வேலையாக இருந்தாலும் அவர்களிடம் ஒப்படைக்கப் படுகின்றது.


மகர ராசி பெண்கள் எப்போதும் சிறுசிறு விவரங்களுக்குக் கூட முக்கியத்துவம் கொடுப்பவர்கள். அதனால் அவர்கள் எந்த சிறு வேலையாக இருந்தாலும் நிச்சயம் சரியாக முடித்து விடுவார்கள். அவர்கள் குறிக்கோளுடன் செயல்ப் படுபவர்கள். எனினும் வாழ்க்கையில் நடக்கும் எந்த முக்கிய விடயங்களுக்கும் முக்கியத்துவம் கொடுப்பார்கள். எந்த சூழ்நிலையாக இருந்தாலும், அவர்கள் தங்களுடன் சேர்ந்து பணிபுரிபவர்களுடன் இணைந்து அனைத்து வேலையையும் சரியாக முடிப்பார்கள். அவர்கள் தலைமை பொறுப்பு ஏற்க்கவும் ஏற்றவர்கள். மேலும் கட்டுப்பாட்டுடனும் துல்லியமாகவும் எந்த வேலையையும் முடிப்பார்கள்.


மகர ராசி பெண்களுக்கு ஏற்ற சிறந்த அடையாளங்கள்


மகர ராசி அடையாளம், ஆடு சில ஆண்களை அச்சுறுத்தும் வகையில் இருக்கும். எனினும், ரிஷபம் மற்றும் கன்னி ராசியை சேர்ந்தவர்கள் மகர ராசி பெண்களுக்கு சற்று ஏற்றவர்களாக இருப்பார்கள். ஏனென்றால் அவர்களுக்கும் மகர ராசிக் காரர்களுடன் சில விடயங்கள் ஒத்துப் போவதுதான். கன்னி ராசி ஆண்கள் மகர ராசி பெண்களை கவருவதில் ரிஷப ராசிக்காரர்களை மிஞ்சி விடுவார்கள். அவர்கள் இருவரும் புத்திசாலித்தனத்தோடு வேலை பார்ப்பதில் சாமர்த்தியமானவர்கள். அதனால் தங்களது உத்தியோகத்தை அல்லது கொடுக்கப் பட்ட பணியை சரியாக செய்வார்கள்.


மகர ராசி பெண்கள் மகர ராசி ஆண்களுடனும் ஒத்துப் போவார்கள்,  இது குறிப்பாக அவர்கள் எளிதாக புரிந்து கொள்ளும் தன்மை கொண்டுள்ளதால். மேலும் ஒரே மன நிலையையும் கொண்டிருப்பார்கள்.


காதலில் விழுந்தால் அவர்கள் அனைத்தையும் தான் விரும்புபவருக்காக செய்வார்கள். தங்களது உறவை நல்ல நிலையில் தக்க வைத்துக் கொள்ள அனைத்தையும் செய்வார்கள். அவர்கள் புதிதாக உறவை தேடினால் தங்களுக்கு நல்ல அன்பையும், முக்கியத்துவத்தையும், மற்றும் பாதுகாப்பையும் தரக் கூடியவரையே தேர்ந்தெடுப்பார்கள். அவர்கள் எளிதாக கீழ்படிய மாட்டார்கள். இதனாலேயே சில சமயங்களில் அவர்கள் பிடிவாதக் குணம் பிடித்தவர்களாக இருக்கிறார்கள்.


நண்பர்களாக மகர ராசி பெண்கள்


output-onlinejpgtools %282%29


மகர ராசி பெண்கள் நல்ல நட்போடு பழகக் கூடியவர்கள். தனது நண்பர்கள் வட்டாரத்திற்குள் நெருங்கி அனைவருடனும் பழகக் கூடியவர்கள். அவர்கள் வேடிக்கையானவர்கள், மேலும் உங்கள் வாழ்க்கைக்கு தகுந்த மற்றும் சிறந்த அறிவுரைகளை கூறுவார்கள். தங்களுடைய நட்பை அதிக முக்கியத்துவம் கொடுத்து பார்ப்பார்கள். அவர்கள் எப்படி மற்றவர்களிடம் நேர்மையாகவும் உண்மையாகவும் இருக்கிறார்களோ அதே போல பிற நண்பர்களும் தன்னிடம் இருக்க அவர்கள் எதிர் பார்ப்பார்கள்.


மகர ராசி பெண்களும் காதலும் 


முன்பு கூறியது போல மகர ராசி பெண்கள் தங்களது உணர்வுகளில் அதிகம் உறுதியாக இருப்பவர்கள். அவர்கள் நேர்மையாக இருப்பவர்கள். காதலில் இருக்கும்போது அனைத்து முயற்ச்சிகளையும் தங்களால் முடிந்த வரை செய்து நேர்மையாக இருப்பார்கள். மகர ராசி பெண்கள் எப்போது நல்ல வார்த்தைகளை நேசிப்பார்கள். சில தருணங்களில் தூண்டப் படுவார்கள். அவர்களை ஏமாற்றுவது அவ்வளவு சுலபம் இல்லை. எனினும் சில நேரங்களில் அவர்கள் எதையாவது கேட்க/கவனிக்க விரும்பினால் கவனிப்பார்கள். இதனால் அவர்கள் தங்களுடைய நிதானத்தை இழந்து நடக்கக் கூடிய சூழல் ஏற்படும்.


நீங்கள் மகர ராசி பெண்களை நேசிப்பவராக இருந்தால். அவர்கள் அவ்வளவு சுலபமானவர்கள் இல்லை என்பதை புரிந்து கொள்ளுக்னால். அவர்களிடம் பொய்யான வார்த்தைகளை விட வேண்டாள். அது அவர்களிடம் பலிக்காது.


படுக்கையில் மகர ராசி பெண்கள் 


மகர ராசி பெண்கள் அதிகம் ஆர்வம் மற்றும் அன்பு நிறைந்தவர்கள். அவை அனைத்தும் அவர் தன கணவனுடன் படுக்கையில் வெளிப்படும். அவர்களுக்கு மகிழ்ச்சியை உருவாக்கக் கூடிய திறமையும் மற்றும் படுக்கையின் மையமாகவும் இருப்பார்கள். தன்னுடைய வாழ்க்கைத் துணையை எவ்வாறெல்லாம் மகிழ்விக்க முயர்ச்சிக்கின்றார்களோ அதற்க்கு இணையாக படுக்கையிலும் கவனத்தை செலுத்துவார்கள். படுக்கையில் நல்ல நேரத்தை உருவாக்க அவர்கள் முடிந்தவற்றை செய்வார்கள்.


மகர ராசி பெண்கள் அவர்களை விதவிதமாக மகிழ்விக்கும் வண்ணம் படுக்கையில் நடந்து கொள்வதை மிகவும் விரும்புவார்கள். சுருக்கமாக சொன்னால், அவர்கள் எதுவாகவும் மாறுவார்கள், இனிமையாக. படுக்கையில் தன் மீது கவனம் மற்றும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று நினைப்பார்கள். அதை அவர்கள் உங்களுக்கு திருப்பித் தரவும் முயர்ச்சிப்பார்கள். நீங்கள் வேகமாகவும் சிறப்பாகவும் அவர்களிடம் இருப்பது நல்லது. நீங்கள் மொத்தத்தில் படுக்கையில் ஒரு மகர ராசி பெண்ணிடம் முழுமையாக சரண் அடைவீர்கள்.


எனினும், மகர ராசி பெண்கள் தங்களை சௌகரியப் படுத்திக் கொள்ள சிறிது நேரம் எடுத்துக் கொள்வார்கள். எனினும், தாங்கள் சௌகரியமாக இருப்பதை உணர்ந்த பின், அவர்கள் படுக்கையில் தன கை வண்ணத்தை காட்ட தொடங்குவார்கள்.


output-onlinejpgtools %283%29


ஏதேனும் புதிதாக முயற்சி செய்யும் முன் அவர்கள் தங்களது துணையை பற்றி தெரிந்து கொள்ள முயற்சி செய்வார்கள். மொத்தத்தில் ஒரு மகர ராசி பெண் உங்களை படுக்கை அறையில் நிச்சயம் மகிழ்ச்சி படுத்துவார்.


ஒரு உறவு முறிவை எப்படி மகர ராசி பெண் கையாளுவாள்?


எந்த உறவு முரிவாயினும், மகர ராசி பெண் அதிகம் மன வருத்தத்திற்கு உள்ளாவாள். அவர்கள் தங்களுக்கு நெருங்கியவர்களுக்கு தாம் காதல் உறவில் தோற்று விட்டோம் என்பதை பற்றி தெரியப் படுத்த விரும்புவார்கள். தங்களது உறவு முடிந்து விட்டது என்பதை அவர்கள் புரிந்து கொண்டு பின் ஏற்றுக் கொண்ட பிறகு, தங்களால் முடிந்த வரை அங்கிருந்து விலக முயற்சி செய்வார்கள். தங்கள் நண்பர்களுடன் வெளியே எங்காவது போக முயற்சி செய்வார்கள். மேலும் தங்களைத் தாங்களே மும்மரமாக வைத்துக் கொள்ள முயற்சி செய்வார்கள். இந்த சூழலில் இருந்து வெளி வர அதிக முயற்சி செய்வார்கள்.


ஒரு மகர ராசி பெண்ணுக்கு காதலில் விழுந்து பின் அதில் இருந்து வெளி வருவது அவ்வளவு சுலபம் அல்ல. அதனாலேயே அவர்களுக்கு அதிக நேரம் தேவைப் படுகிறது தங்களைத் தாங்களே ஆறுதல் படுத்திக் கொள்ள.


பேஷன்நும் மகர ராசி பெண்களும்


output-onlinejpgtools %284%29


திகம் ஆர்வத்துடனும் விருப்பத்துடனும் இருப்பார்கள். இது அவர்களது ஆடை மற்றும் வாழ்க்கை முறையிலேயே வெளிப்படும். பழமை முதல் புதுமை வரை, மகர ராசி பெண்கள் அனைத்தையும் விரும்புவார்கள். இது அவர்களது உண்மைத் தன்மையை வெளிப்படுத்துகிறது. அவர்கள் அலுவலகத்திற்கு வரும் போது அதிகம் ஏற்ற உடைகளையே அணிந்து வருவார்கள்.


வெளியே செல்லும் போது அவர்கள் நன்றாக ஆடை அணிந்து கொள்ள ஆர்வம் காட்டுவார்கள். அதனாலேயே அவர்கள் அலமாரி முழுவதும் வகை வகையான ஆடைகள் இருக்கும். அவர்களது தேர்வு எதுவாகவும் இருக்கலாம் எனினும் அது கச்சிதமாகவும் சரியானதாகவும் நிகழ்ச்சிக்கு ஏற்றதாக இருக்கும்.


சாதாரண நாட்களில் அவர்கள் எளிமையான மற்றும் காலத்திற்கு ஏற்றார்போல அணிவார்கள். டி சட்டைகள் முதல் சாதாரண ஆடைகள் வரை அவர்கள் சரியாக தேர்ந்தெடுத்தே எந்த ஆடையையும் அணிவார்கள்.


மகர ராசி பெண்களுக்கு மிகவும் பிடித்த உணவு


மகர ராசி பெண்கள். சுவையான உணவு விரும்பி எனினும் அவர்கள் தங்களது ஆரோக்கியத்தின் மீதும் கவனம் செலுத்துவார்கள். அவர்களுக்கு நொறுக்குத் தீனி அதிகம் பிடித்திருந்தாலும் தன்னுடைய உணவு பழக்கத்தின் மீது சற்று கவனம் வைத்துக் கொள்வார்கள்.


உணவு எடுத்துக் கொள்வதில் தங்களது கால/நேர அட்டவனையை கடைபிடிப்பதில் அதிகம் முக்கியத்துவம் காட்டுவார்கள். அதனால் அவர்கள் அனேக நேரங்களில் சரியான நேரத்திலேயே உணவை உண்பதை நீங்கள் காணலாம். எனினும், சில நேரம் சுவையான உணவு ஆரோக்கியத்தை கவனிக்கத் தவறும். அதனை மகர ராசிப் பெண்கள் மிகைப்படுத்திக் கொள்ளாமல் இருப்பதை நீங்கள் பார்க்கலாம். அவர்கள் அதிகம் சாலட் வகைகளை விரும்பி உண்ணுவார்கள்.


மகர ராசி பெண்களின் எதிர்மறை குணங்கள்


output-onlinejpgtools %285%29


ஒவ்வொரு சூரிய அடையாளமும் ஒரு எதிர் மறை குணங்களோடு வரும். மகர ராசி பெண்கள் சில அத்தகையான எதிர் மறை குணங்களையும் கொண்டுள்ளனர். அவர்களிடம் சில குறைபாடுகளும் உள்ளன. அவர்கள் நம்பிக்கையற்றவர்களாக இருப்பதால் சில தருணங்களில் தங்கள் உறவுகளுடன் சில பிரச்சனைகளை சந்திக்க நேரிடுகிறது. அவர்கள் பல தருணங்களில் பிடிவாதத்துடன் இருப்பார்கள்.


புகழ் பெற்ற மகர ராசி பெண்கள் சில நேரங்களில் மற்றவர்களுக்காக தங்களது சௌகரியத்தை விட்டுக் கொடுக்க மாட்டார்கள். அவர்களுக்கு ஏதாவது பிடிக்கவில்லை என்றால் அவர்களிடம் இருந்து யாருக்கும் எதை பற்றியும் தெரியப் படுத்தாமல் விலகி விடுவார்கள். அவர்களை சுற்றி இருக்கும் மக்களிடம் சில சமயம் உம்மென்று இருப்பார்கள். அது அவர்களை மற்றவர்களிடம் பழகுவதில் சற்று கடினமாக்கிவிடும்.


அடுத்த ஒரு வாரத்திற்கு மகர ராசி பெண்களின் அதிர்ஷ்ட்டம்


வரும் வாரத்தில் நீங்கள் பல காரியங்களை செய்ய தூண்டப் படுவீர்கள். அவற்றில் பல உங்களுக்கு சாதகமற்றதாகவும் உங்களுக்கு பிடிக்கதவையாகவும் இருக்கக் கூடும். அதனால் எந்த ஒரு அடி முன் எடுத்து வைக்கும் போதும் கவனத்தோடு இருப்பது முக்கியம். எந்த ஒரு முடிவு எடுக்கும் போதும் ஒரு முறைக்கு இரு முறை சிந்தித்து பின் செயல் படுங்கள். அவசரத்தில் எந்த முடிவும் எடுக்க வேண்டாம். நினைப்பது போல அனைத்தும் நடந்துவிடுவதில்லை.


கடந்த சில மாதங்கள் நீங்கள் நிறைய சேமித்து வைத்திருப்பீர்கள். தற்போது உங்களது சேமிப்பை மேலும் அதிகப் படுத்த வேண்டிய நேரம் இது. உங்களது அலுவலகப் பணியில் இருந்து சிறு விடுப்பு எடுத்துக் கொண்டு உங்களது சற்று உங்களது மனதை புத்துனர்வாக்கி கொண்டு மீண்டும் பணிக்கு வருவது புதிய பல யோசனைகளை உங்களுக்கு தரும். உங்களுடன் வேலை பார்ப்பவர்கள் கடந்த சில மாதங்களாக உங்களது கடுமையான மற்றும் சாமர்த்தியமான வேலைகளை கண்டு மகிழ்ச்சி அடைவார்கள். அவர்கள் நீங்கள் ஒரு சிறு விடுப்பில் சென்று வர மகிழ்ச்சியுடன் அனுமதிப்பார்கள்.


உங்கள் காதல் வாழ்க்கை மலரும். நீங்கள் திருமணம் ஆகாதவராக இருந்தால் நீங்கள் வெகு விரைவில் உங்களுக்கு பிடித்த ஒருவரை சந்திப்பீர்கள். உங்கள் வாழ்க்கையில் புதிதாக வருபவர்களை ஏற்றுக் கொள்ளுங்கள். உங்கள் குடும்பத்தினர்கள் உங்களுக்கு முது உறுதுணையாக இருந்து உங்களுக்கு சாதகமாக உதவி செய்வார்கள்.


பட ஆதாரம்  - பிக்ஸாபெ,பேக்செல்ஸ்,விக்கிபீடியா காமன்ஸ்POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி,  தமிழ், தெலுங்கு , மராத்தி மற் றும் பெங்காலி !மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும் .பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo.