ட்ரெண்ட் அலர்ட் : 2019' லாக்மே ஃபேஷன் வீக்கில் இருந்து 7 அருமையான ஒப்பனைகள் !

ட்ரெண்ட் அலர்ட் : 2019' லாக்மே ஃபேஷன் வீக்கில் இருந்து 7 அருமையான ஒப்பனைகள் !

கண் ஒப்பனைகள் யாருக்கு தான் பிடிக்காது?! இது ஒரு நவீன பெண்மணியை காண்பிக்க மற்றும் உங்கள் ஒப்பனைகளில் ஒரு தனித்துவத்தை காட்ட உதவும். வெறும் கருப்பு  கண் மை மட்டுமே அணியும் காலம் மாறிவிட்டது. வண்ணங்களால் நீங்கள் உங்கள் கண்களை அழகாக காட்ட , இந்த ஆண்டின் லாக்மே ஃபேஷன் வீக்கில் அதிகாரப்பூர்வ ஒப்பனை கலைஞர்கள் மரியானா முகுச்யான் மற்றும் ரொசாரியோ பெல்மொண்டே நமக்கு சில ட்ரெண்டி உத்திகளை  வழி காட்டியுளார்கள். அதில் எங்களுக்கு மிகவும் பிடித்த ஒப்பனைகளை நங்கள் உங்களுக்கு பரிந்துரைக்கிறோம்.


ஃப்ளோறல் பினிஷ்  -


7


 


லாக்மே ஃபேஷன் வீக்கில் (lakme fashion week), வருண் பஹ்ல் (Varun Bahl) ஷோவிற்காக ஒப்பனை கலைஞர் ரொசாரியோ குடுத்த தோற்றம் இது. சிறு வயதில் நம் பூக்களை கொண்டு கோலம் இடுவதை போல் உங்களுக்குள் இருக்கும் அந்த சிறுமியை வெளிக்கொண்டு வரும் விதத்தில் இருக்கிறது இந்த பிளஷ்பிங்க் ஃப்ளோறல் கண் ஒப்பனை. இதற்கு மேலும் ஒரு சிறிய பிங்க் டச் ( கண்களின் ஆரம்பிக்கும் இடத்தில் ) குடுப்பது அழகு! பெண்ணினத்தை குறிக்கும் விதத்தில் இருக்கும் இந்த ஒப்பனை எங்களை கவர்ந்தது  போல் உங்களையும் ஈர்த்திருக்கும் என்று நம்புகிறோம்!


POPxo பரிந்துரைக்கிறது -


பாபி பிரவுன் ஆர்ட் ஸ்டிக் லிக்விட் லிப்ஸ்டிக்  (Rs.2300) 


எல்.எ கேர்ள் கிளைட் ஜெல் லைனர் (Rs.338)


ஹார்டெட்  சீக்ஸ் -


1


படம்


உங்கள் கன்னங்களுக்கு பிளைன் ப்ளஷ் மட்டுமே பயன்படுத்திக்கொண்டு இருந்தீர்கள் என்றால், இதை கவனியுங்கள். இந்த ஹார்ட் வடிவம் கொண்ட  ப்ளஷ் இந்த காதல் நிறைந்த மாதத்தில் உங்களுக்கு மிக பயனுள்ளதாக அமையும்! உங்கள் டேட்டிங் மேக்கப்பில் இனி இப்படி ஒரு ஹார்ட் நிச்சயம் இருக்க வேண்டும்! இதை ஒரு பிங்க் லிப்ஸ்டிக் உடன் முடியுங்கள். இந்த காதலர் தினத்திற்கான  மேக்கப் உத்திகளை நாங்கள் உங்களுக்கு குடுத்து விட்டோம் அல்லவா?


POPxo பரிந்துரைக்கிறது - பாபி பிரவுன் ஆர்ட் ஸ்டிக் லிக்விட் லிப்ஸ்டிக் (Rs.2300) 


மஞ்சள் நிற  மாயம் -


4


ஜென் நெக்ஸ்ட் வழங்கும்   லாக்மே ஃபேஷன் வீக்கில், இந்த மஞ்சள் நிற ஐ-ஷாடோ எங்களுக்கு மிகவும் பிடித்ததில் ஒன்று. எல்லா வண்ணங்களிலும்  ஐ-ஷாடோ பார்த்திருப்பீர்கள். இந்த ஆண்டு உங்களுக்கு புத்துணர்ச்சி அளிக்கும் விதத்தில் இருக்கும் இந்த கண் ஒப்பனையை  நீங்களும் எளிதில் பூசலாம். இதை மேலும் அழகாக்க இதில் முத்துக்கள் சேர்த்து ஒரு தனிப்பட்ட தோற்றத்தை அளித்திருக்கிறார் ஒப்பனை கலைஞர் மரியானா !


POPxo பரிந்துரைக்கிறது - மேட் மேக் ஐ ஷாடோ - கிறோம் எல்லா  (Rs.1000) 


க்ரே க்ளிட்டர்ஸ் -


5


படம்


லாக்மே ஃபேஷன் வீக் முதல் நாளில், ஒப்பனை கலைஞர் மரியானா நமக்கு அதே சில்வர் ஐ-ஷடோவை இன்னும் சிறப்பாக பயன்படுத்த யோசனை அளித்திருக்கிறார். இதை கவனியுங்கள்... எப்போதும் உங்கள் கண் வரிகளில் கோடிடுவதற்கு முரணாக, உங்கள் கண்கள் துவங்கும் இடத்தில் இந்த க்ளிட்டரை (glitter) பூசுங்கள். மேலும் அதை கண்கள் முடியும் இடத்தில் பரவலாக  பூசி முடியுங்கள்.எளிதில் பெற கூடிய ஒரு லுக் அல்லவா இது ?!


POPxo பரிந்துரைக்கிறது -  மேக்கப் ரெவொலுஷன் க்ளிட்டர் பேஸ்ட் (Rs.540)


ஒம்ப்ரே பிளஷ் -


Untitled design %2814%29


லாக்மே ஃபேஷன் வீக் 2019 - ஜென் நெக்ஸ்ட் அளிக்கும் மற்றோரு  திகைப்பூட்டும் லுக் : ஓம்பரே ப்ளஷில் செய்த இந்த ஒப்பனை! இது  இந்த சீசனிற்கான ஒரு ஃபன் மற்றும் ட்ரெண்டி லுக் அளிக்கிறது. இதில் சிறந்தது இதன் மேல் பூசி இருக்கும் மஞ்சள் நிற ஹைலைட்டர் (highlighter) தான். இது உங்களுக்கும் நிச்சயம் பிடித்திருக்கும் என்று நம்புகிறோம்!


POPxo பரிந்துரைக்கிறது -


மேட் மேக் ஐ ஷாடோ - கிறோம் எல்லா (Rs.1000)


வெட் அண்ட் வைல்ட் ஓம்ப்ரே ப்ளஷ் (Rs.299)


நுட் ஃபெஸ் லுக் -


3


இதை, ஒரு நுட் ஃபெஸ் மேக்கப்பில் செய்வது அழகு ! இதில் இவர் பூசி இருக்கும் பிளஷ் பிடித்திருக்கிறதா இல்லை அந்த கண்களின் ஓரம் இருக்கும் இரண்டு க்ளின்டரி டச் பிடித்திருக்கிறதா? எதுவாக இருந்தாலும், இந்த மாடல் நமக்கு விசேஷ நாட்களில் நம் பூசும் கண் ஒப்பனைகளிற்கான யோசனைகளை அழகாக அளித்திருக்கிறார்!


POPxo பரிந்துரைக்கிறது - மேக்கப் ரெவொலுஷன் க்ளிட்டர் பேஸ்ட் (Rs.540)


மேலும் படிக்க - மேக்கப் பவுண்டேஷன் வகைகள் : உங்கள் சருமத்திற்கு ஏற்றது எது?


ப்ளூ லாஷ்ஸ் -


2


ப்ளூ காஜல்/ கண் மை என்பது மாறி ப்ளூ லாஷ்ஸ் இப்போதைய ட்ரெண்ட் ஆகி விட்டது. இது 2019' லாக்மே ஃபேஷன் வீக்கில் பேரோ (Pero) கிலோதிங் பிராண்டிற்காக அணிந்த தோற்றம். இனி ஐ-லாஷ்ஸ் கருப்பாக இருக்கனும் என்று நினைப்பது பழையது! உங்கள் ஜீன் டாப்பில் அணிய ஒரு சிறந்த கண் ஒப்பனை இதுவே!


POPxo பரிந்துரைக்கிறது - கிகோ மிலானோ ஸ்மார்ட் கலர் மஸ்காரா   (Rs.590)


நாங்கள் உங்களின் அடுத்த பார்ட்டிக்கு  ஏற்ற சிறந்த ட்ரெண்டிங் கண் ஒப்பனைகளை காட்டியுள்ளோம். உங்கள் கண்களை வண்ணமயம்  ஆக்கி இந்த ஆண்டை கொண்டாடுங்கள்.


படங்களின் ஆதாரங்கள் - இன்ஸ்டாகிராம்  


POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி !மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும் .பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo.