தலை முடி நேராக்குதல்(Straightening Vs Smoothening) என்பத ஒரு சிகை அலங்கார நுட்பம். இதனை உங்கள் தலை முடியை மிருதுவாகவும், நேராகவும்(Straightening Vs Smoothening) மற்றும் கவர்ச்சியான தோற்றம் பெறவும் பயன் படுத்தப் படுகிறது. இது 1950களில் மிக பிரபலமாக இருந்தவர்கள் இதனை பல வழிகளில் செய்தனர், குறிப்பாக, சூடான சீப்பு, ரசாயன பொருட்கள், சூடான காற்று, உருளை தொகுப்பு, பிரேசிலிய முடி நேராக்கும் முறை போன்றவையாகும். மேலும் சில ஷாம்பு, கண்டிஷனர்கள், முடி ஜெல்கள் மற்றும் சீரம்கள் உங்கள் முடி தற்காலிகமாக நேராக செய்யப் பயன்படுகிறது.
முடி நேராக்குதல் – தற்காலிக தலை முடி நேராக்கும் முறை(Straightening)
· தலை முடி நேராக்கும் கிரீம்கள்
· நிரந்தர தலை முடி நேராக்கும் முறை
தற்காலிகமாக உங்கள் தலை முடியை நேராக்கும்(Straightening) நுட்பம்
ஷாம்பு மற்றும் கண்டிஷனர்கள்
ஈரப்பதம் மிக அதிகமாக இருக்கும் இடத்தில் நீங்கள் வாழ்கிறீர்களா? அல்லது அற்புதமான முடி உண்டா? எங்களுக்கு புரிந்து விட்டது! சில சமயங்களில் அது சமாளிக்க முடியாமல் போகலாம். நன்கு அலசியப் பிறகு ஒரு மணி நேரம் போஷாக்கோடும் மென்மையாகவும்(Smoothening) இருக்கும். ஆனால் அதன் பின்னர், அது அதன் பழைய போஷாக்கற்ற நிலைக்கு மாறி விடுகிறது மற்றும் அதன் நேரான மற்றும் மென்மையான அமைப்பு இழந்து விடுகிறது. அதற்கு மேல், நீங்கள் உங்கள் முடி நேராக்க கருவிகள் வெப்பமூட்டும் போது, நீண்ட கால விளைவின் அடிப்படையில் உங்கள் முடி மேலும் சேதம் அடையக் கூடும். உங்கள் தலை முடி இதனால் இறுதியல் தன்னுடைய இயற்கை அடர்த்தியை இழப்பதோடு அது வறண்டும் சிக்குகலோடும் காணப்படுகிறது. அதனால் தலை முடி நேராக்கும் ஷாம்பு உங்களுக்கு ஒரு நல்ல தீர்வாக இருக்கும். அது உங்கள் முடிக்கு நல்ல மிருதுவான அமைப்பைக் கொடுக்கும்.
இங்கே உங்களுக்காக நாங்கள் பரிந்துரைக்கும் சில தரமான பொருட்கள்:
Tresemme Keratin Smooth With Argan Oil Shampoo (Rs. 410)
இது உங்களுக்கு நல்ல மிருதுவான மற்றும் பட்டுப்போன்ற தன்மையை உங்கள் தலை முடிக்குக் கொடுக்கும். இதில் சல்பேட் குறைவாக உள்ளது. மேலும் கெரட்டின்னை தக்க வைத்துக் கொள்வதோடு உங்கள் தலை முடிக்குத் தேவையான போஷாக்கைக் கொடுக்கிறது. அது சுருளை முடியைத் தவிர்த்து நேரான தோற்றத்தை பெற உதவுகிறது. மேலும் அதனை நீங்கள் எளிதாக பயன் படுத்தி உங்கள் சிகை அலங்காரத்தை செய்யலாம்.
Tresemme Keratin Smooth With Argan Oil Conditioner (Rs. 220)
இதனை நீங்கள் ட்ரேசெம்மே ஸ்மூத் வித் ஆர்கன் எண்ணை ஷம்பூவோடு பயன் படுத்தும் போது நல்ல பலனை பெறுகிறீர்கள். உங்கள் சுருளை முடிக்கு நிரந்தர முடிவு சொல்லிவிட்டு பட்டுப்போன்ற மிருதுவான தலை முடியைப் பெறுங்கள்.
தலை முடியை நேராக்கும் க்ரீம்தலை முடியை சூடான கருவியை பயன்படுத்தி நேராக்குவது இயற்க்கை முறைக்கு அப்பார்ப்பட்டது. சூடு பல பாதிப்புகளை தரக் கூடும். எனினும், தலை முடியை நேராக்கும் க்ரீம் பயன் படுத்துவதால் நீங்கள் அத்தகைய பாதிப்புகளை தவிர்க்கலாம். இது உங்களுக்கு நல்ல பயனையும் தரும்.
1. முதலில் சிறிது க்ரீமை எடுத்துக் கொள்ளுங்கள்
2. தலை முடி வேரில் இருந்து நுனி வரை உங்கள் விரல்களால் முடிகளை கொவியவாறு இந்த க்ரீமை சமமாக பரப்புங்கள். உங்கள் தலை முடியின் அடர்த்தி மற்றும் நீளத்திற்கு தகுந்த வாறு கரீமைத் தடவ வேண்டும்
3. அதன் பின் பெரிய பற்கள் கொண்ட சீப்பை பயன் படுத்தி உங்கள் தலை முடியை கோவி விடுங்கள். இது க்ரீம் அனைத்து இடங்களுக்கும் பரவ உதவும்
4. உங்கள் தலை முடியை 3 அல்லது 4 பாகங்களாக பிரித்துக் கொள்ளுங்கள். அதன் பின் அதை தனித் தனியாக ஒரு கிளிப் போட்டு வைத்துக் கொள்ளுங்கள்
5. இப்போது உங்கள் தலை முடியின் நுனி பகுதியில் இருந்து ஒரு உருளை பிரஷ் கொண்டு கீழே இருந்து சூடான காற்றை அதன் மீது வீசியப் படி சுருட்டிக் கொண்டு வாருங்கள். ஏனென்றால் சூட்டில் கிரீம் சிறப்பாக செயல் படத் தொடங்கும். மேலும் உங்களுக்கு இது விரைவான பலனையும் தரும்
6. இது அனைத்து சுருள் மற்றும் சிக்குகளை அகற்றி விடும். இவாறு அனைத்து பகுதிகளுக்கும் செய்யுங்கள். சூடான காற்று மற்றும் முடி நேராக்கும் கிரீம் இவை இரண்டும் உங்கள் தலை முடியை அற்புதமாக ஆக்கி விடும்.
சில சிறந்த தலை முடி நேராக்கும் கிரீம்கள்:
Matrix Opti Straight (Rs. 1250)
இது ஒரு சிறந்த பொருள். இது உங்கள் தலை முடியை பளபளப்பாகவும் சிக்குகள் இல்லாமலும் இயற்கையான அழகை பெற உதவும். மேலும் எப்போதும் உங்கள் தலை முடி கவர்ச்சியான தோற்றம் பெறவும் உதவும். மேலும் இது அற்புதமான மலரின் நறுமணத்தை தரும். மேலும் சூடான காற்றை உங்கள் தலை முடி மீது செலுத்தும் போது அதனால் ஏற்படும் வறட்சியை தடுக்க உதவும்.
L’oreal Paris Studio Line Hot & Straight Cream (Rs. 950)
தலை முடி நேராக்க சில வீட்டு குறிப்புகள்
மேலும் இயற்கையான தோற்றம் மற்றும் பலன்கள் பெற எண்ணினால், நீங்கள் இந்த எளிதான வீட்டு குறிப்புகளை முயற்சி செய்யலாம். இந்த பொருட்கள் உங்கள் சமலறையில் எளிதாக கிடைக்கும்.
முடிவில் ஈரப்பதம் அதிகரிக்க:
1. 2 தேக்கரண்டி எலுமிச்சை பழ சாற்றை எடுத்துக் கொண்டு அதனோடு 3 தேக்கரண்டி சோளமாவு சேர்த்துக் கொள்ளவும்
2. ஒரு பாத்திரத்தில், ஒரு தேக்கரண்டி தேங்காய் பால், 2 டீஸ்பூன் ஆலிவ் எண்ணெய் சேர்த்து, அதில் எலுமிச்சை சாறு மற்றும் சோள மாவு கலவையை சேர்க்கவும்.
3. ஒரு தடிமனான பசையாக மாறும் வரை தொடர்ந்து கலக்கவும்
4. நல்ல தரமான தலை முடி நேராக்கும் ஷாம்பு பயன் படுத்தி அலசிய பின் உங்கள் நன்கு உலர்ந்த பின் இதை தடவவும்
5. ஒரு துண்டு எடுத்து உங்கள் தலையை நன்கு மூடி விட்டு அப்படியே இரண்டு மணி நேரம் விட்டுவிடவும்
6. அதன் பின் நல்ல ஷாம்பு மற்றும் கண்டிஷனர் பயன் படுத்தி தலை முடியை அலசி விடவும்
7. நிரந்தர பலன் பெற இதை வாரத்திற்கு இரண்டு முறை செய்யுங்கள். மேலும் உங்கள் தலை முடி நாளடைவில் மிருதுவாகவும், பட்டு பலவும் மற்றும் நேராகவும் மாறுவதை பார்க்கலாம்.
முடி உதிர்வை கட்டுப் படுத்தும் தலை முடி நேராக்கும் கிரீம்:
1. இரண்டு தேக்கரண்டி தேங்காய் எண்ணையை எடுத்துக் கொண்டு அதனோடு ஒரு கப் தேங்காய் பால் சேர்க்கவும். இதை நன்கு கலக்கவும்
2. மற்றுமொரு கிண்ணத்தை எடுத்துக் கொண்டு இரண்டு தேக்கரண்டி ஜெலட்டின் பொடியை சேர்த்து அதனுடன் இரண்டு தேக்கரண்டி சோள மாவு சேர்க்கவும்
3. அனைத்து பொருட்களையும் ஒன்றாக கலந்து ஒரு பாத்திரத்தில் போட்டு மிதமான சூட்டில் நன்கு திடமாகும் வரை கலக்கவும்.
4. அதன் பின் அடுப்பில் இருந்து இறக்கி, அது குளிர்ந்த பின் 2 தேக்கரண்டி எலுமிச்சை பழ சாற்றை சேர்த்து 2 தேக்கரண்டி தேன் சேர்க்கவும்
5. உங்கள் தலை முடியை சில பகுதிகளாக பிரித்துக் கொள்ளவும். சிக்குகள் இல்லாமல் பார்த்துக் கொள்ளவும். அதன் பின் வேரில் இருந்து நுனி வரை இந்த கலவையை தேய்க்கவும்
6. உங்கள் தலை முடியை நேராக இழுத்து விடவும். அவ்வாறு செய்த பின் அரை மணி நேரத்திற்கு விட்டு விடவும்
7. உங்கள் தலை முடியை குளிர்ந்த நீரால் அலசவும். ஷாம்பு பயன் படுத்த வேண்டாம். மாறாக கண்டிஷனர் பயன் படுத்தலாம்
8. 5 முதல் 7 நிமிடங்களுக்கு கண்டிஷனரை அப்படியே விட்டு விட்டு பின் குளிர்ந்த நீரில் தலை முடியை அலசவும்
9. சூடான காற்றோ அல்லது துண்டோ பயன் படுத்தி தலையை காய வைக்க வேண்டாம். இயற்கையாகவே உங்கள் தலை முடியை உளற செய்யுங்கள்
10. இதை வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை சித்து நல்ல பலனை பெறுங்கள். எனினும் ஷாம்பு பயன் படுத்துவதை தவிர்ப்பது நல்லது.
சூடான காற்றைத் தரும் கருவி(Hair Dryer)உங்களுக்கு நேரான முடி பிடிக்காது எனினும் சற்று ஆரோக்கியமான, அடர்ந்த மற்றும் துள்ளும் தலை முடியை பெற எண்ணினால் இந்த சூடான காற்றைத் தரும் கருவியை பயன் படுத்தலாம். இது சற்று நல்ல தோற்றத்தை உங்கள் முடிக்கு கொடுக்கிறது. எனினும் இது சற்று நேரம் எடுத்துக் கொள்ளும் மேலும் உங்களுக்கு சிறிது பழகவும் வேண்டும். இது உங்கள் தலை முடிக்கு நல்ல இயற்க்கை தோற்றத்தை கொடுப்பதோடு சூடான அயர்ன் செய்வதை விட இந்த முறை சிறப்பானதாக இருக்கும். தலை முடியை நேராக்கும் ஷாம்பு பயன் படுத்திய பின், இதை முயற்சி செய்து பார்க்கலாம். இதனால் சுருள், சிக்கு மற்றும் சோர்ந்த தோற்றத்தை போக்க உதவுகிறது.
இங்கே சில தரமான சூடான காற்றைத் தரும் கருவி:
Vega Pro Touch VHDP-02 Hair Dryer (Rs. 2499)
இது ஒரு தரமான கருவி. அனேக சலூன்களில் இதை பயன் படுத்துவார்கள். இது பிரத்யேகமாக தயாரிக்கப் பட்டது. இதை நீங்கள் விரும்பும் வகையில் பயன் படுத்தலாம். இதில் வெப்பம் அதிகமானால் தானாக நின்று விடும் செயலியும் உள்ளது.
Philips HP8100/46 Hair Dryer (Rs. 799)
நீங்க சற்று விலை குறைந்த கருவியை எதிர் பார்த்தால் இது உங்களுக்கு ஏற்ற ஒன்றாக இருக்கும். இது நம்பகமான பெயர். இது 1.5 மீட்டர் பவர் கார்டோடு வருகிறது. அதனால் நீங்கள் பிளக் பாயிண்ட் இருக்கும் இடத்தில் இருந்து தூரத்திலும் பயன் படுத்தலாம். இது மேலும் இரண்டு வருட வரண்ட்டியோடு வருகிறது. அதனால் உங்கள் பணத்திற்கு நல்ல மதிப்பை தரும்.
தலை முடியை நேராக்கும் அயர்ன் கருவிஇந்த கருவி நீங்கள் விரும்பியவாறு உங்கள் தலை முடியை நேராக்க உதவும். முன்பு இந்த கருவி உலோக தகடுகளால் செய்யப் பட்டிருந்தது. இது உங்கள் தலை முடியை சேதப் படுத்தக் கூடும். ஆனால் தற்போது இது உயர்தர பீங்கான், டௌர்மளின் மற்றும் டிடனியம் தகடுகளால் செய்யப் படுகிறது. இது உங்கள் தலை முடியை கருக்காமல் அதற்க்கு நல்ல தன்மைகளை பெற உதவுகிறது. எனினும் அதிகப் படியான அயர்ன் செய்வதால் தலை முடி அதிகம் சேதம் அடைவதை தவிர்க்க முடியாது. இந்த கருவி உங்கள் தலை முடியை மிருதுவாகவும் சமமாகவும் சுருள்களில் இருந்து விடுபட்டும் நல்ல தோற்றத்தை தரும். அடுத்து நீங்கள் தலை அலசும் வரை அதே தோற்றத்தை உங்களுக்குத் தரும் உங்கள் தலை முடியை சில பகுதிகளாக பிரித்துக் கொண்டு வேரில் இருந்து நுனி வரை சீராக அயர்ன் செய்வதால் நல்ல பலன் கிடைக்கும். மேலும் நல்ல பலன் பெற நீங்கள் முடி நேராக்கும் மற்றும் மிருதுவாக்கும் ஷாம்பு பயன் படுத்தி தலையை அலசி விட்டு பின் இதை செய்யலாம். இவ்வாறு செய்வதால் உங்கள் தலை முடி நீண்ட நாட்களுக்கு அதே சீரான தோற்றத்தோடு இருக்கும்.
இங்கே சில தரமான தலை முடி நேராக்கும் அயர்ன் செய்யும் கருவி:
Corioliss SKIN Bare Hair Straightener (Rs. 5999)
இது ஒரு அற்புதமான கருவி. நீங்கள் இது வெப்பத்தை உங்கள் தேவைக்கேற்றவாறு மாற்றி வைத்துக் கொள்ளலாம். எளிதாக இதனை பயன் படுத்தலாம். மேலும் நீங்கள் விரும்பும் அலங்காரத்தை செய்து கொள்ளலாம்.
தலை முடி நேராக்கும் தூரிகை (பிரஷ்)
இது தலை முடி நேராக்கும் அயர்ன் கருவியைப் போன்றது. இது அது போன்றே செயல் படும். எனினும் நல்ல பலனையும் தரும். இது உங்கள் வேலையை எளிதாக்கும். உங்கள் தலை முடி அடர்த்தியாகவும் சிக்குகள் நிறைந்ததாகவும் இருந்தால் அதனை சீப்பை கொண்டு சமாளித்து அயர்ன் செய்வது சற்று கடினமான ஒன்றாக இருக்கும். எனினும் இந்த துரிகை உங்கள் வேலையை எளிதாக்கி விடும்.
இங்கே சில தரமான தலை முடி நேராக்கும் தூரிகை:
Corioliss Travel Hot Brush – Black (1999)ஒரு தரமான பொருள் உங்கள் தலை முடியை எளிதில் நேராக்க உதவும் என்றால் அது கோரியோலிஸ் சுற்றுலா ஹாட் தூரிகை. சிறியதாகவும், கையிக்கு அடக்கமாகவும், எளிதாக பயன் படுத்தக் கூடியதாகவும் மேலும் வெப்பத்தை உங்கள் தேவைக்கு ஏற்றவாறு மாற்றி அமைத்துக் கொள்ளவும் இது உதவும். மேலும் சூட்டில் இருந்து உங்கள் முடியை பாதுகாக்கும் முற்கள் இதில் உள்ளது. அது சேதத்தை குறைக்க அல்லது தவிர்க்க உதவும்.
எனினும், நீங்கள் ஒன்றை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். எந்த ஒரு சூட்டைத் தரக் கூடிய கருவியாக இருந்தாலும் அதை பயன் படுத்தும் முன் நீங்கள் சூட்டில் இருந்து உங்கள் முடியை பாதுகாக்கும் ஸ்ப்ரே பயன் படுத்துவது அவசியம். இதை பயன் படுத்துவதால் நிரந்தர சேதத்தில் இருந்து உங்கள் தலை முடியை பாதுகாக்கலாம்.
இங்கே உங்களுக்காக ஒரு தரமான பொருள்:
டோனி & கை வெப்ப பாதுகாப்பு மிஸ்ட்: உயர்-வெப்பநிலை பாதுகாப்பு
இதை நன்கு காய்ந்த தலை முடியில் தடவி பின் சீப்பைக் கொண்டு நன்கு கோவி, பின் உங்கள் விரல்களால் கோவி பயன் படுத்தலாம்.
நிரந்தர தலை முடி நேராக்கும் கருவி – (ரீபாண்டிங்)
இந்த தலை முடியை மிருதுவாகவும் மற்றும் நேராகவும் ஆக்கும் முறையில் சில ரசாயனங்கள் பயன் படுத்தப் படுகிறது. எனினும் இந்த முறை இறந்தார தீர்வை கொடுக்கும் என்று கூறினாலும் உங்கள் தலை முடி முற்றிலும் புதிதாக வளரும் வரையில் மட்டுமே இதன் பலன் இருக்கும். மேலும் அதிகப் படியான ரசாயனங்கள் பயன் படுத்துவதால் முடி உடைத்தல் மற்றும் சீரற்ற தோற்றம் போன்றவையும் ஏற்படக் கூடும். உங்கள் கண்களுக்கு முற்றிலும் நேரான முடி அமைப்பு தோன்றினாலும் அது செயற்கையாக உருவாக்கப் படுவது என்பதை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். சரியாக பராமரிக்கவில்லை என்றால் இது உங்கள் தலை முடியின் இயற்கையான அமைப்பை உடைத்து மேலும் அதை பலவீனமாகவும் உயிரற்றும் இருக்க செய்யலாம்.
பலன்கள்:
1. உங்கள் தலை முடி நச்சென்றும், நேராகவும் மற்றும் தினமும் நீங்கள் விரும்பிய அலகாரம் செய்வதற்கு எதுவாகவும் இது இருக்கும்
2. இனி நீங்கள் சுருளை முடிக்கு முடிவு சொல்லி விடலாம்
3. மோசமான தலை முடியோடு போராடிய நாட்களுக்கு நீங்கள் விடுப்பு கொடுத்து விடலாம்
பாதகங்கள்:
1. உங்கள் தலை முடிய்க்கு இது செயற்கையான தோற்றம் தரும்
2. நீங்கள் தொடர்ந்து பராமரிப்பு தேவைகளை செய்ய வேண்டும். நாளடைவில் சுருளை முடிக்கும் நேர் முடிக்கும் இடையே இருக்கும் வித்யாசம் தெரியும்
3. உங்கள் தலை முடியின் நீளம் மற்றும் அடர்த்தி பொறுத்து இதை செய்ய நான்கு முதல் எட்டு மணி நேரம் தேவைப் படலாம்
4. உங்கள் அடர் தலை முடி துள்ளலை இழக்கலாம்
இப்போது நாம் தலை முடியை மிருதுவாக்குவதை பற்றி பார்க்கலாம். அப்படி என்றால் என்ன மேலும் அதை செய்ய பல வழிகள் என்ன?
தலை முடி மிருதுவாக்குதல்
மிருதுவாக்குதல் என்றால் என்ன?
இது அடிப்படையில் உங்கள் தலை முடி மிருதுவாகவும் பட்டுப்போன்றும் மேலும் இயற்கையான தோற்றத்தை இழக்காமலும் செய்யக் கூடிய ஒரு வழிமுறை. இது உங்கள் தலை முடியை எளிதாக சமாளித்து நீங்கள் விரும்பியபடி அலங்காரம் செய்து கொள்ள உதவும். சோர்ந்து, சீரற்று மற்றும் சுருளையோடு இருக்கும் முடியை சீர் படுத்த உதவும். எனினும் இதில் ரசாயனங்கள் பயன் படுத்தப் பட்டிருந்தாலும் நேராக்கும் முறை காட்டிலும் இது பயன் தரக் கூடியது. இந்த முறை உங்களுக்கு 6 – 8 மாதங்களுக்கு நீங்கள் எத்தனை முறை உங்கள் தலை முடியை அலசுகுரீர்கள் என்பதை பொறுத்து உங்களுக்கு பலன் தரும். நீங்கள் தேவையான பராமரிப்பை செய்து கொள்ள வேண்டும்.
கெரட்டின் சிகிச்சைகெரட்டின் என்பது இயற்கையாகவே உங்கள் தலை முடியில் இருக்கும் ஒரு புரத சத்து. இது உங்கள் பற்கள் மற்றும் விரல் நகங்களிலும் இருக்கும். இது பளபளக்கும் தோற்றத்தை தரும். எனினும் வெளிப்புற தாக்கங்கள், குறிப்பாக சுற்றுப்புற மாசு, வயதாகுவது, போன்ற விடயங்கள் இந்த கெரட்டின் காலப்போக்கில் குறைந்து விடும் தன்மையை ஏற்படுத்தக் கூடும். இதனால் உங்கள் தலை முடி வறண்டும் சுருளையாகவும் மாறக் கூடும். இந்த கெரட்டின் சிகிச்சை உங்கள் தலை முடிக்கு தேவையான போஷாக்கை கொடுப்பதோடு அது மிருதுவாகவும், பளபளப்பாகவும், நீங்கள் விரும்பிய படி அலங்காரம் செய்து கொள்ளும் விதத்திலும் பலன் தரும். இது துல்லியமான நேரான முடியை தரவில்லை என்றாலும் நீங்கள் சலூனில் சிகிச்சை எடுத்துக் கொண்டால் கிடைக்கும் பலனை உங்களுக்கு தரும். எனினும் இதன் பலன் குறுகிய காலத்திற்கு மட்டுமே. இது 6 மாதங்களுக்கு மேல் இருக்காது. மேலும் ஒவ்வொரு முறையும் நீங்கள் தலை முடியை அலசும் போது அது தன்னுடைய தன்மையை இலக்கத் தொடங்கி விடும். மேலும் இதற்க்கு நீங்கள் பிரத்யேக ஷாம்பு மற்றும் கண்டிஷனர் பயன் படுத்த வேண்டும். இவாறு செய்வதால் உங்கள் தலை முடிக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறையும்.
இங்கே நீங்கள் கெரட்டின் சிகிச்சை செய்து கொள்ள சில தரமான பொருள்
OGX Brazilian Keratin Therapy Shampoo (Rs. 725)
இது கெரடின் புரதம், அவகோட் எண்ணை மற்றும் கொக்கோ வெண்ணெய் மென்மையான மற்றும் பளபளப்பான முடியை பெற, ஆன்டிஆக்சிடான்ஸ்கள் நிறைந்த தேங்காய் எண்ணெய் கலவையாகும். இதில் சல்பேட் கிடையாது மேலும் உங்கள் முடி நல்ல உயிரோற்றத்தொடு இருக்க உதவும்.
பலன்கள்:
1. இது சிக்கு நிறைந்த முடியில் இருந்து விடுதலை கொடுக்கும். உங்கள் முடியை மிருதுவாக்கும்
2. உங்கள் முடியை நீங்கள் எளிதாக விரும்பிய அலங்காரம் செய்து கொள்ள உதவும்
3. அனைத்து வகையான தலை முடிகளுக்கும் இது பயன் தரும். இது இயற்கையான புரதத்தில் கொண்டு தயாரிக்கப் பட்டது
4. ரீபாண்டிங் செய்வது போன்று இது கடுமையாக இருக்காது
5. அதிகம் இயற்கையான மற்றும் துள்ளும் தோற்றத்தை நீங்கள் பெறலாம்
பாதகங்கள்:
1. இதில் உள்ள ரசாயனம் கண் எரிச்சல், தோல் எரிச்சல் மற்றும் ஒவ்வாமை போன்ற உபாதைகளை ஏற்படுத்தக் கூடும். அதனால் ஒரு சிறய அளவை எடுத்து சோதித்து பார்த்து பின் முற்றிலுமாக பயன் படுத்துவது நல்லது
2. இந்த சிகிச்சை முறை தவறானது என்று கருதப் படுகிறது. ஏனென்றால் அதில் பார்மல்டிஹைட் இருப்பது உங்கள் உடல் நலத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தக் கூடும், குறிப்பாக அதை முகரும் போது
3. நீங்கள் சல்பேட் மற்றும் சோடியம் க்ளோரைட் இல்லாத ஷாம்பு மற்றும் கண்டிஷனர் பயன் படுத்த வேண்டும். எனினும் அது விலை உயர்ந்ததாக இருக்கும். அதனால் இந்த சிகிச்சை முறை சற்று விலை அதிகமானதாக இருக்கலாம்
பிரேசிலிய முடி சிகிச்சைஇந்த சிகிச்சையானது பொதுவாக உலர்ந்த அல்லது அலை அலையான முடி கொண்ட ஒருவருக்கு பரிந்துரைக்கப்படுகிறது. மேலும் சிஸ்டைன் ஒரு அமினோ அமிலமாகும். அது உங்கள் தலை முடியில் உள்ளது. அது உங்கள் தலை முடிக்கு நெகிழ்ச்சியைத் தரும். இந்த சிகிச்சையானது கடுமையான சிகிச்சைகள் மற்றும் செயற்கை இரசாயனங்கள் பயன் படுத்துவது போன்று இல்லை, ஆனால் அது உராய்வு மற்றும் அசைவுகளைத் தடுத்து நல்ல தோற்றத்தை தருகிறது.
பலன்கள்:
1. உங்கள் தலை முடி பளபளப்பாகவும் நச்சென்றும் இருக்கும்
2. இதில் கடுமையான ரசாயனம் மற்றும் பார்மல்டிஹைட் இல்லை
3. இது உங்கள் தலை முடியை வேரில் இருந்து நுனி வரையிலும் நல்ல போஷக்குடனும் சத்து நிறைந்ததாகவும் வைத்துக் கொள்ள உதவும்
4. ரீபாண்டிங் போன்று இல்லாமல், இது விரைவாக காலப் போக்கில் தன்னுடைய தன்மையை இழந்து புதிதாக வளரும் முடிக்கும் சிகிச்சை செய்த முடிக்கும் இடையே வேறுபாட்டை காட்டக் கூடும்.
பாதகங்கள்:
1. இந்த சிகிச்சையின் பலன் 12 முதல் 14 வாரங்களுக்கு மட்டுமே இருக்கும்
2. இது விலை உயர்ந்த சிகிச்சை முறை
3. இதன் பலன் அதிகனாட்களுக்கு நிரந்தரமாக இருக்காது
இங்கு குறிப்பிடப் பட்டுள்ள சிகிச்சை முறையில் உங்களுக்கு எது பலன் தரக்கூடியதாக இருக்கும் என்றும் உங்கள் பட்ஜெட்டிர்க்குள் வரும் என்பதையும் பார்த்து நீங்கள் தேர்வு செய்து கொள்ளலாம்.
POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!
மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும்.
பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo